சீதையின் சீற்றம்!

ஆண்களைத் தனது பிறப்பிலிருந்தே தனது ஆதிக்கத்தில் வைத்துவிடும் பெண்ணினத்தை ஆண்களால் அடிமை செய்துவிட இயலுமா? நாணல் மாதிரி வளைந்து கொடுத்து வெள்ளத்திலும் நிலைத்துவிடும் பண்புகொண்டவர் பெண்கள் – எதிர்த்து நின்று வீழ்பவர்கள் ஆண்கள்! இது அவரவர் இயல்பு! வளைந்துகொடுப்பதால் பெண்கள் வலிமை அற்றவர்கள் அல்லர். வரட்டுப் பிடிவாதத்துடன் நிமிர்ந்துநிற்பதால் ஆண்கள் வலிமையில் சிறந்தவரும் அல்லர்.
ஐயாயிரம் வீர்களுக்கு இல்லாத வலிமை என்னவருக்கு இருந்தது. அவரைக் காட்டிலும் அதிக வலிமை எனக்கு இருந்தது. இதை அறியாதவரா என்னவர் இராமன்? அவரைவிட வலிமை உள்ள என்னை அடிமைசெய்ய அவரால் இயலாது என்று அவருக்குத் தெரியாதா, என் கண்மணிகளே?

View More சீதையின் சீற்றம்!

மாண்டூக்ய உபநிஷத் – எளிய விளக்கம் – 4

முன்தோற்றமற்றது என்றால் என்ன? இதற்குமுன் எதுவும் தோன்றவில்லை, இதுவேதான் இருந்துவருகிறது, இதை யாரும் படைக்கவில்லை, உருவாக்கவில்லை, இதுவும் தோன்றவில்லை. “தோன்றவில்லையா, அப்பொழுது இது எப்படி இருக்கமுடியும்?” என்ற கேள்வி எழுகிறது. நமது வெளியுலக உணர்வுப்படி நோக்கினால் — ஒன்று தோன்றியது என்றாலே, அதற்குத் துவக்கம் இருக்கவேண்டும், அதை யாராவது உருவாக்கி இருக்கவேண்டும் என்றுதானே பொருள்? அப்பொழுது அது பரம்பொருளாக இருக்கமுடியுமா? முடியாதே! அதனால் அப்பரம்பொருள் தோற்றமற்றது, துவக்கமற்றது. அது எப்பொழுதும் இருக்கிறது.

இது முடிவும் அடையாதது: முடிவு என்று ஒன்று இருந்தால் அதற்குத் துவக்கம் என்றும் ஒன்றும் இருக்கவேண்டும் அல்லவா! எனவே, துவங்காத ஒன்று முடிவும் அடையாது.

அது வெளியிலும் இல்லை என்றால் என்ன? எல்லாமே அதுதான், அப்பரம்பொருள்தான்! எனவே எதுவும் அதற்கு வெளியில் இருக்கமுடியாது.

அறிவியல்படி நோக்கினால், பெருவெடிப்புக்குமுன் அண்டமே இல்லை, அண்டத்தில் இருக்கும் எதுவுமே இல்லை. அண்டமே அண்டத்தில், பரம்பொருளுள் அடங்கி இருந்தது. அந்நிலையில்தான் நிர்குணப் பிரம்மமும் இருக்கிறது.

தனித்தன்மை வாய்ந்தது: இப்படிப்பட்டது எதுவும் இருக்கிறதா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். அப்படிப்பட்டது தனித்தன்மை வாய்ந்த ஒன்றுதானே!

View More மாண்டூக்ய உபநிஷத் – எளிய விளக்கம் – 4

மாண்டூக்ய உபநிஷத் – எளிய விளக்கம் – 3

நாம் [ஆத்மன்] விழித்திருக்கும்போது எங்கும் நிறைந்திருக்கும் இவ்வண்டம் நமக்குப் புலப்படுகிறது. எல்லா அறிவுகளும் நமது ஐம்பொறிகளாலும் [கண், காதும், மூக்கு, வாய், தொடும் உணர்வைத்தரும் உடற்பகுதி], ஐம்புலன்களாலும் [பார்வை, கேட்டல், நுகர்தல், சுவைத்தல், உணர்தல்] நமக்கு வந்து சேருகின்றன. தனி மனிதராக நம்மால் இவை அனைத்தையும் அறிந்துகொள்ள இயலாவிட்டாலும், அண்டத்தில் இங்கேங்கெனாதாடி எங்கும் பரவி இருக்கும் திட, திரவ காற்றுப் பொருள்களாக இருக்கும் அனைத்தையும், பலகோடி, நூறுகோடி உயிரினங்களாக இருந்து அறிந்து கொள்கிறோம்.

