பரந்து விரிந்து கிடக்கும் பிரிட்டிஷ் ஆவணங்களில் இருந்து ஓர் உண்மை தெரியவருகிறது. இந்திய கிராமப்புறங்களின் வருமானத்தில் உள்ளூர் காவல், நீர்ப்பாசன வசதிகள் ஆகியவற்றைப் போலவே கல்வி, மருத்துவ வசதி ஆகியவற்றுக்கும் அதிக முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது. இந்த வருமானமே உயர் கல்விக்கு மட்டுமல்லாமல் ஆரம்பக் கல்விக்கும் செலவிடப்பட்டு இருப்பதாக அந்த ஆவணங்கள் தெரிவிக்கின்றன… ஆசிரியர்கள் எல்லாம் அனைத்து ஜாதிகளைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். காயஸ்தர்கள், பிராமணர்கள், சதகோப், அகுரி பிரிவினர் அதிகமாக இருக்கிறார்கள். எனினும் 30 பிற ஜாதிகளில் இருந்தும் கணிசமான எண்ணிக்கையினர் இருந்திருக்கிறார்கள். சந்தால் ஜாதியைச் சேர்ந்த ஆறு ஆசிரியர்கள் கூட இருந்திருக்கிறார்கள்…
View More புதிய பொற்காலத்தை நோக்கி – 7Tag: குருகுலக் கல்வி முறை
ஆங்கிலேயர் வருகைக்கு முன்பு நமது கல்விமுறை எப்படி இருந்தது
சோழர்காலத்தில் மக்களின் கல்வித்தரம் மேம்பட்டிருந்ததை இந்த கல்வெட்டுகள் உறுதி செய்கின்றன. அதோடு பிராமணர்களுக்கு மட்டும்தான் கல்வி கற்கும் உரிமை இருந்தது என்று கதைப்போருக்கு தரம்பாலின் அழகிய மரம் எனும் நூலானது பெருத்த அடியை தருகிறது. சங்ககாலத்திலேயே 450 க்கும் மேற்பட்ட புலவர்கள் இருந்தார்கள் – முழுப்பட்டியலைக் கீழே கொடுத்திருக்கிறேன்.. இதில் ஆங்கிலேயன் வந்துதான் நமக்கு கல்வி தந்தான், திராவிட இயக்கங்கள் வந்துதான் கல்வி தந்தார்கள் என்பதுபோன்ற வெட்டி விளம்பரங்களை இந்த அறிவார்ந்த தமிழ் சமூகம் எப்படி ஏற்கிறது என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது…
View More ஆங்கிலேயர் வருகைக்கு முன்பு நமது கல்விமுறை எப்படி இருந்ததுஅழகிய மரம்: பாரதத்தின் பண்டைய பாரம்பரியக் கல்வி
1200 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட சோழர்கால ஐம்பொன் உலோக சிலைகளை பார்க்கும் பொழுது வியப்பாக உள்ளது. ஒன்றிண்டு சிலைகளைத் தவிர , மற்ற எல்லா விக்கிரங்களும் , எந்தக் குறைபாடும் இல்லாமல் (corrosion, erosion, cracks) இன்றளவும் நமது வழிபாட்டில் உள்ளன… இந்தக் கல்வி முறைக்கான நிதி வசதி என்பது (ஆசிரியர் சம்பளம் முதலியன) அந்த கிராமமோ , சமூகமோ , கல்வி கற்கும் மாணவர்களோ ஏற்றுக் கொண்டார்கள் . பிரிட்டிஷ் அரசு எந்த விதமான உதவியும் செய்யவில்லை. ஓரிரு இடங்களைத் தவிர, அனைத்து இடங்களிலும் சூத்திரர் சாதி எண்ணிக்கை மாணவர்கள்தான், மற்ற அனைத்து சாதி எண்ணிக்கை மாணவர்களை காட்டிலும் குறிப்பாக பிராமண சாதி எண்ணிகையை காட்டிலும்அதிகம். எனக்கே இந்த அதிர்ச்சி என்றால் ‘சமுக நீதிக் காவலர்கள் / செயல்பாட்டாளர்‘ இவர்களுக்கு எந்த அளவுக்கு அதிர்ச்சி ஏற்படும்?….
