அனைவருக்குமான வளர்ச்சி, தேசிய ஒருமைப்பாடு, மத்திய அரசுடன் இணக்கமான போக்கு, நாகரிக அரசியல், வங்க கலாசார மேன்மை ஆகிவற்றை முன்னிலைப்படுத்தும் பாஜகவின் பிரசாரம் நல்ல பலனைத் தரத் துவங்கிவிட்டது. ஒன்றுபட்ட பாரதத்தின் கலச்சாரச் செழுமை மிக்க மாநிலம் மேற்கு வங்கம் என்பதை நிலைநாட்ட அம்மாநில மக்கள் தயாராகி விட்டதையே இது காட்டுகிறது..
View More மமதாவின் மமதைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது பாஜக!Tag: காங்கிரஸ் கட்சி
நாடும் நமதே! நாற்பதும் நமதே!
தமிழக தேர்தல் களத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கே சாதகமான நிலை நிலவுகிறது. வெல்ல வேண்டிய அணியும், வெல்ல வாய்ப்பு அதிகமுள்ள அணியும் தேசிய ஜனநாயகக் கூட்டணியாகவே இருப்பது மகிழ்ச்சியே. எனினும், வெற்றி பெறும் வேட்பாளர்களின் வாக்கு வித்தியாசத்தை பெருமளவில் மாற்றிக் காட்டுவதே, கடந்த ஐந்தாண்டு கால பாஜக ஆட்சிக்கு தமிழகம் அளிக்கும் நன்றிக்கடனாக இருக்கும்.
View More நாடும் நமதே! நாற்பதும் நமதே!ரஃபேல் போர் விமான விற்பனை: ராகுல் உளறல்களும் உண்மைகளும்
பாராளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் அவர்கள் ராஜாங்க ரீதியான இரகசிய ஒப்பந்தம் பழைய காங்கிரஸ் அமைச்சர் அந்தோனி சார்பில் கை எழுத்து இடப்பட்டது என்று கூறி அந்த ஒப்பந்தத்தையும் காண்பித்து விட்டார். பிரான்ஸ் அரசாங்கமும் தெளிவாக ராகுல் காந்தி தனிப்பட்ட முறையில் சொன்னதாக சொன்ன தகவலை மறுத்து விட்டது.. முதலில் UPA அரசாங்கம் சொன்ன விலை மிகவும் குறைவான ஒன்று என்று இந்த துறை சார்ந்த வல்லுனர்கள் தெளிவாக ஆதரங்களுடன் சொல்லி விட்டனர். ஆனால் இப்போது மோடி அரசாங்கம் வாங்க இருப்பதோ அதி நவீன தொழில் நுட்பத்தில் தயாராகி கொண்டிருக்கும் விமானங்கள். அதிலும் பார்த்தோம் என்றால், இவர்கள் பழைய விமானங்களுக்கு செலவிட வேண்டிய பணத்தை விட வெறும் ஐந்து மில்லியன் டாலர்கள் மட்டுமே இதற்கு அதிகம். அது மட்டும் இல்லாமல் நமக்கு சாதகமாக என்னென்ன தேவைப்படுமோ அத்தனை சரத்துகளையும் நாம் இதில் உடன்பட வைத்து இருக்கிறோம்…
View More ரஃபேல் போர் விமான விற்பனை: ராகுல் உளறல்களும் உண்மைகளும்காவிரி மேலாண்மை வாரியமும் மத்திய பாஜக அரசும்
ஆறு வாரத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது என்பதே தவறு. இது முழுக்க முழுக்க தமிழ் மீடியாக்களின் புரிதலில் ஏற்பட்ட கோளாறு அல்லது விஷமப்பிரச்சாரம். உச்சநீதிமன்றம் ஆறுவார காலத்தில் ஒரு செயல்திட்டத்தை [ ஸ்கீம் ] உருவாக்கச்சொன்னது. அவ்வளவுதான். இதை ஆரம்பம் முதலே மக்களிடமும் மீடியாக்களிடமும் தெளிவாக விளக்காதது தமிழக பாஜகவின் தவறு.. அதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட மாநிலங்கள் தங்கள் வசம் உள்ள அணைகளின் கட்டுப்பாட்டை நதிநீர் ஆணையத்தின் வசம் ஒப்படைக்க ஒத்துக்கொள்ள வேண்டும். சம்பந்தப்பட்ட எந்த மாநிலமும் இதற்குத் தயாராக