சங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 5

சூனியமே அதாவது ஒன்றுமிலாத பாழே இறுதி உண்மை என்பது இவர்கள் கொள்கை. இவர்கள் கோட்பாட்டின்படி, ஆன்மாவாகிய ‘நான் யார்” என்றால் ‘நீ ‘ என ஒரு பொருள் இல்லை; ஆன்மா என்பது சூனியமே. நீயும் இல்லை நானும் இல்லை கேட்பவன் என எவரும் இல்லை என்பது இவன் கொள்கை. இக்கொள்கையினை இவன் மெய்ப்பிக்க மேற்கொள்ளும் வாதமும் அவ்வாதத் தினையே மேற்கொண்டு அவனை வெல்லும் பகவத் பாதரின் வாதத் திறமையும் அருமையானவயாகும். இருவருமே தம்கொள்கையை நிறுவ ஆழ்ந்த நித்திரை எனும் சுழுத்தி அவத்தையை அடிப்படையாகக் கொள்கின்றனர்…

View More சங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 5

சங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 4

ஒரு குடம். அதில் ஐந்து தொளைகள் (ஓட்டை) உள்ளன. குடத்தின் நடுவில் ஒரு தீபம் உள்ளது. நள்ளிரவில் தீபத்தினொளி ஐந்து தொளைகளின் வாயிலாக, ஐந்து பிரகாசமான கதிர் வீச்சுக்களாக (light beams) வெளிப்படுகிறது.. குடம் நம் உடல். குடத்திலுள்ள தொளைகள் ஐம்பொறிகள். அதிலிருந்து வெளிப்படும் கதிரொளி ஐம்புலன்கள் அவையாவன: சத்த பரிச ருப ரச கந்தங்கள். இவை வாயிலாகவே உயிரானது உலக போகத்தைத் துய்க்கின்றது; அறிவைப் பெறுகின்றது.
இவ்வுடலை ‘மாயா யந்திர தநு விளக்கு” என்று சிவஞான போதம் கூறுகின்றது…

View More சங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 4

சங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 3

உள்பொருள் என்பது என்றும் எவ்வகையாலும் மாறத பொருள். அதனைச் ‘சத்’தென்றும் ‘மெய்ப்பொருள்’ என்றும் கூறுவர். அது தோற்றக் கேடுகளில்லாத நித்தியப்பொருள் அதுவே ‘பிரமம்’ என்று வேதாந்திகளும் சிவம் என்று சித்தாந்திகளும் கூறுவர்.. பக்குவமுடைய ஆன்மாவுக்குச் சிவமே குருவாக எழுந்தருளி வந்து, ‘அது நீ” எனும் உபதேசத்தை அருளி உய்விப்பதைக் கூறுகின்றது. குருபரம்பரை அவர் வழியே மானிடத்தை உய்விக்க வந்தருளுகின்றது. கேவலாத்துவித, சுத்தாத்துவித மரபுக ளெல்லாம் அவர் வழி வந்தனவே… மகாவாக்கியம் ‘சர்வ துக்க நிவிர்த்தி பரமானந்த ப்ராப்தி” அளிப்பதால் ‘இனிய உபதேசம் ஆயிற்று. சிவஞானபோதம் சிறப்புப் பாயிரம் மகாவாக்கியத்தினைப் “பெரும்பெயர்” என்று கூறுகின்றது…

View More சங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 3

பாரதியாரின் நின்னைச் சரணடைந்தேன்: ஓர் விளக்கம்

சோம்பலும், பயமும், தூக்கமும் தாமச குணத்தினின்று பிறப்பவை. பல மனிதர்களுக்கும் வாழ்க்கையில் பல சமயங்களில் தமோகுணத்தின் ஆளுகைக்குக் கீழ் சென்று மீளமுடியாதபடி அதில் உழலும் நிலை ஏற்படுகிறது. அதை உடைத்துக் கொண்டு வெளிவருவதற்கான உறுதியும் அருளும் தெய்வம் தரவேண்டும் என்று இங்கே வேண்டுகிறார்… சத்வ குணத்தால் தூண்டப்பட்டு நிகழும் செயல்கள் அனைத்தும் சாதாரணத் தளத்திலிருந்து உயர்ந்து யக்ஞமாக, வேள்வியாக, தெய்வத்தின் செய்கைகளாக, கர்மயோகமாக ஆகிவிடுகின்றன… மகாமாயையாகிய பராசக்தி. இவ்வுலகனைத்தும் அவள் விளையாட்டன்றி வேறில்லை. அவளே இப்பாடலில் பாரதி போற்றும் கண்ணம்மா…

