சிலைத் திருடன்: புத்தக அறிமுகம்

எவ்விதத் தகவல்களையும் நாம் சேமிக்காதது சிலைத் திருட்டை மிக எளிதாக்கி இருக்கிறது. சோழர் காலச் சிலைகளை விதவிதமாகக் கடத்தி இருக்கிறார்கள். மூலச் சிலைக்குப் பதிலாக அதே போன்ற போலிச் சிலையைச் செய்து வைப்பது, போலிச் சிலை இல்லாமலேயே மூலச் சிலையைக் கடத்திவிடுவது, பல சாதா சிலைகளைச் செய்து அவற்றோடு பழங்காலச் சிலைகளைச் சேர்த்துக் கடத்துவது, சிலைகள் மட்டுமில்லாமல் பழங்கால புராதன சின்னங்கள் எதுவானாலும் கடத்துவது, நேரடியாக தனக்குத் தேவையான ஊருக்குக் கடத்தாமல் பல நாடுகளுக்குச் சுற்றி எடுத்துச் சென்று கடத்துவது… இப்படிப் பல வகைகளில் கடத்துகிறார்கள்… இந்தியா போன்ற தனி மனித உயிருக்கு எவ்வித மரியாதையும் அற்ற ஒரு நாட்டில் இது போன்ற ‘உலகளாவிய’ விஷயத்தை எதிர்ப்பது பெரிய சவால். அதை எதிர்கொண்டு மிகத் தெளிவாக ஆவணப்படுத்தி இருக்கிறார் விஜய் குமார். அதைவிட முக்கியம் இவரது முயற்சியில் நம் தெய்வங்கள் தனக்கான இடங்களில் மீண்டும் ஆராதனை பெறத் துவங்கி இருக்கிறார்கள்…

View More சிலைத் திருடன்: புத்தக அறிமுகம்

சிலைக்கடத்தல் குற்றவாளியும் ஆனந்த விகடன் ரிப்போர்ட்டும்

2004ல் பிடிபட்ட நடராஜர் சிலையின் மதிப்பு மட்டுமே 16 கோடி. அது கோயிலுக்கு திருப்பி கொடுக்கப்பட்டுவிட்டதா என்பது போன்ற தகவல்களை எல்லாம் கேட்பது, வாசகர்களின் அறிவுக்கு அதீதமான விஷயம். எனவே, நாங்கள் அதையெல்லாம் சொல்ல மாட்டோம். 2004ல் தப்பித்த தீனதயாளன் 1965லும் பிடிபட்டு தப்பித்தவர். இப்போதும் அவர் பிடிபடவில்லை.
93 சிலைகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. ஆனால், இவை அனைத்தின் மதிப்பும் 50 கோடிகள் மட்டுமே… கரப்ஷன் தடுப்பதற்காக இந்திய அரசால் இந்தியாவில் உருவாக்கப்பட்ட துறைகள், சிலைகடத்தலின் போது சேர்த்து கடத்தப்பட்டதால் அவை எதுவும் இந்தியாவில் இல்லை. அதனால்தான் செல்வக் குவிப்பு குறித்துக் கேள்விகேட்க எந்தத் ‘துறையும்’ இல்லை…

View More சிலைக்கடத்தல் குற்றவாளியும் ஆனந்த விகடன் ரிப்போர்ட்டும்

ஒரு கர்நாடகப் பயணம் – 2 (ஹம்பி)

எங்கு போனாலும் கோயில்கள், மண்டபங்கள், இடிபாடுகள், அது போக பூதங்கள் போன்ற விசித்திர வடிவங்கள் கொண்ட கற்பாறைகள். ஹேமகூடம், மாதங்க கிரி என்று நகருக்குள்ளேயே இரு குன்றுகள். இது எல்லாவற்றுக்கும் சாட்சியாகவும் பட்டும் படாமலும், காலத்தின் சலனம் போல ஓடிக் கொண்டிருக்கும் துங்கபத்ரா நதி. சிதைந்து போன ஒரு மாபெரும் வரலாற்றுக் கனவுக்குள் வாழ்ந்து கொண்டிருப்பது போன்ற பிரமையை இங்கிருக்கும் கணங்கள் நமக்கு அளித்துக் கொண்டே இருக்கும்… தெருவோர சிறு பிள்ளையார் கோயிலில் கூட செருப்பைக் கழற்றி விட்டு பயபக்தியோடு செல்லும் மக்களை, இந்தக் கோயில்கள் வெறும் காட்சிப் பொருட்கள் என்று மனதில் நினைக்க வைத்து விட்டது ஆக்கிரமிப்பாளர்களின் அழிப்புச் செயல். நமது பண்பாடு, நமது வாழ்க்கை முறை இங்கே ஆழமாகக் காயப் படுத்தப் பட்டிருக்கிறது…

