இந்த நிகழ்வானது பாரத நாடெங்கும் தொடர்ந்து நடந்து வரும் பல்வேறு புனிதநீராடல் விழாக்களிலிருந்து எந்த வகையிலும் வேறுபட்டதல்ல.. இந்த அனைத்து மாநிலங்களிலும் சம்பந்தப்பட்ட அரசுத்துறைகள் கோயில் நிர்வாகங்கள், ஆன்மீக அமைப்புகள கூடிப் பேசி பரஸ்பர ஒத்துழைப்புடன் இந்த விழாக்கள் நடந்தேறுகின்றன. முதலமைச்சர்களே கூட கலந்து கொள்கிறார்கள். அத்தகைய நல்ல முன்னுதாரணத்தை கடந்த வருடம் காவேரி புஷ்கரத்தின் போது தமிழ்நாடு அரசும் கடைப்பிடித்தது. இப்போது என்ன ஆயிற்று?.. “குறுக்குத்துறை சுப்பிரமணியசுவாமி கோயிலில் அதிகமான பக்தர்கள் செல்ல பாதைவசதி இல்லை; இடவசதியும் இல்லை” என்று வெட்கமில்லாமல் எழுதுகிறார் ஒரு அரசு அதிகாரி. 1990களில் கூட கோயிலுக்கு முன்பாக மனதைக் கொள்ளை கொள்ளும் மணல்மேடு இருந்தது. அதனை முழுவதுமாகத் தோண்டி மணல் கொள்ளையர்கள் அழித்த பிறகு, இப்போது சேறும் சகதியும் முட்புதர்களும் பரவிய குப்பை மேடாக ஆகி விட்டிருக்கிறது. அட, இந்த விழாவை முன்னிட்டாவது அதைத் தூய்மை செய்து பயன்பாட்டுக்கு ஏற்றபடி ஆக்கலாம் என்று இந்த ஆணையருக்கு புத்தி போகவில்லை. அரசின் கையாலகாத் தனத்தை முரசறைவது தான் அவருக்குத் தெரிந்திருக்கிறது…
View More தாமிரபரணி புஷ்கரம்: தடை போடுகிறதா தமிழ்நாடு அரசு?Category: சூழலியல்
சுற்றுச் சூழல் குறித்த பதிவுகள்..
ஸ்டெர்லைட்: திசைமாறிய போராட்டமும் விடைதெரியா வினாக்களும்
முன்பு மார்ச் 24 போராட்டத்திற்கு அனுமதி கிடைக்காத போது நீதிமன்ற அனுமதி பெற்ற நிலையில் இந்த மே 22 போராட்டத்திற்கு அனுமதி கிடைக்காதபோது நீதிமன்றத்தை அணுகாமல் தடையை மீறுவோம் என பொது மக்களைத் தூண்டியது ஏன்? கடற்கரையோர மீனவ கிராம மக்கள் தாமாக போராட்டத்திற்கு வந்தார்களா? சர்ச்சில் ஃபாதர் சொன்னதால் வந்தார்களா? நூறு நாட்கள் தொடர்ந்து போராடி ஸ்டெர்லைட் எதிர்ப்பை தீவிரப் படுத்திய குமரெட்டியாபுரம் கிராமத்தில் ஒருவர் கூட துப்பாக்கிச்சூடு, தடியடி என எந்த தாகுதலுக்கு ஆளாக வில்லை. ஏன் தெரியுமா? கிராம மக்களுக்கு நோக்கம் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மட்டுமே.. அரசுக்கு எதிரான சட்டத்தை மீறும் வன்முறைப் போராட்டம் அல்ல…
View More ஸ்டெர்லைட்: திசைமாறிய போராட்டமும் விடைதெரியா வினாக்களும்பிஷ்னோய் – இயற்கையின் காவலர்கள்
பிஷ்னோய் பழங்குடியினர் மான்களையும், எருமைகளையும், குரங்குகளையும் பிற அரிய விலங்குகளையும் மட்டும் பாதுகாக்கவில்லை, மரங்களையும் உயிரினும் மேலாக பாதுகாக்கிறார்கள். உலகின் ஆதி சுற்றுச் சூழல் போராளிகள் பிஷ்னோய்களே. கஜோரி என்றொரு வகை மரம் அங்கு புனிதமாகக் கருதப் படுகிறது. அது பஞ்ச கால மரமாகக் கருதப் படுகிறது. கடும் பஞ்ச காலத்திலும் கூட அதன் மரப் பட்டைகளைத் தின்று உயிர் பிழைத்து விடலாம்… ஒரு முறை ஒரு கஜோரி மரத்தை வெட்டுவதற்காக மன்னன் படைகளை அனுப்பி வைத்த பொழுது முதலில் எங்களை வெட்டி விட்டு மரங்களை வெட்டுங்கள் என்று அந்த மரங்களைக் கட்டிப் பிடித்துக் கொண்டு மன்றாடியுள்ளார்கள். படையினர் அவர்களைக் கொல்லக் கொல்ல மொத்தம் 393 பேர்கள் அங்கு அந்த மரத்தைப் பாதுகாப்பதற்காக உயிரை விட்டிருக்கிறார்கள். இதை பிஷ்னோய் பழங்குடி மக்களின் மூத்தவர் ஒருவர் குழந்தைகளுக்குக் கதையாகச் சொல்கிறார்…
View More பிஷ்னோய் – இயற்கையின் காவலர்கள்காவிரி அனைவருக்கும் பொதுவானது!
