அஞ்சல் பூங்காவில் ஆனைமுகன்

ஒன்றே பரம்பொருள் எனினும் பரம்பொருள் நாட்டங்களும் தேட்டங்களும் பல திறத்தின. திருவுருவங்களில் பரம்பொருள் ருசி கண்டவர்க்கும் காண முயல்வோர்க்கும் அநுகூலமான, அழகிய திருவடிவம் விநாயகப் பெருமானின் விசித்திர வடிவம். இத்திருவுருவம் ஏழு தேசங்களின் அஞ்சல் பூக்களில் எழிலுடன் இடம் பெற்றுள்ளது. பாரதம், நேபாளம், ஸ்ரீலங்கா, லாவோஸ், தாய்லாந்து, இந்தோனேஷியா, செக் – என்பன அத்தேசங்கள்.

View More அஞ்சல் பூங்காவில் ஆனைமுகன்

சம(?) உரிமைக்குப் போராடும் பெண்கள் – 3

அவர்கள் திருந்தி வாழவேண்டும் என்று சொல்வதைவிட்டு அந்த உரிமை பெண்களுக்கும் வேண்டும் என்ற திசையில் சென்றுகொண்டிருக்கிறது இன்றைய பெண்களின் சம உரிமைக் கோரிக்கை… இவற்றை எல்லாம் எந்தப் பெண்ணியவாதிகளோ அல்லது தங்களை அப்படிச் சொல்லிகொள்கிறவர்களோ சுட்டிக் காட்டியதும் இல்லை; அவர்கள் கண்களில் இவை படுவதும் இல்லை. அவர்களுக்குத்தான் கணவனுக்கும் மாமியாருக்கும் காபி போட்டுக் கொடுக்கும் பெண்ணடிமைகளை மீட்கவேண்டிய நெருக்கடி இருக்கிறதே… பெண்கள் தங்கள் நளினத்தையும், எழிலையும், கம்பீரத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகின்றனர்.

View More சம(?) உரிமைக்குப் போராடும் பெண்கள் – 3

ரஜினி மகள் திருமண வைபவம்: சில எண்ணங்கள்

கருணாநிதி கையால் தாலி எடுத்துக் கொடுப்பது, எதிர்கட்சியின் மீது பெய்யப் படும் வசைகளே மந்திரங்களாக வைத்து பெண்ணின் கழுத்தில் மாங்கல்யம் கட்டப் படுவது போன்ற அவலம் எதுவும் நடக்காமல், தன் மனதுக்கு பிடித்தபடி, தன் குடும்பத்தினர் விரும்புகிற படி இந்த திருமணத்தை நடத்தியிருக்கிற ரஜினியின் நேர்மை மெச்சத் தகுந்தது…. விடுதலை பத்திரிகை பகுமானமாக வீரமணி ரஜினி குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட போட்டோ மட்டும் இன்று வெளியிட்டிருக்கிறது…

View More ரஜினி மகள் திருமண வைபவம்: சில எண்ணங்கள்

ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தியும், நாம் மறக்கக் கூடாத பலிதானமும்

இரண்டு வருடங்கள் முன்பு (2008-ம் வருடம்), இந்துக்களின் இதே புனித நன்னாளில் தான் சுவாமி லக்ஷ்மணானந்த சரஸ்வதி அவர்களும், அவரது ஆசிரமத்தின் சீடர்களும் மாவோயிஸ்டு வெறியர்களின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு பலியானார்கள்… பழந்தமிழரும் பாடி வணங்கிய கண்ணனின் லீலைகளையும், இந்த பலிதானத்தையும் நினைவு கூறும் வாழ்த்து அட்டைகளை தமிழ்ஹிந்து.காம் வாசகர்களுக்கு வழங்குகிறது…

View More ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தியும், நாம் மறக்கக் கூடாத பலிதானமும்

இத்தாலியில் பிறக்காதது ஆனந்த் செய்த பாவமா?

ஒவ்வொருமுறை சர்வதேசப் போட்டிகளில் விளையாடும்போதும் ஆனந்தின் அருகில் இந்திய தேசியக் கொடியைக் காணலாம். இதைவிட வேறு என்ன அத்தாட்சி தேவை? வேறு எப்படி ஆனந்தின் இந்தியக் குடியுரிமையை நிரூபிப்பது?…. இந்தியாவே வேண்டாம் என்று சென்ற எம்.எப்.ஹுசைனை (கத்தார்) வலிய அழைத்துக் கொண்டுள்ளது நமது அரசு. இந்தியாவில் வசிக்க விரும்பியும் தஸ்லிமாவுக்கு (வங்கதேசம்) அதே அரசு அனுமதி அளிக்காமல் தவிர்க்கிறது. இந்தியாவில் 16 ஆண்டுகள் வசித்தபோதும் இந்தியக் குடியுரிமை பெறாத சோனியா (இத்தாலி) மத்திய அரசின் சூத்திரதாரியாக, அதே அரசாலும், காங்கிரஸ் கட்சியாலும் போற்றப்படுகிறார்…

View More இத்தாலியில் பிறக்காதது ஆனந்த் செய்த பாவமா?

