ஆதலால், இன்று சூரியோதயத்திலே நாங்கள் வருணனும் மித்திரனும் அர்யமானும் ஆகிய உங்களை சூக்தங்களால் வேண்டுகிறோம் – நீங்களே ‘ருதம்’ என்னும் தேரைச் செலுத்துபவர்கள். ஒவ்வொன்றையும் ஆள்பவனும், அசையும் அசையாப் பொருள்களுக்குத் தலைவனும், உலகெங்கும் சுற்றுபவனுமான சூரியனை, நமக்கு செல்வமும் மகிழ்ச்சியும் கொணர்வதற்காக, சகோதரிகளான ஏழு குதிரைகள் ஏந்துகின்றன…
View More குரோதி வருட தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்Tag: சித்திரை
அஞ்சலி: ஆய்வாளர் புலவர் செ.இராசு
தமிழகத்தின் தலைசிறந்த கல்வெட்டாய்வாளர்களுள் ஒருவரான புலவர்.செ.இராசு (85) நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்துள்ளார். கொடுமணல் அகழாய்வுக்கு மூல காரணமாக இருந்தவர்.. மாவட்ட ஆட்சியரோ “கலைஞர் உங்கள் மீது மிகவும் வருத்தத்திலிருக்கிறார். தினமணியில் வெளிவந்த தமிழ்ப்புத்தாண்டு குறித்த கடிதம் உங்களால் எழுதப்படவில்லையென்றும் வேறு யாரோ உங்கள் பெயரில் எழுதி அனுப்பிவிட்டாரென்றும் நீங்களே ஒரு கடிதம் எழுதுமாறு கலைஞரே கேட்டுக்கொண்டாரென்று கலைஞரின் நேர்முக உதவியாளர் என்னிடம் தொலைபேசியில் தெரிவித்தார்” என்று கூறியிருக்கிறார். புலவர்.இராசு அவர்கள் மீண்டும் தமது நிலைப்பாட்டை மென்மையாகவும், அதே நேரத்தில் உறுதிபடவும் வலியுறுத்திக் கூறிவிட்டுத் திரும்பிவிட்டார். தாம் சரியென்று மனப்பூர்வமாக நினைக்கிற ஒரு கருத்தினை வெளிப்படுத்துவதில் எவ்வித சமரசத்திற்கும் இடமளிக்காமல் உறுதியாக நிற்கிற மனிதர்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையினரே. அருகி வருகிற அத்தகைய உயர்ந்த மனிதர்களுள் புலவர் இராசு அவர்களும் ஒருவராவார்..
View More அஞ்சலி: ஆய்வாளர் புலவர் செ.இராசுதமிழ்ப் புத்தாண்டும் சம்ஸ்கிருதமும் ஒப்பாரிகளும்
தமிழ்ப் புத்தாண்டுன்னு சொல்றீங்க, வருடப் பெயர் சுபக்ருது ப்லவ அப்படின்னெல்லாம் இருக்கு. இதெல்லாம் தமிழா?” – என்று ஏதோ யாருக்கும் தெரியாததைக் கண்டுபிடித்து விட்டது போல அற்பத்தனமான பதிவுகள் இன்னும் உலவிக் கொண்டிருக்கின்றன.. வடசொல் குறித்த நன்னூல் சூத்திரத்திற்கு உரை எழுதும் மயிலை நாதர் என்ன கூறுகிறார்?.. தை மாதப்பிறப்பு தமிழ்ப் புத்தாண்டு அல்ல என்பதை விளக்கும் ஒரு நல்ல கட்டுரையைத் தர முடியுமா என்று நேற்று ஒரு நண்பர் கேட்டார். அடித்துத் துவைத்து நொறுக்கப்பட்ட பொய் வரலாறுகளும் திரிபுகளும் தமிழ்நாட்டில் சாவதே இல்லை என்று தோன்றுகிறது…
View More தமிழ்ப் புத்தாண்டும் சம்ஸ்கிருதமும் ஒப்பாரிகளும்பன்னிரு திங்களும் பௌர்ணமி மீன்களும்
தமிழ் மாதங்களின் பெயர்களுக்கும், விண்மீன்களின் பெயர்களுக்கும் தொடர்பு இல்லை என்ற பிதற்றலுக்கு ஆதாரபூர்வமான மறுமொழி இக்கட்டுரை.. பூர்வ ஆஷாடம் நட்சத்திரம் தற்போது பூராடம் எனத் தமிழில் வழங்குகிறது. இந்நட்சத்திரத்தில் முழுநிலா அமைகிற மாதம் ஆஷாடி என்று வழங்கத் தொடங்கி ஆடி எனத் திரிந்துள்ளது… கோள் என்ற சொல் கொள்ளுதல் அதாவது ஈர்ப்பு விசையால் ஒன்றையொன்று பற்றிக்கொண்டு இயங்குவது எனப் பொருள்படும். இந்த அளவிற்குத் தெளிந்த வானியல் அறிவு படைத்த நம் முன்னோர், கருணாநிதியின் பார்வையில் மூடர்களாகவோ, ஆரிய அடிமைகளாகவோதான் காட்சியளிப்பார்கள்…
View More பன்னிரு திங்களும் பௌர்ணமி மீன்களும்ஏப்ரல்-21: சென்னையில் சித்திரைச் சிறப்பு விழா!
