‘ சாகப்போகிற நேரத்திலே சங்கரா ! சங்கரா ! என்று அழுது என்ன பயன் ? ‘ என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு . இந்தப் பழமொழி எதைக் காட்டுகிறது ? மிக இள வயதிலே இறைநம்பிக்கையை வளர்த்துக் கொள்வது நல்லவிஷயம் . இது அவரவர் கர்மாவை ஒட்டியது என்றாலும் , மனித முயற்சி என்று உண்டு என்று மறுப்பதற்கில்லை.. இளம் வயது – மனத்துடிப்பும் , உடலுறுதியும் உள்ள பருவம் . மிக முக்கியமாக உடல் திறன் . கிழ வயதில் இறை நம்பிக்கை கொண்டு எவ்வாறு நம் பாரத தேசம் முழுவதும் உள்ள திருக்கோவில்களுக்கு சிரமம் இல்லாமல் சென்று வர முடியும்?.. இனி ‘ கடவுள் இல்லை ‘ ‘ கடவுளை புதைக்க வாரீர் ‘ என உலக மக்களுக்கு அறைகூவல் விடுத்த நாத்திகரான நீட்ஷேவின் கைத்தடி குறித்த ஒரு சுவாரசியமான சம்பவம்…
View More கைத்தடி மான்மியம் (அ) எந்த வயதில் இறைநம்பிக்கையை வளர்த்துக்கொள்வது?முத்தைத்தரு.. : திருப்புகழ் விளக்கம்
இனியும் வாழ்வானென் ? என்ற வேகத்தில் தான் கோபுரமேறினார் நம் அருணகிரி வள்ளல். மடுவில் வீழ்ந்தாரை மேலேற்ற கைகொடுப்பது குமரன் தொழில். ஆனபடியாலே நம் ஸ்வாமியை கருணை கண்களால் நோக்கி, அருளும் கரங்களால் தாங்கி, முக்தியெனும் திருவடியால் தீண்டி என்றும் மீளா அடிமை கொண்டான்… முத்தமை” என்பவள் நம் ஸ்வாமியை ஈன்றளித்த மாதரசியின் பெயர் என்றும், அவள் பெயர் கொண்டே நம் ஸ்வாமி பாடினார் என்பதொரு நம்பிக்கை உண்டு. மேலும் இந்தப்பாடலில் மூன்று பேரின் வாசகங்கள் உள்ளதென்றொரு சூக்ஷும கருத்தும் உள்ளது… சூரனை எதிர்த்து ஸுப்ரஹ்மண்யன் செய்த யுத்தம், ஆணவத்தை எதிர்த்து, குருவருளால் கிடைத்த ஞான வாள் கொண்டு ஒவ்வொரு ஆன்மாவும் செய்ய வேண்டிய யுத்தம். அது மிகவும் கோரமானது. க்ரூரமானதும் கூட..சிவா விஷ்ணு ஸ்வரூபமான ஞானஸ்கந்தனின் கைவேல் நம்முள் தினமும் போர் தொடுக்கட்டும்…
View More முத்தைத்தரு.. : திருப்புகழ் விளக்கம்வடமாவட்டங்களில் வன்னியர்களிடையே கிறிஸ்தவ மதமாற்றங்கள்
மானமுள்ள வன்னியர்கள் யாராவது இருந்தால் “வன்னிய கிறிஸ்தவர்” “கிறிஸ்தவ வன்னியர்” ஆகிய அவமானகரமான பெயர்களைப் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்த வைக்கக் கிளர்ந்தெழ வேண்டாமா? புனிதமான அக்னிச்சட்டியின் மீது மானுட விரோத அன்னியமத சின்னமான சிலுவையை வரைந்திருப்பதை எப்படி சகித்துக் கொள்கிறீர்கள்?… அரியலூர், பெரம்பலூர் மாவட்டம் முழுக்க வன்னியர்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிவருகிறார்கள். காரணம் என்னவென்று தெரியவில்லை. மதம் மாறினாலும் அவர்கள் வன்னியர் சங்கத்திலும், பாமகவிலும் தொடர்ந்து இருப்பதால் பாமக தலைமையும் கண்டுகொள்வதில்லை… மதமாற்றத்திற்கு எதிரான போராட்டத்தில் குறிப்பிட்ட சாதி சமுதாய அமைப்புகளும், இந்து அமைப்புகளும் இரட்டைக்குழல் துப்பாக்கியாக இணைந்து இயங்கினால் கிறிஸ்தவ மதமாற்றப் பிசாசுகளை கட்டாயம் விரட்ட முடியும். அது நிகழ விடாமல் தடுப்பது சாதிக்கட்சிகளின் சுயநல சுயலாப அரசியலும், அதை நன்றாகப் புரிந்து வைத்துள்ள கிறிஸ்தவ மதமாற்றிகள் விரித்த வலையில் அந்த சாதி அமைப்புகள் வீழ்ந்து விட்டதும் தான்…