View More மாண்டூக்ய உபநிஷத் – எளிய விளக்கம் – 3

இந்துமதத்தில் பெண்கள்: உரை

இந்துமத வரலாற்றில் பெண்களின் இடம் என்ன, வேதகால பெண் ரிஷிகள், சீதை பெண்ணடிமைத் தனத்தின் அடையாளமா, தாய் மனைவி முதலிய குடும்ப உறவுகளைத் தாண்டி பெண்ணின் சுயம் பற்றி இந்து தத்துவம் என்ன கூறுகிறது, இன்றைய இந்து சமுதாயத்தில் பெண்களின் நிலை ஆகிய விஷயங்களை ஒரு பறவைப் பார்வையாக இந்த 30 நிமிட உரை தொட்டுச் செல்கிறது. இங்கே கேட்கலாம்..

View More இந்துமதத்தில் பெண்கள்: உரை

நாயன்மார்கள்: ஓர் சொற்பொழிவு

நாயன்மார்களின் சரிதங்கள், நமது சமயப் பண்பாட்டு மலர்ச்சிக்கும் எழுச்சிக்கும் அவர்கள் ஆற்றிய பங்களிப்பு குறித்து சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் ஜடாயு ஆற்றிய உரை. பெரியபுராணத்தின் பின்னணியையும், சம்பந்தர், அப்பர், சுந்தரர், சிறுத்தொண்டர், கண்ணப்பர், திருநீலகண்டர் மற்றும் சில நாயன்மார்களையும் குறித்து வரலாறு, இலக்கியம், சமயம் என்ற மூன்று தளங்களையும் தொட்டுச் செல்கிறது இந்த 50 நிமிட உரை. இங்கே கேட்கலாம்..

View More நாயன்மார்கள்: ஓர் சொற்பொழிவு

வேதங்களோடு விளையாடும் பழங்குடி மாணவர்

எங்கள் மாணவர்களிலேயே மிகவும் திறமையான மாணவன் நவீன். வேகமாக வேதங்களைக் கற்றுக் கொண்டான். இந்த வேதபாடசாலையில் குறிக்கோளாக உள்ள எங்களுடைய நோக்கமெல்லாம் அனைவரும் சமமாக இருக்க வேண்டும் என்பதுதான். குழந்தைப் பருவத்தில் பயில விரும்பும் எவருக்கும் மதம், ஜாதி குறுக்கிடக்கூடாது. தற்பொழுது 60 மாணவர்கள் வேத பாடசாலையில் படித்து வருகிறார்கள். வரும் கல்வி ஆண்டில் மேலும் 30 மாணவர்களை சேர்க்க உள்ளோம். ஆண்டுதோறும் தேர்வு நடைபெறும். வேதபாடசாலையில் நான்கு ஆண்டு காலத்துக்கு கற்பிக்கப்படுகிறது என்று கூறுகிறார்.

View More வேதங்களோடு விளையாடும் பழங்குடி மாணவர்

ஆகம வழிபாட்டில் மகத்துவம் மிக்க தீக்ஷை முறைகள்

சிவாகம தீக்ஷை சைவசித்தாந்த தத்துவ உட்செறிவு மிக்கது. இதனால், இக்கிரியையில் வெளிப்படையான சடங்குகளை விட, உள்முகமான செயற்பாடுகளே அதிகமாக இருக்கக் காணலாம்… சாந்தீத கலை, சாந்தி கலை, வித்யாகலை, பிரதிஷ் டா கலை, நிவிர்த்தி கலை ஆகிய கலைகளை குறிக்குமாறு முறையே சிரசு, நெற்றி, மார்பு, நாபி, முழங்கால் ஆகியவற்றில் பூக்கள் கட்டித் தொங்க விடப்படும். பின், மந்திர பூர்வமான ஹோமங்கள் நடந்து அந்த நூல் கழற்றி, சிவகும்பத்தின் முன் வைக்கப்படும். பிறகு இரவு யாகசாலைக்கு அருகில் சீடனை தூங்கச் செய்வார். மறுநாள் துயில் நீங்கி அதிகாலை எழுந்ததும் குருவும் சீடனும் நித்திய கருமங்கள் முடித்து, சிவபூஜை செய்து, யாகபூஜை முடிந்ததும், சீடன் முதல் நாள் இரவு கனவு கண்டாரா? என்று அறிந்து அதற்கேற்ப ஹோமங்கள் நடக்கும்…