View More அழகிய மரம்: பாரதத்தின் பண்டைய பாரம்பரியக் கல்விஅழகிய மரம் (இந்தியப் பாரம்பரியக் கல்வி) – புத்தக அறிமுகம்
1931-ல், லண்டனில் மகாத்மா காந்திஜி ஓர் உரை நிகழ்த்தினார். அதில், அப்போதைய பிரிட்டிஷ் இந்தியாவில் இருந்த கல்வியின் நிலையைவிட, ஐம்பது நூறு ஆண்டுகளுக்கு முன்பாக, இந்தியாவில் கல்வி நிலை ஒப்பீட்டளவில் சிறப்பாக இருந்திருக்கிறது. பிரிட்டிஷார் அமல்படுத்திய நிர்வாக நடைமுறைகள், இந்தியப் பாரம்பரியக் கல்வி என்ற அழகிய மரத்தை வேரோடு பிடுங்கி எறிந்துவிட்டது என்று சொன்னார். காந்திஜியின் அந்தக் கூற்று, 18-19-ம் நூற்றாண்டுகளில் இந்தியாவின் கல்வி தொடர்பான மிகப்பெரிய விவாதக் கதவுகளைத் திறந்துவிட்டது. அந்த விவாதங்கள் மற்றும் அது தொடர்பான தரவுகளின் முழுமையான தொகுப்பே இந்தப் புத்தகம். காந்தியவாதியும் வரலாற்றாசிரியருமான தரம்பால், பிரிட்டிஷாரின் ஆவணங்களின் அடிப்படையில் இந்த ஆதாரபூர்வமான நூலை எழுதினார். மிக முக்கியமான இந்த வரலாற்று நூலை B.R.மகாதேவன் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்து நமக்கு அளித்திருக்கிறார்..
View More அழகிய மரம் (இந்தியப் பாரம்பரியக் கல்வி) – புத்தக அறிமுகம்குரு உத்ஸவ்
நீண்ட காலத்திற்குப் பிறகு, மாணவர்களும் இளைஞர்களும் விரும்பிக் கேட்கும் வகையில் பேசக் கூடிய ஒரு பிரதமர் நமக்கு வாய்த்திருக்கிறார்.. தனது சொற்களாலும் செயல்களாலும் உழைப்பாலும் சிந்தனைகளாலும் மாணவர்களுக்கு உத்வேகம் அளிக்கும் தகுதி பெற்ற ஒரு பிரதமர்…. ‘குரு’ என்ற சொல் ஆன்மீக, சமய ரீதியான பயன்பாட்டைத் தாண்டி எப்போதோ உலகளாவிய ஒரு சொல்லாகி விட்டது. சங்கீத குரு, கிரிக்கெட் குரு, Guru Hacker, C++ Guru, Management Guru, Marketing Guru எல்லாம் சர்வசாதாரணமாக பயன்பாட்டில் உள்ளது. உத்ஸவ் என்பதும் மதரீதியான சொல் அல்ல. கொண்டாட்டம் என்பதற்கான இந்தியப் பண்பாட்டுச் சொல் அது. எல்லாவித கொண்டாட்டங்களையும் குறிக்கும்…
View More குரு உத்ஸவ்[பாகம் 21] சத்தியகாமன், உபகோசலன்: உபநிஷதம் கூறும் உயர் ஞானியர்
பண்டைய ரிஷிகள் ஒருவனுடைய கோத்திரம் தெரிந்த பிறகுதான் அவனை சிஷ்யனாக ஏற்றுக்கொண்டு ஆத்மஞானம் புகட்டுவார்கள்… உண்மையை தெளிவுபடக்கூறிய உன்னை பிராம்மணன் அல்ல என்று சொல்வது தகுதியன்று… வாயு, அக்கினி, ஆதித்யன், பிராணன் ஆகிய நான்கினிடமிருந்தும் கிடைத்த ஞானத்தைவிட குருவிடம் உபதேசம் பெறுவதே சிறந்ததாக நினைத்தான்… அக்கினி வழிபாடு செய்து வந்த உபகோஸலருக்கு உரிய காலத்தில் அந்த அக்கினியே உபதேசம் செய்யும் என்று எண்ணியே ஸத்தியகாமர் யாத்திரை சென்றார்…
