வன்முறையே வரலாறாய்…- 30

முகமது பின் காசிம் தொடங்கி அனைத்து இஸ்லாமியப் படையெடுப்பாளர்களும் கடைப் பிடித்த இந்த குரூர நடவடிக்கைகளினால் அச்சமடைந்த, பாலியல் அடிமைகளாக விரும்பாத பல இந்திய ராஜ குலத்துப் பெண்களும், பிறரும் அரண்மனைகளின் அந்தப்புரங்களில் கட்டைகளை அடுக்கித் தீ மூட்டிப் பின்னர் அதில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்கள். இதே நிலைமை அக்பரின் காலத்திலும் தொடர்ந்து நடந்தது. உதாரணமாக 1568-ஆம் வருட சித்தூர் போரில் 8,000 ராஜ புத்திர வீரர்களைக் கொன்ற அக்பர் அவர்களது பெண்களையும், குழந்தைகளையும் அடிமைகளாகப் பிடிக்கும்படி உத்தரவிடுகிறார். ஆனால் இறந்த ராஜபுத்திரர்களின் மனைவிகள் அனைவரும் தீயில் குதித்துத் தற்கொலை (ஜவுஹார்) செய்து கொண்டார்கள்… உடன்கட்டை ஏறும் வழக்கம் இஸ்லாமிய ஆக்கிரமிப்புக் காலங்களில் அதிகரித்ததற்கு இன்னொரு காரணமும் இருக்கலாம். கணவனை இழந்த இளம்பெண் மறுமணம் செய்து கொள்வதற்கு மத்தியகால இந்தியாவில் இடமில்லை. எனவே அவ்வாறான இளம்பெண்கள் முஸ்லிம்களால் தூக்கிச் செல்லப்படுவதற்கு குறிவைக்கப்பட்டார்கள். எனவே அதனைத் தவிர்க்கவும் அந்தப் பெண்கள் உடன்கட்டை ஏறினார்கள்….

View More வன்முறையே வரலாறாய்…- 30

கைகொடுத்த காரிகையர்: திலகவதியார்

மருள் நீக்கியார் அவர் மடிமேல் விழுந்து அழுதார். “அன்னையும் அத்தனும் சென்ற பின்னும் நீங்கள் துணை இருப்பதால் தான் நான் உயிரோடு இருக்கிறேன். நீங்களும் என்னைத் தனியே விட்டு விட்டால் உங்களுக்கு முன் நான் உயிர் துறப்பேன். இது நிச்சயம்” என்று அரற்றினார். இதைக் கேட்ட திலகவதியார், தம்பியின் முகத்தைத் துடைத்து ஆறுதல் கூறினாள். தம்பி உயிரோடு இருக்க வேண்டுமே என்ற கருணையினால் தம் உயிரைத் தாங்கிக் கொண்டு, திருமணம் செய்து கொள்ளாமல் எவ்வுயிர்க்கும் அருள் புரிந்து தவம் மேற் கொண்டு வாழ்ந்து வந்தார்…. உன் கருணை வெள்ளத்தில் ஆழும் தகுதி எனக்குண்டோ? என்னைத் தடுத்தாட்கொள்ள வந்த இந்தச் சூலைநோய்க்கு நான் என்ன கைம்மாறு செய்ய முடியும்?” என்று ஈசனை வணங்கினார். அப்பொழுது ஓர் அசரீரி வாக்கு, “பதிகத் தொடை பாடிய பான்மையால் நாவுக்கரசர் என்னும் நாமம் இன்று முதல் உனக்கு வழங்கப் பெறும்” என்று வானத்தில் ஒலித்தது. இது கேட்ட மக்கள் பலவித வாத்தியங்களை முழக்கினார்கள்…..

