முக்தி தரும் முத்தலங்களுள் ஒன்றான காசித்தலத்தின் மகிமையைக் காசிக் கலம்பகம் என்ற பிரபந்தத்தின் மூலம் தெரிவிக்கிறார் குமரகுருபரர். பல வகை மலர்கள் கலந்த மாலை கதம்பம் எனப்படுவது போல பலவகையான பொருட்களும் அகம் சார்ந்த பாடல்களும், பல வகையான செய்யுட்களும் இக்கலம்பகத்தில் விரவியிருக் கின்றன… குருகே! இவள் குருகை விடுத்தாள் என்று ஐயனிடம் சொல். குருகு என்றால் வளை என்றும் பொருள். இவள் வளையல்கள் அணிவதை விட்டுவிட்டாள். காதல் மேலீட்டால் இவள் அணிகளைத் துறந்தாள். இதேபோல சுகத்தை விடுத்தாள் என்றும் சொல் (சுகம் என்றால் கிளி என்றும் பொருள்). பால் பருகும் அன்னமே! நீ சென்று என் ஐயனிடம், இவள் அன்னத்தையும் உன்பொருட்டு விடுத்தாள் என்று சொல் என்கிறாள். இவளுக்கு உண்ணும் உணவும் தேவையில்லை (அன்னம் என்றால் உண்ணும் உணவு என்றும் பொருள்)…
View More காசி[நன்னகர்]க் கலம்பகம்Tag: கோயில்
காலந்தோறும் நரசிங்கம்
பழங்குடி வேர்களிலிருந்து கிளைத்து வீரர் குடித் தெய்வமாக, பக்த ரட்சகனாக அவதரிக்கும் நரசிம்மர் பின்னர் யோகமும் போகமும் ஞானமும் கலந்த தத்துவக் கடவுளாக பேருருக் கொள்கிறார். ஆனால் இந்த நகர்வு ஒன்றை மறுத்து மற்றொன்றுக்குப் போவதல்ல. பண்பாட்டு ரீதியான இணைப்பினாலும், தத்துவச் செழுமையினால் தகவமைக்கப் பட்ட குறியீடுகளின் விகாசத்தினாலும் நிகழும் நகர்வு இது. ஒவ்வொரு முறையும் ஒரு சிற்ப இலக்கண மரபு உருவாகிக் கொண்டிருக்கும்போதே அது மெலிதாக மீறப்பட்டும் விடுகிறது. அடுத்தகட்ட வளர்ச்சிக்கு வழிவிடுகிறது. இந்திய செவ்வியல் கலைகள் மரபுக்கும், மரபு மீறலுக்குமான ஊடாட்டங்களாகவே எப்போதும் இருந்து வந்திருக்கின்றன. இந்த தன்மையே அவற்றை பாரம்பரியப் பெருமை கொண்டதாகவும், அதே சமயம் உயிரோட்டமுள்ளதாகவும் ஆக்குகிறது.