View More வடமாவட்டங்களில் வன்னியர்களிடையே கிறிஸ்தவ மதமாற்றங்கள்ரஃபேல் போர் விமான விற்பனை: ராகுல் உளறல்களும் உண்மைகளும்
பாராளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் அவர்கள் ராஜாங்க ரீதியான இரகசிய ஒப்பந்தம் பழைய காங்கிரஸ் அமைச்சர் அந்தோனி சார்பில் கை எழுத்து இடப்பட்டது என்று கூறி அந்த ஒப்பந்தத்தையும் காண்பித்து விட்டார். பிரான்ஸ் அரசாங்கமும் தெளிவாக ராகுல் காந்தி தனிப்பட்ட முறையில் சொன்னதாக சொன்ன தகவலை மறுத்து விட்டது.. முதலில் UPA அரசாங்கம் சொன்ன விலை மிகவும் குறைவான ஒன்று என்று இந்த துறை சார்ந்த வல்லுனர்கள் தெளிவாக ஆதரங்களுடன் சொல்லி விட்டனர். ஆனால் இப்போது மோடி அரசாங்கம் வாங்க இருப்பதோ அதி நவீன தொழில் நுட்பத்தில் தயாராகி கொண்டிருக்கும் விமானங்கள். அதிலும் பார்த்தோம் என்றால், இவர்கள் பழைய விமானங்களுக்கு செலவிட வேண்டிய பணத்தை விட வெறும் ஐந்து மில்லியன் டாலர்கள் மட்டுமே இதற்கு அதிகம். அது மட்டும் இல்லாமல் நமக்கு சாதகமாக என்னென்ன தேவைப்படுமோ அத்தனை சரத்துகளையும் நாம் இதில் உடன்பட வைத்து இருக்கிறோம்…
View More ரஃபேல் போர் விமான விற்பனை: ராகுல் உளறல்களும் உண்மைகளும்ஏன் இந்திய நகரங்கள் இப்படி இருக்கின்றன?
பத்திர பதிவு என போனால் அரசு காசு வாங்கிக்கொண்டு இன்னாருக்கும் இன்னாருக்கும் இடையே ஒரு பதிவு நடந்தது என்று மட்டும் தான் எழுதும். அதுவும் பொதுவான அல்லது இணைக்கப்பட்ட பதிவு ஆவணம் என ஒன்று இருக்காது. யாரேனும் ஆக்கிரமித்தால் கோர்ட்டுக்கு ஒரு 100 வருசம் நடக்கவேண்டும். இந்தியாவிலே 60 சதம் வழக்குகள் நிலத்தகராறு வழக்குகள் தான். இதனால் என்ன நடக்கிறது? புற்றீசல் போல இஷ்டத்துக்கும் எலிவளை, புறாக்கூண்டு போல ஆங்காங்கே கட்டிடம் கட்டிக்கொண்டே போகிறார்கள்…எல்லாவற்றிக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிமுறைகள் வரைமுறைகள் இருக்கவேண்டும். இல்லாவிடில் எப்படி 20,000 பேர் வேலைசெய்யும் நிறுவனத்தின் கழிவையும் 40 பேர் குடியிருக்கும் வீட்டின் கழிவையும் ஒரே மாதிரி அகற்றி திட்டம் போடுவது? திட்டம் போடுவதன் முதல் பகுதியே கணக்கெடுப்பு என்றால் நிலம் பினாமியிலே இருக்க முடியாது, கருப்பு பணத்திலே நிலம் வாங்க முடியாது. இதனால் ஆதார் கூடாது இணைப்பு கூடாது என குதிக்கிறார்கள்…
View More ஏன் இந்திய நகரங்கள் இப்படி இருக்கின்றன?ஸ்ரீசங்கரரின் ஆத்மபோதம்: ஓர் அறிமுகம்
