ஒரு சாதாரணமான இரும்புக் குண்டு காந்த சக்தியுடைய இரும்புக் குண்டைச் சுற்றி வந்தால் அச்சாதாரண இரும்புக் குண்டு காந்தக் குண்டாக மாறுவதுபோல், சாதாரண மனம் (அதாவது சக்தி) சிவமாகிய திருவண்ணாமலையை கிரிவலம் வந்தால் முடிவில் மனம் சிவத்தில் கலந்து சிவமேயாகும்… பக்தியுடன் ஒருமைப்பட்ட மனதுடனும், இறைவனிடத்தில் நம் தேவைகளைப் பற்றி ஏதும் விண்ணப்பிக்காமல் கிரி வலம் செய்தோமானால் நம் தூல வாழ்விற்கும், ஆன்மீக வாழ்விற்கும் தேவையான பொருளும், அருளும் நம் பக்குவத்திற்கு ஏற்ப கொடுத்தருளுவார்.
View More அருணையின் கருணைTag: அருணாசலர்
நம்மைத் தேடி வரும் இறைவன்
நமக்கேற்ற இறைப்பணி ஒன்றைத் தேர்ந்தெடுத்து, அதைச் செய்யும்போது அதில் சந்தேகம் மட்டும் கொள்ள வேண்டாம். ஏனென்றால் அப்படிச் சந்தேகம் வந்தால் அதைப் போக்குவதிலும் சற்றே காலவிரயம் ஆகலாம்….
கடவுள் எங்கும் உள்ளார், அருள் எப்போதும் உண்டு என்று நாம் கேள்விப்பட்டாலும், அது நமது அனுபவமாக ஆகும்வரை நமக்குப் பல விதமான சந்தேகங்கள் வந்து கொண்டுதான் இருக்கும். அவை அனைத்தையும் தீர்ப்பதுபோல் நிகழ்வுகள் நடக்கும்போது, நமது சந்தேகங்கள் ஆச்சரியமாக மாறலாம். நல்ல வேளையாக எனக்குச் சந்தேகங்கள் பெருத்த அளவில் இல்லாததாலோ என்னவோ, அனுபவங்கள் ஒன்றன் பின் ஒன்றாகத் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன.
View More நம்மைத் தேடி வரும் இறைவன்