எழுமின் விழிமின் – 33

உலகத்தின் பாரத்தை எல்லாம் சுமக்க நீங்கள் உண்மையிலேயே ஆயத்தம் என்றால் தாராளமாக அதனை ஏற்றுக் கொள்ளுங்கள். ஆனால் தயவு செய்து உங்களுடைய முக்கல் முனகல்களையும், சாபங்களையும் எங்கள் காதுகளுக்கு எட்டச் செய்ய வேண்டாம். உண்மையாகவே பாரம் சுமக்கிற மனிதன் உலகத்தை ஆசீர்வதித்துவிட்டுத் தன் வழியே போகிறான். கண்டனமாகவோ, குற்றங் குறையாகவோ ஒரு சொல்கூட அவன் பேசுவதில்லை…. பூரணமாகத் தீமை வாய்ந்தது எதுவுமே இல்லை. இவ்வுலகில் தெய்வத்துக்கும் பிசாசுக்கும் இடமுண்டு. இல்லையேல் பிசாசு இங்கே இருக்காது. இந்த நமது போர்க்களத்தில் தவறுதலாகிய புழுதி கிளம்பியே தீரும். அந்தப் புழுதியைச் சகிக்க முடியாத அளவுக்கு எவருடைய தோல் மெல்லியதாக இருக்கிறதோ அவர்கள் இந்தப் படை அணிவகுப்பை விட்டு வெளியே போய்விடட்டும்…..

View More எழுமின் விழிமின் – 33

எழுமின் விழிமின் – 32

நான் மிக அதிகமாக அஞ்சுவது இந்த பூஜை அறையைக் கண்டுதான். பூஜை அறை இருப்பதில் தவறில்லை. ஆனால் அதையே முழு முதலாக, எல்லாமாக ஆக்கிவிட்டு, பழைய காலத்துக் கட்டுப்பெட்டித்தனத்தை மீண்டும் நிறுவக் கூடிய போக்கு சிலரிடம் காணப்படுகிறது. இத்தகைய பழைய காலத்தைய, சிதைந்து குலைந்து போன சடங்குகளில் ஏன் இவர்கள் ஆழ்ந்து விடுகிறார்கள் என்பது எனக்குத் தெரியும். அவர்களது உணர்ச்சித் துடிப்பு வேலை வேண்டுமென்று தவிக்கிறது. ஆனால் அதற்கான வழி/துறை இல்லாமல் போகவே இவர்கள் மணி அடிப்பதிலும் மற்றச் சடங்குகளிலும் சக்தியை வீணடிக்கிறார்கள். “என்னால் பாலைவனத்து மண்ணைப் பிழிந்து எண்ணெய் உண்டாக்க முடியுமென்று கூறுவாயானால் உன்னை நான் நம்புவேன். முதலையின் வாயிலிருந்து, அது என்னைக் கடிக்காத முறையில், பல்லைப் பிடுங்கி விடுவேன் என்றாலும் நம்பிவிடுவேன், ஆனால் குருட்டுத்தனமான வெறி பிடித்தவனை மாற்ற முடியுமென்று கூறுவாயானால் அதை மட்டும் நம்ப முடியாது”….

View More எழுமின் விழிமின் – 32

எழுமின் விழிமின் – 11

அழியாப்பேறு பெற்றவர்களின் புதல்வர்களே! எனது நாட்டினரே! ஒளிமிகுந்து விளங்கிய பல நூற்றாண்டுகளாக வாழ்க்கைக் கடலைக் கடந்து நமது தேசியக் கப்பல் ஓடிவந்துள்ளது…ஆனால் இன்றைக்கோ- நமது குற்றத்தினாலோ அல்லது வேறு எந்த காரணங்களினாலோ அதில் ஓட்டை விழுந்து, பழுதுபட்டுள்ளது. இந்தக் கப்பலில் அமர்ந்துள்ள நீங்கள் இப்பொழுது என்ன செய்வீர்கள்? அதைச் சபித்துக்கொண்டும் உங்களுக்குள்ளேயே சண்டையிட்டுக்கொண்டும் பூசலிட்டுக்கொண்டும் நிற்பீர்களா? நீங்கள் அனைஅரும் ஒற்றுமையுடன் ஒன்றுசேர்ந்து ஓட்டைகளை அடைக்க, சிறந்தமுறையில் முயற்சிக்க மாட்டீர்களா? ஆகவே இப்பணியைச் செய்வதற்காக நாம் அனைவரும் நமது நெஞ்சத்து உதிரத்தை மகிழ்வுடன் அளிப்போம்…

