வியாச பாரதம், வில்லி பாரதம், பாஞ்சாலி சபதம் போன்ற மஹாபாரதத் தலைப்புகளில் நண்பர்கள் அவ்வப்போது தனிமடல்களிலும், சிற்சில குழுக்களிலும் ஐயங்கள் எழுப்பி வருகிறார்கள். அவற்றுக்கு நான் அளித்துவரும் விடைகளை ஒரு பொதுத் தளத்தில் இட்டு வைப்பது நல்லது என்று பலரும் அபிப்பிராயப்பட்ட காரணத்தால், தமிழ்இந்து தளமே அதற்குப் பொருத்தமான தளம் என்று கருதி இங்கே அந்த விவாதங்களை இடத் தொடங்குகிறேன்.
View More மஹாபாரத உரையாடல்கள் – 001 கற்றலும் சாதியும்யோகம் – ஒரு எளிய அறிமுகம் (பகுதி – 3)
யோகம் என்பது ஏதோ மூச்சு பயிற்சியோ, அல்லது உடற்பயிற்சியோ மட்டும் அல்ல. அது ஒரு ஆன்மீகத் தேடலுக்கான சிறந்த வழிமுறை. யோகம் சனாதன தருமத்தின் ஆணிவேர். இந்த கட்டுரை யோகத்தின் வெவ்வேறு பெயர்களை சொல்லி அவற்றை சுருக்கமாக விளக்க மேற்கொள்ளப்பட முயற்சி மட்டுமே. யோக சாத்திரத்தின் ஒவ்வொரு யோக முறையும் கடலளவு பெரியது. சனாதன தருமத்தில் பங்கு வகிக்கும் எந்த மார்க்கத்திலும், அது முருக வழிபாடாகட்டும், அனுமனின் வழிபாடாகட்டும், சக்தி வழிபாடாகட்டும், வைணவ வழிபாடாகட்டும், எந்த வழிபாட்டிற்கும் அடிப்படையானது யோகம். இதுவே அந்தந்த இஷ்ட தெய்வங்களின் அருளை பெற்றுத்தந்து முக்தி அடைய உதவக் கூடியது.
View More யோகம் – ஒரு எளிய அறிமுகம் (பகுதி – 3)அல்ஜசீராவில் உதயகுமார் பேட்டி
பைத்ருகம் – ஒரு பார்வை – 3
மனிதனுக்கு ஆஸ்திகத்தின் மீது நம்பிக்கை வரவழைக்க ஆழமான தத்துவார்த்தமான தாக்கத்துடன் கூடிய படங்களே எடுக்கப்பட வேண்டுமே ஒழிய விட்டலாசார்யா பாணி, ராம. நாரயணனின் குரங்கு/நாய் படங்கள் அல்ல. ரஜினிகாந்தின் அரைவேக்காட்டுத் தனமான பாபா போன்ற படங்களும் அல்ல. மேலும் இதுபோன்ற படங்கள் நம் பாரம்பரியத்தின் பெருமையை அழகாக, கவித்துமாகச் சொல்லவும் வேண்டும். பார்த்தவுடன் அந்தக் கோவில்களுக்குச் செல்லவோ, அந்தச் சடங்குகளை அனுபவிக்கவோ தோன்றவேண்டும்…
View More பைத்ருகம் – ஒரு பார்வை – 3பைத்ருகம் – ஒரு பார்வை – 2
தன் மகனை ஒரு நம்பூதிரியாக வளர்க்கக் கூடாது, ஒரு மனிதனாக வளர்க்க வேண்டும் என்றும், தன் மகன் எப்படி வளர வேண்டும் என்று நிர்ணயிக்கும் உரிமை தனக்கு மட்டுமே உள்ளது என்றும் ஆவேசமாகச் சண்டை போடுகிறான். அமைதியாகக் கேட்டுக் கொள்ளூம் அப்பா நம்பூதிரி, அப்படியானால் நான் உன்னை என்னைப்போல் அல்லவா வளர்த்திருக்க வேண்டும் என்று சொல்ல பதில் சொல்லமுடியாமல் வெளியேறுகிறான்…
View More பைத்ருகம் – ஒரு பார்வை – 2பைத்ருகம் – ஒரு பார்வை – 1
கேரள மண்ணின் பாரம்பரியத்தின் மீது தொடுக்கப்பட்டுள்ள அபரிதமான தாக்குதலால் இந்து மதமும் அதன் நம்பிக்கைகளும் கோவில்களும் சாஸ்தாக்களும் யாகங்களும் பகவதிகளும் அடுத்த தலைமுறைக்குக் கிட்டாமல் அழிந்துவிடுமோ என்று கவலைப் பட்டிருக்கிறான் ஒரு கலைஞன்! அப்படி அழியாமல், மதம் மாறாமல் மிச்சம் மீதி இருக்கும் மக்களுக்கு அதன்மீது நம்பிக்கை தளராமல் இருக்க ஓர் அதிர்ச்சி வைத்தியமாக என்ன செய்யலாம் என்று யோசித்திருக்கிறார் இயக்குனர் ஜெயராஜ்…