ஏப்ரல்-21 சனி காலை 10.30 மணி, சர். பி.டி. தியாகராயர் மன்றம், தி.நகர்.. திருப்பனந்தாள் ஆதீனம் தம்பிரான் சுவாமிகள், எம்பார் மடம் ஜீயர் சுவாமிகள், செ.கு.தமிழரசன் (எம்.எல்.ஏ), கல்வெட்டு அறிஞர் எஸ்.ராமச்சந்திரன், பேரா. தமிழறிஞர் சாமி தியாகராஜன், ஜெயஸ்ரீ சாரநாதன், பால.கௌதமன் மற்றூம் பலர் கலந்து கொள்கின்றனர். கும்பகோணம் மூவர் முதலிகள் முற்றம் அமைப்பு நடத்துகிறது. அனைவரும் வருக! அழைப்பிதழ் கீழே…
View More ஏப்ரல்-21: சென்னையில் சித்திரைச் சிறப்பு விழா!திரிபே வரலாறாக? – தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சை குறித்து..
1963-ல் திருவள்ளுவர் தினம் சூலையில் (ஆடி) வேண்டும் என்பது அண்ணாவின் கோரிக்கை. அதிலிருந்து மூன்றாவது ஆண்டு அதாவது 1966-இல், சூனில் (வைகாசி) திருவள்ளுவர் தினம் அறிவித்தவுடன், கோரிக்கை வைத்த அறிஞர் அண்ணா உட்பட அனைவரும் வரவேற்கின்றனர். அதிலிருந்து 3 ஆண்டிற்குள் கருணாநிதி 1970-இல், தை மாதத்தை திருவள்ளுவர் தினமாக அறிவிக்கிறார்! எண்கணிதம் படித்த வரலாற்று நிபுணர்களுக்கு, மூன்று என்பது ராசியான எண் போலும்!
View More திரிபே வரலாறாக? – தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சை குறித்து..வரலாறு.காமும் தமிழ்ப்புத்தாண்டும்
வரலாறு என்பது சிலரின் விழைவுக் கற்பனையோ அல்லது பரப்புரைப் புனைவோ அல்ல. வரலாறு நமக்குக் கிடைத்திருக்கும் ஆதாரங்களாலேயே உருவாக்கப் படுகிறது. இதை பின்பற்றுபவர்கள் மட்டுமே வரலாற்று ஆய்வாளர்களாகவும் அறிஞர்களாகவும் இருக்க முடியும். வரலாற்று அறிஞர்களிடம் பல விஷயங்களில் இருக்கும் கருத்து வேற்றுமைகள் கூட கிடைக்கும் ஆதாரங்களை புரிந்தேற்றுக் கொள்வதில் வரும் மாறுபாடுகளாலேயே வருகின்றன. அவ்வாறு இருக்கும் போது எந்த ஆதாரமும் எந்த வகையிலும் இல்லாத தை மாத தமிழ்ப் புத்தாண்டு என்பதை ஒரு வரலாற்றுக்கான தளம் ஏற்றுக் கொள்வதோடு மட்டுமல்லாமல் அதை விதந்தோதுவதும் அதை ஏற்றுக் கொள்ளாதவர்களைப் பழிப்பதும் சற்றும் சகிக்கக்கூடியதாக இல்லை.
View More வரலாறு.காமும் தமிழ்ப்புத்தாண்டும்சித்திரையில் தொடங்கும் புது வருடம் – 2
60 வருடங்களும், நிலம், தட்பவெப்பம் குறித்து, சுழற்சி முறையில் மீண்டும் மீண்டும் வந்துள்ளன. இவற்றைக் குறித்தும் வைத்துள்ளனர். அதன் அடிப்படையில், வருடப் பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் இன்று நாம் பின்பற்றும் வருடக் கணக்கு, நம் பகுதியில் உள்ள வெப்பம், பருவ மழை இவற்றைப் பொருத்ததே.
வருடப் பலன்களை அறிந்து கொள்ள, அவற்றின் பெயர்களே போதும். அப்படி என்றால், இப்பெயர்களைத் தமிழ்ப் படுத்தி இருக்கலாமே என்று கேட்கத் தோன்றும். அது எளிதல்ல. பல பெயர்களுக்கும் சரியான மொழிபெயர்ப்பு தமிழில் மட்டுல்ல, பிற மொழிகளிலும் கிடையாது. தமிழ்விரும்பிகள் கோபப்படாமல் இதைப் படிக்க வேண்டும்.
View More சித்திரையில் தொடங்கும் புது வருடம் – 2சித்திரையில் தொடங்கும் புது வருடம் – 1
தொல்குடி என்றும், செம்மொழி என்றும் நம் பழமையைப் பற்றி நாம் பேசும் அளவுக்கு அந்தப் பழமையின் மீதும், தொன்று தொட்டு வரும் பழக்க வழக்கங்களின் மீதும் நமக்கே மரியாதையும், நம்பிக்கையும் இருக்கவில்லை என்பதைப் பறைசாற்றும் ஒரு சான்றுதான், தையில் வருடப் பிறப்பு என்று பிரகடனம் செய்தது.
View More சித்திரையில் தொடங்கும் புது வருடம் – 1