View More எழுமின் விழிமின் – 11

எழுமின் விழிமின் – 7

“…எது எளிது? ஆயிரக்கணக்கான நூற்றாண்டுகளாக வளர்ந்து உருப்பெற்ற நமது தேசீய குணப் பண்பைக் கைவிடுவது எளிதா? அல்லது சில நூற்றாண்டுகளாக நீங்கள் ஒட்டவைக்கப் பார்க்கிற அந்நிய குணப் பண்பைக் கைவிடுவது எளிதா? ஆங்கிலேயர்கள் தமது யுத்தரீதியான பழக்க வழக்கங்களை மறந்து, போரிடுவதையும் ரத்தம் சிந்துவதையும் கைவிட்டு விட்டு, சாந்தமாக, அமைதியாக உட்கார்ந்து சமயத்தையே தமது வாழ்வின் ஒரே குறிக்கோளாக ஆக்கிக் கொள்ளுவதில் தமது சக்தி முழுவதையும் ஏன் ஒருமுகப்படுத்தக்கூடாது?…”

View More எழுமின் விழிமின் – 7

எழுமின் விழிமின் – 6

என்னுடைய முன்னோர்களைக் குறித்து வெட்கப் படாமல் இருக்க வேண்டும் என்பது எனது வாழ்க்கையின் கொள்கைகளில் ஒன்று. உலகில் தோன்றிய பெருமை மிக்க மாந்தரில் நான் ஒருவன். ஆனால் வெளிப்படையாக உங்களுக்குக் கூறுகிறேன். நான் எனக்காகப் பெருமைப் படவில்லை. என் மூதாதையர்களின் காரணமாகவே பெருமை இன்னும் அதிகரிக்கிறது. அது எனக்கு வலிமையையும், வீர நம்பிக்கையையும் தருகிறது. பூமியில் புழுதியாகக் கிடந்த நிலையிலிருந்து அது என்னை மேலே உயர்த்தியுள்ளது. பெரியோர்களான நமது முன்னோர் களின் மகத்தான திட்டத்தை நிறைவேற்றுவதற்காக அது என்னை வேலை செய்ய வைத்துள்ளது.

View More எழுமின் விழிமின் – 6

எழுமின் விழிமின் – 5

கோழைகள், இழிந்த கிழிந்த ஈரமான துணிபோலத் தெம்பற்றவர்கள், எதையும் கண்டிக்காமல், யார் உதைத்தாலும் கோபமடையாதவர்கள் – இது மட்டரகமான தாமசகுணம் வாய்ந்தவர்களின் சின்னம். சத்வ குணத்தின் அறிகுறியல்ல; சாவின் சின்னமாகும்… கிறிஸ்து கிரீஸையும் , ரோம் நாட்டையும் அழித்தார். பின்னர் காலப் போக்கில் அதிர்ஷ்டவசமாக, ஐரோப்பியர்கள் பிராடெஸ்டெண்டுகளாக மாறினார்கள்… சங்கரரும் ராமானுஜரும் தக்க அளவில் அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவற்றை இணைத்து, சம நிலைப்படுத்தி அநாதியான வேத சமயத்தை உறுதியாக நிலை நாட்டினார்கள்…

