பயணம்: திரைப்பார்வை

திருப்பதி விமானநிலையத்தில் ஓடுவழி நடுவில் இருக்கும் மூடிய விமானத்துக்குள்ளாக ஒரு மாதா கோயில் மணியோசை கேட்பதாக படத்தில் காட்டுகிறார்கள்… பாதிரியார் விமானத்துக்குள்ளே பைபிள் படிக்க அனுமதி பெற்று, அதை உரக்க எல்லோருக்குமாகப் படிப்பதில் இயல்பாகத் தொடங்கும் கிருத்துவக் காட்சிகள், இறந்த பயணிக்காக பாதிரியார் ஜபிக்கும்போது இயல்பை இழக்க ஆரம்பிக்கிறது.

View More பயணம்: திரைப்பார்வை

ஆபாசமும் மரபும் தமிழர் கடமையும்

நல்ல கணவன் அமைய செய்யும் ஒரு பாரம்பரியமிக்க நோன்பைப் பற்றி, மிக மலினமான காம வார்த்தைகளால் நிரப்பி ஒரு பாடலை எழுதியிருக்கிறார் இந்த நடிகர்… ஆண்டாள் பாசுரங்களில் இருப்பதாக கூறப்படும் காமத்தையும், தமிழ் சினிமா பாடல் ஆபாசத்தையும் நாம் ஏன் ஒன்றாகக் கருத முடியாது?.. ஆபாச வியாபாரிகள் கலையின் பெயரால் நம் பண்பாட்டின் மீது செய்யும் தாக்குதலைக் கண்டு, நாம் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக் கூடாது?

View More ஆபாசமும் மரபும் தமிழர் கடமையும்

கள்ளக் காதல்

ஒரு அளவில் இருக்க வேண்டிய காமத்தை, கடைச்சரக்காக்கி வீடு தோறும் பரப்பப் பட்டு வருவது சமூக மனநிலையை பாதிக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். சாதாரணமான காமெடிக் காட்சிகளில் கூட ஒருத்தனுடைய சம்சாரம் இன்னொருத்தனுடன் ஓடிப் போவது பற்றிய காமெடி ஒரு நூறு திரைப் படங்களிலாவது வந்திருக்கும். இதைப் பார்க்கிற சிறார்கள் மனதில் எந்த வகையான உறவு சரி எது தவறு என்ற புரிதலில் பிழை ஏற்பட நிறைய வாய்ப்பு இருக்கிறது.

View More கள்ளக் காதல்

சன் டிவி – எந்திரன் – தொடரும் குமட்டல்

ஜெயலலிதாவைக் கேள்வி கேட்ட ரஜினி, ஒட்டுமொத்த திரையுலகத்தையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துகொண்டிருக்கும் ஒரு குடும்பத்தைப் பற்றி ஏன் இன்னும் எதுவும் கேட்காமல் இருக்கிறார்? தன் வணிகம் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவா?… இதே ரசிகர்கள் பாலாபிஷேகம், பீராபிஷேகம் எல்லாம் செய்திருக்கிறார்கள். இன்று சன் டிவி அதற்குத் தரும் அங்கீகாரம் அதன் எல்லையை மிகவும் விரிவாக்கி, தமிழர்களே இப்படியெல்லாம் நடந்துகொள்ளும் முண்டங்கள்தான் என்னும் பிம்பத்தை ஏற்படுத்தி வருகிறது….

View More சன் டிவி – எந்திரன் – தொடரும் குமட்டல்

சிலநூறுகோடியில் அம்புலிமாமா ( எந்திரன்)

படம் முழுக்க ரிச் ஆகத் தெரிய மெனக்கெட்டது வீண்போகவில்லை. எல்லா இடத்திலும் பிரம்மாண்டம். பிரம்மாண்டம் மட்டுமே.சாதாரனமான இடம் இப்படத்தில் வருவது பெருங்குடி குப்பைமேடு மட்டுமே. படம் முழுக்க அல்ட்ரா மாடர்னாகவே இருக்கிறது.

