சங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 1

சைவசித்தாந்திகளை மருளச் செய்யும் கருத்துக்கள் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம் என்ற இந்நூலில் பல உள்ளன எனினும், என்ன காரணமோ, நான் இதனை விரும்பிப் படிக்கின்றேன்.. காணப்படும் இப்பிரபஞ்சம் மித்தை (மித்யை) என்று உணர்த்த பகவத்பாதர்கள் இரு எடுத்துக்காட்டுக்களை முன் வைக்கின்றார். முதலாவது , தர்ப்பண நகர் – முகம் பார்க்கும் கண்ணாடி பிரதிபலிக்கும் நகர்; பிரதிபிம்ப நகர். இரண்டாவது சொப்பன நகர். அதாவது, சொப்பனத்தில் காணப்படும் நகர்… கனவனுபவம் அவனுடைய மனநிலையை ஆழமாகப் பாதித்துவிட்டது. இப்போது நினைவோடு நனவில் அரசனாக இருப்பது உண்மையா? கண்டகனவில் அனுபவித்த வேதனைகள் உண்மையா? நனவனுபவம், கனவனுபவம் இவ்விரண்டில் எது உண்மை?.. இந்த சொப்பனப் பிரபஞ்சம் முன்னம் என்னுள் இருந்தது; அதற்கு என் அஞ்ஞான உறக்கம் ஆதாரமாக இருந்தது.; ஞான விழிப்பு நிலை பெற்று, அஞ்ஞான உறக்கம் நீங்கிய பின்னர் சொப்பனப் பிரபஞ்சம் பொய்யெனத் தேறினேன்; நனவு கனவு இரண்டனையும் அனுபவித்துக் கழிந்த நானே மெய் எனத் தெளிந்தேன்…

View More சங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 1

நாராயணீயம் (கேசாதிபாத வா்ணனை) – தமிழில்

சிவந்த மலரதன் விரிந்த இதழ்நிகர்
ஒளிரும் கண்களாம் மலரிலே
பரந்த கடலதன் சிறிய அலைச்சுழல்
அனைய அலைக்குறும் புருவமும்
கவரும் அருட்கணின் குவிர்ந்த விழிகளில்
கருணை கருமணி அழகுடன்
உவக்கும் எழிலிணை நயக்கும் துணிவிலா
கடையன் விழைகிறேன் அருளுவாய் ….

View More நாராயணீயம் (கேசாதிபாத வா்ணனை) – தமிழில்

சித்தர்கள் வேத மறுப்பாளர்களா: சுகிசிவம் கருத்துக்கு எதிர்வினை

‘ஓதுகின்ற வேதம்எச்சில்’ என்கிறார் சிவவாக்கியர். பார்த்தாயா வேதத்தை எச்சில் என்று சொல்லிவிட்டார் எப்படிப்பட்ட வேத மறுப்பாளர்! அடுத்த இரண்டாம் வரியில் மதியும் எச்சில் ஒளியும் எச்சில் என்கிறார். எனவே அவர் வேத மறுப்பாளர் மட்டுமல்ல. ஒளி மறுப்பாளரும் கூட என்று சொன்னால் எவ்வளவு அபத்தமோ என்று எழுதும் போதே, ’ஒளி என்றால் நெருப்பு. எச்சில் என்றால் நீர். எனவே ஆரிய ஒளியே திராவிட நீர்தான் என்று சிவவாக்கியர் சொல்லுகிறார்’ என்று அடுத்து காணொளி படைப்பாரோ என்று மனம் திடுக்கிடாமல் இல்லை… வேதமே தன்னை தானே பகடி செய்யும் தைரியம் கொண்ட நூல்தான். தன் தெய்வங்களை தானே கேள்வி கேட்கும் தைரியம் வேத ரிஷிகளுக்கு உண்டு… முருகனின் அன்னை சித்த சேனானியாகவும் வேதமாதாவாகவும் வேதத்தின் ஆத்மாகாவும் இருப்பாள் என்றால் முருகன் சித்த சேனனாகவும் சுப்ரமணியனாகவும் ஏன் இருக்க முடியாது?…

View More சித்தர்கள் வேத மறுப்பாளர்களா: சுகிசிவம் கருத்துக்கு எதிர்வினை

ஆதிசங்கரர் அருளிய பஜ கோவிந்தம்: தமிழ் வெண்பா வடிவில்

கோவிந்த கோவிந்த கூவிடுவாய் ஏமூடா
சேவித்து நீஉய்யும் சீலமிது .. ஆவிஏகும்
பாவியுந்தன் அந்திமநாள் பத்தியின்றிக் கற்றதெல்லாம்
மேவியுனைக் காவாது காண்.

