இவரைப்பற்றிய செய்திகள் மற்றும் இவரது ஆங்கில உரைகள், உரையாடல்களைத் தொடர்ந்து கவனித்து வந்திருப்பதால் நன்கு அறிந்திருந்தாலும், திரைப்பட இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் செய்துள்ள இந்த 2020 நேர்காணல் வித்தியாசமாகவும் சிறப்பாகவும் இருந்தது.. காஞ்சிப் பெரியவர் (ஸ்ரீ ஜெயேந்திரர்) “நீ இந்த நாட்டுக்காக பெரிய செயல்களை செய்து இங்கேயே புகழ்பெறுவாய்” என்று சொன்னதை தெய்வ வாக்காக எடுத்துக்கொண்டதைச் சொல்லி “என்னிடம் பாஸ்போர்ட்டே கிடையாது” என்று மிக இயல்பாக, சிரித்துக்கொண்டே கூறுகிறார்…
View More சென்னை ஐஐடி இயக்குனர் வி.காமகோடி: ஒரு நேர்காணல்Tag: கணினி
மோதியின் கலிஃபோர்னியா விஜயம்: நேரடி அனுபவம் – 4
பிற நாடுகள் பல முறை முயன்ற பின்னரே செவ்வாயை சென்றடைந்துள்ளார்கள். என்னைப் போலவே இந்தியா முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றுள்ளது (மோடி மோடி மோடி என்ற பெரும் ஆமோதிப்பு குரலோசை அலையலையாய் எழும்புகின்றது) …. ஆகவே நீங்கள் கணக்குப் போட்டுப் பார்த்தால் பழைய எரிபொருள் விலையில் 19000 கோடி ரூபாய்கள் திருடப் பட்டு வந்தது புரிய வரும். இப்பொழுது இந்தப் பணம் அரசின் கஜானாவில் மிச்சப் படுகின்றது. இனிமேல் அந்த உதவித் தொகையைப் பெற இடைத்தரகர்கள் தேவையில்லை, திருடர்கள் கிடையாது. எனது ஜாம் மூலமாக ஊழலை ஒழிக்கத் துவங்கியுள்ளோமா இல்லையா? திருட்டை தவிர்த்திருக்கிறோமா இல்லையா? நிதியை சேமித்துள்ளோமா மிச்சப் படுத்தியுள்ளோமா இல்லையா? அந்த சேமிப்பு நிதி ஏழைகளூக்கு பயன் படுமா இல்லையா? (ஆமாம் ஆமாம் ஆமாம் என்ற கோஷம் விண்ணை முட்டுகின்றது) இப்படித்தான் மாற்றம் உருவாகின்றது….
View More மோதியின் கலிஃபோர்னியா விஜயம்: நேரடி அனுபவம் – 4மோதியின் கலிஃபோர்னியா விஜயம்: நேரடி அனுபவம் – 3
காலை முதலே சான் ஓசே நகரின் நடுவே அமைந்திருக்கும் எஸ் ஏ பி விளையாட்டு உள்ளரங்கு நோக்கி மக்கள் கூட ஆரம்பித்து விட்டனர். 18000 பேர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி.. நீண்ட வரிசைகளில் மக்கள் கடும் வெயிலைப் பொருட்படுத்தாமல் காத்திருந்தனர். வரிசையில் கூடியிருந்தவர்களும் பாரத் மாதா க்கீ ஜெய் வந்தே மாதரம் மோடிக்கு ஸ்வாகதம் என்று தொடர் கோஷங்களை எழுப்பியவாறு இருந்தனர்… “வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்தியர்களை இந்தியாவின் அறிவு இழப்பாக நான் கருதவில்லை மாறாக அவர்களை அறிவு சேமிப்பாக லாபமாகக் கருதுகின்றேன். வெளிநாடு சென்ற இந்தியர்களின் அறிவும் அனுபவங்களும் இந்தியாவுக்குத் தேவைப் படும் பொழுது இந்தியாவின் நலன்களுக்காக உபயோகப் படப் போகும் ஒரு சேமிப்பாகக் கருதுகின்றேன். வட்டியுடன் திருப்பி வரப் போகும் முதலீடாக நான் காண்கின்றேன். இது ஒரு விலை மதிக்க முடியாத அறிவுசார் முதலீடு….”
View More மோதியின் கலிஃபோர்னியா விஜயம்: நேரடி அனுபவம் – 3மோடியின் டிஜிட்டல் இந்தியா: ஏன் எதற்கு எப்படி
முதலில் எல்லா கிராமங்களுக்கும் அதாவது நாடு முழுவதும் 100 mbps இணைய வசதி தருவது. அடுத்தது, எலெக்ட்ரானிக் பொருட்களை பெருமளவில் இங்கேயே தயாரிப்பது. இந்த இரண்டையும் செய்துட்டால் என்னவெல்லாம் நடக்கும்?… இப்போது நாம் அரசையும் அரசின் தேவைகளும் அணுகும் முறை முழுவதுமாக மாறிவிடும். தொலை தூர கிராமங்களில் உள்ளுரிலேயே சான்றிதழ்கள், புகார்கள் அளிக்கும் நிலையங்களை இணைய வசதியுடனும் கணினி வசதியுடனும் நிறுவி விடலாம். அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை, தனியார் மருத்துவமனை அருகில் எது உள்ளது என ஆரம்பித்து, தரப்படும் மருந்து சரியானதா, தரமானதா என்று வரை பார்த்துவிட முடியும்….