இல்லை. கர்நாடகம் , ஆந்திரம் , கேரளம் மட்டுமல்ல, தமிழகமே அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை… காரணம் , அணைகள் வாரியத்திடம் சென்றால் அணைகளில் உள்ள தண்ணீர் விவசாயத்திற்கு மட்டுமே விநியோகிக்கப்படும்… இருக்கும் ஏரி , குளங்களையெல்லாம் ஆக்கிரமித்துவிட்டு ,குடிநீர் தேவைக்காக பலநூறு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள நகரங்களுக்கு குழாய் மூலம் நீர் எடுத்துச்செல்லும் வேலையெல்லாம் நடக்காது. மேலும் அணையை திறந்துவிட மாண்புமிகு முதலமைச்சர் தாயுள்ளத்துடன் உத்தரவிட்டார் என்று செய்தி வெளியிட்டு புளகாங்கிதப்பட்டுக்கொள்ளவும் முடியாது…
View More காவிரி மேலாண்மை வாரியமும் மத்திய பாஜக அரசும்நெருக்கடி நிலை யாருக்கு?
தனது தோல்வியை ஏற்ற பிரதமர் இந்திரா, 1977 மார்ச் 21-இல் நெருக்கடி நிலையை விலக்கிக் கொள்வதாக அறிவித்தார். ஜனநாயகம் மீண்டது. மக்களின் அடிப்படை உரிமைகள் மீளக் கிடைத்தன. அந்த அடித்தளம் மீது நின்றுகொண்டுதான் இப்போது நாம் பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமைகள் குறித்து முழங்குகிறோம். வரலாற்றிலிருந்து பாடம் கற்காதவர்கள் முட்டாள்கள். நாட்டுக்கு துயரமான அனுபவத்தை அளித்த காங்கிரஸ் கட்சியின் கொடிய முகத்தை உணர்ந்த பலர் இப்போது பல்வேறு அரசியல் கட்சிகளாக இருக்கிறார்கள். இன்றைய பாரதீய ஜனதா கட்சி, நெருக்கடி நிலையைக் களையப் போராடிய சக்திகளுள் தலையாயது. 25 ஆண்டுகால தொடர்ந்த முயற்சிகள் அதனை அதீத பலமுள்ள மத்திய ஆளும் கட்சியாக்கி இருக்கின்றன. ஆனால், 1975-77-இல் இந்திராவின் எதேச்சதிகாரத்திற்கு எதிராகப் போராடிய பிற அரசியல் கட்சிகளின் தற்போதைய நிலை என்ன?…..
View More நெருக்கடி நிலை யாருக்கு?இந்திய ஊடகங்களில் ஊற்றெடுக்கும் பாசிசம் – துஃபாயில் அகமது
ஜனநாயக நாடுகளில், பாசிசம் பழைய பாணியில் இல்லாமல் “கருத்துக்களின் பரவலாக” ஜீவித்துக் கொண்டிருக்கிறது. சர்வாதிகார ஆட்சிமுறை சார்ந்த இயக்கம் என்ற வகையில், தனது தலைவர்கள் ஆட்சியில் இருந்த வரை, இந்தியாவில் பாசிசம் அமைதியாக, சமர்த்தாக இருந்தது. இந்த பாசிச வர்க்கத்தினரால் விரும்பப் படாத ஒரு தலைவரை 2014ல் மக்கள் பெரும் ஆதரவுடன் தேர்ந்தெடுத்த போது, இந்திய சமுதாயத்தில் இருந்த பெர்லின் சுவர் உடைந்து நொறுங்கியது. இன்னும் முழுதாக சுத்தம் செய்யப் படாமல் அதன் இடிபாடுகள் அங்கங்கு விழுந்து கிடக்கின்றன. பழைய கட்சியாலும், வாரிசு அரசியலாலும், கருத்தியலாலும் ஆதாயம் அடைந்த பத்திரிகையாளர்கள் கூச்சலிடுகிறார்கள்… இந்திய அறிவுஜீவிகள் என்பவர்கள், இந்திய வாக்காளர்களின் தீர்ப்பை சகித்தன்மையுடன் ஏற்க மறுக்கிறார்கள். டிவி ஸ்டுடியோக்களிலிருந்து இந்தியாவில் சகிப்புத்தன்மை இல்லாமல் போய்விட்டது என்று குற்றம் சாட்டுகிறார்கள் இவர்கள். ஜனநாயகம் உண்மையிலேயே முதிர்ச்சியடையும் போது இந்த வகையான அறிவுஜீவிகள் அழிவார்கள்….