View More சிலநூறுகோடியில் அம்புலிமாமா ( எந்திரன்)

ஸ்ரீ ராகவேந்திரர் என்னும் சன்னியாசி

நல்ல மற்றும் தகுதிக்குரிய மக்களுக்கு செய்யப்படும் உதவி/தர்மம் கடவுளின் பூஜைக்கு நிகராகும்….. சாஸ்திரத்தை பின்பற்றாமல் தங்களைக் கடவுள் என்று கூறிக்கொண்டு அதிசயங்களை செய்பவர்களிடமிருந்து விலகி இருங்கள். நானும் ஸ்ரீமத் ஆசாரியாரும் நிறைய அதிசயங்களை நிகழ்த்தியிருக்கிறோம். அவையெல்லாம் யோக சித்தியினாலும் கடவுளின் அருளினாலும் எங்களால் செய்ய முடிந்தது. அவற்றில் எந்த பொய்யோ பித்தலாட்டமோ இல்லை. அவ்வதிசயங்கள் கடவுளின் மகிமையையும் அவர் அருளால் ஒருவர் எப்பேற்பட்ட சக்திகளை அடைய முடியும் என்று பறை சாற்றவுமே செய்யப்பட்டது. சரியான ஞானத்தை மிஞ்சிய எந்த அதிசயமோ அற்புதங்களோ கிடையாது….

View More ஸ்ரீ ராகவேந்திரர் என்னும் சன்னியாசி

செக்யூலரிசம் – ஓர் எளிய அறிமுகம்

புராணங்களின் புரட்டுக் கட்டுரைகள் என்று நெடிய நெடிய புத்தகங்கள் எழுதுவார். குரானைப் பற்றியோ, பைபிள் பற்றியோ பேசமாட்டார். இவரும் செக்யூலர்தான்… ஜாதிக் கட்சித் தலைவராக இருப்பார். மதச்சார்பின்மை பற்றி முழங்குவார். மதமாற்றம் குறித்து ஆதரவு தெரிவிப்பார். மதம் மாறிய மன்னன்கள் மறக்காமல் கல்யாணத்துக்குப் பெண் தேடும்போது ஜாதியோடு தேடுவார்கள். கட்சித் தலைவர் மொய் வாங்கிவிட்டு திருமணத்துக்குச் சென்றுவிட்டு அரசியல் பேசிவிட்டு மொய் வைத்துவிட்டு வருவார். இதுவும் செக்யூலரிசத்தின் பாடங்களுள் ஒன்று.

View More செக்யூலரிசம் – ஓர் எளிய அறிமுகம்

அங்காடித் தெரு – திரைப்பார்வை

‘அண்ணாச்சி’ முருக பக்தர் என்றாலும், அவருக்கு வேலுக்கும் சேவல் கொடிக்கும் நடுவில் இருப்பது முருகன் அல்ல, லாபம் மட்டும்தான். சுபம் அல்லாத லாபம்.. இரக்கமின்றி கண்காணிக்கப்பட்டு வதைத்தே விலங்குகளாக வைக்கப்படும் அந்த இடத்திலும், அனைத்து இயந்திரத்தனமான மானுடம் மறந்த மனிதர்களின் சிறைகளை உடைத்துக் கொண்டு, உயிர்த் துடிப்பு தன்னை, தன் சக்தியை வெளிப்படுத்துகிறது.

View More அங்காடித் தெரு – திரைப்பார்வை

Taken – தந்தைகளின் திரைப்படம்

பெண்ணின் அப்பா கடத்தல்காரர்களிடம் சொல்கிறார்: நாங்கள் பலவீனமான நாடாக இருக்கிறோம், பரந்த மனப்பான்மை என்ற தவறான நோக்கில் உங்களை உள்ளே விடுகிறோம், நாங்கள் எதுவும் செய்ய இயலாத கையாலாகதவர்களாக இருக்கிறோம், உங்களைப் போன்ற வன்முறைக்குத் துணைபோகும் சக்திகள் உலகம் முழுவதும் பரவி குண்டு வைக்கிறீர்கள், எங்கள் பெண்களைக் கடத்தி ஏலம் விடுகிறீர்கள், இருந்தும் கைகள் கட்டப் பட்டவர்களாகிய நாங்கள் ஏதும் செய்ய இயலாதவர்களாக இருக்கிறோம் …

View More Taken – தந்தைகளின் திரைப்படம்

UP – Animation Movie. ( பறக்கும் வீடு)

தென் அமெரிக்காவில் இருக்கும் பாரடைஸ் பால்ஸுக்கு அருகில் வீடு கட்டுவதும் அங்கு சென்று மனிதனின் கால்படாத இடங்களைப் பற்றி ஆராய்வதும், அங்கிருக்கும் விலங்கினங்கள், பறவைகளைப் பற்றித் தெரிந்து கொள்வதும் எல்லியின் கனவு. எல்லியைப்போலவே ஒத்த சிந்தனை கொண்ட கார்லும் நட்பைத்தொடர்கின்றனர்.

View More UP – Animation Movie. ( பறக்கும் வீடு)