பரிபூரணத்தின் அழகுவெளி – லலிதா சகஸ்ரநாமம்

லலிதா என்ற சொல்லே மிக அழகானது. நித்திய சௌந்தர்யமும், நித்திய ஆனந்தமும் ஒன்றான அழகு நிலை என்று அதற்குப் பொருள்.. அப்படி தியானம் செய்பவர்களுக்கு நிர்க்குணமும் சகுணமும், ஞானமும் பக்தியும் கர்மமும், வாமாசாரமும் தட்சிணாசாரமும், யோகமும் போகமும், கோரமும் சாந்தமும், இல்லறமும் துறவறமும் – எல்லாம் அன்னையின் உள்ளத்துக்கு உகந்ததாகவும், எல்லாமாகி இலங்கும் அவளை அடைவதற்கான மார்க்கங்களாகவே திகழும்…

View More பரிபூரணத்தின் அழகுவெளி – லலிதா சகஸ்ரநாமம்

பாரதியின் சாக்தம் – 2

வாழ்வின் மூர்க்கத்தையும் கொடூரத்தையும் அழிவையும் ஸர்வநாசத்தையுமேகூட தெய்வத்தின் பிரதிமையாய்க் காணும் மரபு வங்காளத்தில் நிலவுவது சாக்தத்திற்கான வலுவான வேராகும்… ‘நீங்கள் கடவுளைக் கண்டிருக்கிறீர்களா?’ என்று கேட்டு வந்த நரேந்திரரை.. பல ஆண்டுகளுக்குப் பின் அதே ‘நரேனைக் காளிக்கு அர்ப்பணம் செய்துவிட்டேன். நரேன் காளியை ஒப்புக்கொண்டு விட்டான் தெரியுமோ?’ என்று ஏதோ தன் பிள்ளை பெரிய பரிட்சையில் பாஸானதைப் போல வருவோர் போவோரிடம் சொல்லிக்கொண்டிருந்த கிழவராக இருந்தவரும் ஸ்ரீராமகிருஷ்ணர்…

View More பாரதியின் சாக்தம் – 2

பாரதியின் சாக்தம் – 1

பெண்ணின் சுதந்திரம் பெரிதும் முடக்கப்பட்டக் காலத்திலேயே கூட, பெண்ணின் சுதந்திர வெளியை முழுதும் உள்வாங்கிய உணர்வு பூர்வமான வழிபாடு அவனால் சாக்தமாகப் பேணப்பட்டு வந்திருப்பது பெரும் சிறப்பாகத்தான் இருக்கிறது… ஒரு கையால் வைணவத்தையும், ஒரு கையால் சைவத்தையும் தொட்டுக்கொண்டிருக்கும். ‘இருவழிகளையும் ஒரு பார்வையால் நோக்கும்’ தரிசனம் சாக்தம் எனலாம்… விவேகானந்தரிடம் ஸ்ரீராமகிருஷ்ணர், “…மக்களுக்கு ஏற்ற வழியன்று வாமாசாரம் போன்ற முறைகள். முறையான பக்தி நெறியே மக்களுக்கு நன்மை பயப்பது,” என்றாராம்.

View More பாரதியின் சாக்தம் – 1

அன்னையின் அகவழிபாடு – மாதா அமிர்தானந்தமயி

மூன்று முறை “ஓம்” ஜபிக்கவும். கண்களை மூடி, நாபியிலிருந்து ஓங்கார நாதம் எழும்பித் தலை உச்சியிலுள்ள ஸஹஸ்ராரத்தைச் சென்று அடைவதாக பாவனை செய்யவும். ஓங்காரம் ஜபிக்கும்போது நமது தீய இயல்புகளும், கெட்ட எண்ணங்களும் வெளியேறுவதாகவும், நல்ல எண்ணங்களும், நல்லியல்புகளும் நம்முள் நிறைவதாகவும் எண்ண வேண்டும். மேலும், உள்ளத்திற்கும் உடலுக்கும் புத்துணர்வும், உற்சாகமும் ஏற்படுவதாக பாவனை செய்யவும்.

View More அன்னையின் அகவழிபாடு – மாதா அமிர்தானந்தமயி

தீராத விளையாட்டுப் பிள்ளை

… யசோதை கண்ணனைத் தொட்டிலில் படுக்க வைக்கிறாள். கண்ணன் தொட்டில் கிழிந்து விடும்படி உதைக்கிறான். [பின்னால் சகடாசுரனை உதைப் பதற்கு ஒத்திகை பார்த்திருப்பானோ?]ஐயோ இப்படி உதைத்து, உதைத்துக் குழந்தைக்குக் காலெல்லாம் வலிக்கப் போகிறதே யென்று ஆதங்கத்தோடு தூக்கி எடுத்து இடுப்பில் வைத்துக் கொண்டால் இடுப்பையே முறித்து விடுகி றானாம் ….

View More தீராத விளையாட்டுப் பிள்ளை