View More இந்திய ஊடகங்களில் ஊற்றெடுக்கும் பாசிசம் – துஃபாயில் அகமதுதிக்குத் தெரியாமல் தவிக்கும் ராகுல்!
கடந்த 2013 ஜனவரி மாதம் ஜெய்ப்பூரில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் “பதவி அதிகாரம்…
View More திக்குத் தெரியாமல் தவிக்கும் ராகுல்!2-G விவகாரம்: ராஜாவின் நேர்முகச் சாட்சி என்னும் மர்மம்
ஒருபுறம் ராஜா குற்றம் சாட்டப்பட்டுள்ளவர் என்று கூறி அவரை JPC முன் வருவதற்குத் தகுதியில்லாதவர் என்பதும், மறுபுறம் பிரதமரும், அமைச்சர் சிதம்பரமும் குற்றம் சாட்டப்படாதவர்கள் என்பதால் அவர்களை JPC-க்கு அழைப்பதில்லை என்று கூறுவதும் முன்னுக்குப் பின் முரணான நிலைபாடுகள். பார்க்கப் போனால் பிரதமர் தானே முன் வந்து JPC-யின் அழைப்பை ஏற்று வருவதாகச் சொன்னவர்தான். இப்படியாக இந்த ஊழல் விவகாரத்தில் முற்றிலும் அறிந்த மூன்றில் இரண்டு பேர்கள் தாங்களே முன் வந்து JPC உறுப்பினர்களுக்குத் தகவல் அளிப்பதாகச் சொல்லியும், அவர்கள் கூப்பிடப்படவில்லை… JPC நடந்த உண்மையை அம்பலப்படுத்துவது தனது பொறுப்பு என்று நினைக்கிறதா, அல்லது அந்த உண்மையைக் குழிதோண்டிப் புதைப்பது தனது பொறுப்பு என்று நினைக்கிறதா? நமக்கே தெரிகிற பல உண்மைகளை, நமது அரசின் உண்மை ஆய்வு நிறுவனங்கள் பலவுமே வெளிக்கொண்டுவரத் தயங்குகிறது, மறுக்கிறது, அல்லது வேறு பக்கம் பார்த்துக்கொண்டு நிற்கிறது. உண்மைகளைத் தேவையில்லை என மறுத்து, அவைகளைப் பாய்க்கு அடியில் குப்பையைத் தள்ளுவதுபோலத் தள்ளிக்கொண்டிருக்கிறது….
