உலகளவில், நோய்த் தொற்று பாதிக்கப்படுபவர்களில் நாம் இரண்டாம் இடத்தில் இருக்கிறோம். ஆனால், படுக்கை வசதிகள் இல்லாத, ஆக்ஸிஜன் இல்லாத, மருந்துகள் இல்லாத, இந்தியாவில் இறப்புவிகிதம் உலகின் பிற 100 நாடுகளையும் விட பல மடங்கு குறைவு… இரண்டாவது அலை பற்றிய அபாய அறிக்கைகளைத் தொடர்ந்து, அரசு பயந்து பயந்து எல்லா ஏற்பாட்டையும் செய்தது. ஆனால் மக்கள் அதைப் பொருட்படுத்தாமல் மீறிக்கொண்டே இருந்தார்கள்… இவை எதுவும் புரியாமல் மக்கள் கூட்டம் உடனே ரெம்டெசிவர் என்னமோ நோயை முழுவதுமாக்க் குணப்படுத்திவிடும் என்று தாமாகவே நினைத்துக்கொண்டு முண்டியடிக்கிறார்கள். பல மருத்துவர்களை ஒருவித தர்ம சங்கடத்தில் ஆழ்த்துகிறார்கள்…
View More சீன வைரஸும் தேசப் பேரிடரும் – 2Tag: தொழிலாளர்கள்
புதிய பொற்காலத்தை நோக்கி – 11
உலகம் முழுவதுமே எல்லாத் தொழில்களும் பரம்பரை வழியிலேயே கைமாற்றித் தரப்பட்டபோதிலும் பாரதத்தில் மட்டுமே அப்படி இருந்ததாகவே மெக்காலே கல்வி முத்திரை குத்தியது. ஐரோப்பாவிலும் நவீன பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்ட பிறகே கல்வி அனைவருக்கும் கிடைத்தது என்றாலும் பாரதத்தில் மட்டுமே கல்வி அனைவருக்கும் மறுக்கப்பட்டதாக அவர்கள் நம் வரலாற்றை எழுதிக் கொடுத்தார்கள். அதுவே இன்றைய அறிவுஜீவி, அரசியல் ஜீவி மட்டங்களில் மனனம் செய்யப்பட்டு முழங்கப்படுகிறது…
View More புதிய பொற்காலத்தை நோக்கி – 11புதிய பொற்காலத்தை நோக்கி – 10
எல்லாரும் எல்லா தொழிலையும் கற்றுக் கொண்டு விருப்பமான தொழிலைத் தேர்ந்தெடுக்கும் இன்றைய பள்ளிக் கல்வி முறை அன்று உலகில் யாராலும் நினைத்துப் பார்க்கவே பட்டிருக்கவில்லை. எனவே இந்தியாவிலும் அது இருந்திருக்கவில்லை… அக மண முறையும், குல பந்தி – குல விருந்து முறையும் இயல்பான தேர்வாகவே இருந்திருக்கிறது. இந்துசமூகத்தில் மட்டும் கடைநிலையில் இருந்தவர்களும் இழிவான தொழிலைச் செய்தவர்களும் மேலேற முடியாமல் போய்விட்டது என்ற வாதத்தில் அர்த்தமே இல்லை. அவர்களுக்கான வெளிகள், உரிமைகள், அதிகாரங்கள் எல்லா காலத்திலும் இருக்கவே செய்திருக்கின்றன…
View More புதிய பொற்காலத்தை நோக்கி – 10’பரதேசி’ திரைப்படம்: ஒரு பார்வை
அடிப்படையில் இது சபிக்கப் பட்ட மானுடர்களின் வலியைப் பேசும் திரைப்படம். பசியின் வலி. அடக்கு முறையின் வலி. வேர் பிடுங்கப் பட்டு ஊரைத் துறந்து பிழைப்பு தேடச் செல்வதன் வலி. அடிமைத் தனத்தின் ஊமை வலி.. டாக்டரும் வெள்ளைக்கார மனைவியும் ஏசு பாட்டுக்கு குத்துப்பாட்டு நடனம் ஆடுகிறார்கள். ரொட்டிகளை வீசியெறிகிறார்கள். தொழிலாளர்கள் முண்டியத்துக் கொண்டு அவற்றைப் பொறுக்குகிறார்கள்… கொள்ளை நோய்களின் போது கிறிஸ்தவ பாதிரிகள் – டாக்டர்கள் கூட்டணி எப்படி நடந்து கொண்டது என்பது பற்றி அவர்களே எழுதி வைத்த பல பிரிட்டிஷ் காலகட்டத்திய குறிப்புகள் உள்ளன. ஒரு திரைப்பட இயக்குனராக, மதமாற்றம் குறித்த காட்சிகளையும் இந்தப் படத்தில் இணைப்பதற்கு அவருக்கு முழு படைப்புச் சுதந்திரம் உள்ளது…
View More ’பரதேசி’ திரைப்படம்: ஒரு பார்வைஎது உழைப்பாளர் தினம்?
மே 1 உலக உழைப்பாளிகள் தினம் அல்ல. கோடானுகோடி மக்களை இரக்கமின்றி அழித்தொழிக்கும் ஒரு அரக்க சித்தாந்தம் அற உணர்ச்சி முலாம் பூசி நடிக்கும் ஒரு நாடக தினமே மே 1… நகரம்-கிராமம், ஏழை-பணக்காரன், முதலாளி-தொழிலாளி, உடல் உழைப்பு-மூளை உழைப்பு, விவசாயத் தொழிலாளி-ஆலைத் தொழிலாளி என்று பாகுபடாமல், இயற்கையும் மானுடமும் இணைந்து பணியாற்றும் ஒரு தினமாக அது கொண்டாடப்பட வேண்டும். நமக்கு எது அந்தத் தினம்?
View More எது உழைப்பாளர் தினம்?நீதிக்கட்சியின் மறுபக்கம் – 02
எப்பொழுதுமே தாழ்த்தப்பட்டவர்களால் நடத்தப்பட்ட போராட்டங்களை – வரலாற்றை – தாழ்த்தப்பட்டவர்களால் போராடிப் பெற்ற உரிமைகளை – நீதிக்கட்சி, ஈவேரா இவர்களுக்கு உரிமையாக்கி விடுவார் இவர். இந்த புத்தகத்திலும் அதுமாதிரியான ஒரு வரலாற்றுப் புரட்டலை செய்திருக்கிறார் எஸ். வி. ராஜதுரை. அவருடைய நோக்கம் தாழ்த்தப்பட்டத் தலைவர்களின் வரலாற்றை எழுதுவதல்ல. அனைத்துச் சாதனைகளும் நீதிக்கட்சியால் மட்டுமே பெறப்பட்டது என்று நிலைநிறுத்தவே இந்தத் தகவல்களைச் சேர்த்திருக்கிறார்…
View More நீதிக்கட்சியின் மறுபக்கம் – 02