… அந்தப் புத்தகத்தைப் பயன்படுத்தி சற்றே ஆராய்ந்து பார்த்ததில், வெள்ளைத்தாதன்பட்டி பக்கம் உள்ள கோயில் வெறும் கோயில் மட்டுமல்ல. சுரங்க வாசலும்கூட என்று தெரியவந்தது. நான்கு நாயக்கர்கள் ஒட்டிக்கொண்டிருக்கும் நான்கு தூண்களுக்கு நடுவில் ரகசிய சுரங்கம் ஆரம்பிக்கிறது. நிலக்கோட்டை அரண்மனைக்கு இட்டுச் செல்லும் இரண்டு மூன்று சுரங்கங்களில் இதுவும் ஒன்று என்று யூகம். என்னைத் தவிர வேறு யாரிடமும் இதைப் பற்றி ஜெயக்குமார் சொன்னதில்லை ….
View More வையகம் இதுதானடாCategory: இலக்கியம்
பகைவருக்கருள்வாய் நன்னெஞ்சே
பல நூற்றாண்டுகளாக ஆப்கானிஸ்தானிலிருந்தும் அதற்கு அப்பாலிருந்தும் இஸ்லாமிய படையெடுப்பாளர்கள் பாரதத்தின் மீது படையெடுப்பதும் தாக்குவதும் கொள்ளை அடிப்பதும், அடிமைகளாக மக்களை சிறைபிடித்து செல்வதும் நடந்து வந்துள்ளன. மகாராஜா ரஞ்சித் சிங் காலத்தில்தான் இந்த கொடூரச்செயல்களை நிறுத்தும்படி ஆப்கானிஸ்தானம் பணியவைக்கப்பட்டது.
View More பகைவருக்கருள்வாய் நன்னெஞ்சேதீராத விளையாட்டுப் பிள்ளை
… யசோதை கண்ணனைத் தொட்டிலில் படுக்க வைக்கிறாள். கண்ணன் தொட்டில் கிழிந்து விடும்படி உதைக்கிறான். [பின்னால் சகடாசுரனை உதைப் பதற்கு ஒத்திகை பார்த்திருப்பானோ?]ஐயோ இப்படி உதைத்து, உதைத்துக் குழந்தைக்குக் காலெல்லாம் வலிக்கப் போகிறதே யென்று ஆதங்கத்தோடு தூக்கி எடுத்து இடுப்பில் வைத்துக் கொண்டால் இடுப்பையே முறித்து விடுகி றானாம் ….
View More தீராத விளையாட்டுப் பிள்ளைதிருமுறை இசையில் அழகியல் மாற்றம்
சம்பந்தர் இசையில் புது மரபினைத் தோற்றுவித்ததைப் போலவே இசைப்பாடல்களின் வடிவத்திலும் புது மரபினைத் தோற்றுவித்தார்…. யாழின் கட்டிலிருந்து முதலில் இசை விடுதலை பெற்றது. பின் யாப்பின் கட்டினையும் உடைத்து விரிவடைந்தது. இது தென்னக இசை உருக்களில் நிகழந்த அழகியல் மாற்றம் …
View More திருமுறை இசையில் அழகியல் மாற்றம்மஹாகவி பாரதியாரின் கதைகள்-செய்கை
“நாட்டியம் மிகவும் மேலான தொழில். இப்போது அந்தத் தொழிலை நமது நாட்டில் தாஸிகள் மாத்திரமே செய்கிறார்கள். முற்காலத்தில் அரசர் ஆடுவதுண்டு. பக்தர் ஆடுவது லோக பிரசித்தம். கண்ணன் பாம்பின் மேலும், சிவன் சிற்சபையிலும் ஆடுதல் கண்டோம்.
