‘இனிமே வாட்சை அடகு வச்சா மீக்கற வேலையில்லை! ஒரு குச்சி இருந்தா போதும்’ என்றபடியே ஒரு குச்சியை உடைத்து பரிசோதனைகள் செய்து நிழலை அளந்து,குச்சியை அளந்து பதினைந்து நிமிடங்களுக்குப் பிறகு,”ரவி!! பணி பதினொண்ணு’ என்று அறிவித்தார்.
View More இப்படித்தான் ஆரம்பம் -2Category: இலக்கியம்
இப்படித்தான் ஆரம்பம் – 1
இந்த நீதிக்கதையை எழுதிய கே.தேவராஜ் பத்திரிகை தர்மத்தை மீறிச் செய்த ஒரு காரியம்தான் என் கோபத்தைக் கிளறியது. வகுப்பில் நான் கடைசி பெஞ்ச் என்று இந்நேரம் யூகித்திருப்பீர்கள். கே.தேவராஜ் முதல் பெஞ்ச். கிளாஸ் லீடர் வேறு. கடைசி பெஞ்ச்சுக்கு வந்து கதையைக் கொடுத்துவிட்டு காத்திருப்பதுதான் பத்திரிகை தர்மம்
View More இப்படித்தான் ஆரம்பம் – 1கம்பன் கண்ட சிவராம தரிசனம்
நுரைத்து ஓடும் கங்கை நீரின் துளிகள் ராமனின் சடைக் கற்றைகள் வழியாக விழுகின்றன. திரண்ட அவன் புயங்கள் அந்த நீரில் ஜொலிக்கின்றன. தன் கணவனைக் கண்டு ரசித்துக் கொண்டிருக்கிறாள் சீதை… இவன் கல்லாத கலை என்று ஒன்று உண்டா? அப்படி உண்டானால், அது இல்லாத உலகத்தில் தான் இருக்க வேண்டும்! யாரப்பா இந்தச் சொல்லின் செல்வன்? இவன் பிரமனோ? சிவனோ?
View More கம்பன் கண்ட சிவராம தரிசனம்பாவை நோன்பும் தைந் நீராடலும் – 2
“எம் கழுத்தைச் சுற்றித் தழுவிய எம் காதலர் (கணவர்) எம்மைப் பிரியாது இருக்க வேண்டும். பல பூக்களை நாடும் வண்டுகள் போல, எம் கணவர் பிறரை நாடாமல் என்றும் எம்மோடு இருக்க வேண்டும். எம் கணவரும், யாமும், கிழவர், கிழவியர் என்று உலகத்தோர் கூறாவண்ணம், பேரிளம் பெண் என்னும் எமது ஏழாம் பருவம் எய்துமளவும், இந்த இளம் பருவத்தினராகவே இன்று இங்கு தைந் நீராடுவது போல என்றும் நிலைபெற வேண்டும்.”
View More பாவை நோன்பும் தைந் நீராடலும் – 2பாவை நோன்பும் தைந் நீராடலும் – 1
“மார்கழி மாதம் வைகறைப் பொழுது தொடங்கி காணப்படும் சில இயற்கைச் சூழ்நிலைகள், ஆறு மாதங்கள் கழித்து, வளமான மழைக்காலம் வருவதற்கு ஏதுவாகும் என்பது. இந்த இயற்கைச் சூழ்நிலைகள் உண்டாவதற்கு, ஆண்டாள் கூறுவது போன்ற ‘கீசு கீசு’ என்னும் ஆனைச் சாத்தான், சிலும்பும் புள்ளினங்கள், கொட்டில் விட்டு வெளி வரும் எருமைக் கன்றுகள் எழுப்பும் ஓசைகள் – அவை தவிர ஆற்று நீரில் கூக்குரலிட்டு நீராடி, பாவை விளையாடும் சிறுமியர் எழுப்பும் இனிய குரலோசை போன்றவை முக்கியத் தேவைகள்.”
View More பாவை நோன்பும் தைந் நீராடலும் – 1ஆண்டாள் கொட்டிய பறையும், கேட்ட பறையும்
புறநானூறில் 12 விதமான பறைகள் சொல்லப்படுகின்றன. இவற்றுள் ஆண்டாள் எந்தப் பறையைக்கொட்டியிருப்பாள்? .. அப்படியான ஒரு ரகசியத்தை, எல்லார் முன்னிலையிலும், எல்லோரும் அறியும் வண்ணம் போட்டு உடைத்து விட்டான் கண்ணன். அறை பறை என அறிவித்துவிட்டான்… தூங்கிக் கொண்டிருப்பவனை ஆண்டாள் எழுப்பியது போல, நாமும் அவனை எழுப்பிக் கேட்பதில், பாவைச் சிறுமியர் போல நமக்கும் ஒரு கிளுகிளுப்பு!
