விசாரிக்க சென்ற குழுவிடம் ஆற்றாமல் அழுதபடி நடந்த சம்பவத்தை விவரித்தார் சடையாண்டியின் மனைவி. கையில் மூன்று மாதக் குழந்தை… இந்த தாக்குதல்களில் சாதியத்தின் கொடிய கரத்தை நாம் தெளிவாக காண முடிகிறது. ஆனால் இதில் ஒளிந்திருக்கும் மற்றொரு உண்மை நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.. றிஸ்தவ கத்தோலிக்க சபை இரண்டு விதங்களில் தலித்துகளுக்கு எதிராகச் செயல்பட்டிருக்கிறார்கள்.. (விரிவான வீடியோ நேர்காணல்கள்)
View More மெய்கோவில்பட்டி தீண்டாமை நிகழ்வு: ஒரு கள ஆய்வு ரிப்போர்ட்ஜோதியில் கலந்தோர்
கண்ணைப் பறிக்கும் ஒளியுடன் மின்னல் போன்ற ஒரு சுடர் தென் திசையிலிருந்து சிவ பெருமான் வீற்று இருக்கும் திசை நோக்கிச் செல்கிறது. அதைக் கண்டதும் முனிவர் கை கூப்பித் தொழுது நிற்கிறார்… இப்படியான நிகழ்ச்சிகள், மனிதனாகப் பிறந்தாலும் ஒருவன் உயர் நிலைக்குச் சென்று உண்மை நிலையை உணரும்போது இறைவனுடன் ஒளியாக ஐக்கியம் ஆகிறான் என்பதைக் காட்டுகிறது.
View More ஜோதியில் கலந்தோர்நீதிக்கட்சியின் மறுபக்கம் – 01
உண்மையிலேயே நீதிக்கட்சி தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் பாடுபடத்தான் தோன்றியதா?தாழ்த்தப்பட்டோரிடையே அரசியல் அனுபவம் உள்ளவர்கள் இல்லாது இருந்தார்களா? நீதிக்கட்சி தாழ்த்தப்பட்டவர்களை உயர்த்தும் பணியைத் தொடர்ந்து செய்து வந்ததா? நீதிக்கட்சி தாழ்த்தப்பட்டவர்களுக்கு செய்த சாதனைதான் என்ன?
View More நீதிக்கட்சியின் மறுபக்கம் – 01புதிய பறவை இனம் – பரிணாமவியலின் இன்னொரு வெற்றி!
இங்கிலாந்தில் பலர் தங்களது வீடுகளுக்கு வெளியே பறவைகள் உண்ண தான்யங்களை கொடுக்கும் பறவை உணவுக் கூடுகளை (bird-feeders) வைத்திருக்கிறார்கள். இந்த வழக்கம் புதிய பறவை இனங்களை தோற்றுவித்திருக்கிறது என்று அறியலாய்வாளர்கள் கண்டறிந்துள்ளார்கள்… இந்து மதத்தின் ஆன்மீகம் அறிவியலுக்கு எதிரானதல்ல. தாவரங்கள், விலங்குகள், புழு பூச்சிகள் ஆகியவற்றுக்கும் பொதுவாக நமது ஆன்மீகம் இருக்கிறது. நாம் வந்த பாதை நீண்ட நெடியது.
View More புதிய பறவை இனம் – பரிணாமவியலின் இன்னொரு வெற்றி!தமிழக அரசு சின்னம் மாற்றம்?: சில எண்ணங்கள்
இந்த மண்ணின் சிற்பிகளின், கலைஞர்களின், ஞானிகளின், உழைப்பாளிகளின், மன்னர்களின், வீரர்களின், மக்களின் ஆன்மாவைத் தம்முள் கோபுரங்கள் தாங்கிக் கொண்டிருக்கிறன… நாளை தமிழ்த் தாய்க்கு பர்தா போடவும், தமிழ்த் தாய் வாழ்த்துக்குப் பதில் சுவிசேஷ பஜனை பாடவும் கூட இந்த மானங்கெட்ட கூட்டம் கொடி பிடிக்கும்… திராவிடக் கட்சிகளில் நீறுபூத்த நெருப்பாக எப்போதும் இருந்து வரும் கடும் இந்து துவேஷமும், ஏன் இந்திய தேசியம் மீதான வெறுப்புணர்வும் கூட இன்னும் அதிகமாக, வெளிப்படையாகவே தலை தூக்கக் கூடும்.