View More [பாகம் 21] சத்தியகாமன், உபகோசலன்: உபநிஷதம் கூறும் உயர் ஞானியர்[பாகம் 18] சித்பவானந்தரின் சிந்தனைகள்- அடைக்காத தாழ், கல்வியில் ஆச்ரமவழி
தாயிடம் பிடிவாதம் செய்து பக்ஷணம் பெற்ற பாலனைப் போலப் பெருமிதத்துடன் கிரீஷர் அன்னையைப் பணிந்து திரும்பினர். அன்னையின் அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்!… ஐந்து வயதுக்குப் பிறகு இந்தியச் சிறுவன் ஒருவனுக்கு ஆச்ரம வாழ்க்கை ஆரம்பிக்கிறது… தொழில் புரியவும், செல்வம் திரட்டவும் தெரியாத குடும்பி எந்த ஆச்ரமத்துக்கும் ஏற்றவனல்லன்… ஆச்ரம வாழ்க்கையில் தொழில் புரிதற்கும் திரவியம் தேடுதற்கும் இடமுண்டு என்றாலும், போட்டி போடுதற்கு அதில் இடமில்லை… திரண்ட வெண்ணெய் தண்ணீரில் கலங்காதிருப்பது போன்று, ஆச்ரமப் பயிற்சியில் ஊறியவன், தீயவர்களுக்கிடையில் கெடாதிருப்பான்…
View More [பாகம் 18] சித்பவானந்தரின் சிந்தனைகள்- அடைக்காத தாழ், கல்வியில் ஆச்ரமவழிஅறியும் அறிவே அறிவு – 1
“IIT என்னும் வார்த்தையில் இரண்டு I-கள் இருப்பதால் அங்கிருப்பவர்களுக்கு அகந்தை சற்றே அதிகமாக இருக்குமோ?”… ஆலமரத்திற்கு முதல் என்றும் முடிவு என்றும் இல்லாத நிலையாக விழுதுகளே வேராக வளர்ந்து ஒரு தொடர் நிகழ்வைக் குறிக்கின்றன. கல்வி, அறிவு இவைகளின் குணமும் அப்படித்தானே… எனக்குப் பகலில் சூரியன், இருளில் விளக்கு. இந்தப் பிரகாசத்தை எல்லாம் உணரக்கூடிய பிரகாசம் எது? கண்ணின் ஒளியினால் உணர்கிறேன். அந்தக் கண்ணை உணர்கின்ற ஒளி எது?…
View More அறியும் அறிவே அறிவு – 1இங்கிலாந்து ஏழைகளுக்குக் கல்விக்கண் திறந்த இந்துப் பண்பாடு
வெள்ளைக்காரர்களும் கிறிஸ்தவ பாதிரிகளும் இங்கு வந்து கல்வி சேவை செய்யாமலிருந்திருந்தால் இந்த மனுவாத பிராம்மணீய இந்து மதம் நம்மையெல்லாம் கல்வியறிவில்லாத மூடர்களாகவேதான் வைத்திருக்கும். இன்றைக்கு இந்த மண்ணின் கீழ்த்தட்டு மக்களுக்குக் கல்வி கிடைத்திருக்கிறது என்றால் அது கிறிஸ்தவமும் மிஷினரிகளும் போட்ட பிச்சை…. இது பல நேரங்களில் பல மேடைகளில் பேசிக் கேட்ட விஷயம்தான். …… அவர்கள் சொல்வதில் என்ன தவறு என்றுதான் பெரும்பான்மையான ஹிந்துக்கள் நினைத்துக்கொள்கிறார்கள்…..ஆனால், உண்மை என்ன என்பதைச் சிறிது ஆழமாக வரலாற்றைப் பார்த்தால் தெரிந்து கொள்ளலாம்.
View More இங்கிலாந்து ஏழைகளுக்குக் கல்விக்கண் திறந்த இந்துப் பண்பாடு