View More பைத்ருகம் – ஒரு பார்வை – 1ஸ்ரீ கிருஷ்ண சரணம்: மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி தேவி
மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி தேவி அவர்கள் மனதை உருக்கும் வண்ணம் ‘ஸ்ரீ கிருஷ்ண…
View More ஸ்ரீ கிருஷ்ண சரணம்: மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி தேவிதீவிரவாதத்தை ஒழிப்போம், ஜனநாயகம் வளர்ப்போம்
ஆதி அந்தமில்லாத தர்ம நெறியாகிய நம் இந்து மதத்தில் வன்முறைக்கோ, பயங்கரவாதத்திற்கோ, எள்ளளவும் இடமில்லை…. மனமுதிர்ச்சி இன்றி, விளைவுகள் பற்றி சிந்திக்காமல் இந்த குண்டு வெடிப்பில் ஈடுபட்ட இந்துக்கள் (இவர்கள் மீதான குற்றச்சாட்டு உண்மையாக இருக்கும் பட்சத்தில்) சட்டத்தின் கீழ் கடுமையாக தண்டிக்கப் படவேண்டும்…”காவி தீவிரவாதம்” போன்ற பொறுப்பற்ற பிரசாரங்களினால், ஏற்கெனவே ஒற்றுமையின்றி பிரிந்து கிடந்து, தன் ஒருங்கிணைந்த ஊக்கத் திறனையும், சக்தியையும் உணராமல் இருக்கும் இந்து சமுதாயத்தில் அதிருப்தியும், குழப்பமும் அதிகரித்து, தேச ஒற்றுமைக்கும், இறையாண்மைக்கும் பங்கம் ஏற்படும் என்பதை நினைவில் கொண்டு ஊடகங்கள் பொறுப்புடன் செயல் படவேண்டும்….தீவிரவாதம் ஒழியட்டும். ஜனநாயகம் தழைக்கட்டும். அமைதி பெருகட்டும். தேசம் எல்லாத் துறைகளிலும் வளரட்டும்.
View More தீவிரவாதத்தை ஒழிப்போம், ஜனநாயகம் வளர்ப்போம்ஏற்றுமதி/இறக்குமதி அல்லது அடிமைக்கிறிஸ்தவம்
போரை உருவாக்கி இறையாண்மை குறையும் போது திருச்சபையின் தூதர்கள் நற்சேதியுடன் போய் கதிகலங்கிப்போயிருக்கும் மக்களை மதம் மாற்றம் செய்வது ஒரு சர்வதேச தொழில்நுட்பமாக மாறிப்போயுள்ளது… வாத்திகனின் பணபலம், செல்வாக்கு இங்கு எல்லோரையும் விலைக்கு வாங்கிவிட்டது என்று தெரிகிறது…இதனுடைய ஒரு நீட்சியாகவேதான் தமிழ்ப்பாதிரிகளின் இச்செயல்களை நான் காண்கிறேன். உண்மையான தமிழ்ப்பிடிப்புள்ள ஒரு தமிழன், தமிழின் வேர்களை சொந்த மண்ணில் தேடுவானே தவிர வேற்று மண்ணில் தேடமாட்டான்.. ‘எந்நன்றி கொன்றார்க்கும் உய்யுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்றமகர்க்கு’ என்று எழுதிய வள்ளுவனை, செய்நன்றி மறந்த தோமையரின் சீடராக்க தமிழ் பற்றுள்ள ஒரு பாதிரியால் எப்படி முடிந்தது?
View More ஏற்றுமதி/இறக்குமதி அல்லது அடிமைக்கிறிஸ்தவம்மானுடத்தை வாழவைக்கும் தீபத் திருவிழா
தாயுணர்வு கொண்ட ஆன்மிகமே பூமியின் காயங்களுக்கும் மானுட நல்வாழ்வுக்கும் அருமருந்தாக அமையும் என்பதே நரகாசுர வதம் எனும் தொன்மம் இன்றைய சூழலில் நமக்கு அளிக்கும் திருசெய்தியாகும்… மாசற்ற செல்வம் தோன்றிய திருநாள் தீபாவளி. இயற்கையுடன் இணைந்த ஆன்மிகத்துக்கு இறைவனே சான்றுரைத்த திருநாள். தென்னாப்பிரிக்காவில் மகாத்மாவின் சத்தியாகிரகத்தின் முன்னோடியாக விளங்கிய தீபாவளி இந்திய கொத்தடிமை தொழிலாளர்களின் தொடர்ந்த ஏறத்தாழ அரை நூற்றாண்டு போராட்டத்தினால் 1906 இல்தான் கொண்டாட அனுமதிக்கப்பட்டது.
அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்!
View More மானுடத்தை வாழவைக்கும் தீபத் திருவிழா