View More ஒரு கர்நாடகப் பயணம் – 2 (ஹம்பி)

அயோத்தியா பட்டிணம் ராமர் கோயில்: அறநிலையத் துறையின் அக்கிரமங்கள்

கோயிலை பல ஆண்டு காலம் பராமரிக்காமல் நாசம் செய்து விட்டு பின்னர் திருப்பணி செய்கிறேன் என்ற பெயரில் பல இலட்சம் செலவு செய்து வண்ண பூச்சு செய்துள்ளனர். வருடத்திற்கு ஒரு சில ஆயிரங்கள் செலவு செய்து ப்ராமரித்திருந்தாலே போதும், இந்த மோசமான நிலைக்கு கோபுரம் சென்று இருக்காது… ஒரு காருக்கு போடும் துணியோ அல்லது ஒரு தார்பாலினை உபயோகித்தோ மூடிவைத்து பல நூறு வருடங்கள் பழைய கலைப் பொக்கிஷமான மரத் தேரைப் பாதுகாத்திருக்கலாம். இதைக் கூட செய்யாமல் தேரை முற்றிலும் அழிய விட்டிருக்கிறார்கள்… கோயிலுக்கு 100 ஏக்கர் அளவில் நில சொத்து உள்ளது. இருந்தும் எந்த பயனும் இல்லை. அனைத்து சொத்துகளும் திராவிட இயக்க அரசியல் கொள்ளையர்கள் கையில்…

View More அயோத்தியா பட்டிணம் ராமர் கோயில்: அறநிலையத் துறையின் அக்கிரமங்கள்

நசியனூர்: அறநிலையத் துறையின் அராஜக கோயில் சிதைப்புகள்

மண்டபங்கள் ஆந்திராவில் இருந்து கொண்டு வரப்பட்ட லாரிகளில் அழகாக வெட்டி எடுக்கப்பட்டு பார்சல் செய்யப்பட்டு அனுப்பப்பட்டதாக சொல்கிறார்கள். வடிவேல் ஒரு படத்தில் “ என்னோட கிணற காணோங்க” என்று சொல்வாரே, அது போல,.. கோயிலின் ஆகம தர்மம் மற்றும் அதன் புணிதம் கெடுக்கும் வகையில் கோயில் கருவறைக்குள் தர்மத்தை மீறி இவர்கள் கல்லா கட்டுவதற்காக டைல்ஸ் ஒட்ட போகிறார்கள்… பெரிய கோயில்களில் வரும் பல கோடி வருமானத்தை ஏழை ஹிந்துகளுக்கும் அழியும் நிலையில் இருக்கும் நமது பாரம்பரிய விவசாயம், கலைகள், தொழில் நுட்பங்கள், வனவாசிகள் போன்ற மக்களுக்கு கொடுக்காமல்…

View More நசியனூர்: அறநிலையத் துறையின் அராஜக கோயில் சிதைப்புகள்

ஆலயச் சிற்பங்களைச் சிதைக்கும் அறநிலையத்துறை

கோயிலின் உயரதிகாரி, கோயிலின் புராதனத் தன்மையையோ அல்லது மகிமையையோ கணக்கிலெடுக்காமல், உண்டியல் அதிக வசூல் செய்யும் கோயில் முதல் வகை, அடுத்த அதிக வசூல் செய்யும் கோயில் இரண்டாம் வகை என்றே பிரிக்கின்றனர்… அறநிலையத் துறை சட்ட திட்டங்களில், பிற மதத்தினருக்கு காண்ட்ராக்ட் தரக்கூடாது என்று உள்ளது. எங்கே போனது விதி?… ஏழைக்கும், பணக்காரனுக்கும் ஒரே கடவுளாய் இருப்பவரைக் கட்டம்கட்டி, சிறப்பு வழி, பொது வழி எனப் பிரித்து, கிட்டப் பார்வையாகவும், தூரப் பார்வையாகவும் பார்க்க வைத்து, கல்லாக் கட்டுவது யார்?… பிற மதத்தினர் அரசு சார்ந்த துறைகளின் மூலமாக அவர்களது வழிபாட்டுத் தலங்களைப் பேணி காக்காதபோது, இந்துக்களுக்கு மட்டும் எதற்கு ஓர் அறமற்ற துறை?

View More ஆலயச் சிற்பங்களைச் சிதைக்கும் அறநிலையத்துறை