கண்களால் காணும்போது ஆகாயம் நீலமாக நம் தலைக்குமேல் இருப்பதாகத் தோன்றுகிறது. இதைக் கொண்டு பகுத்து அறியும் திறனற்றோர் (அவிவேகிகள்) நீலநிறம், கவிந்திருப்பது போன்ற தன்மை (concavity) ஆகியவை ஆகாயத்தைச் சார்ந்தது என்கின்றனர். ஆனால் பஞ்சபூதங்களைப் பற்றிய ஞானமுடையவர்கள் ஆகாயம் நிறமும் வடிவமுமற்றது, காட்சிப் பிழையால் (அத்யஸ்தம்) அவ்வாறு தோன்றுகிறது என்று அறிகின்றனர். அதுபோல, ஆத்மாவின் ஸ்வரூபத்தையும், அனாத்மாவின் (உடல், புலன்கள், உலக வியவகாரங்கள்) ஸ்வரூபத்தையும் பிரித்தறியும் திறன் கொண்ட விவேகிகள், உடல் புலன்கள் ஆகியவற்றின் செய்கைகள் ஆத்மாவைச் சேர்ந்தது என்று எண்ண மாட்டார்கள்.. ஸ்ரீ சங்கரரின் ஆத்மபோதம் என்ற இந்த நூல் (68 சுலோகங்கள்) அழகிய பற்பல உவமைகளின் மூலமாக வேதாந்த தத்துவத்தின் ஆழமான கருத்துக்களை படிப்படியாக அற்புதமாக விளக்கிச் செல்கிறது…
View More ஸ்ரீசங்கரரின் ஆத்மபோதம்: ஓர் அறிமுகம்இலங்கை: நல்லூர் ஆலயத்திலிருந்து வெளியேற்றப்பட்ட தமிழ் இந்துத் தாய்மார்கள்
நல்லூர் ஆலயத்திற்கு வழிபாடுகளில் ஈடுபடச் சென்ற தமிழ் தாய்மார்களை ஆலய நிர்வாகத்தினர் ஆலயத்திற்குள் செல்ல விடாது தடுத்துள்ளனர். இதனால், ஆலய நிர்வாகத்தினருக்கும், பெண்களுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது… இந்தத் தமிழ் தாய்மார்கள் சென்ற ஐநூறு நாட்களாக போரின்போது காணமல்போன தமது உறவுகளை கண்டுபிடித்து தருமாறு இலங்கை அரசுக்கு எதிராக தொடர் போராட்டம் நடத்துபவர்கள். இவர்கள் எல்லோரும் இந்துக்கள். சாத்வீகமாகப் போராடுபவர்கள். எந்த ஒரு அரசியல் கட்சியையும் சாராதவர்கள். பதவி ஆசை பிடித்த தமிழ் அரசியல்வாதிகளால் திரும்பியும் பார்க்கப் படாதவர்கள். தமது போராட்டத்தின்போது வைத்துக்கொண்ட நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவதற்காக யாழ்ப்பாணம் நல்லூர் கந்தஸ்வாமி ஆலயத்திற்கு இவர்கள் வந்தபோது அதனை நிறைவேற்ற விடாமல் ஆலய நிர்வாகிகளால் தடுக்கப் பட்டார்கள். தீச் சட்டி ஏந்தவும் தேங்காய் உடைக்கவும் இவர்கள் மறுக்கப் பட்டார்கள். இதைப்போன்ற மிகவும் கேவலமான வேதனை தரும் செயலை இக்கோவில் நிர்வாகத்தவர்கள் செய்தது மிகவும் கண்டிக்கத் தக்கது….
View More இலங்கை: நல்லூர் ஆலயத்திலிருந்து வெளியேற்றப்பட்ட தமிழ் இந்துத் தாய்மார்கள்அஞ்சலி: பி.ஆர்.ஹரன்
தன்னலம் என்பதைச் சிறிதும் கருதாது இந்து ஒற்றுமைக்கும், இந்து விழிப்புணர்வுக்கும் அயராது உழைத்த ஒரு மகத்தான கர்மயோகியைத் தமிழ்நாட்டு இந்துக்கள் இழந்து நிற்கின்றனர். தனது எழுத்துக்களுக்காக ஹரன் ஒருபோதும் சொந்தம் கொண்டாடியதோ அல்லது அதை ஏதோ பெரிய விஷயமாக நினைத்ததோ இல்லை. தர்மத்தைக் காப்பதும் இந்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதுமான புனித வேள்வியில் தான் சமர்ப்பிக்கும் ஆகுதிகளாகவே அவற்றை அவர் எண்ணினார். எழுத்துக்களுடன் கூட, செயல்வீரராகவும் களப்பணியாளராகவும் அவரது பங்களிப்புகள் சிறப்பானவை. பசுக்கள் பாதுகாப்பு, அராஜகமாக கால்நடைகளைக் கடத்துவதற்கு எதிரான போராட்டம் ஆகியவற்றில் அவர் ஆத்மார்த்தமாக ஈடுபட்டார். துணிச்சலுடன் கடத்தல் சம்பவங்களை ஆவணப்படுத்துவது, காவல் துறையினரிடம் புகார் கொடுத்து பசுக்களை மீட்பது ஆகியவற்றிலும் பெரும் முனைப்புடன் செயல்பட்டு வந்தார்… பாரதம் முழுவதும் பல புனிதத் தலங்களுக்கு யாத்திரை செய்வதும், சாதுக்களையும் மகான்களையும் சந்திப்பதும் அவரது மனத்திற்குப் பிடித்த விஷயங்கள்…