View More காலந்தோறும் நரசிங்கம்மகாகவி பாரதியின் புனித நினைவில்…
அன்று எங்கள் ஊர் வாசகசாலையில் ஆண்டு விழா. தலைவர் பாரதி. மூன்று மணி நேரம் பண்டிதர்களின் மூச்சு முட்டும் முழக்கடித் தமிழ். அது வரையில் மேடையில் அமர்ந்திருந்த பாரதி ஆடவில்லை, அசையவில்லை. சுவாசம் விட்டாரோ என்னவோ, அதுகூட சந்தேகம். ஏதோ ஒரு சிற்பி செதுக்கிய ருத்ரன் சிலை அமர்ந்திருப்பது போலத் தோன்றியது. மீசையை முறுக்கும் போது அன்றி, வேறு யாதொரு சலனமும் கிடையாது. பேசுவதற்கு அவருடைய முறை வந்தது. எழுந்தார் – எழுந்தார் என்பது தப்பு; குதித்தெழுந்தார், அவர் அமர்ந்திருந்த நாற்காலி உருண்டது. மேஜை முன்னே தாவித் தயங்கியது. அவருடைய பேச்சு? அதில் வாசக சாலையைப் பற்றி ஒரு வார்த்தைகூடக் கிடையாது. பண்டிதர்களின் மூன்று மணி நேரப் பிரசங்கங்களுக்கு மூன்று நிமிஷங்கள் முடிவுரைகூட இல்லை…
View More மகாகவி பாரதியின் புனித நினைவில்…கண்ணன் வந்தான்
நிர்மால்யம் என்பது முன்தினம் இரவு கோயில் மூடும்முன் செய்த கடைசி பூஜையின் அலங்காரங்கள் அகற்றபட்டு ஸ்வாமி அபிஷேகத்திற்காகக் காத்திருக்கும் வேளை… இந்தக் கோயிலில் தரிசனத்திற்குக் கட்டணம் கிடையாது… ஆறுமாதத்திற்கு ஒரு முறை சுழற்சி முறையில் பணியாற்றும் அவர் அந்தக் காலத்தில் சன்னதியிருக்கும் பிரதான மண்டபத்தை விட்டு வெளியே, பிரஹாரத்துக்குக்கூட வரமாட்டார்… வழிபாடுகளில் யானைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம்… முதல்வர் ஜெயலலிதா 2002-இல் கொடுத்த யானை சீனியராகக் கோயில் பணிகள் ஆற்றியபின் இப்போது மஸ்தியினால்…
View More கண்ணன் வந்தான்தமிழ்நாடு இந்துசமய அறநிலையத் துறையினரின் பகற்கொள்ளை.. [புத்தக அறிமுகம்]
•அற நிலையத் துறைக்கு “வானளாவிய’ அதிகாரங்கள் உள்ளனவா? சட்டங்களும், உச்ச நீதிமன்ற, உயர்நீதி மன்றத் தீர்ப்புகளும் அத்தகைய அதிகாரம் ஏதும் கிடையாது என்பதைக் தெளிவாக எடுத்துக் கூறியும், இச்சட்டங்களையும், தீர்ப்புகளையும் சிறிதும் மதியாமல், தான் செய்வது சட்ட மோசடி என்று தெரிந்தே ஆயிரக்கணக்கான கோயில்களை இந்தத் துறை எடுத்துக் கொண்டு வருவதே இந்தத்துறையின் மிகப்பெரிய மோசடிகளில் ஒன்றாகும்… ‘சமுதாயச் சீர்திருத்தம்’ என்ற பெயரில் கோயிலின் எந்தப் பழக்கவழக்கத்தையும் மாற்றவோ, குறைக்கவோ, புதிதாய்ச் சேர்க்கவோ அதிகாரம் இல்லை…
View More தமிழ்நாடு இந்துசமய அறநிலையத் துறையினரின் பகற்கொள்ளை.. [புத்தக அறிமுகம்]நசியனூர்: அறநிலையத் துறையின் அராஜக கோயில் சிதைப்புகள்
மண்டபங்கள் ஆந்திராவில் இருந்து கொண்டு வரப்பட்ட லாரிகளில் அழகாக வெட்டி எடுக்கப்பட்டு பார்சல் செய்யப்பட்டு அனுப்பப்பட்டதாக சொல்கிறார்கள். வடிவேல் ஒரு படத்தில் “ என்னோட கிணற காணோங்க” என்று சொல்வாரே, அது போல,.. கோயிலின் ஆகம தர்மம் மற்றும் அதன் புணிதம் கெடுக்கும் வகையில் கோயில் கருவறைக்குள் தர்மத்தை மீறி இவர்கள் கல்லா கட்டுவதற்காக டைல்ஸ் ஒட்ட போகிறார்கள்… பெரிய கோயில்களில் வரும் பல கோடி வருமானத்தை ஏழை ஹிந்துகளுக்கும் அழியும் நிலையில் இருக்கும் நமது பாரம்பரிய விவசாயம், கலைகள், தொழில் நுட்பங்கள், வனவாசிகள் போன்ற மக்களுக்கு கொடுக்காமல்…