லடாக் பகுதியில் இயற்கைப் பேரழிவு: மீட்புப் பணியில் இந்து இயக்கங்கள்

அரசு நிர்வாகம் மீட்பு, நிவாரணப் பணிகளில் மெதுவாகவே ஈடுபடுகிறது… லே அருகில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பயிற்சி முகாம் (ஐ.டி.சி) நடந்து வந்தது. அந்த சமயத்தில் தான் வெள்ளச்சேதம் ஏற்பட்டது. உடனடியாக முகாம் ரத்து செய்யப்பட்டு, அங்கிருந்த தொண்டர்கள் அனைவரும் வெள்ளப் பகுதிக்கு விரைந்தனர். யாருக்காகவும் காத்திருக்காமல் மீட்புப் பணியைத் துவங்கிவிட்டனர்… கடுமையான இயற்கைச் சீற்றத்துக்கு ஆளாகித் தவிக்கும் லே சகோதரர்களுக்கு நம்மால் நேரடியாக உதவ முடியாமல் இருக்கலாம். இந்த இயக்கம் ஆற்றும் மீட்புப் பணிகளுக்கு நிதி வழங்கி அவர்களுக்கு தோள் கொடுக்கலாமே!

View More லடாக் பகுதியில் இயற்கைப் பேரழிவு: மீட்புப் பணியில் இந்து இயக்கங்கள்

ஒரு சுதந்திர தின சிந்தனை

இந்தியா தனது மக்களில் சிலரின் நம்பிக்கைத் துரோகங்களின் காரணமாகவே முதல் முறையும், பின் ஒவ்வொரு முறையும் சுதந்திரத்தை இழந்தது..இது போன்றவைகள் மறுபடியும் நேரவே கூடாது… நம் சுதந்திரத்திற்காகப் போராடிய தியாகிகளின் திருவுருவங்களையும், இந்த சிந்தனையையும் உள்ளடக்கிய கீழ்க்கண்ட வாழ்த்து அட்டையை இந்த நன்னாளில் உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் அனுப்புங்கள்.

View More ஒரு சுதந்திர தின சிந்தனை

இரு பெண்களின் கதை

ஜூலியா ராபர்ட்ஸ்களின் பேட்டிகளில் போகிறபோக்கில் அவர்கள் காட்டும் ஒரு வரி அங்கீகாரங்களால் அல்ல; ஊடக ஒளிவட்டங்கள் விழாத பல இலட்சம் பங்காரம்மாக்கள் அறத்துக்காகப் படும் வேதனைகளாலும் கண்ணீர் வெள்ளங்களாலும் தான் ஹிந்து தர்மம் வாழ்ந்து கொண்டிருக்கிறது…. படித்த ஹிந்துக்கள், ஹிந்து உணர்வாளர்கள், அத்தகைய ஹிந்துக்களாக நாம் இருக்கிறோமா என்பதை அறிந்திட காலம் உருவாக்கிய ஒரு முரண் சோதனைதான் ஜூலியா ராபர்ட்ஸின் பேட்டியும் பங்காரம்மாவின் போராட்டமும்.

View More இரு பெண்களின் கதை

ஈரோட்டில் ஒன்றுபட்ட இந்து மக்கள் சக்தி: ஒரு விரிவான அலசல்

சுமை தூக்குவோர், ஆட்டோ ஓட்டுநர்கள், வியாபாரப் பெருமக்கள், பெண்கள், பல்வேறு அரசியல் கட்சியினர், பல சமூக இயக்கங்களின் பங்களிப்பால் தான், அம்மன் கோயில் நில மீட்பு இயக்கம் சாதிக்க முடிந்துள்ளது.. இந்தப் போராட்டம், மதப் போராட்டமல்ல; மண்ணுக்கான போராட்டம். மாரியம்மன் கோயில் நிலத்தை மீட்பதற்கான போராட்டம்…ஆரம்பம் முதற்கொண்டே பா.ஜ.க பக்தர்களுக்கு ஆதரவாக இருந்து வருகிறது. அக்கட்சியின் அனைத்து நிலை தலைவர்களும் இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பிற கட்சியினரும் கூட வெளிப்படையாக இப்போராட்டத்தை எதிர்க்கவில்லை…

View More ஈரோட்டில் ஒன்றுபட்ட இந்து மக்கள் சக்தி: ஒரு விரிவான அலசல்

ஆலயங்களில் குடும்ப விசேஷங்கள்: அபிராமி கோயிலை முன்வைத்து

இடைத்தரகர்கள் பொதுமக்களிடம் பணம் வாங்கிக் கொண்டு செய்கிறார்களே தவிர அப்படி செய்யப்படும் இடம் சுத்தமாகவும், பளிச்சென்றும், கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல் செய்யவும் வேண்டாமா?… சுவாமி சந்நிதி, அர்த்த மண்டபம், சுற்றுப்புற முதல் பிரகாரம் இங்கெல்லாம் பார்த்தால், பகலிலேயே கண் தெரியவில்லை. காரணம் சுவர், மண்டபங்களின் மேற்கூரை, தூண்கள் எல்லாம் அங்கு தினசரி நடத்தும் ஹோமப் புகை படிந்து கன்னங்கரேன்று காட்சியளிக்கிறது….

View More ஆலயங்களில் குடும்ப விசேஷங்கள்: அபிராமி கோயிலை முன்வைத்து