கங்கை குளித்தும் கடலில் முழுகினும்
அங்கை சுருக்கா(து) அளிப்பினும் …. பொங்கிடும்
ஞானம்கை கூடார்க்கு நண்ணும் பிறப்புநூறும்
மோனம்கை கூடாது காண்…

View More ஆதிசங்கரர் அருளிய பஜ கோவிந்தம்: தமிழ் வெண்பா வடிவில்

முருகனும் சுப்பிரமணியரும் வேறுவேறா? : ஓர் விவாதம்

சொற்பொழிவாளர் சுகி சிவம் அண்மையில் தெரிவித்த சில ஆதாரமற்ற, அபத்தமான கருத்துக்களுக்கு அ.நீயின் எதிர்வினை; தொடரும் விவாதம்.. ஸ்கந்தனும் முருகனும் பிரிக்க முடியாத ஒரே பேருண்மையின் வெளிப்பாடு. பாரத பண்பாட்டின் மகத்தான ஞான உச்சம் முருகனின் திருவடிவம். இதில் ஆரிய- திராவிட இனவாதத்தையும் வேத கடவுள் வேறு தமிழ் கடவுள் வேறு என பிரிக்கவும் கற்றுக் கொடுத்தவர்கள் காலனியாதிக்க பிரிட்டிஷார். அதனை தொடர்பவர் இன்று இந்து சமய விரோதிகளான கால்டுவெல் சந்ததியார். ’பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனியாகி’ என்கிற கச்சியப்ப சிவாச்சாரியார் திருவாக்கின் ஆன்ம அழகின் தூய உண்மையின் ஒரு துளி, எந்த பிறப்பிலாவாது மேல் தெறித்திருந்தாலும் கூட, இப்படி உளறும் அபாக்கியம் ஏற்பட்டிருக்காது… தவத்திரு காஞ்சி சங்கராச்சாரியார் கூறும் வைதிகம் வேறு. சுகி.சிவம் பேசும் பிராம்மணியம் வேறு. பின்னது காலனிய கருத்தாக்கம். அதன் படி பிராம்மணிய கடவுள் குறமகளை மணம் செய்ய முடியாது. ஆனால் தவத்திரு சந்திரசேகரேந்திர சுவாமிகளின் வைதீக தெய்வம் குறமகளை மணமுடிக்க முடியும்…

View More முருகனும் சுப்பிரமணியரும் வேறுவேறா? : ஓர் விவாதம்

செவ்வேள்: மூன்று தரிசனங்கள்

கவி அனுராகம் என்ற அழகிய சொல்லால் காதலை, அன்பைக் குறிக்கிறார். காதலின் நிறம் சிவப்பு என்பது கவிமரபு. எனவே, வள்ளியுடன் கூடி மகிழும் அருளையும், பக்தர்களின் மீது பொங்கும் கருணையின் அருளையும் இணைத்து அழகுறக் கூறினார்… செவ்வான் என்பது அந்திவானம். இரவுக்கும் பகலுக்கும் இடைப்பட்ட பொழுதான சந்தியா எனப்படும் அந்தி நேரம், வேதமரபில் லயத்தின், ஞானத்தின், உள்ளுணர்வின் குறியீடாக அறியப்படுகிறது… போர்க்களம் செந்நிறமாகுமாறு அசுரர்களைக் கொன்று அழித்து, இரத்தக் கறைபடிந்த சிவந்த நீண்ட அம்பினையும், சிவந்த தந்தங்களையுடைய யானையையும், கழன்று விழும் தோள்வளையும் உடையவன் சேயோன் முருகன். அவனது இக்குன்றத்தில், இரத்த நிறத்தில் செங்காந்தள் மலர்கள் குலைகுலையாகப் பூத்திருக்கின்றன…

View More செவ்வேள்: மூன்று தரிசனங்கள்

ஆணைநமதென்றபிரான் – திருஞான சம்பந்தர்

சம்பந்த பெருமான் தமது பதிகங்கள் ஒவ்வொன்றின் திருகடைக்காப்பிலும் அப்பதிகங்களை ஒதுவதால் ஆன்மாக்கள் பெற்றுய்யும் பலன்களை எடுத்துரைப்பார். பல பதிகங்களில், பயன்களை கூறினாலும், அவர் அருளிய நான்கு பதிகங்களில் மட்டும் “*ஆணைநமதே *” என்று திருகடைக்காப்பில் அருளிப்பாடுகின்றார்… நம்பியாண்டார் நம்பிகள் போல் அக்கால மக்களுக்கும் இவ்வார்த்தை மிகவும் பிடித்துவிட்டது. அவர்கள் தங்கள் பெயராகவே வைத்துக்கொண்டனர். பிரான் மலை கல்வெட்டில், இத்தன்ம சாசனத்துள் கையெழுத்திட்டவருள் ஒருவர் “ஆணை நமதென்ற பெருமாள்” என்று உள்ளது…