View More நசியனூர்: அறநிலையத் துறையின் அராஜக கோயில் சிதைப்புகள்கோயில்களில் தரிசனக் கட்டணங்கள் வசூலிப்பதற்கு எதிராக ஓர் இயக்கம்
அரசுத் துறையின் நேரடி கண்காணிப்பில் இயங்கும் இந்துக் கோவில்களில் சாமி கும்பிடக் கட்டணம் வசூலிப்பது இந்துக் கோவில்களை அழிக்கும் செயலாகும். இதனை எதிர்த்து ஒரு கோடி மக்களிடம் கையெழுத்து வாங்கும் இயக்கத்தை இந்து முன்னணி தொடங்கியுள்ளது. இதற்கான கையெழுத்துப் படிவம் ஒவ்வொரு மாவட்டத்திலும், அங்குள்ள ஒன்றியங்களிலும் உள்ள இந்து முன்னணி பொறுப்பாளர்களிடம் கிடைக்கும். ஆன்மீக அமைப்புகள், பக்தர்கள் பேரவை மற்றும் தெய்வபக்தி கொண்ட அனைவரும் இந்த கையெழுத்து இயக்கத்தில் ஈடுபட முன்வரவேண்டும் என இந்து முன்னணி கோரிக்கை விடுக்கிறது…
View More கோயில்களில் தரிசனக் கட்டணங்கள் வசூலிப்பதற்கு எதிராக ஓர் இயக்கம்இந்த வாரம் இந்து உலகம்: ஏப்ரல்-8, 2012
பங்குனி உத்திரம் – திருக்கல்யாண உற்சவம். இளவேனில் காலத் தொடக்கத்தை இறைவனின் திருமண விழாவாகக் கொண்டாடும் தமிழ்மரபு தான் எத்துணை அழகானது!… காலகாலமாக முஸ்லிம்களுக்கு வழங்கப் பட்டு வரும் ஹஜ் யாத்திரை மானியம் ரத்து செய்யப் படலாம் என்கிற வகையில் அரசு யோசித்து வருவதாக மத்திய அமைச்சர்… “மகாத்மாவை இருட்டடித்து மார்க்சைப் பற்றி சொல்லித் தர முடியாது” என்கிறது மேற்கு வங்க மாநில அரசு.. கர்நாடகாவில், இந்து தெய்வங்களை இழிவாகப் பேசி சமூக அமைதியைக் குலைத்ததற்காக 11 கிறிஸ்தவ மிஷநரிகளுக்கு சிறைத் தண்டனை… நெடுஞ்சாலையை அகலப் படுத்துவதற்காக, பனங்காட்டூர் புராதன சிவாலயம் இடிக்கப் படுமா?…
View More இந்த வாரம் இந்து உலகம்: ஏப்ரல்-8, 20126ம் ஆண்டு விழா கொண்டாட்டம்
ஃபிப்ரவரி 24 – வெள்ளிகிழமை அன்று மாலை, சுவாமி விவேகானந்தா ஊரக வளர்ச்சி கழகத்தின் சார்பில் இயங்கி வரும் ஓராசிரியர் பள்ளிகளின் ஆறாம் ஆண்டு விழா, சென்னையில் தி.நகர் வாணிமகால், ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி மகாசுவாமி ஆடிட்டோரியத்தில் நடைபெற உள்ளது. அனைவரும் வருக.
View More 6ம் ஆண்டு விழா கொண்டாட்டம்கும்பகோணத்தில் கோயில் சிற்பக் கலை குறித்து மாபெரும் கருத்தரங்கம்
பிப்ரவரி 25, 26 (சனி, ஞாயிறு இரு நாட்களும்). பல்வேறு மாநிலங்களில் இருந்தும் புகழ்பெற்ற அறிஞர்கள், ஸ்தபதிகள், கலைஞர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், சிந்தனையாளர்கள் பங்கு பெறுகின்றனர். இரு நாட்களும் கலை நிகழ்ச்சிகளும் உண்டு. அனுமதி இலவசம். அனைவரும் வருக! சம்ஸ்கார் பாரதி அமைப்பின் தமிழகக் கிளை இந்தக் கருத்தரங்கத்தை நடத்துகிறது.
View More கும்பகோணத்தில் கோயில் சிற்பக் கலை குறித்து மாபெரும் கருத்தரங்கம்