உச்ச நீதிமன்றத்தின் புதிய தீர்ப்பு, மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான கூட்டணி அரசுக்கு காவிரி விவகாரத்தில் நேர்வழியைக் காட்டி இருக்கிறது. நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்தும் கடமையை மோடி அரசு நிறைவேற்றும்போது, யாரும் குறைகாண முடியாது. இதைக் காட்டி பாஜகவை கர்நாடக எதிரியாக காங்கிரஸ் கட்சியால் சித்தரிக்க முடியாது. எனவே, மிக விரைவில் காவிரி நதி நீர் ஆணையம் அமைக்கப்படும் என்று நம்பலாம்…
View More காவிரி அனைவருக்கும் பொதுவானது!தீபாவளிப் பட்டாசுக்கு எதிரான பிரசாரங்கள்: ஒரு பதிலடி
பட்டாசு வெடிப்பதால் சுற்றுப்புறச் சூழல் நிச்சயம் மாசடைந்து போய்விடாது. ஊர் முழுக்க திரியும் கார்களால், லாரிகளால், குப்பைகளால் வராத மாசு, ஒரே ஒரு நாள் பட்டாசு வெடிப்பதால் வந்துவிடாது. பட்டாசு வெடிக்கவேண்டுமா வேண்டாமா என்பதை முடிவு செய்யவேண்டியது ஹிந்து மத எதிரிகள் அல்ல. ஹிந்து மதத்தின் ஆதரவாளர்களே அதை முடிவு செய்யவேண்டும்… தெருவோரத்து நாய்க்கு ஒரு பிஸ்கட்டை வாழ்நாளில் போடாத கூட்டம்தான், ஹிந்துக்கள் பட்டாசு வெடிக்கும்போது பறவைகளுக்கும் நாய்க்கும் பொங்கிக்கொண்டு வருகிறது. மாட்டுக்கறி உண்டால் மாடு செத்துப் போகும் என்பதைப் பற்றி யோசிக்காதவர்கள்தான் நாய்க்கும் பறவைக்கும் வெடிக்கு எதிராகப் பரிந்துகொண்டு வருகிறார்கள். இந்த இரட்டைத்தனமெல்லாம் இது ஹிந்துப் பண்டிகை என்பதால் மட்டுமே….
View More தீபாவளிப் பட்டாசுக்கு எதிரான பிரசாரங்கள்: ஒரு பதிலடிவாத்சல்யம்: மாடு மேய்க்கும் கண்ணா !
‘ஹாய், ஊ’ என்று நாம் கூப்பிடுவது போலக் கண்ணன் மாடுகளைக் கூப்பிட மாட்டான். கண்ணன் எல்லாப் பசுக்களுக்கு பெயர் வைத்துத் தான் கூப்பிடுவான். கண்ணன் பெயர் சொல்லிக் கூப்பிடும் போது அவை வாலை ஆட்டிக்கொண்டு வருமாம். ”இனிது மறித்து நீர் ஊட்டி” என்கிறாள் ஆண்டாள்… போன வருடம் அக்டோபர் மாதம் பிருந்தாவன், மதுரா, துவாரகா என்று யாத்திரை சென்ற போது எல்லா இடங்களிலும் ஒன்றைக் கவனித்தேன். அது பசுக்களை தெய்வமாகவே பாவிக்கிறார்கள். சாலை ஓரங்களில் பசுக்களுக்கு கழணீர் தொட்டிகள் நிறையக் கட்டியுள்ளார்கள். பல இடங்களில் காய்ந்த புல், தழைகளைப் பெரிய மிஷின் வைத்து பொடியாக்கி பசுக்களுக்கு மூட்டை மூட்டையாகக் கட்டிவைத்துள்ளார்கள்….