View More அஞ்சலி: பி.ஆர்.ஹரன்நம்பிக்கை – 12: உண்மையில் நான் யார்? [நிறைவு]
“இல்லை. தன்முனைப்பு என்பது பெருமை கொள்வதோ, கர்வமாக நடப்பதோ, சுயநலத்துடன் இருப்பதோ அல்ல. ‘நானே நினைப்பவன்; நானே செய்பவன்; நானே அனுபவிப்பவன்’ போன்ற எண்ணம் தான் தன்முனைப்பு என்பது. உன்னைப்பற்றி நீயே தவறாக அனுமானித்துக்கொள்வதுதான் தன்முனைப்பு (EGO)”. “நான் என்னைப்பற்றி இவ்வாறாக நினைத்துக்கொண்டிருக்கிறேன் என்று சற்று முன்பு சொன்னதெல்லாம் தான் தன்முனைப்பு என்கிறீர்களா?”… “நிச்சயமாக. நம்முடைய சேர்க்கையானது எப்போதுமே பொருட்கள், மக்கள் மற்றும் இடங்கள் போன்றவையுடன் தான் இருந்துவருகிறது. பொருட்கள், உறவுகள், செல்வம், ஆரோக்கியம், உடல், அறிவு என்று எல்லாமே நிரந்தரமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். மாற்றதிற்குள்ளாகும் விஷயங்களுடன் தான் நம்முடைய சேர்க்கை எப்போதும் இருக்கிறது. மாற்றத்திற்குள்ளாகும் விஷயங்களைப் பற்றிக்கொண்டு அவை மாற்றமில்லாமல் நிரந்தரமாக இருக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்ப்பதுதான் முரண்பாடு”…
View More நம்பிக்கை – 12: உண்மையில் நான் யார்? [நிறைவு]நம்பிக்கை – 11: தியானம்
“நமது ஆள் வேலையாளிடம் தன்னை வீட்டிற்குக் கொண்டு செல்ல ஒரு வண்டியைத் தயார் செய்யச் சொன்னான்.; அதையும் உடனடியாக அவன் செய்து முடித்தான். அந்த வண்டியில் ஏறிக்கொண்டே, வீட்டுத் தோட்டத்தில் உள்ள புற்களையெல்லாம் வெட்டி, சுத்தம் செய்து, செடிகளுக்கெல்லாம் தண்ணீர் விடச் சொன்னான். வேலையாள் வேலை செய்யத் தோட்டத்திற்குப் போனவுடன் வண்டியை ஓட்டிக்கொண்டு தன்னுடைய குருநாதர் வீட்டுக்குச் சென்றான்”. “ஒளிந்துகொள்ளவா போனான்?” என்று சிரித்தபடியே கேட்டாள் ஸ்நேஹா… “ஜபத்தைப் பயிற்சி செய்யும்போது, நீங்கள் மந்திரத்தின் மீதும் உச்சாடனம் செய்யும் எண்ணிக்கை மீதும் கவனமாக இருப்பீர்கள். வழக்கமாக 108 முறை அல்லது 1008 முறை என்று செய்வீர்கள். போதுமன நேரம் இல்லதபோது 32 முறை மட்டுமே செவீர்கள்”. “ஆமாம்” என்றார் சங்கர். “அங்கே முழு கவனமும் மந்திரத்தின் மீதும் எண்ணிக்கையின் மீதும் இருக்கும்”. “ஆமாம்” என்றாள் சௌம்யா. “அடுத்தடுத்து வரும் மந்திர உச்சாடனங்களுக்கு இடையேயுள்ள மௌனத்தின் மீது கவனம் செலுத்துவது தான் அடுத்த படி. மனதை அமைதிப்படுத்தி, சாந்தி நிலையை அடைந்த பிறகு, ஜபம் செய்யும்போது, மந்திரத்தின் மீதோ அல்லது எண்ணிக்கையின் மீதோ கவனம் செலுத்தாமல், இரண்டு மந்திரங்களுக்கும் இடையேயுள்ள மௌனத்தின் மீது கவனம் செலுத்துங்கள். அந்த மௌனத்தை அதிகப்படுத்தி அங்கேயே நிலைத்திருங்கள்”….
View More நம்பிக்கை – 11: தியானம்