அண்மையில் ‘புதிய தலைமுறை’ இதழில் ஒரு கார்ட்டூன் வெளிவந்திருக்கிறது. பசியுடன் அமர்ந்திருக்கிறான் ஒரு இந்தியன். எதிரில் காலி வாழை இலை. நரேந்திர மோதியோ ஒரு பழைய புத்தகத்தை அவனிடம் நீட்டுகிறார். அதில் சமஸ்கிருதம் என எழுதியிருக்கிறது. … பாரதீய கலாச்சாரப் பண்பாட்டிற்கு இருப்பிடமாக உள்ள சம்ஸ்கிருத மொழியை இந்நாட்டில் பிறந்த ஒவ்வொருவரும் கற்பது அவசியம்
View More தேவையா இந்த வடமொழி வாரம்?Category: வரலாறு
வன்முறையே வரலாறாய்…- 27
இந்திய- பாகிஸ்தான் பிரிவினையின் போது ஏறக்குறைய ஆறு லட்சத்திலிருந்து இருபது லட்சம் பேர் வரை மரணமடைந்திருக்கலாம் என்று கணக்கிட்டிருக்கிறார்கள். ஏறக்குறைய ஒரு லட்சம் இந்து மற்றும் சீக்கியப் பெண்கள் கற்பழிக்கப்பட்டார்கள். ஒரு லட்சத்திற்கும் மேலான இந்து, சீக்கியப் பெண்கள் முஸ்லிம்களினால் கடத்திச் செல்லப்பட்டார்கள்…. சுருக்கமாகச் சொல்வதென்றால், பஞ்சாப் பகுதியில் கலவரங்களையும், படுகொலைகளையும், கொள்ளைகளையும் கட்டவிழ்த்துவிட்டு இந்து, சீக்கியர்களை விரட்டியடித்து அவர்களின் வீடுகளையும், உடைமைகளையும் கைப்பற்றிய ஒவ்வொரு முஸ்லிமும் ‘தான் பஞ்சாபின் நவாபாக மாறியதாக’ சந்தோஷம் கொண்டான்.
View More வன்முறையே வரலாறாய்…- 27படுகொலையைத் தூண்டினாரா பாலகங்காதரர்?
“அந்தக் காலத்தில் வெள்ளைக் காரன் மக்களெல்லாம் பிளேக் நோயில் சாகக் கூடாது என்பதற்காக எலிகளைக் கொல்லும் இயக்கத்தைத் தீவிரப்படுத்தினான். உடனே, திலகர், நம்முடைய மதத்தை அழிப்பதற்காக வெள்ளைக் காரன் திட்டமிட்டு இறங்கி விட்டான் என்று எலி ஒழிப்பை எதிர்த்துப் பிரச்சாரம் செய்தார். முட்டாள்தனமாக அவர் சொல்லவில்லை; அயோக்கியத் தனமாகச் சொன்னார்.” திராவிடர் கழகம் செய்யும் இந்த பிரச்சாரம் எந்த அளவு உண்மை? தெரிந்து கொள்ள படியுங்கள்…
View More படுகொலையைத் தூண்டினாரா பாலகங்காதரர்?பிரிக்ஸ்: அமெரிக்காவை முந்துகிறது பாரதம்!
இதற்குமுன் படிக்க வேண்டிய, தொடர்புடைய இடுகைகள்: பிரிக்ஸ்: சாதித்தது பாரதம்! உலகம்…
View More பிரிக்ஸ்: அமெரிக்காவை முந்துகிறது பாரதம்!வன்முறையே வரலாறாய்…- 26
“1947 பிரிவினையின் போது, இந்து மற்றும் சீக்கியர்களின் முகவரிகள் தாங்கிய ஆயிரக்கணக்கான கடிதங்களும், தந்திகளும் லாகூரின் மத்திய தபால் தந்தி அலுவலகத்திற்கு வந்து குவிந்தன. படுகொலை செய்யப்பட்ட ஆண்கள் மற்றும் கற்பழிக்கப்பட்ட பெண்களின் படங்கள் அந்தக் கடிதங்களில் அச்சடிக்கப்பட்டிருந்தது. அப்படங்களின் பின்புறம் எழுதப்பட்டிருந்த செய்தி, ‘முஸ்லிம்கள் உங்களின் நிலத்தைக் கைப்பற்றிய பின்னர் அவர்களின் கையால் இந்து, சீக்கிய சகோதரர்களுக்கு நடந்த இந்த நிலைமையே உங்களுக்கும் காத்திருக்கிறது’ என்றது. இந்துக்களின் மனோபலத்தைக் குறைத்து