View More தமிழக அரசு சின்னம் மாற்றம்?: சில எண்ணங்கள்பண்டைக்குலமும் தொண்டக்குலமும்
நந்தனாரைத் தங்கள் சமயத் தலைவராக, நாயனாராக ஏற்று வழிபடும் சைவர்கள் எப்படி நோக்குகின்றார்கள்? சூழ்நிலையை எதிர்த்து வாழ்ந்தால், அந்த வாழ்க்கை போராட்டமாகத்தான் ஆகும். அத்தகைய போராட்ட வாழ்வை விரும்பி நந்தனார் மேற்கொண்டார்… சைவ மரபில் நெருப்பு சிவனுக்கு ஒரு குறியீடு. நெருப்பு சிவனுக்கு வடிவம். வேள்வியில் மூட்டும் தீக்கு சிவாக்கினி என்று பெயர்… யாழ்ப்பாணர் சிவனடியவர்களாகிய அந்தணர் கூட்டத்திலேயே இருந்தமையால் அவருக்கு சாதி குலம் பற்றிய சிந்தனைக்கு வாய்ப்பிருக்கவில்லை போலும்!
View More பண்டைக்குலமும் தொண்டக்குலமும்குரு வலம் தந்த கிரி வலம்
“பகவத் கீதை”யின் சாராம்சத்தை சுருக்கமாக விளக்குமாறு கேட்டேன். அவர் “பணியில் கருத்தாய் இரு; அது அளிக்கும் பலன்களில் நாட்டம் கொள்ளாதே” என்பதுதான் அதன் மையக் கருத்து என்றார். அதை உடனே புரிந்துகொண்டேன் என்றோ, ஒத்துக்கொண்டேன் என்றோ என்னால் சொல்ல முடியாது. அதன் மகிமையையும், பாரத கண்டத்தின் பண்டைய வழிகள் எப்படி மனிதனை நல்வாழ்க்கையின் மூலம் உயர்த்திச் செல்கிறது என்பதையும் நான் அப்போது உணர்ந்திராவிட்டாலும், அந்த கீதையின் கருத்துதான் என்னை மேலும் படித்து அறிந்து கொள்ள உதவியது என்று நிச்சயமாகச் சொல்ல முடியும்.
View More குரு வலம் தந்த கிரி வலம்பூமி செல்லும் திசையும், வைகுண்ட ஏகாதசியும், மகா சிவராத்திரியும்
எங்கெல்லாம் அழிவிலிருந்து ஆக்கம் வருகிறதோ அது சித்தி பெரும் இடமாகிறது. அப்படிப்பட்ட மற்றொரு இடம் திருவண்ணாமலை. அந்த மலை அணைந்த எரிமலை என்று புவியியலார் கருதுகின்றனர். ஒருகாலத்தில் பிரளய கால அக்னியைப் போல விண்ணளவு உயரும் நெருப்பைக் கக்கிகொண்டிருந்த இடம் அது. அந்த அக்னி அழிக்கவில்லை. சித்தி பெரும் இடமாக ஆக்கி விட்டிருக்கிறது.
View More பூமி செல்லும் திசையும், வைகுண்ட ஏகாதசியும், மகா சிவராத்திரியும்குள்ளம்பாளையம்: மதமாற்றிகளை சிறைபிடித்த மக்கள் சக்தி!
பல்லடம் அருகே வீடு, வீடாகச் சென்று பிரசாரம் செய்து, கட்டாய மதமாற்றம் செய்ய முயன்ற ஐந்து பாதிரியார்களை பொதுமக்கள் சிறை பிடித்தனர். போலீசார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பாதிரியார்களை மீட்டு, போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர்… தேவார திருவாசகங்களை ஓதினோம். ஒவ்வொரு வீடாகச் சென்றோம். வாயிலில் நின்றோம். வந்தவருக்கு அடிகளின் திருக்கரங்கள் நீறிட்டன. திருவாசகம் நூலின் படி கொடுத்தோம். சிறார்களுக்கு இனிப்புகள் வழங்கினோம்…
View More குள்ளம்பாளையம்: மதமாற்றிகளை சிறைபிடித்த மக்கள் சக்தி!சோனியா காந்தியின் முகத்திரை: சில பழைய ரகசியங்கள்
”உங்கள் பிரதம மந்திரியின் மனைவி உங்கள் இந்திய உளவுத்துறையை நம்பவில்லை, ஆகவே இத்தாலிய உளவுத் துறையிடமிருந்து தன் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்து கொண்டார்” … இத்தாலியர்கள் இதே போல பல தடவை இந்திய SPG படையைச் சேர்ந்தவர்களிடம் தக்க மரியாதையின்றி, முரட்டுத்தனமாக நடந்து கொண்டனர் என RAW அதிகாரி மூலம் ராஜீவ் காந்திக்கும் தெரிவிக்கப் பட்டது.. வெளி உலகில் சோனியா மேடம், ஒன்றுமே நடக்காதது போன்று, கபடற்ற ஒரு இந்திய இல்லாள் போல இந்திய உடையுடன் பாசாங்குடன், அன்றும் நடித்தார், இன்றும் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார்.. (தமிழில்: சேஷாத்ரி ராஜகோபாலன்)
View More சோனியா காந்தியின் முகத்திரை: சில பழைய ரகசியங்கள்