View More ஆகம வழிபாட்டில் மகத்துவம் மிக்க தீக்ஷை முறைகள்

சிதம்பர தரிசனம்

தில்லையில் தங்கியிருந்த காலத்தில் குமரகுருபரர் “சிதம்பர மும்மணிக்கோவை” என்ற பிரபந்தத்தை இயற்றினார். புஷ்பராகம், கோமேதகம், வைடூரியம் என்று மூன்று மணிகள் சேர்ந்த மாலையைப் போல மூன்று வகை செய்யுட்களால் ஆன இந்நூல் காட்டும் சிதம்பர தரிசத்தை இக்கட்டுரையில் காண்போம்…. உடுக்கை ஏந்திய தமருகக் கரம் உலகங்களை சிருஷ்டி செய்கிறது. அமைத்த பொற்கரம் அந்த உயிர்களுக்கு அபயம் தந்து சராசரங்களைக் காக்கிறது. அழலேந்திய கரம் அனைத்தையும் சங்காரம் செய்கிறது. ஊன்றிய பாதம் மறைக்கிறது. தூக்கிய திருவடியாகிய குஞ்சித பாதம் அனுக்கிரகம் செய்கிறது…. இவருக்கு ஆடுவதில் சலிப்பே ஏற்படாதா? அந்தத் திருவடிகள் தாம் சலித்துப் போகாதா? என்று கவலையும் ஆச்சரியமும் ஏற்படுகிறது புலவருக்கு. ஆனால் அவர் யாருக்காக ஆடுகிறார்? பதஞ்சலி முனிவருக்காக அல்லவா ஆடுகிறார்! அவரோ பதம் சலியாத முனிவர்! அவர் பெருமானையும் பதம் சலியாதவராக ஆக்கி விட்டாரோ?….

View More சிதம்பர தரிசனம்

ஸ்ரீமத் ராமாயணக் கதாபாத்திரங்களின் தெய்வீகப் பின்னணி – 8 (நிறைவு)

ராமருடன் தான் வாழ்நாள் முழுதும் கொண்டிருந்த அன்பில் எந்த மாசு, மருவும் இல்லை என்பதே உண்மை என்பதால் தன்னை ஈன்ற பூமாதேவியே தன்னை அவள் கரங்களில் தாங்கிக் கொள்ளட்டும் என்று சீதை பிரார்த்தனை செய்கிறாள். மூன்று வரிகளில் உள்ள அந்த சீதையின் வேண்டுதல், ராமாயணத்திலேயே எவருடைய மனதையும் உருக்கி மிகுந்த இரக்கம் கொள்ள வைக்கக்கூடிய வரிகள்… உண்மையில் எல்லாவிதமான ரசங்களும் ராமாயணத்தில் இடம் பெற்றிருக்கின்றன என்றாலும், மற்றவைகளை விட சோக ரசம் முதன்மையாக இருக்கிறது. ராமாயணத்தை ஓர் இலக்கியக் கலைப் படைப்பாக மட்டுமே காண்பது சரியான பார்வையாக இருக்க முடியாது. அதை மோக்ஷத்தைத் தர உதவும் ஆன்மிகத்தைப் போதிக்கும் சமய நூலாகவே பார்க்கவேண்டும். அதில் பரவலாகக் காணப்படும் சோகத்திற்கு ஓர் ஆன்மிக முக்கியத்துவம் இருக்கிறது….

View More ஸ்ரீமத் ராமாயணக் கதாபாத்திரங்களின் தெய்வீகப் பின்னணி – 8 (நிறைவு)

ஆகமக் கோவில்கள் — பத்மஸ்ரீ முத்தையா ஸ்தபதி விளக்கம்

ஆலயக் கோவிலுக்கு ஐந்து நிலை இராஜகோபுரம் இருக்கும் என்றார் முத்தையா ஸ்தபதி. கோபுரத்தின் நிலைகளை எப்படித் தீர்மானிக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, “அது கோவிலின் பரப்பளவையும், மக்கள் தொகையையும் பொறுத்திருக்கிறது. மக்கள் தொகையைப் பொறுத்தே கோவில் எவ்வளவு பெரிதாக இருக்கவேண்டும் என்று தீர்மானிக்கப் படுகிறது. அதைப் பொறுத்தே இராஜகோபுரத்தின் நிலைகளும் தீர்மானிக்கப்படுகின்றன என்றும் கூறி, தனது ஒவ்வொரு கூற்றுக்கும் ஆகம சாத்திரத்திலிருந்து வடமொழி சுலோகங்களைக் கூறி சான்று காட்டினார்… நமது விருப்பப்படி சிலைகளைச் செதுக்கக்கூடாதா என்று வினவியதற்கு, “ஆகம சாத்திரம் அதற்கு அனுமதிப்பதில்லை. விநாயகர் சிலைகளையே பலவிதமாக வடிவமைக்க சாத்திரங்கள் இருக்கின்றன என்று மேற்கோள்கள் காட்டினார். அதுபோலவே, சிவன், பார்வதி, முருகன் முதலிய பல கடவுளர்கள் சிலைகளையும் வடிவமைக்க ஆகம விதிகள் உள்ளன.” என்று பதில் கூறினார்….

View More ஆகமக் கோவில்கள் — பத்மஸ்ரீ முத்தையா ஸ்தபதி விளக்கம்