மின்சார தயாரிப்பு தொழில்களில் இறக்கும் மனிதர்களை கணக்கில் கொண்டால், எண்ணெய் மற்றும் நிலக்கரியினால் ஏற்படும் உயிரிழப்புகள் அணுசக்தியினால் ஏற்படும் உயிரிழப்புகளை விட 18 மடங்கு அதிகம்… ஒரு நிபுணர் குழு ஜைட்டாபூரில் அணு உலை வருவதை அறிவியல் பூர்வமாக ஆதாரங்களுடன் எதிர்த்து, அதை அரசாங்கம் ஏற்று கொண்டால் அது சரியான முடிவுதான்…
View More அணு மின்சக்தி நமது அத்தியாவசியத் தேவைCategory: அறிவியல்
இந்து அறிவியல் சிந்தனைகள், பங்களிப்புகள், ஆன்மிக-அறிவியல் உரையாடல்கள்..
பொய்கள் அறிவியலாக்கப்படும் கலிகாலம் – 3 [நிறைவுப் பகுதி]
அனைத்துப் பொருள்களிலும், நாம் சாப்பிடும் அனைத்து உணவுகளிலும் தண்ணீரிலும் வேதிப்பொருள்கள் இருக்கின்றன… சாத்தான்கள் உலகையோ, மனிதர்களையோ அழிக்கப்போவதில்லை. மனித உருக்கொண்ட ‘அறிவியல் எதிர்ப்பு’ சாத்தான்கள்தான் உலகை அழிக்க அரும்பாடு படுகிறார்கள்.. பாகவத புராணத்தில், பொய்களே கலிகாலத்தில் நம்பப்படும் என்று கூறப்பட்டிருந்தாலும் பொய்களை மறுதலித்து உண்மைகளை தைரியமாகக் கூற ..
View More பொய்கள் அறிவியலாக்கப்படும் கலிகாலம் – 3 [நிறைவுப் பகுதி]பொய்கள் அறிவியலாக்கப்படும் கலிகாலம் – 2
ஓர் அளவிற்கு நோய் வராமல் தடுக்கும் குணமுள்ள உணவை அடிப்படையாக வைத்துக்கொண்டு அதற்கு மசாலா தடவி, நோய் வந்தவுடன் அந்த உணவு பெரிய நோய்களையே சரிசெய்து விடும் என்பார்கள்… புற்றுநோய் சமூகத்தில் பெரிய அளவில் இருந்திருக்கவேயில்லை என்பது வரலாற்றிலிருந்து நமக்குத் தெரிய வருகிறது… இது அறிவியல்; இது ஊகம், இன்னும் முழுமையான ஆராய்ச்சி முடிவுகள் வரவில்லை- என்று பிரித்து எழுதுவதே சரி…
View More பொய்கள் அறிவியலாக்கப்படும் கலிகாலம் – 2பொய்கள் அறிவியலாக்கப்படும் கலிகாலம் – 1
அறிவுக்கு பொருந்தும் பயம் ஏற்படுகையில் மனித உடல் ஆபத்திலிருந்து தப்பிக்க உத்வேகம் பெறுகிறது. ஆனால் அதே பயம் உயிர் ஆபத்திற்காக அல்லாது மற்ற காரணங்களுக்காக ஏற்படும்போது உடல் செயல்பட மறுக்கிறது. தவறான முடிவுகளையும் எடுக்கிறது… உலகையே கலக்கி கொண்டிருக்கும் ஒரே பரபரப்பு அறிவியல் இதுதான்…
View More பொய்கள் அறிவியலாக்கப்படும் கலிகாலம் – 1நட்சத்திரங்களின் கதை!
ஒரு நட்சத்திரத்தை எடுத்துக்கொண்டு அதன் வரலாறை, அது உருவாகும், உள்படல தூசுகளின் (Interstellar Dust ) மூலத்தில் இருந்து, அது தன்னொளியை நிறுத்திகொள்ளும் அந்திம காலம் வரையிலான நிகழ்வுகளை விளக்க முயலுவோம். நாம் இங்கே அந்த படலகதையின் உண்மைகளை சாட்சியங்கள் கொண்டு விளக்க முயலபோவதில்லை. ஆனால் இந்தக்கதையை, இன்று மாபெரும் அறிவியலாளர்கள் புரிந்து கொண்டிருக்கும் இயல்பிலேயே விளக்க தலைப்படுகிறோம்.