View More கைகொடுத்த காரிகையர்: திலகவதியார்

மாற்றுப் பாலின ஆன்மிகம் -1

ஐயாயியரம் ஆண்டுகள் தொடர்ச்சியான இந்த பண்பாட்டில் மட்டும்தான் உடல்சார்ந்த பாலினம் சார்ந்த பண்பாட்டு ஆன்மிக மரபுகள் உருவாக்கப்பட்டுள்ளன. பாலினச்சிறுபான்மையினருக்கு மையத்துவம் அளிக்கும் உயிர் சடங்குகள், ஆன்மிக நெறிகள், தெய்வங்கள், திருவிழாக்கள் இங்குதான் உள்ளன. மாற்றுப் பாலினங்களைச் சேர்ந்தவர்கள் இங்கு அரசர்களாக இருந்திருக்கின்றனர். மாற்றுப்பாலினங்களைச் சார்ந்தவர்கள் இங்கு சமய மரபுகளை உருவாக்கியவர்களாக இருந்திருக்கின்றனர். அவர்கள் மதபீடங்களை நிறுவியிருக்கிறார்கள். சம்பிரதாய மத எல்லைகளை கடந்த ஆன்மிகப் பண்பாட்டை கட்டி எழுப்பியிருக்கிறார்கள். பூசகர்களாக இருந்திருக்கிறார்கள். இருக்கிறார்கள். ஆன்மிக வழிகாட்டிகளாக இருக்கிறார்கள். இவற்றை காப்பாற்றுவது நம் பெரும் பொறுப்பு.

View More மாற்றுப் பாலின ஆன்மிகம் -1

கைகொடுத்த காரிகையர்: திருவெண்காட்டு நங்கை

சோழவள நாட்டில் திருவெண்காடு என்ற ஊர் இருக்கிறது. அந்த ஊரில் பிறந்ததால் இவருக்கு…

View More கைகொடுத்த காரிகையர்: திருவெண்காட்டு நங்கை

முடிவல்ல தொடக்கம்

பொதுவாக இந்திய அரசுக்கு ஒரு ‘நல்ல பெயர்’ உண்டு. வெளிநாட்டில் இந்தியர்கள் இன்னல்கள் படும் போது அது கண்டு கொள்ளாது என்பதுதான் அது. இந்திய அரசாங்கத்தின் கையாலாகாத்தனம் என்பது உலக பிரசித்தி பெற்றது. … வெளியே தெரியும் காட்சிகளுக்கு அப்பால் பல விஷயங்கள் மோதி அரசால் நிகழ்த்தப்பட்டன. இந்திய ஊடகங்களில் அதிகம் கண்ணைக்கவராத ஒரு செய்தி உண்டு. பாரசீக வளைகுடாவிலும் ஏமன் வளைகுடாவிலும் விமானங்கள் தாங்கிய இந்திய போர்கப்பல்கள், ஐ.என்.எஸ்.மைசூர், ஐ.என்.எஸ்.தர்காஷ் ஆகியவை நிறுத்தப்பட்டன. … வெற்றி தோல்விகளுக்கு அப்பால் இந்திய அரசு இப்போது அயல்நாடுகளில் வாழும் இந்தியர்களுக்காக இயங்குகிறது என்பது நம் 67 ஆண்டுகள் இந்திய அரசு வரலாற்றில் ஒரு நல்ல மாற்றம். ஒரு ஆறுதலான மாற்றம். அதை உருவாக்கி அளித்தமைக்காக மோதியின் அரசுக்கு என்றென்றும் தேசபக்தி கொண்ட இந்தியர்களின் நன்றி இருக்கும்.