View More எழுமின் விழிமின் – 5

எழுமின் விழிமின் – 4

பாரதம் இப்பொழுதும் உயிர் வாழ்கிறது. ஏனெனில் உலக நாகரிகமாகிற பொதுநிதிக்குப் பாரதம் தனது சொந்தப் பங்கினைத் தர வேண்டியிருக்கிறது…தர்மம் முக்தியுடன் சேர்ந்து பொருந்தி வாழ்ந்த ஒரு காலம் பாரத நாட்டில் இருந்தது. யுதிஷ்டிரன், அர்ஜுனன். துரியோதனன், பீஷ்மன் போன்று தர்மத்தை வழிபட்டவர்கள் இருந்தனர். அவர்களுடன் கூடவே முக்திக்காக விழைந்த வியாசர், சுகர், ஜனகர் போன்றோரும் இருந்தனர். புத்த மதம் தோன்றியபோது தர்மமானது அடியோடு புறக்கணிக்கப்பட்டு, மோட்சப் பாதை மட்டுமே செல்வாக்குப் பெறுவதாயிற்று.

View More எழுமின் விழிமின் – 4

எழுமின் விழிமின் – 3

நமது தாய் நாட்டிடம் உலகம் பட்டுள்ள கடன் அபாரமானது. ஒவ்வொரு நாடாக எடுத்துப் பார்த்தால் எந்த நாடும் பொறுமையான “சாது ஹிந்து”விடம் பட்டுள்ள கடனைப் போல இந்தப் பூமியிலுள்ள எந்த ஓர் இனத்திடமும் கடன்படவில்லை… பல நூற்றாண்டுகளாக ஏற்பட்ட அதிர்ச்சிகளையும், நூற்றுக்கணக்கான அன்னியப் படையெடுப்புகளையும், சமாளித்துத் தாங்கிய அதே பாரதம்தான் இன்றும் உள்ளது. உலகில் உடைக்க முடியாத பாறையையும் விட உறுதியுடனும் இறவாத சக்தித் துடிப்புடனும் அழிக்கமுடியாத ஜீவனுடனும் அது வாழ்கிறது…

View More எழுமின் விழிமின் – 3

எழுமின் விழிமின் – 2

மலைகளையும், நதிகளையும் கடந்து, தூரம், காலம் ஆகியவற்றின் எல்லைகளை எல்லாம் தாண்டி, பாரதச் சிந்தனையாகிற இரத்தம் உலகிலுள்ள பிற நாடுகளின் உதிரக் குழாய்களில் ஓடிப் பாய்ந்துள்ளது… இந்த இனத்தவரின் துணிவு தம் யாக குண்டங்களின் ஒவ்வொரு கல்லையுமே துருவி ஆராயத் தூண்டியது. புனிதமான நூல்களின் ஒவ்வொரு சொல்லையும் அலசிப் பார்த்து, ஒட்டியும் இணைத்தும் பொடிப்பொடியாக்கியும் பார்க்க வைத்தது.. கொல்லர்கள் படைத்துத் தரும் ரம்பத்தைப் போல அவர்களது கற்பனைச் சக்தி இருந்தது. அந்த ரம்பத்தால் இரும்புப் பாளங்களையும் அறுக்க முடியும். ஆனால் அதே சமயத்தில் வட்டமாக அதனை வளைக்கவும் முடியும்…

View More எழுமின் விழிமின் – 2

பலவேசமுத்துவும் தன்னாசியும்

“பலவேசமுத்து துணை” என்று ஒருநாள் ஒரு ஆட்டோவில் பார்த்தநொடியிலிருந்து சிந்தனை தொடங்கியது… விகிர்தர் என்னும் சொல்லுக்கு பலவிதமான உருவங்களை எடுப்பவர் என்று அர்த்தம்… இத்தெய்வங்களை நாட்டார் தெய்வங்கள் எனப் பெயர் சூட்டி அவமானப்படுத்தும் ஆட்களிடம் இருந்து காக்கவேண்டும் எனத் தோன்றுவதில்லை… ‘அண்ணன்மார் கதை’யைத்தான் திரித்து பாத்திரங்களின் தெய்வத்தன்மையை மறுத்து கருணாநிதி ஒரு புத்தகம் எழுதியதும் அதைக்கொண்டு படம் எடுத்ததும்…

View More பலவேசமுத்துவும் தன்னாசியும்