உண்மையில் அம்பேத்கரின் கிறிஸ்தவ இஸ்லாம் எதிர்ப்பை முன்வைப்பதை விட அம்பேட்கர் எப்படி ஒரு யதார்த்தமான முழுமையான தேசியவாதி என்பதையே அ.நீ முன்வைக்கிறார். சாதி ஒழிப்பில் அம்பேத்கரின் முக்கிய தோழர்களாக விளங்கிய ஜெயகர், சுவாமி சிரத்தானந்தர், நாராயண கரே போன்றவர்கள் இந்து மகாசபை காரர்கள் என்பதை அ.நீ நினைவுபடுத்துகிறார். ஸ்மிருதி அடிப்படையிலான இந்து மதத்தின் மீதே அம்பேத்கருக்கு விலகலும் கடும் விமர்சனமும் இருந்தது, ஆனால் அவரது தேசபக்தி கேள்விகளுக்கு அப்பாலானது என்பதுதான் அ.நீயின் நிலைப்பாடு. கறாரான ஆதாரங்களுடன் தான் எழுதுகிறார் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை… அநீ மீது வசைகளை வீசும் வாசகர்களுக்கு அறிவுரை கூறாவிட்டாலும் அவர்களை நீங்கள் ஊக்குவிக்காமலாவது இருக்கலாம்…
View More அரசியலும் மேற்கோள் திரிபுகளும்: ஜெயமோகனுக்கு ஒரு கடிதம்Tag: பாபா சாகேப் அம்பேத்கர்
பாஜகவின் பாபாசாஹேப் அம்பேத்கர் பாசம் : உணர்வா? அரசியலா?
பாரதப் பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையம் அடிக்கல் நாட்டினார்.…
View More பாஜகவின் பாபாசாஹேப் அம்பேத்கர் பாசம் : உணர்வா? அரசியலா?புரட்சியாளர் அம்பேத்கரின் சமஸ்கிருத ஆதரவு
சமஸ்கிருதம் என்றாலே அது தீட்டுப்பட்ட மொழிபோலவே நாம் எண்ணிக் கொண்டு இருக்கிறோம். அது…
View More புரட்சியாளர் அம்பேத்கரின் சமஸ்கிருத ஆதரவுதாமிரபரணி முதல் பரமகுடி வரை…
ஐயா இஸ்லாமிய அடிப்படைவாதியே ஒரு ஜனநாயக சமுதாயத்தில் சமூக நீதிக்காக போராடுவது என்பது நல்ல விசயம். அதற்கான ஜனநாயக சூழலை இந்து பண்பாடு அளித்திருக்கிறது. அந்த பண்பாட்டின் ஒரு ஏற்றமிகு உச்சமான டாக்டர் அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் நிர்ணய சட்டம் அளித்திருக்கிறது. பெண்களை கல்லால் அடித்து கொல்வதைக் காட்டிலும் பிறமதத்தவரின் கழுத்தை வெட்டிக் கொல்வதைக் காட்டிலும் சவூதி அரேபியாவின் மானுடத்தன்மையற்ற சட்டங்களுக்கு வக்காலத்து வாங்குவதைக் காட்டிலும் குழந்தை திருமணங்கள் மூலமாக இந்திய சிறுமிகளை அராபிய ஷேக்குகளுக்கு மார்க்கரீதியாக விற்பதைக் காட்டிலும், அப்பாவிகளை குண்டு வெடிப்பில் கொன்று அதை ஜிகாத் என சொல்லி புளகாங்கிதமடைவதைக் காட்டிலும் ஒடுக்கப்பட்ட மக்களின் சமூகநீதிக்காக போராடும் இந்துவாக இருப்பது எவ்வளவோ மேல். ஆனால் அது தங்கள் அராபிய அடிமைத்தனம் நிரம்பி வழியும் மூளையில் ஏறாதது ஆச்சரியமல்ல.
