எள்ளுப்பாட்டனார் எர்னெஸ்டோவின் நினைவிடத்தில் நுழைந்து அவர் சமாதி அறையில் மாட்டி வைத்திருக்கும் கிடாரை உருவி எடுக்கையில் தடுமாறி விழுகிறான் மிகைல். அந்தக் கணத்தில் தென்புலத்தார் உலகம் திறந்து வழிவிட, யார் கண்களுக்கும் தென்படாமல், யாதும் சுவடுபடாமல் அவ்வுலகில் நுழைகிறான்.. டிஸ்னி படங்களில் நாம் கண்டுவந்த பாகன்மார் கதைகளை, அவர்தம் ஆதார நமபிக்கைகளை, தொன்மங்களை, கோகோ (Coco) என்ற இந்த ஆண்டின் ஆஸ்கார் விருது வென்றிருக்கும் திரைப்படம் மிக வெளிப்படையாகவே சித்தரித்திருக்கிறது. சாதலை எண்ணி அஞ்ச வேண்டியதில்லை என்பது இந்தப்படத்தின் முக்கியச் செய்தி…
View More தென்புலத்தார் திரும்பிவரும் நாளில் – கோகோ (Coco) திரைப்படம்Tag: உலகத் திரைப்படம்
திரைப்பார்வை: The Middle of the World
இது ஒரு சாலைப் பயண சினிமா. ப்ரேசில் நாட்டின் வறுமையும், வறட்சியும் நிறைந்த வடக்குப் பகுதியில் இருந்து 1000 ரியாஸ் சம்பளம் கிடைத்தால் மட்டுமே தன் 7 பேர்கள் கொண்ட குடும்பத்தைக் காப்பாற்ற முடியும் என்றும், அந்த ஆயிரம் ரூபாய் வேலை ரியோ டி ஜெனிராவில் மட்டுமே கிடைக்கும் என்று நம்பிக் கொண்டு தன் மனைவி மற்றும் 5 குழந்தைகளுடன் நான்கு சைக்கிள்களில் ரியோவை நோக்கிக் கிளம்பி விடுகிறான்…. இந்தியாவிலும் வறுமை உண்டு, அசுத்தங்கள் உண்டு, சாக்கடைகள் உண்டு இருந்தாலும் அவற்றையெல்லாம் மீறி நமக்கு இன்னும் ஆன்ம நம்பிக்கையளிக்கும் விஷயங்கள் ஏராளமாக உள்ளன. அந்த ஆன்மாவை இந்த தென்னமரிக்க நாட்டினர் முற்றிலுமாக இழந்து விட்டனர் என்று தோன்றுகிறது. வெறுமை மட்டுமே மீதம் இருக்கின்றது…..
View More திரைப்பார்வை: The Middle of the Worldதிரைப்பார்வை: The Man from Earth
ஆறு பேர் அமரக்கூடிய ஒரு சிறிய வீட்டுக் கூடத்தில் மொத்தப் படமும் நடக்கிறது. வேறு எந்த வெளிப்புறப்படப்பிடிப்பும், பார்வையாளனை பரபரப்பிற்குள்ளாக்கும் எந்த சம்பவங்களும் கிடையாது…. யேசு மனிதரா அல்லது தேவ குமாரனா அல்லது வரலாற்றில் அப்படி ஒருவர் இருந்தாரா, பைபிள் இறைவனின் நேரடி வார்த்தைகளா அல்லது பாகனிய தொன்மங்களில் இருந்து சுருட்டி கிறிஸ்துவ சாயம் பூசி மத நம்பிக்கையினால் உறையவைக்கப்பட்டதா என கிறித்துவத்தின் அடிமுடியை அலசும் படம்…. கதையும், திரைக்கதை அமைத்தவிதமும், கூர்மையான வசனமுமே படத்தின் பலம். கொஞ்சம் கூட சலிக்காமல் பார்க்க வைக்க்கிறது. கிறிஸ்தவத்தை தெளிவான விமர்சனங்களால் கேள்விக்குள்ளாக்குகிறது….