View More பாரதியாரின் நின்னைச் சரணடைந்தேன்: ஓர் விளக்கம்

மேதா ஸூக்தம் – தமிழில்

வேதங்களில் வரும் மேதா என்ற என்ற பெண்பாற்சொல் உள்ளுணர்வு (intuition), அறிவு (intelligence), மன ஆற்றல் (mental vigor) ஆகியவற்றைக் குறிக்கிறது. இதிலிருந்தே தமிழில் மேதை, மேதைமை ஆகிய சொற்கள் வருகின்றன. அறிவையும் அதனால் விளையும் ஆற்றலையும் ஒரு சக்தியாக, தேவியாக போற்றுகிறது இந்த அழகிய வேதப்பாடல். வேதங்களில் இவ்வாறு போற்றப்படும் மேதா தேவி என்னும் தெய்வீக சக்தியே சரஸ்வதி, கலைமகள், பாரதி என்று ஒவ்வொரு இந்து இல்லங்களிலும் உள்ளங்களிலும் வழிபடப் பெறுகிறாள்…

View More மேதா ஸூக்தம் – தமிழில்

சுவாமி விவேகானந்தர் அருளிய ஸ்ரீராமகிருஷ்ண ஸ்தோத்திரம் – தமிழில், விளக்கவுரையுடன்

ஸ்ரீராமகிருஷ்ணரைப் பற்றிய ஸ்தோத்திரங்களில் உன்னத இடத்தை வகிப்பவை சுவாமி விவேகாநந்தர் அருளியவை. கேட்பதற்கே மிகவும் எழுச்சியூட்டும் துதியாக அமைந்தது ‘கண்டன பவ பந்தன’ என்னும் துதி. பெரும் சமுத்திர அலைகளின் அணி போல் திரண்டு எழும் நாத அலை போன்றே பாடுங்கால் அமைவது… வெள்ளத்தில் அகப்பட்ட ஒருவருக்கு நீஞ்சிக் கரை சேரும் படியாக ஒரு புணை ஒன்றைக் கொடுத்தால் அதைக் கொண்டு கரையை நோக்கி நீஞ்சாமல் அடித்துப் போகும் வெள்ளத்தின் ஓட்டத்தின் வழியிலேயே போவது சுலபமாக இருக்கிறது என்று கொண்டு அப்படியே கடலில் போய் மூழ்கிவிடும் அபத்தமாகத்தான் இந்த ஜீவன் தனக்கு இயற்கையில் கொடுக்கப்பட்ட திறமைகளைப் பயன்படுத்திக் கொள்கிறது…

View More சுவாமி விவேகானந்தர் அருளிய ஸ்ரீராமகிருஷ்ண ஸ்தோத்திரம் – தமிழில், விளக்கவுரையுடன்

காயத்ரி ஜபம்: ஓர் விளக்கம்

காயத்ரி ஜபம் என்றால் காயத்ரி மந்திரத்தை இயந்திரத்தனமாக குறிப்பிட்ட எண்ணிக்கையில் “சொல்வது” என்றே பெரும்பான்மையினர் எண்ணுகின்றனர். அப்படிச் செய்வதும் ஆன்மீக ரீதியாக பலனளிக்கக் கூடியது, உள்ளத்தைத் தூய்மைப் படுத்துவது என்றாலும், ஜபம் என்ற உளப் பயிற்சியில் அது ஆரம்பகட்ட நிலை மட்டுமே. அடுத்தடுத்த படிகளுக்குச் செல்லும் விழைவும் முயற்சியும் கொண்டிருப்பதே சிரத்தையான மாணவருக்கு அடையாளம்… எந்த உதட்டசைவும் இன்றி மனதிலேயே மந்திரத்தை மீண்டும் மீண்டும் இசைப்பது மானஸிக ஜபம் எனப்படும். இதுவே உத்தமமானது என்று கருதப்படுகிறது.. பாரம்பரியமாக காயத்ரி ஜபம் செய்யும் முறையில், ஜபத்தைத் தொடங்கும் முன்பு மந்திரத்தின் உருவமாக காயத்ரி தேவியின் சகுண தியானம் பரிந்துரைக்கப் பட்டுள்ளது…