View More ஆண்டாள் கொட்டிய பறையும், கேட்ட பறையும்தமிழர் கண்ட நீளா தேவி
தமிழ் மரபில் மட்டும்தான் இவளைப் பற்றி செய்திகள் உள்ளன என்பது, தமிழர்கள் வேதக் கருத்துகளில் எந்த அளவு ஆழ்ந்திருந்தனர் என்று காட்டுகிறது … மஞ்சள் துண்டு மகிமையைக் கண்டவருக்கு, போகம் காட்டி அவன் பாதையில் திரும்ப வேண்டி மோகம் கொள்ளச் செய்ய வேண்டும். தோஷங்களை அவன் கண்டு கொள்ளாமல் இருப்பதற்கு நிழல் போன்ற நீளா தேவியின் கருணை – கருணைக்கே கருணை காட்டும் நீர்மை- தேவைப்படுகிறது.
View More தமிழர் கண்ட நீளா தேவிகாவடிகள் சிந்து பாடும் கழுகுமலை
”கருணை முருகனைப் போற்றி – தங்கக் காவடி தோளின் மேலேற்றி…. “ – காவடிச்சிந்து மெட்டுக்கள், படித்தவர், பாமரர் அனைவரையும் ஈர்க்கும் தன்மை கொண்டவை. காவடிச்சிந்து என்றாலே நம் நினைவுக்கு வருபவர், அண்ணாமலை ரெட்டியார்… இங்கு கழுகுமலையில் கடலொத்த வீதிகள் காணப்படுகின்றன. அங்குள்ள கடைகளின் முன்பு முத்துப் பந்தல் போட்டிருக்கிறார்கள். அந்தப் பந்தலின் ஒளியினால் அஷ்ட கஜங்களுடைய தந்தங்களின் ஒளி கூட மழுங்கி விடுமாம்!
View More காவடிகள் சிந்து பாடும் கழுகுமலையார் நப்பின்னை ?
தமிழ் பக்தி உலகிலும் , இலக்கிய உலகிலும் , தனியிடத்தைப் பெற்ற மர்மப் பெண் நப்பின்னை … கடல் கொண்ட பின், தமிழுலகம் இழந்து விட்ட பல இலக்கியங்களுடன், இந்தத் திருமணம் பற்றிய குறிப்புகளும் மறைந்திருக்க வேண்டும். ஆனால் தப்பிப்பிழைத்த அந்த ஆயர் குடி மக்களால், அந்த பின்னை பெற்ற பேறு மறவாமல் பேசப்பட்டு வந்திருக்கிறது.. மாயோன் என்னும் கரும் தெய்வம் முலைகள் போன்ற இவ்விரு துருவங்களுக்கு இடையேயும் உலகை அணைத்துக் கொண்டு, ‘காஸ்மிக் ரே’ எனப்படும் கதிகளில் இருந்தும், பிற வகையான தீய கதிர்களில் இருந்தும் நம்மைக் காப்பாற்றுகிறார்.
View More யார் நப்பின்னை ?ஜி.யூ. போப் அவர்களும் திருவாசகமும்
மகாப் புனிதரான மாணிக்கவாசகரை ஒழுக்கம் கெட்ட பாவியென நினைக்கத் துணிந்தாரே போப்! மணிவாசகப் பெருமான் பெண் மயக்கத்தால் ஒழுக்கங்கெட்டு பாவமன்னிப்பு கேட்டு ஒப்புதல் கொடுத்தார் என்ற பழிச்சொல்லையும் உலகமுழுதும் பரவச்செய்தார்… ”இயேசு கெத்சமனே யிலிருந்து விண்ணுலக சொர்க்கபூமிக்குச் செல்லும்வரை மாணிக்கவாசகர் அவருடைய அடிச்சுவட்டைக் கண்டு பின்பற்றியிருப்பார், இல்லாத போனால் இவரிடம் எவ்வாறு இவ்வளவு உருக்கம் இருக்க முடியும்?” எனப் போப் திட்டவட்டமாகக் கூறுகிறார்.
View More ஜி.யூ. போப் அவர்களும் திருவாசகமும்