View More நட்சத்திரங்களின் கதை!விதி: “நீயா நானா”-வில் கூறப்பட்ட சில கருத்துகள்
மரணம் மட்டுமே மனிதத்தின் ஒரே நிச்சயமான விஷயம். இது மனிதனை வாழவே விடாமல் நிலைகுலையச் செய்யும்… விதி ஒரு மரப்பாச்சி பொம்மையாக- குறுகிய ஓர் உளவியல் ஆறுதலுக்காக- வைத்திருக்கலாமே தவிர அதனை வாழ்க்கை முழுவதும் வைத்துக் கொண்டிருப்பது சரியல்ல. மனிதனின் அடிப்படட உணர்ச்சியான ஞானத்தேடலில் அவன் விதி எனும் மரப்பாச்சி பொம்மையைத் தூக்கி எறிந்துவிட்டு முன்னேற வேண்டும்…
View More விதி: “நீயா நானா”-வில் கூறப்பட்ட சில கருத்துகள்பிரபஞ்சம்: நெய்ல் டிகிரீஸ் டைசனின் பார்வையில்
அசித்துவிற்கும் சித்துவிற்கும் இடையே ஆன ஒத்ததன்மை அற்ற நிலை ஏற்படாமல் இருந்து இருந்தால் இன்று விரிந்துகொண்டே இருக்கும் பிரபஞ்சம் ஆனது ஒளியால் தொகுக்கப்பட்ட, நம் அறிவுக்கு எட்டாத ஏதோ ஒன்றாக இருந்திருக்கும். அப்போது வான்-இயற்பியலாளர்கள் தேவைப்பட்டிருக்க மாட்டார்கள்…. இந்த 12 வேறுபட்ட தனிமங்களே கிரகங்களையும் அதன்மேல் உயிரினத்தையும் இயற்ற வழிவகுத்தது. இந்தத் தனிமங்கள் வரவிருக்கும் எல்லாத் தொல்லைகளுக்கும் காரணமாக இருந்தது. இவைகள் அந்த நட்சத்திரங்களுக்கு உள்ளேயே இருந்திருந்தால் இன்று எனக்கும் இதை எழுதவேண்டிய நிலை ஏற்பட்டு இருக்காது. நீங்களும் இதைப் படித்து, தலை கிறுக்குப்பிடிக்க வேண்டிய அவசியமும் இல்லாமல் போய் இருக்கும்.
View More பிரபஞ்சம்: நெய்ல் டிகிரீஸ் டைசனின் பார்வையில்வேற்றுக்கிரகவாசிகள்: வீண் வதந்திகளா? அறிவியல் உண்மையா?
வேற்றுலகவாசிகள் என்றால் அறிவுடைய ஒரு பண்பாடாகத்தான் அவர்கள் இருக்க வேண்டுமென்பதில்லை. நிச்சயமாக நுண்ணுயிரிகளாவது இருக்க வாய்ப்புள்ளது அல்லவா? … அவர்களின் அறிவியலும் அறிதல் முறையும் எவ்வாறு இருக்கும்? அவர்களின் உலகில் இசை இருக்குமா? … விண்மண்டலங்களுக்கு இடையே, பல ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் விளங்கும் இரு வெவ்வேறு பண்பாடுகளுக்கு இடையே பிரபஞ்ச பொது மொழியாக கணிதம் அமையும். அத்வைதி இவ்வுண்மையை புன்னகையுடன் ஆமோதிப்பான்.
View More வேற்றுக்கிரகவாசிகள்: வீண் வதந்திகளா? அறிவியல் உண்மையா?புதிய பறவை இனம் – பரிணாமவியலின் இன்னொரு வெற்றி!
இங்கிலாந்தில் பலர் தங்களது வீடுகளுக்கு வெளியே பறவைகள் உண்ண தான்யங்களை கொடுக்கும் பறவை உணவுக் கூடுகளை (bird-feeders) வைத்திருக்கிறார்கள். இந்த வழக்கம் புதிய பறவை இனங்களை தோற்றுவித்திருக்கிறது என்று அறியலாய்வாளர்கள் கண்டறிந்துள்ளார்கள்… இந்து மதத்தின் ஆன்மீகம் அறிவியலுக்கு எதிரானதல்ல. தாவரங்கள், விலங்குகள், புழு பூச்சிகள் ஆகியவற்றுக்கும் பொதுவாக நமது ஆன்மீகம் இருக்கிறது. நாம் வந்த பாதை நீண்ட நெடியது.
View More புதிய பறவை இனம் – பரிணாமவியலின் இன்னொரு வெற்றி!பசுமை அரசியலும் வளரும் நாடுகளும் – 2
நீங்கள் ஏதேனும் ஒரு காரியத்தைத் தொடங்கினால், நீங்கள் இதுவரை சந்தித்துள்ள ஏழைகளில் பரம ஏழையாக உள்ளவருக்கு அதனால் பயன்கிடைக்குமா? என்று சிந்தித்து பார்த்து காரியத்தை தொடர்ந்து நிறைவேற்றுங்கள் என்பதுதான் மகாத்மா சொன்ன அறிவுரை ஆகும்… இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா, பிரேசில் ஆகியவை சுற்றுச்சூழலைப் பாதுகாக்க ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது மிகவும் அவசியமாகும்..சூழ்நிலைக்கு ஏற்ப தீர்வு மாறுபடும். இதில் நெகிழ்வுடன் நடந்துகொள்ள வேண்டும்.
View More பசுமை அரசியலும் வளரும் நாடுகளும் – 2