View More மஹாகவி பாரதியாரின் கதைகள்-செய்கைசம்ஸ்கிருதம் – சில கேள்விகள்
பகவத் கீதைக்கு உரை எழுதிய ஆதிசங்கரர் ‘நெருப்பு சுடாது என்று நூறு முறை வேதத்தில் சொன்னாலும் அதை ஏற்றுக் கொள்ள வேண்டாம்; அனுபவம்தான் பிரமாணம்’ என்கிறார்… ”தமிழர்கள் சம்ஸ்க்ருத மொழியில் பெரும் புலமை பெற்று இந்தியாவிற்கே வழிகாட்டியிருக்கிறார்கள்” என்கிறார் ஜெயகாந்தன்.
View More சம்ஸ்கிருதம் – சில கேள்விகள்வேதநெறியும் தமிழ்சைவத்துறையும் – 4
பசு, பதி, பாசம் இம்மூன்றும் உள்பொருள்கள் எனப் பேசுவது சைவசித்தாந்தம்; சம்பந்தர் இந்தக் கலைச் சொற்களை வேதத்தினின்றும் எடுத்து ஆண்டார்… வைதிகர் என்னும் பெயர் பிராமணர்களுக்கு மட்டுமே வழங்குதல் பிற்காலத்தில் நேர்ந்து விட்டபிழை; வேதவழக்கை உடன்பட்ட அனைவரும் வைதிகரே.
View More வேதநெறியும் தமிழ்சைவத்துறையும் – 4மஹாகவி பாரதியாரின் கதைகள் – கடற்கரையாண்டி
காலை முதலாகவே வானத்தை மேகங்கள் மூடி மந்தாரமாக இருந்தபடியால் மணல் சுடவில்லை. உச்சிக்கு நேரே சூரியன். மேகப் படலத்துக்குட்பட்டு சந்தேகத்தால் மறைக்கப்பட்ட ஞானத்தைப்போல் ஒளி குன்றியிருந்தான்… குருட்டு வெயில் கடல்மீது படுவதனால், அலைகளைப் பார்க்கும்போது கொஞ்சம் கண் கூசிற்று. சிறிது தொலையில் ஒரு வெளிநாட்டு வியாபாரக் கப்பல் …
View More மஹாகவி பாரதியாரின் கதைகள் – கடற்கரையாண்டிஜாகிர் ராஜாவின் ‘செம்பருத்தி பூத்த வீடு’
எல்லோரும் ஒண்ணா நிண்டு தொழலாம், சொடலை இல்லை. உம்பேரு சுலைமான். எப்படி இருக்கு என்று ஆசை காட்டுகிறார். மீன் தூண்டிலில் சிக்கிவிட்டது என்று நாணாவுக்கும் சந்தோஷம். புது கைலி, சட்டை, தொப்பி எல்லாம் வருகிறது. நூறு ரூபாய் நோட்டு ஒன்றும் அவன் கையில். நாளைக்கு குளிச்சிட்டு புது சட்டை கைலி கட்டீட்டு வந்துரு பள்ளி வாசலுக்கு என்கிறார் நாணா. ஊரில் ஒரே பரபரப்பு. சுடலை சுலைமானாகப் போகிறான் என்று.
View More ஜாகிர் ராஜாவின் ‘செம்பருத்தி பூத்த வீடு’மஹாகவி பாரதியாரின் கதைகள் – கடல்
நடுக்கடலில் ஒரு தீவு; அதனிடையே பெரிய அரண்மனை. அரண்மனைக்கருகே சிங்காரத் தோட்டம். அதில் ஒரு நீரோடை. அதனருகே புல்லாந் தரை மேல் பதினாறு வயதுள்ள ஒரு கன்னிகை உட்கார்ந்திருந்தாள். அவள் என்னைக் கண்ட மாத்திரத்தில் எழுந்து அரண்மனைக்குள் ஓடிப்போய் விட்டாள். நான் அவ்வழியைப் பின்தொடர்ந்து சென்றேன்.
View More மஹாகவி பாரதியாரின் கதைகள் – கடல்