View More மோடியின் டிஜிட்டல் இந்தியா: ஏன் எதற்கு எப்படிஇந்தியாவிலிருந்து வந்த ஆப்பிள்
“ ஆண்டவனின் சித்தப்படி நீ முடிக்க வேண்டிய பெரிய பணிகள் இருக்கின்றன. அவற்றை முடித்தபின் நீ ஆன்மீகத்திற்கு வரலாம். இப்போது உன் நாட்டுக்கு போ” எனறு சொல்லி ஒரு ஆப்பிள் பழத்தை கொடுக்கிறார்… மொட்டைத் தலையும் காவியுமாக அமெரிக்கா சென்ற ஸ்டீவ் ஜாப்ஸின் அடிமனத்தில் இந்து, பௌத்த மதங்களின் ஆழமான தாக்கம்… இவர் வெளிப்படையாக அறிவித்து அளித்த நன்கொடை ஹரே கிருஷ்ணா இயக்கத்திற்கு மட்டுமே…
View More இந்தியாவிலிருந்து வந்த ஆப்பிள்யூனிகோடில் ”விரிவாக்கப்பட்ட தமிழ்” – சில விளக்கங்கள்
“விரிவாக்கப்பட்ட தமிழ்” என்பது ஒரு தனி விஷயம் இதற்கும் கிரந்தத்துக்கும் சம்பந்தமே இல்லை […] கிரந்தம் தமிழிலிருந்து தனிப்பட்ட எழுத்துமுறை. அதை தனியாகத்தான் யூனிகோடில் ஏற்ற முடிவு செய்யப்பட்டு, அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. [..] எதுவாகினும், நம்முடைய சாத்திரங்கள், கிரந்தங்கள் முதலியவற்றை மூலபாடம் தவறாது தமிழ் எழுத்து முறையில் எழுதக்கூடிய நுட்பத்தேடல் தொலை தூரத்தில் இல்லை [..]
View More யூனிகோடில் ”விரிவாக்கப்பட்ட தமிழ்” – சில விளக்கங்கள்மின்னணு வாக்கு இயந்திரங்களில் மோசடி சாத்தியமா?: புதிய தகவல்கள்
எப்படி ஏமாற்ற முடியும் என்று தொழில்நுட்ப வல்லுனர்கள் குழு ஒரு உண்மையான, தேர்தல்களில் பயன்படுத்தப் பட்ட EVM இயந்திரத்தை வைத்தே நிரூபித்துக் காட்டியது. இந்த இயந்திரம் தன் கைக்கு எப்படிக் கிடைத்தது என்ற விவரத்தை வெளியிட ஹரி பிரசாத் மறுத்து விட்டார்…இந்த வழிமுறைகளில் சில வீடியோவில் செய்து காட்டப் பட்டும் உள்ளன… எழுந்துவர வாய்ப்பில்லை என்று எழுதிவைத்து விட்ட காங்கிரஸ் வியக்கத் தக்க வகையில் தேர்தல் வெற்றிகள் பெற ஆரம்பித்தது ஒட்டுமொத்தமாக EVM மூலம் வாக்குப் பதிவுகள் நிகழ ஆரம்பித்த பின்பு தான்…
View More மின்னணு வாக்கு இயந்திரங்களில் மோசடி சாத்தியமா?: புதிய தகவல்கள்கூகுள் கொண்ட கோபம்
அரசின் சைபர் ஒற்று வேலைகள் இதில் 4-வது விஷயத்தில் கைவைப்பதாக கூகுள் நினைத்தால் ஆச்சர்யப்பட என்ன இருக்கிறது? அதை வைத்துத்தான் மற்ற மூன்று விஷயங்களும் கட்டியெழுப்பப்பட்டு விரிவாக்கப்பட வேண்டும். அந்த ஆதார உளியே களவாடப்பட்டால் கடையை மூட வேண்டியதுதான் ஆக, புதிய மாபெரும் சந்தை என்பதை விட, வாழ்வா சாவா பிரச்சனையாகவே இவ்வகை தாக்குதல்களையும் வேவு வேலைகளையும் கூகுள் போன்ற நிறுவனங்கள் பார்க்கும். அதனால்தான் இவ்வளவு ஆர்ப்பாட்டமும். இது ஒரு வியாபார அவசியமே ஒழிய மனித உரிமைமேல் வந்த திடீர் ஆர்வமெல்லாம் இல்லை.
View More கூகுள் கொண்ட கோபம்