அவர்களிடையே அச்சத்தையும், பதற்றத்தையும் உருவாக்கும் விதமாக முஸ்லிம் லீகினால் அனுப்பி வைக்கப்பட்டவையே அந்தக் கடிதங்கள்.. முஸ்லிம்களல்லாதவர்களை பாகிஸ்தானிலிருந்து விரட்டியடிக்க முஸ்லிம் லீக் மிகுந்த கவனத்துடன் திட்டங்களைத் தீட்டியதுடன் அதனை மிகத் திறமையாகச் செயல்படுத்தவும் துவங்கியது” என விளக்குகின்றனர் காலின்ஸ் மற்றும் ல-பியேர்…
View More வன்முறையே வரலாறாய்…- 26நாலந்தா: வரலாற்று உண்மைகளும் திரிபுகளும்
முஸ்லீம் படையெடுப்பாளர்கள் ஆப்கானிஸ்தான் மற்றும் வட இந்தியா மீது படையெடுத்து வந்த பொழுது அங்கிருந்த எல்லா பவுத்த பிக்குகளையும் கொன்றொழித்தார்கள். மேலும் எல்லா பவுத்த கட்டிடங்களையும் கொள்ளையடித்தும் இடித்தும் நிரவினார்கள். நாலந்தா கொஞ்ச காலத்திற்கு அவர்களின் கண்ணில் படாமல் இருந்தது. ஆனால் விரைவிலேயே வந்து அதையும் அழித்தார்கள். இந்த இடித்தொழிப்பானது அக்காலத்திய தாபாக் இ நசாரி எனும் நூலில் மவுலானா மின்ஹாஜ்- உத்- தின் என்பவரால் தெளிவாக விவரிக்கப்படுகிறது…. ஆனால் “திபெத்திய நூல் ஒன்று நாலந்தா சில இந்து குண்டர்களால் எரிக்கப்பட்டதை பற்றி பேசுவதாக” மார்க்சிய வரலாற்றாசிரியர் டி.என்.ஜா பதிவு செய்கிறார்…. இரண்டு பிச்சைக்காரர்கள் அவ்வளவு பெரிய வளாகத்தை அங்கிருக்கும் பவுத்த துறவிகள் இருக்கும்போதே ஒவ்வொரு கட்டிடமாக போய் எரிக்க முடியுமா?… மார்க்சிய வரலாற்று ஆய்வாளர்கள் உண்மைகளை முழுவதுமாக திரிப்பதும் முடிந்தால் உண்மையை பொய்யாக்குவதும் நடைமுறையில் இருப்பது என்பதால் இது எந்த விதமான ஆச்சரியத்தையும் அளிக்கவில்லை. ஆனால் ஆச்சரியம் என்னவென்றால் யாருமே மூலத்தையோ அல்லது மேற்கோள் காட்டப்பட்ட நூலையோ சரிபார்க்கவில்லை என்பது தான்… (மூலம்: அருண் ஷோரி, தமிழில்: ராஜசங்கர்)
View More நாலந்தா: வரலாற்று உண்மைகளும் திரிபுகளும்இந்துத்துவம் எனும் சமத்துவ கங்கை
டாக்டர் அம்பேத்கரால் பாபா சாகேப் என அழைக்கப்பட்ட அந்த தலைப்பாகை கட்டிய முதிய கம்பீரமான தலைவர் சொன்னார், “இந்த தேசத்தின் கொடியாக காவிக்கொடித்தான் இருக்க வேண்டும். அதை நீங்கள் ஆதரிக்க வேண்டும்.” டாக்டர். அம்பேத்கர் ஒரு நிமிடம் சிந்தனையில் ஆழ்ந்தார். பின்னர் கூறினார்: “ஆக, பகவா கொடியை செங்கோட்டையில் பறக்க விட ஒரு மகரிடம் வந்திருக்கிறீர்கள். சரிதான். இதற்காக ஒரு மக்கள் இயக்கத்தை நீங்கள் ஆரம்பிக்க வேண்டும். காவிக்கொடியை தேசிய கொடியாக்க கோரும் அந்த மக்கள் இயக்கத்தை நான் ஆதரிப்பேன்.” … ஒடுக்கப்பட்டவர்கள் உரிமை, தொழிலாளர் உரிமை, மகளிர் உரிமை ஆகியவற்றின் முன்னோடிகளாகத் திகழ்ந்தவர்கள், இருள் மிகுந்து சமுதாய தேக்கநிலை திகழ்ந்த காலகட்டத்தில் ஒளிவிளக்காக விளங்கியவர்கள் இந்துத்துவர்கள்.