View More தாமிரபரணி முதல் பரமகுடி வரை…அம்பேத்கரின் “சாதி ஒழிப்பு”: ஓர் மீளாய்வு – 2
சாதிக்கொடுமைகள் கலப்பு திருமணத்தால் தீருமா என்பது கேள்வி. அமெரிக்க, தென்னாப்பிரிக்க நாடுகளில் நடைபெற்ற அடிமை ஒழிப்பு, உரிமையெடுப்பு இயக்கங்கள் கலப்பு திருமணத்தை முன்வைத்தா உரிமைகளை வென்றெடுத்தன? அமெரிக்க கறுப்பின உரிமை போராளியான மார்ட்டின் லூதர் கிங் கலப்பு திருமணத்தை முன்னிறுத்தினாரா?…. இந்துக்கள் யார் யார் என்றால் யாரெல்லாம் முஸ்லீம்கள் இல்லையோ, கிறிஸ்துவர்கள் இல்லையோ பார்சிகள் இல்லையோ அவர்கள் எல்லோரும் இந்துக்கள் என முன்வைத்தது அம்பேத்கர் தான். மேலும் இந்துவாக மதம் மாறலாம் எனும் சட்டக்கருத்தை முன்வைத்ததும் அம்பேத்கர் தான்… இந்துக்கள் பழங்குடியினரிடம் சமயப் பரப்புரை செய்தால் கேலி பேசுவதும் அதை தடுப்பதுமாக ஒரு பக்கமும், இன்னோர் பக்கம் ஏன் பழங்குடியினரிடம் போகவில்லை அதற்கு சாதியே காரணம் என சொல்லுவதுமாகவும் இருப்பது – எந்த அளவில் சரி?…
View More அம்பேத்கரின் “சாதி ஒழிப்பு”: ஓர் மீளாய்வு – 2அம்பேத்கரின் “சாதி ஒழிப்பு”: ஓர் மீளாய்வு – 1
75 வருடங்களுக்கு முன்பு பாபாசாகிப் அம்பேத்கர் எழுதிய “சாதி ஒழிப்பு” (Annihilation of Caste) எனும் புத்தகத்தை இப்போது மீளாய்வு செய்ய வேண்டியது அவசியமாகிறது. முதலில் அம்பேத்கர் என்ன எழுதியிருக்கிறார் என பார்த்துவிட்டு அதற்கான விமர்சனத்தை பார்ப்போம்… இந்துக்கள் ஒரு சமூகமாக அல்லது தேசியமாக பரிணமிக்க சாதியே தடையாக இருக்கிறது. இந்துக்களுக்கு தாங்கள் ஒருவருக்கொருவர் உறவு கொண்டவர்கள் என்ற பிரக்ஞையே இல்லை. இந்துக்களுக்கு தங்களுடைய சாதியோடு மட்டும் உறவு இருக்கிறது, மற்றைய இந்துக்களுடன் கிடையாது…. சாதி என்ற அமைப்பு இந்துக்களிடையே பரஸ்பர நம்பிக்கை, உதவி, ஒருங்கிணைப்பை உண்டாக்கித் தருவது இல்லை. ஒரு சாதி இன்னோர் சாதிக்கு எதிராக இருக்கிறது. அதற்கு அடிப்படையாக நூல்கள் எழுகின்றன… சதுர்வர்ணம் சூத்திரர்களுக்கு மிகவும் கொடுமையான அமைப்பாக இருக்கும். சூத்திரர்கள் சதுர்வர்ண முறையின் கீழ் எல்லாவற்றிக்கும் மற்றவர்களை நம்பியே இருக்கவேண்டிய அவசியம் இருக்கும். மற்றவர்கள் சூத்திரர்களை கொடுமைப்படுத்த நினைத்தால் அதை யாரும் கேட்கமுடியாமல் போகும்…
View More அம்பேத்கரின் “சாதி ஒழிப்பு”: ஓர் மீளாய்வு – 1மகாத்மா காந்தியும் மகா பெரியவரும்
போலி மதச்சார்பின்மையாளர்கள் விரும்புவோர் வந்தேமாதரம் பாடலாம் என்று சொன்ன போதும் தேச பிரிவினையின் முன்னோட்டமாக வந்தேமாதரத்தை சிதைத்த போதும் என்ன மனநிலையில் செயல்பட்டார்களோ அதே மனநிலையில்தான் சாதியத்தை ஆதரிப்போர் செயல்படுகின்றனர். சுவாமி தயானந்த சரஸ்வதியும், சட்டம்பி சுவாமிகளும், ஸ்ரீ நாராயண குருவும், சுவாமி விவேகானந்தரும் கொண்டு வந்த ஞான கங்கை சாதிய ஒழிப்பு. அது பாரம்பரியம் என்கிற பெயரில் உருவான பாலையில் வறண்டு போக விடுவது ஹிந்து சமுதாயத்தை ஒட்டுமொத்தமாக அழித்துவிடும்…. போலி மதச்சார்பின்மை, சாதியம் – பாபா சாகேப் அம்பேத்கரே இந்த இரண்டு தீமைகளையும் ஹிந்து சமுதாயத்தை பீடித்திருக்கும் இணையான வியாதிகள் என்கிறார்….
