சாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம் – 5

“ஸ்ரீ ஐயன் காளியின் ஆக்ஞைக்கு இணங்க நமது சகோதரிகளின் கல்மாலைகளை அறுத்தெறியவே நாம் முழு சம்மதத்துடன் இங்கு கூடியிருக்கிறோம்.” அம்மேடையிலேயே அருவாள் கொண்டு கல்மாலைகள் அறுத்தெறியப் பட்டன.. ”எனது இனத்தவர்களுக்கு வீடோ, பூஜை நடத்த கோவிலோ கிடையாது. எனவே இவ்விஷயத்தில் வேறு சமுதாயத்தினருக்குச் செய்வதை விடக் கூடுதலாக எங்களுக்கு அரசாங்கம் செய்து தரவேணுமென்று வேண்டுகிறேன். எங்கள் தேவைகளுக்காக கிணறுகளும், கோயில்களும் நிர்மாணித்துத் தரவேண்டும்”

View More சாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம் – 5

சாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம் – 4

ஒருநாள் ஐயன் காளி விளையாடிக் கொண்டிருந்த பந்து பக்கத்தில் இருந்த ஒரு நாயர் வீட்டில் விழுந்த போது அந்த நாயர் வந்து ஐயன் காளியை எச்சரித்தான். அன்று முதல் விளையாடுவதை விட்டுவிட்ட ஐயன் காளி ஆழமான மௌன சிந்தனையில் மூழ்கினார்… நினைவுகூர்ந்த ஐயன் காளி, ‘ஒரு புலையர் பெண் செய்த வேலையை, அட ஆறு நாயர் ஆண்கள் சேர்ந்து செய்ய முடியவில்லையே!’ என்றார்.

View More சாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம் – 4

சாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம் – 2

ஆரிய-திராவிட இனவாதம் பொய் என்றால், சாதி ஏன் இந்தியாவில் மட்டும் இருக்கிறது? முன்னேறிய நாடுகளில் இப்போது சாதி முறை இல்லையே. இந்தியாவில் தானே இந்த அளவு உள்ளது? .. அந்தணரான சுந்தரமூர்த்தி நாயனார் “திரு நீலகண்டத்துப் பாணர்க்கு அடியேன்” என்று தன்னைப் பெருமையுடன் அறிமுகம் செய்கிறார். இதே போன்ற பாணர்களைத்தான் செயின்ட் அகஸ்டைன் பாவப் பிறவிகளாகக் கருதினார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

View More சாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம் – 2

ஏழாம் உலகம் – இரக்கம் கோரும் கொடூரங்கள்

மனிதன் தன் சக மனித ஜீவனை எவ்வளவு கேவலப்படுத்துவதன் மூலம் தன்னையும் கேவலப்படுத்தக் கூடியவன், அது பற்றி பிரக்ஞையே இல்லாமல், பின் அதற்கு தார்மீக, அரசியல் சித்தாந்த ஜோடனைகளுடன் அலங்காரங்கள் செய்வான், அவன் எவ்வளவு ஆபாசமானவன் என்பது தெரியும்.

View More ஏழாம் உலகம் – இரக்கம் கோரும் கொடூரங்கள்

வெளிநாட்டு நேரடி முதலீடும், இந்திய சில்லறை வியாபாரமும்

பெருநிறுவனங்களும் பன்னாட்டு நிறுவனங்களும் இந்திய சில்லறை வர்த்தகத்தில் ஈடுபட வேண்டும் என்று வாதிடுபவர்கள், இப்போதுள்ள சில்லறை வியாபாரிகள் இந்திய சமூகத்திற்கும் பொருளாதாரத்திற்கும் நல்கியுள்ள, நல்கிவரும் பங்களிப்பை எண்ணிப் பார்க்கத் தவறிவிட்டனர்… இந்தியாவில் சில்லறை வியாபாரம் அமைப்பு சாரா நிலையில் உள்ளது. இது பாரம்பரியமானது. சமூகம் சார்ந்தது. செலவு குறைவானது. உழைப்பு செறிவு மிக்கது.

View More வெளிநாட்டு நேரடி முதலீடும், இந்திய சில்லறை வியாபாரமும்

சீனாவின் இதயத்தை வெல்ல இந்திய கலாசார சக்தி!

அடுத்த பிறவியில் இந்தியாவில் பிறந்தால்தான் மோட்சம் கிடைக்கும் என்று கோடிக்கணக்கான சீனர்கள் எண்ணுகிறார்கள்.. சீனாவை மேற்கத்திய கண்ணாடி அணிந்து கொண்டு நாம் பார்க்கிறோம். அல்லது இங்குள்ள மார்க்சிய கண்ணாடி அணிந்து கொண்டும் நாம் பார்க்கிறோம். இந்தக் கண்ணாடி மிகவும் தடிப்பானது. இந்தக் கண்ணாடிகளை உதறிவிட்டு நாம் சீனாவை இயல்பாக நோக்க வேண்டும்.

View More சீனாவின் இதயத்தை வெல்ல இந்திய கலாசார சக்தி!

வேலை, அன்னியமாதல், படைப்பாளிகள்: சில எண்ணங்கள்

விரும்பிய தொழிலை விரும்பிய வகையில் செய்வதுதான் மனித விடுதலை என்று முழங்கிய மார்க்ஸ் அது எப்படி நெடுங்காலத்துக்கு எந்த சமூகத்திலும் கிட்டாத ஒரு சுதந்திரம் என்பதை அறியாமல் இல்லை. தெரிந்தும் ‘புரட்சி’ செய்ய மனிதரை உந்தியது (சுய?) வெறுப்பின் பால், வாழ்வுக் கோணலை ஒரே முயற்சியில் நிமிர்த்தி விடும் அவசரத்தில் எழுந்த குரோத முயற்சி. அதை இனம் காணாமல் அவரை ஒரு தீர்க்கதரிசி என்று விழுந்து தண்டனிடும் லட்சங்கள் தாமாக எதார்த்தத்தைத் தரிசிக்க முடியாத மந்தை ஆடுகள். உண்மையில் இருந்து அன்னியமான ‘மனிதர்’கள் ….

View More வேலை, அன்னியமாதல், படைப்பாளிகள்: சில எண்ணங்கள்

நம் முற்றங்களில் குவியும் சீனக் கூளம்

… இதே மாதிரி இந்தியத் தயாரிப்பு கிடைக்கிறதா என்று கடை முழுதும் வலைவீசித் தேடினோம். ம்ஹூம், ஒன்றும் அகப்படவில்லை….
இந்தியா, சீனாவுக்கிடையேயான வர்த்தகம் சமீபகாலமாக சராசரியாக ஆண்டுக்கு 50 சதவீதம் என்ற கணக்கில் வளர்ந்து வருகிறது. ஆனால் இந்த வர்த்தகம் சீனாவுக்கே முற்றிலும் சாதகமாக இருக்குமாறு சீனா காய் நகர்த்துகிறது. இந்தியா ஏற்றுமதி செய்து கணக்குத் தீர்க்கும் அளவை விட மிக அதிக அளவில் விலையும், தரமும் குறைந்த பொருட்களை சீனா இந்தியாவில் கூளமாகக் கொட்டிக் கொண்டிருக்கிறது.

View More நம் முற்றங்களில் குவியும் சீனக் கூளம்