View More 2-G விவகாரம்: ராஜாவின் நேர்முகச் சாட்சி என்னும் மர்மம்கன்புஷியஸ் தத்துவம் தரும் பாடங்கள்
இந்திய விடுதலைப் போராட்டத்திற்கே ஹிந்து சமயத் தத்துவம் தான் உயிர்நாடியாக விளங்கிற்று. “ஹே ராம்” என்பதுதான் அதன் தொடக்கமும் முடிவும் ஆகும். இந்தியப் பாரம்பரிய மதக் கருத்துக்களைத்தான் காந்தி தயங்காமல் உபயோகித்து இந்தியர்களை ஆங்கிலேயருக்கு எதிராகப் போராட வைத்தார். இந்து சமயத்திற்கே உரித்தான அனைத்தையும் துறக்கும் மனப்பான்மையைக் காட்டும் ஒரு கோவண ஆண்டியின் கோலத்தையே கிட்டத்தட்ட தானும் தழுவிக் கொண்டு, நாற்பதுகளில் பாரத தேசத்தின் குறுக்கும் நெடுக்குமாக தளராது அலைந்து கொண்டு, அவர் இந்தியக் குடிமக்களின் மத உணர்வை அதற்குப் பயன்படுத்தினார். அவருக்கும் வெகுகாலம் முன்பாக அப்படி உலவிய ஆதி சங்கரரின் உருவகத்தை அப்படி வரவழைத்த அவர், எப்போதுமே புருஷோத்தமன் ஸ்ரீ ராமன் நாமத்தை ஜெபித்துக்கொண்டும், வேளை தவறாது பஜனை செய்துகொண்டும், அவ்வப்போது உபவாசம் இருந்துகொண்டும், தனது பழக்க வழக்கங்களில் எந்தவிதத் தொய்வும் இல்லாமல் எப்போதுமே ஒரு சந்நியாசி போலவே தனது கடமைகளை ஆற்றிக்கொண்டும் வாழ்ந்த அவர் ஆங்கிலேய சாம்ராஜ்யத்திற்கு ஒரு பெரிய சவாலாக விளங்கினார்.
அவரைப் பொருத்தவரை இந்தியாவுக்கு ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை வாங்கிக் கொடுப்பது என்பது இந்தியாவின் ஆன்மாவையே அதன் தளைகளிலிருந்து விடுவிப்பது என்பதுதான். அதற்கு அவர் அப்போது இருந்த காங்கிரசை அந்த வேட்கையில் ஒரு கருவியாக்கிக் கொண்டார். நாட்டில் பல கிராமங்களில் இருந்த ஏழைத் தொழிலாளிகளைப் போலவே தானும் ஒரு தக்ளியிலோ, ராட்டையிலோ நூல் நூற்பதிலும், ராட்டையைச் சுற்றிக்கொண்டு கதர் நெய்ய உதவுவதிலும், அவர் ஓர் தூய சந்நியாசி வழி முறைகளைப் பின்பற்றியது எல்லாமே அரசியல் வாழ்வில் ஆன்மீகத்தையும் தேச பக்தியையும் அவர் இணைத்துக் காட்டிய பாதைதான். அப்படித் தானே வாழ்ந்து காட்டிய அவர் பாதையையே தேசத்திற்கு அவர் கொடுத்த செய்தி போன்று, வேதங்களை எல்லோரும் ஒப்புக்கொள்வதுபோல, காங்கிரஸ் கட்சியும் தனது தேசிய எண்ண ஓட்டமாகத் தழுவிக்கொண்டது.
View More கன்புஷியஸ் தத்துவம் தரும் பாடங்கள்காங்கிரசின் பார்வையில் தேசியப் பற்று
1980-களில் அகாலிகளை அடக்குவதற்காக இந்திரா-ராஜீவ் இருவருமே பிந்திரன்வாலேயை சீக்கியர்களின் தலைவராகத் தட்டிக் கொடுத்து வளர்த்தனர். ராஜீவ் காந்தியால் “சந்த்” எனப் புகழாரம் சூட்டப்பட்ட அதே பிந்திரன்வாலே, பின்னர் பாகிஸ்தானிய உளவு ஸ்தாபனமான ISI -உடன் கைகோர்த்துக்கொண்டு நம் நாட்டின் வரலாற்றிலேயே காணப்படாத பயங்கர வாதத்தை கட்டவிழ்த்து விட்டான். இது தவிர இலங்கையை ஆட்டம் காணச் செய்யும் முறையில் LTTE -யை காங்கிரஸ் அரசு கட்டிக் காத்து உதவியதையும் நாம் சொல்லித்தான் தெரியவேண்டியதில்லை.
View More காங்கிரசின் பார்வையில் தேசியப் பற்று