ஆன்மீகச் சூறாவளி விவேகானந்தர் – 6

மாலையில் திரும்பி வரும்போது படகின் ஆட்டமோ, மதிய உணவின் வேலையோ தெரியவில்லை ஒரு பையனுக்கு வாந்தி எடுக்கத் தொடங்கியது. படகோட்டி கோபமடைந்தார். “வாந்தி எடுத்ததை நீங்கள்தான் சுத்தம் செய்யவேண்டும்” என்று வற்புறுத்தினார். “இல்லையென்றால் இரண்டு பங்கு கூலி கொடு” என்று மிரட்டினார்…

View More ஆன்மீகச் சூறாவளி விவேகானந்தர் – 6

ஆன்மீகச் சூறாவளி விவேகானந்தர் – 5

“இப்படியே வீடு வீடாக மரத்தில் தொங்கிக் கொண்டுதான் இருப்பாயா? இல்லை, படிக்கவும் செய்வாயா?”. “ஐயா, நான் படிக்கவும் செய்வேன், விளையாடவும் விளையாடுவேன்” என்றான் நரேன். உடனே அவனைச் சோதித்தார் கிழவர். புவியியல், கணிதம் இவற்றில் கேள்வி கேட்டார். கவிதைகள் ஒப்பிக்கச் சொன்னார். இந்தக் கடினமான தேர்வில் சிறப்பாகத் தேறினான் நரேன். கிழவர் அவனை ஆசீர்வதித்து…

View More ஆன்மீகச் சூறாவளி விவேகானந்தர் – 5

மகான்கள் வாழ்வில் – 5: ஸ்ரீ அரவிந்தர்

ஆசிரமத்தில் ஒரு பூனை இருந்தது. அதன் பெயர் சுந்தரி. அதற்கு அந்தப் பெயரைச் சூட்டியதே ஸ்ரீ அரவிந்தர் தான். அதற்கு இரண்டு குட்டிகள் இருந்தன. அவற்றின் பெயர் பிக் பாய், கிக்கி. ஒரு முறை கிக்கியை தேள் ஒன்று கொட்டி விட்டது. விஷத்தின் தாக்கத்தால் அது துவண்டு விழுந்து விட்டது. உடனே அந்தப் பூனைக் குட்டியைப் பிழைக்க வைப்பதற்காக சாதகர்கள் ஸ்ரீ அரவிந்தரிடம் அதனைக் கொண்டு சென்றனர். மேசை மீது அதனைப் படுக்க வைத்தனர்…

View More மகான்கள் வாழ்வில் – 5: ஸ்ரீ அரவிந்தர்

மகான்கள் வாழ்வில் – 4: ஸ்ரீ ஈசான்ய ஞான தேசிகர்

திருவண்ணாமலையை நாடி வந்த முதல் ஞானி ஸ்ரீ ஈசான்ய ஞான தேசிகர். ஸ்ரீ அண்ணாமலையாரும் ஸ்ரீ உண்ணாமுலையம்மனும் புலி உருவில் வந்து காவல் காக்க, தவம் செய்த பெருமைக்குரியவர். இவரது தலையாய சீடர்களுள் ஒருவராக விளங்கியவர் ஐடன் துரை. பிறப்பால் ஆங்கிலேயரானாலும் ஓர் இந்துவாகவே வாழ்ந்தவர்…

View More மகான்கள் வாழ்வில் – 4: ஸ்ரீ ஈசான்ய ஞான தேசிகர்

மகாகவி பாரதியின் ‘குரு கோவிந்தசிங்’ – 1

(பாடலும் விளக்கமும்.) ரஷ்யப் புரட்சியையும் ஃபிஜித் தீவில் தமிழர் படும் பாட்டையும் தனது சொற்களால் அமர கவிதைகளாக்கிய பாரதி பத்தாவது சீக்கிய குருவான குரு கோவிந்தசிங் ‘கால்ஸா’ என்ற தர்மம் காக்கும் வீரர் படையை அமைத்த அற்புத நிகழ்ச்சியையும் எழுதி வைத்திருக்கிறான். தர்மதேவதையின் தாகம் தீர்க்க ஐந்து வீரர்களை பலி கேட்ட குரு கோவிந்தசிங்கின் சோதனை, வரலாற்றின் ஓர் பிரமிக்க வைக்கும் நிகழ்வு…