View More மகாத்மா காந்தியும் மகா பெரியவரும்நமக்கு ஏன் இல்லை பகுத்தறிவு?
மேம்போக்காக பார்க்க இந்திய அமெரிக்க சட்டங்களின் அறிமுக பிரகடனங்கள் (preamble) ஒன்று போல இருப்பது போல தோன்றும் . ஆனால் அதில் நுண்ணிய வேறுபாடு இருக்கிறது என்கிறார் சட்ட வல்லுநர், ஆர்.ஜி.சதுர்வேதி . அமெரிக்க பிரகடனம் ‘establish justice’ என சொல்கிறது. ஆனால் பாரதமோ ‘secure justice’ என சொல்கிறது. அமெரிக்க பிரகடனத்தில் நீதி என்பது சட்டம் எதை சொல்கிறதோ அதுதான். சட்டத்திலிருந்து நீதி முகிழ்கிறது – அது ஒரு emergent property. ஆனால் பாரதத்தில் அவ்வாறு அல்ல. நீதியை நோக்கி சட்டம் தொடர்ந்து நகர்ந்து கொண்டே இருக்க வேண்டும். இங்கு அது ஒரு primordial reality. சட்டம் அந்த நீதியை மக்கள் அனைவருக்கும் அளிக்கும் ஒரு கருவி…
View More நமக்கு ஏன் இல்லை பகுத்தறிவு?போதிசத்வரின் இந்துத்துவம் – 1
பாபா சாகேப் அம்பேத்கரை ஒரு இந்துத்துவ சார்புடையவராக சொல்வது போல கடும் கண்டனத்துக்கு ஆளாகக் கூடிய விசயம் வேறெதுவும் ‘மதச்சார்பற்ற’ இந்தியாவில் இருக்க முடியாது… அந்த கண்டனங்களுக்கு அப்பால், அம்பேத்கரின் ஒட்டுமொத்த சமூக-தத்துவ சிந்தனைகளின் அடிப்படையில், அவரது மனமண்டலத்தில் இந்துத்துவம் குறித்த கருத்துகள் நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் எப்படி அறிந்து கொள்ளப்பட்டன என்பதைக் காண்பதே இக்கட்டுரைத் தொடரின் நோக்கம்… ’பிரதியெடுக்க இயலாத பண்பாட்டு ஒற்றுமை’ என பாரதத்தின் பண்பாட்டு ஒருமையை அம்பேத்கர் குறிப்பிடுகிறார்.. இந்து சீர்திருத்த போராளிகளான வீர சாவர்க்கர், சுவாமி சிரத்தானந்தர் ஆகியோரிடம் மிக்க அன்பும் வெளிப்படையாக பாராட்டும் மனமும் கொண்டிருந்தார் பாபா சாகேப்…. ”இஸ்லாமுக்கோ கிறிஸ்தவத்துக்கோ மதம் மாறுவது ஒடுக்கப்பட்ட மக்களை தேசியத்தன்மை இழக்க வைத்துவிடும்” என்கிறார். அம்பேத்கர் ஹிந்து சிவில் சட்டத்தின் வரைவில் இந்துக்களை வரையறை செய்யும் போது வீர சாவர்க்கரின் வரையறையின் தாக்கத்தையே அதில் காண்கிறோம்…
View More போதிசத்வரின் இந்துத்துவம் – 1