பிருங்கி மலை கார்த்திகை தீபத் திருவிழா

.. சென்னை பிருங்கி மலையில் தீப வழிபாடு சிறப்பாக நடைபெறுகிறது. அடிவாரத்தில் உள்ள விநாயகர் கோவிலில் தீபம் ஏற்றி வழிபாடு செய்து விட்டு, பின்னர் தீபங்கள் ஏந்தியபடியே மலையின் மறுபக்கத்தில் உள்ள மாசாளியம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக வந்து, அங்கே அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபடுகின்றனர் அப்பகுதியில் உள்ள மக்கள். அமைதியான இந்த வழிபாட்டிற்கு காவல் துறையினரும் பாதுகாப்பு தருகின்றனர். பிருங்கி மலையில் ஒரு சித்தரின் சமாதி இருப்பதாகவும் அறியப்படுகிறது… புனித தோமையர் மலையின் சர்ச்சிற்குப் பொறுப்பேற்றுள்ள பாதிரியார் தற்போது இந்த மலையிலும் “பௌர்ணமி கிரிவலம்” ஏற்பாடு செய்ய முயலுவதாக செய்திகள் வருகின்றன…

View More பிருங்கி மலை கார்த்திகை தீபத் திருவிழா

காசியில் ஒரு நாள்

பரந்து விரிந்திருக்கும் அந்த கங்கைக் கடலின் சீறி வரும் புது வெள்ளத்தில் சீரான வேகத்தில் படகு சென்று நிற்கும் இடம் ஒரு மணல் திட்டு. ஒரு கரையில் ஸ்நான கட்டங்களும் மறுகரையில் பழைய பனாரஸ் நகருமிருக்கும் கங்கை நதியின் நடுவே, இது போல பல திட்டுக்கள். சொன்னது போலவே நதி சுத்தமாக ஓடுகிறது… ஆர்மோனியம் வாசித்துக்கொண்டே பாடியவரையும் தபேலா வாசித்த கலைஞரையும் பாராட்டக் கை நீட்டும் நாம், அவர்கள் முகத்தைப் பார்த்ததும் சற்று அதிர்ந்து போகிறோம்.

View More காசியில் ஒரு நாள்

ஓங்காரத்து உட்பொருள்

சிறுமீன் கண்ணைக் காட்டிலும் சிறியதாக இருக்கும் அதன் விதையில் நால்வகைபடையுடன் அரசர் தங்குவதற்கேற்ற நிழலை அளிக்கத் தக்க பெரிய விருட்சம் தோன்றும் ஆற்றல் அடங்கி இருப்பதுபோல , இந்த மாயையில் மகத்தான பிரபஞ்சம் தோன்றுவதற்கான மூலம் அடங்கியிருக்கும். பிரணவமே உலகத்துக்கு முதற்காரணம்.

View More ஓங்காரத்து உட்பொருள்

சொற்றமிழ் சூடுவார்

பேணிக் காப்பாரின்றி எண்ணற்ற சிவன் கோயில்கள் தமிழகத்தில் சிதிலமடைந்து வருவதுபோல ஓதுவார் பரம்பரையும் போற்றுவாறின்றி மங்கி வருகின்றது… தீட்சிதர் கீர்த்தனைகள் திருமுறைகளுக்கு எதிரானவை அல்ல; தீட்சிதர் சுந்தரமூர்த்தி நாயனார் மேல் பத்திகொண்டு அவரைப் போற்றி ‘டக்கா’ என்னும் அபூர்வராகத்தில் ஒருகீர்த்தனை இயற்றியுள்ளார் …

View More சொற்றமிழ் சூடுவார்

பேராற்றலின், பெருங்கருணையின் சின்னம்: திருநீலகண்டம்

… நல்வினைப் பயனை உயிர்கள் அனுபவிக்கும்படி அளித்துத் தீவினைப் பயனை அவன் ஏற்றுக் கொள்கிறான். கரியமிடறு அந்தக் கருணைக்கு அடையாளமாகத் திகழ்கின்றது… இயேசுநாதர் அறைந்து கொல்லப்பட்ட சிலுவையாகிய கொலைத்தண்டனைக்கு உரிய கழுமரத்தைக் காட்டிலும் இறைவனின் நீலகண்டம் அவனின் பேராற்றலுக்கும் பெருங்கருணைக்கும் அடையாளமாக, மானுடரின் பாவக்கழுவாய்ச் சின்னமாகப் பெரிதும் திகழ்கின்றது …

View More பேராற்றலின், பெருங்கருணையின் சின்னம்: திருநீலகண்டம்

வேதநெறியும் தமிழ்சைவத்துறையும் – 1

கொற்றவை, பழையோள் ஆகிய தொல்குடிப் பெண் தெய்வங்கள், வைதிகக் கடவுளாகிய ‘மால்வரை மலைமகளு’டன் இணையப் பெறுகின்றனர். அந்த இணைப்பைச் செய்பவன் முருகன். இது தொல்பெரும் தமிழ் மரபும் வேத நெறியும் பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்னரேயே தம்முட் கலந்து இணங்கியமைக்குத் தக்க சான்றாகும்.

View More வேதநெறியும் தமிழ்சைவத்துறையும் – 1

ஆஸ்திரேலியாவில் இந்துக் கோவில்கள்

1970 ஆம் ஆண்டுகளில் இருந்து இந்துக்கள் ஆஸ்திரேலியாவுக்குப் புலம் பெயர்ந்துள்ளனர்; அவர்கள் தாம் குடியமர்ந்த இடங்களில் வழிபாட்டுத்தலங்களையும் அமைத்துள்ளனர். இந்து சமயம் காட்டும் நெறியில் இந்துக்களாகவே வாழ்வதற்கு அவர்கள் உறுதியான அத்திவாரத்தை இட்டுள்ளனர். 15 இந்து கோவில்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன…

View More ஆஸ்திரேலியாவில் இந்துக் கோவில்கள்