View More ஆணைநமதென்றபிரான் – திருஞான சம்பந்தர்

தேவியின் திருவிழிகள்: சௌந்தரிய லஹரி

பகலைப் பிரசவிக்கிறது இரவியென உனது வலது விழி. இரவைப் படைக்கிறது
நிலவென உனது இடது விழி. சிறிதே மலர்ந்த பொற்கமலமென உனது மூன்றாவது விழி பகலுக்கும் இரவுக்குமிடையில் ஊடாடும் அந்தியைச் சமைக்கிறது… செவ்வரியோடிய கண்களில் கருவிழியின் ஒளிதிகழும் தேவியின் பார்வை திரிவேணி சங்கமத்தை ஒத்திருக்கிறது என்று சமத்காரமாகக் கூறுகிறார்.

View More தேவியின் திருவிழிகள்: சௌந்தரிய லஹரி

குழவி மருங்கினும் கிழவதாகும் – 7

தன் பிரியத்துக்குரிய தெய்வக்குழந்தை காலில் தண்டையும் சதங்கையும் கொஞ்ச அருகே வந்தால் எவ்வாறிருக்கும் எனும் எண்ணமே அவர்களை இன்புறுத்துகிறது. பக்தியில் நெகிழவைத்தும் அன்பில் மகிழ வைத்தும் சிலிர்ப்பூட்டுகின்றது.
இதற்குமேல் குழந்தைக்குத் தாங்கவில்லை. தனது சிறுசோற்றுச் செப்புக்களை வீசியெறிந்து விட்டு உதடுகள்நெளிய அழுகைபொங்கிவர ஓடோடிவந்து தாயின் சேலையில் முகம் புதைத்துக்கொண்டு அவளை அணைத்துக்கொள்கிறாள்.
தாயும் தனது பொய்க்கோபத்தினை விட்டொழித்து, குழந்தையை இறுக அணைத்துக்கொள்கிறாள்.

View More குழவி மருங்கினும் கிழவதாகும் – 7

சபரிமலை ஐயப்பன் வழிபாட்டுத் தத்துவம்

இல்லறத்தில் இருப்பவர்கள் மோக்ஷமே வாழ்வின் இறுதியான நோக்கம் என்பதை மறவாமல் இருக்கவும், அதற்காக படிப்படியாகத் தன்னைத் தகுதிப்படுத்திக் கொள்ளவுமே ஐயப்ப தெய்வ வழிபாடு அமைக்கப்பட்டிருக்கின்றது. ஆணும் பெண்ணுமாய், கணவன் மனைவியாய், தாயும் தந்தையுமாய் குடும்பமாய் இறைவன் எழுந்தருளியிருக்கும் கோலம் எல்லா கோயில்களிலும் நாம் காணுவது. அது இல்லற வாழ்க்கைத் தத்துவத்தைக் காட்டுவது. ‘ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே பேரா இயற்கை தரும்’ எனும் துறவியல் தத்துவத்தைக் காட்டுவது சபரிமலை ஐயப்பன் எழிற்கோலம்.. முறைப்படுத்தப்பட்ட காமம் ஆக்கசக்தியாகிறது. கட்டுப்படுத்தப்படாத காமம் அழிவுசக்தியாகிறது. ஆண்கள் உடலையும் மனத்தையும் காமத்தையும் வெல்லும் பயிற்சியாகவே ஐயப்ப விரதம் இருக்கிறது. இது ஆண்களுக்கு மட்டுமே விதிக்கப்பட்டது. (மாதவிடாயுள்ள பருவத்தில் இருக்கும்) கன்னிப் பெண்கள், சுமங்கலிப் பெண்களுக்கென விரதங்கள், வழிபாட்டு முறைகள் – விசேஷமாகப் பெண்களுக்கே உரியனவாக – நமது பண்பாட்டில் பல உள்ளன. அதுவே அவர்கள் மனக்கட்டுப்பாட்டுக்குப் போதுமானது…

View More சபரிமலை ஐயப்பன் வழிபாட்டுத் தத்துவம்