View More மகாகவி பாரதியின் ‘குரு கோவிந்தசிங்’ – 1

மகான்கள் வாழ்வில் – 3: பாம்பன் சுவாமிகள்

பாம்பன் சுவாமிகள்.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் அமர்ந்து உண்டனர். மாலையில் அருகிலிருந்த அன்பர் ஒருவரிடம் ‘எத்தனை முறை சமையல் நடந்தது?’ என்று கேட்டார் பாம்பன் சுவாமிகள். அதற்கு அந்த அன்பர், ‘காலையில் சமைத்ததுதான், காய்கறிகள் மட்டுமே தீரத் தீர சமைக்க வேண்டி இருந்தது. உணவு அள்ள அள்ளக் குறையவில்லை’ என்றார்’…

View More மகான்கள் வாழ்வில் – 3: பாம்பன் சுவாமிகள்

மகான்கள் வாழ்வில் – 2: யோகி ராம்சுரத்குமார்

‘கடவுளின் குழந்தை’ எனப் போற்றப்பட்டவர் யோகி ராம்சுரத்குமார். வடநாட்டில் பிறந்திருந்தாலும் திருவண்ணாமலையையே இறுதிவரை…

View More மகான்கள் வாழ்வில் – 2: யோகி ராம்சுரத்குமார்

மகான்கள் வாழ்வில் – 1: ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்

ஒரு நாள் ராமகிருஷ்ணர் தனது அறையின் முன் உள்ள வராந்தாவில் அங்கும் இங்கும் உலாவிக் கொண்டிருந்தார். அவர் நடைபயிலுவதை தூரத்தில் தன் அறையில் இருந்தவாறே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் மதுர்பாபு. அப்போது திடீரென அங்கே பரமஹம்சரின் உருவத்துக்குப் பதில் காளியின் உருவம் நடமாடுவது தெரிந்தது. நம்பமுடியாமல் கண்களைக் கசக்கிவிட்டுப் பார்த்தார் மதுர்பாபு. ஆம், அங்கே காளிதான் நடமாடிக் கொண்டிருந்தார். மறுகோடிக்குச் சென்று திரும்பியதும் காளி உருவம் மறைந்தது. சிவன் உருவம் தோன்றியது. பகவான் ராமகிருஷ்ணர் காளியாகவும் சிவனாகவும் மாறிமாறி நடமாடிக் கொண்டிருந்தார்…

View More மகான்கள் வாழ்வில் – 1: ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்

ஆன்மீகச் சூறாவளி விவேகானந்தர் – 4

“இந்த மரத்தில் ஒரு பிரம்மராட்சசன் வசிக்கிறான். இரவு நேரத்தில் காலோடு தலை வெள்ளைவெளேரென்று உடையணிந்து வருவான். பார்க்கவே பயங்கரமாய் இருக்கும்” என்றார். பெரியவர். நரேந்திரனுக்கு இது புதுச் செய்தி. பிரம்ம ராட்சதன் இரவில் உலாவருவதைத் தவிர வேறென்ன செய்வான் என்று கேட்டான்.

View More ஆன்மீகச் சூறாவளி விவேகானந்தர் – 4

அமைதிக்கான நீண்ட துதி: ஜே.கிருஷ்ணமூர்த்தி

“ஸமஸ்கிருதத்தில் அமைதிக்கான நீண்ட துதி ஒன்று உள்ளது. பற்பல நூற்றாண்டுகளுக்கு முன், அமைதியின் தேவையை முற்றிலும் உணர்ந்த ஒருவரால் இயற்றப்பட்டது. தவிர அவரது அன்றாட வாழ்க்கையும் அமைதியில் வேரூன்றியதாக இருந்திருக்க வேண்டும். – ஜே. கிருஷ்ணமூர்த்தி”

View More அமைதிக்கான நீண்ட துதி: ஜே.கிருஷ்ணமூர்த்தி