View More திரைப்பார்வை: The Man from Earthஎன் பார்வையில் தமிழ் சினிமா
தமிழ் சினிமா என்று சொல்லப்பட்ட, பேராசையால் உந்தப் பட்டு உருவெடுத்திருக்கும் வணிக கேளிக்கையில் தமிழும் இல்லை. சினிமாவும் இல்லை. அதில் இலக்கியமும் இல்லை. கலை என்று சொல்லக் கூடியதும் எதுவும் இல்லை. அது சந்தைக்கு தேவையான சரக்குகளைத் தயாரிக்கும் ஒரு தொழிற்சாலை. சுஜாதா சரியாகச் சொன்ன கனவுத் தொழிற்சாலை. ஆடுகளம், நான் கடவுள், எங்கேயும் எப்போதும் போன்றவை மரபான தமிழ் சினிமா சட்டகத்தையும் மறக்காமல் அதற்கான மசாலாவை தாளித்துக்கொண்டு, தாம் வித்தியாசமானவர்கள் என்று பேர் பண்ணிக் கொள்ளவும் ஆசைப்பட்ட முயற்சிகள்…. முற்றிலும் மாறிய, வறுமைப் பட்ட சமூகத்திலிருந்து வந்த ஒரு படத்தைப் பற்றி சொல்கிறேன். இது தமிழ் சினிமா கலாசாரம் எட்டாத ஒரு சிகரத்தில், நினைத்துப் பார்க்க முடியாத ஒரு தூர தேசத்தில் உள்ள விஷயம். மொழி ஒடியா, படத்தின் பெயர்….
View More என் பார்வையில் தமிழ் சினிமாThe Last Emperor – கோப்பையில் நிரம்பித் தளும்பும் வெறுமை
சீனாவின் சரித்திர பக்கங்களில் ஒரு மைல் கல்லாக மாறிவிட்ட ஒரு மனிதனின் வாழ்க்கை இத்தகையது என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்கக்கூடும் உங்களுக்கு. ரத்தமும் சதையுமாக வாழ்ந்த ஒரு மனிதனின் கதை. சீனாவை ஆண்ட Qing என்னும் அரச வம்சாவளியின் கடைசி பேரரசனாக பட்டம் சூட்டப்பட்ட ”பூ யி”-இன் வாழ்க்கையை சிதைவின்றி சித்தரிக்கிறது The Last Emperor திரைப்படம்.
View More The Last Emperor – கோப்பையில் நிரம்பித் தளும்பும் வெறுமைUP – Animation Movie. ( பறக்கும் வீடு)
தென் அமெரிக்காவில் இருக்கும் பாரடைஸ் பால்ஸுக்கு அருகில் வீடு கட்டுவதும் அங்கு சென்று மனிதனின் கால்படாத இடங்களைப் பற்றி ஆராய்வதும், அங்கிருக்கும் விலங்கினங்கள், பறவைகளைப் பற்றித் தெரிந்து கொள்வதும் எல்லியின் கனவு. எல்லியைப்போலவே ஒத்த சிந்தனை கொண்ட கார்லும் நட்பைத்தொடர்கின்றனர்.
View More UP – Animation Movie. ( பறக்கும் வீடு)ரோமன் பொலன்ஸ்கி கைது – தொடரும் வினையின் நிழல்
பொலன்ஸ்கியின் அபிமானிகள் பெரும்பாலோனோர் ஸ்தாபிக்க நினைப்பது போல பொலன்ஸ்கி மனிதரில் புனிதரெல்லாம் கிடையாது. இருண்மை நிறைந்த சொந்த வாழ்க்கையில் பல இழப்புகளையும் மனசிக்கல்களையும் சந்தித்த பொலன்ஸ்கிக்கு பெண்கள் ஒரு மருந்தாக இருந்தது மறுக்க முடியாத உண்மை. இளம் பெண்கள் மீது அவருக்கு இருக்கும் மோகத்தை பொலன்ஸ்கியே வெளிப்படையாக ஒத்துக் கொள்கிறார்.
View More ரோமன் பொலன்ஸ்கி கைது – தொடரும் வினையின் நிழல்