View More வாத்சல்யம்: மாடு மேய்க்கும் கண்ணா !ஆனைமுகனும் தமிழ்ப்பண்பாடும்
விநாயகப் பெருமானின் வழிபாடு அதன் முன்னோடி வடிவில் சங்க காலத்திலேயே தமிழகத்தில் இருந்திருப்பதையும் அதன் உட்பொருளும் சடங்கியல் நோக்கமும் மாறாமல் அது இன்றும் நம் பிள்ளையார் வழிபாட்டில் தொடர்வதையும் நம்மால் காண முடிகிறது… உலகில் எனக்கு தெரிந்து வேறெந்த பண்பாடும் யானையை போல ஒரு பிரம்மாண்ட விலங்கை தன்னகப்படுத்தியதில்லை. அதை செய்த ஒரே பண்பாடு நம்முடையதுதான். யானைக்கு வர்மப்புள்ளிகளைக் கூட கணித்த பண்பாடு கோவில் யானைகளை பராமரிக்க சரிவான தீர்வை அளிக்காதா? அதை செய்யாமல் நம் பண்பாட்டின் உயர் உச்சமொன்றை முழுமையாக ஒழித்துக் கட்டுவதில் ஏன் இவ்வளவு முனைப்பு? யானைகளை கோவில்களில் வளர்ப்பது அவசியம்….
View More ஆனைமுகனும் தமிழ்ப்பண்பாடும்பயங்கொள்ளிப் பார்ப்பானும் பசுவதையும்
சமீபத்தில், இதே இரகத்தை சேர்ந்த ஒருவரை, “ஹிந்துக் கடவுள்களை நிந்திப்பதைப்போல் இயேசுவை சொல்லிப் பாரும். உங்களைக் கூலிப்படையாக நடத்தும் வெள்ளைக்காரன் செவுளில் ஒன்று விடுவான்” என்று சவால் விட்டேன். எதிர்பார்த்தவிதமே கௌபீனத்தில் கக்கா போய்விட்டார்… பசுவதை இன்றி பால் அருந்த வழி இருக்கிறது. ஆனால், பசுவதை இன்றி மாட்டிறைச்சி அருந்த வழி இல்லை. இரண்டையும் ஒப்பிடுவது முட்டாள்தனம் மட்டுமில்லை. அயோக்கியத்தனமும் கூட. பசுக்கள் பால் கறப்பதை நிறுத்திவிட்டால் “போஷிக்க விவசாயியால் முடியாது. எனவே சந்தையில் அடிமாடாக விற்க வேண்டி வருகிறது” என்பதும் கள்ளவாதம். பிஷ்ணோய் மக்களால் போஷிக்க முடியுமெனில் மற்றவர்களாலும் முடியும். பேராசை கொண்டவனால் முடியாது…
View More பயங்கொள்ளிப் பார்ப்பானும் பசுவதையும்ஹைட்ரோகார்பன் பிரச்சினையை நாம் எவ்வாறு அணுக வேண்டும்?
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை இந்திய அரசும், மாநில அரசும் ஓஎன்ஜிசியும் மிகத் தைரியமாக மக்களிடம் சென்று விளக்க வேண்டும். இந்தத் திட்டத்தைப் பின்வாங்கினால் தமிழகம் மட்டுமல்ல இந்தியாவின் எந்த மூலையிலும் ஹைட்ரோ கார்பன் திட்டமல்ல, கச்சா எண்ணெய்யைக்கூட எடுக்க முடியாது. ஏனெனில் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் என்ற பெயரில் இந்தியாவின் வளர்ச்சித் திட்டங்கள் அனைத்தையும் முடக்க ஒரு தரப்பு முனைப்பாகவே இருக்கிறது. இதை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவதன் வாயிலாக அமல்படுத்தாமல், முகநூல், தொலைக்காட்சிகள் மற்றும் மக்களிடம் நேரடியான உரையாடல்களை நிகழ்த்துவதன் மூலமாக நடைமுறைப்படுத்த வேண்டும்….
View More ஹைட்ரோகார்பன் பிரச்சினையை நாம் எவ்வாறு அணுக வேண்டும்?இரக்கமற்ற இளஞ்சிவப்பு
வாழ்நாள் முழுவதும் விவசாயிக்காக உழைத்துக் களைத்த மாடுகளே கசாப்புக்குக் கொண்டுசெல்லப்பட்டு, இறைச்சி ஏற்றுமதியின் புள்ளிவிவரத்தை கூட்டி இருக்கின்றன. இது ஒருவகையில் சுய அழிவே ஆகும். இந்தியாவின் பெருமிதமிக்க பாரம்பரிய மாட்டு ரகங்கள் தற்போது அருகி வருகின்றன. இளஞ்சிவப்புப் புரட்சி அதன் உச்சத்தை தொடும்போது, நாட்டில் அடுத்து வெட்டுவதற்கு கால்நடைகளே மீதம் இருக்காது. ஏனெனில் இறைச்சிக்காக மாடு வளர்ப்பது நமது நாட்டில் இன்னும் தொழில்ரீதியாக வளர்த்தெடுக்கப்படவில்லை… நன்றியற்ற மனிதகளாகிய நாம் சூழ்நிலைக் கைதிகளாகி, அடிமாடுகளை கசாப்புக்கு அனுப்பும் வரை, ஜல்லிக்கட்டு நடத்த நமக்கு எந்த உரிமையும் கிடையாது. இதுவே நீதிபதிகள் மறைமுகமாகக் கூறியுள்ள கருத்து…
View More இரக்கமற்ற இளஞ்சிவப்பு