View More காயத்ரி ஜபம்: ஓர் விளக்கம்

கந்தர் சஷ்டி கவசம் : பிழையற்ற பதிப்பு

பல அச்சுப் புத்தகங்களிலும் இணையதளங்களிலும் காணப்படும் கந்தர் சஷ்டி கவசம் நூற்பிரதியில் பல்வேறு பிழைகள் மலிந்து காணப்படுகின்றன. இதைக் கண்ணுற்ற கவிப்பெருஞ்சுடர் ஹரி கிருஷ்ணன் அவர்கள், “கண்ணுக்குத் தெரிந்த பிழைகளைக் களைந்து கூடுமானாவரை பிழையற்ற பதிப்பாக ஒன்றை இணையத்துக்கு வழங்கலாம் என்று நினைக்கிறேன்” என்று ஃபேஸ்புக் மூலம் முன்னெடுத்து, சைவ அறிஞர் ஜாவா குமார் மற்றும் சில நண்பர்கள் உதவியுடன் இந்தத் திருந்திய வடிவத்தை வழங்கியிருக்கிறார். இதனை நமது வாசகர்களுடன் மகிழ்வோடு பகிர்ந்து கொள்கிறோம்…

View More கந்தர் சஷ்டி கவசம் : பிழையற்ற பதிப்பு

சிவ மானஸ பூஜா – தமிழில்

முறையான பூஜைக்கான இடம், காலம், சாதனங்கள், பொருட்கள் எதுவும் இல்லாதபோதும், மனதாலேயே பூஜை செய்வது மானஸ பூஜை எனப்படும். கவனம் சிதறாத உளக்குவிப்புடனும் தியான நிஷ்டையுடனும் செய்யப் படுமானால், புறத்தே செய்யப் படும் பூஜையை விடவும் மானஸ பூஜை உத்தமமானது என்று பெரியோர்களால் கூறப்பட்டுள்ளது….
இரத்தினங்கள் இழைத்த இருக்கை – பனிநீராடல் – திவ்யமான ஆடைகள் – பல்வேறு மணிகளால் அணிகலன்கள் – கஸ்தூரியுடன் குழைத்த சந்தனம் – மல்லிகை செண்பகம் வில்வம் கலந்த மலர்கள் – தூபம் தீபம் – தேவா தயாநிதி பசுபதி – இதயத்தில் கற்பித்த இவையனைத்தையும் ஏற்றிடுக…

View More சிவ மானஸ பூஜா – தமிழில்

சங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 2

பிரபஞ்சம் தோன்றுவதற்கு முன், அதன் காரணத்தில், அதாவது , பிரம வித்தில், பிரபஞ்ச வேற்றுமைகள் மிகச்சூக்குமமாக இருந்தன. வித்திலிருந்து முளைத்த முளையில், வேர், அடிமரம், கிளைகள் கொம்புகள், தூர்கள் , இலைகள், முதலியன தோன்றியதைப் போல தேசம் (இடம்) காலங்களினால் வேறுபாடுகள் தோன்றின. பிரபஞ்சத்தில் காணப்படும் பொருள்களின் பெருக்கத்திற்கும் பன்மைக்கும் வேறுபாடுகளுக்கும் காலம், இடம் (time and space) ஆகிய இரண்டுமே காரணம். இந்த இரண்டயும் களைந்துவிட்டால் பொருட்பன்மையும் வேறுபாடுகளும் இல்லாதொழியும்… தன்னிச்சையால், சங்கற்பத்தால் படைப்பதற்கு எடுத்துக் காட்டு இரண்டு தருகிறார். ஒன்று, மாயாவாதி அல்லது மந்திரவாதியின் படைப்பு. மற்றொன்று சித்த யோகிகளின் படைப்பு… நேர்கோடு என்றால் அதற்குத் தொடக்கமும் இறுதியும் உண்டு. வட்டத்தில் எங்கு தொடக்கம் எங்கு இறுதி என்று கூறுவது? அது போன்றதுதான் வேதாந்தத்தில் பிரபஞ்சத் தோற்றமும் இறுதியும். இது தொடர்ந்து நிகழ்ந்துகொண்டே இருக்கின்றது…

View More சங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 2