View More முடிவல்ல தொடக்கம்

மானக் கஞ்சாற நாயனார் மகள் (கைகொடுத்த காரிகை)

தலை மயிரை இழப்பதை பெண்கள் அபசகுனமாகவே நினைப்பார்கள்.நோய்வாய்ப்பட்டு அதன் காரணமாக தலை முடியை இழக்க நேரும் போது கூட அவர்கள் மிகவும் உணர்ச்சி வசப்படுவார்கள் வருந்துவார்கள். கோவிலுக்குக் காணிக்கையாகக் கொடுப்பதைத் தவிர மற்ற நேரங்களில் தங்கள் கூந்தலை இழக்க மனம் ஒப்ப மாட்டார்கள். இந்த நிலையில் ஒரு பெண் தனது அலங்காரத்தோடு கூடிய கூந்தலை இழக்க நேரிட்டால்? அது எவ்வளவு கொடுமை! அதுவும் தன் திருமண நாளன்று? அந்தப் பெண்ணின் மனம் என்ன பாடு பட்டிருக் கும்? இப்படி ஒரு சம்பவம் நடப்பதை எந்தத் தாயால் பொறுக்க முடியும்? என்றாலும் தந்தைக்காகத் தன் அலங்கரிக்கப் பட்ட கூந்த லையும் தியாகம் செய்கிறாள் ஒரு மகள்…

View More மானக் கஞ்சாற நாயனார் மகள் (கைகொடுத்த காரிகை)

பொள்ளாச்சி: இஸ்லாமிய அராஜகத்தை எதிர்கொண்ட இந்துப் பெண்கள்

100 பக்தர்கள் பூவோடு ஏந்தி அலங்கரிப் பட்ட தேரில் அம்மன் வீற்றிருக்க ஊர்வலமாக…

View More பொள்ளாச்சி: இஸ்லாமிய அராஜகத்தை எதிர்கொண்ட இந்துப் பெண்கள்

கைகொடுத்த காரிகை: மங்கையர்க்கரசியார்

ஒருநாடு நீர்வளமும் நில வளமும் நிரம்பப் பெற்றிருந்தால் மட்டும் போதாது. நாட்டில் கலவரங்கள்…

View More கைகொடுத்த காரிகை: மங்கையர்க்கரசியார்

கை கொடுத்த காரிகை: அப்பூதி அடிகள் மனைவி

சோழ வளநாட்டில் காவிரியாற்றின் கரையிலுள்ள சிவத்தலங்களுள் திருப்பழனமும் ஒன்று. திருவையாற்றுக்கு சுமார் 4…

View More கை கொடுத்த காரிகை: அப்பூதி அடிகள் மனைவி

ஸ்ரீகண்டி – ஜாவா தீவின் நாயகி

அம்பை ஜாவானியப் பெண்களின் ஆதர்ச நாயகி. Wayang Kulit என்ற தோல்பாவைக் கூத்துகளில் கிராமமக்கள் மிகவிரும்பிப் பார்ப்பதும் அவளது கதையைத்தான். ஜாவாவில் குழந்தைகளுக்கு அதுவும் பெண்குழந்தைகளுக்கு மாறுவேடப்போட்டி என்றால் வில்லேந்திய ஸ்ரீகண்டி வேடம்தான் முதல் தேர்வு… ஜாவானிய மஹாபாரதத்தில் ஸ்ரீகண்டியின் முற்பிறவியான அம்பையின் கதையில் பெரிய மாற்றம் இல்லை. வியாசரின் பதிவை ஒட்டிய பாரதக்கதையே. ஆனால் அவள் கொண்ட வெஞ்சினம் மறக்காமல் துருபதன் மகளாய்ப் பிறந்து குருக்ஷேத்திரத்தில் பீஷ்மரை வதைக்கும்வரை ஜாவானிய பாரதம் புதிய பார்வையில் போகும்… விரும்பியவண்ணம் உருவெடுக்கும் ஸ்ரீகண்டியின் ஆண், பெண் வடிவுக்கேற்ப நிமிர்ந்தும், குறுகியும் மடிய வல்ல, பெரும்புகழ் வாய்ந்த அந்த வில்லின் பெயர் ஹ்ருஸாங்கலி…

View More ஸ்ரீகண்டி – ஜாவா தீவின் நாயகி