View More இந்துத்துவம் எனும் சமத்துவ கங்கைமுடிவல்ல தொடக்கம்
பொதுவாக இந்திய அரசுக்கு ஒரு ‘நல்ல பெயர்’ உண்டு. வெளிநாட்டில் இந்தியர்கள் இன்னல்கள் படும் போது அது கண்டு கொள்ளாது என்பதுதான் அது. இந்திய அரசாங்கத்தின் கையாலாகாத்தனம் என்பது உலக பிரசித்தி பெற்றது. … வெளியே தெரியும் காட்சிகளுக்கு அப்பால் பல விஷயங்கள் மோதி அரசால் நிகழ்த்தப்பட்டன. இந்திய ஊடகங்களில் அதிகம் கண்ணைக்கவராத ஒரு செய்தி உண்டு. பாரசீக வளைகுடாவிலும் ஏமன் வளைகுடாவிலும் விமானங்கள் தாங்கிய இந்திய போர்கப்பல்கள், ஐ.என்.எஸ்.மைசூர், ஐ.என்.எஸ்.தர்காஷ் ஆகியவை நிறுத்தப்பட்டன. … வெற்றி தோல்விகளுக்கு அப்பால் இந்திய அரசு இப்போது அயல்நாடுகளில் வாழும் இந்தியர்களுக்காக இயங்குகிறது என்பது நம் 67 ஆண்டுகள் இந்திய அரசு வரலாற்றில் ஒரு நல்ல மாற்றம். ஒரு ஆறுதலான மாற்றம். அதை உருவாக்கி அளித்தமைக்காக மோதியின் அரசுக்கு என்றென்றும் தேசபக்தி கொண்ட இந்தியர்களின் நன்றி இருக்கும்.
View More முடிவல்ல தொடக்கம்கிலாபத் கனவுகள்…
இவ்வாறு பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் நபர் ஹாஜா பக்ருதீன் உஸ்மான் அலி. இவர் 2007 இல் கடலூரில் பயிற்சி ஒன்றுக்கு வந்திருப்பதாக கூறப்படுகிறது. கடலூர்? நினைவிருக்கலாம் 2004 இல் கடலூரில்தான் மனிதநீதி பாசறையின் அடிப்படைவாத முகாம்களை காவல்துறை வெளிக்கொண்டு வந்தது. … சென்னை கல்லூரி இளைஞர்கள் கிலாபத் கனவுகளுடன் மூளை சலவை செய்து வெளிநாட்டு ஜிகாத்களுக்கு அனுப்பப்படுவதும் அவர்கள் பயிற்சி பெற்ற ‘முஜாகிதீன்களாக’ இந்தியா திரும்பி இங்கே ஜிகாதி கிலாபத் வைரஸ்களை பரப்புவதும் மிகவும் சீரான நெடுநாள் திட்டத்தின் பகுதியாகும்.
View More கிலாபத் கனவுகள்…வன்முறையே வரலாறாய்…- 25
இந்திய-பாகிஸ்தான் பிரிவினைக்கு சிறிது காலம் முன்பு நடந்த வன்முறைகள் பயங்கரமானவை.. ராவல்பிண்டியைச் சூழ்ந்திருந்த ஒரு கிராமத்தில், மதம் மாற மறுத்த ஒரு கிராமத்திலிருந்த அத்தனை இந்து மற்றும் சீக்கியர்கள், கிராமத்தின் மத்தியில் குடும்பத்துடன் நிறுத்தி வைக்கப்பட்டு, அவர்களைச் சுற்றிலும் விறகுகளை அடுக்கிய முஸ்லிம் வெறியர்கள் உயிருடன் அவர்களை எரித்துக் கொன்றார்கள். இளம்பெண்களைத் தூக்கி கொண்டு ஓடிய முஸ்லிம் காலிகள் அவர்களைத் திறந்த வெளியிலேயே கற்பழித்தார்கள். இதனைக் கண்டு மனம் வெதும்பிய பல இந்து, சீக்கியப் பெண்கள் உடனடியாகத் தற்கொலை செய்து கொண்டார்கள்… பிரிவினை அங்கீகரிக்கப்பட்ட பல மாதங்களுக்குப் பின்னரும் முஸ்லிம்கள் அங்கிருந்த இந்து மற்றும் சீக்கியர்களின் மீது சிறிதும் மனிதத்தன்மையற்ற பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டார்கள். குர்பச்சன் சிங் தாலிப் அவரது Muslim League Attacks on Sikhs and Hindus in the Punjab 1947 என்னும் புத்தகத்தில் பஞ்சாப் பகுதியில் மட்டும் நடந்த இதுபோன்ற 592 சம்பவங்களைப் பட்டியலிடுகிறார். அவை அத்தனையும் முஸ்லிம்களால் “மட்டுமே” நடத்தப்பட்ட தாக்குதல்கள். ஒரு இடத்திலும் இந்து/சீக்கியர்கள் இது போன்ற வன்முறைச் சம்பவங்களைத் தாங்களாக முன்னெடுத்து நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது….
View More வன்முறையே வரலாறாய்…- 25