இன்னும் எத்தனை வருஷம் இருந்து என்னை சம்ரட்சணை பண்ணப்போறேன்னு கேக்கறே! வேற நீ என்னடா பண்ணுவே! அது ஒருவிதத்திலே நியாயம்தான்னாலும், ஒரு பிராமணன், அதிலும் ஒரு வைதிகன், குரு ஸ்தானத்திலே இருக்கறவன், இப்படி சுயநலத்தோட இருந்தா மழைபெய்யுமாடா? நீங்க இப்படி இருக்கறதுனாலதான் வைசூரி, காலரான்னு நாம அழிஞ்சுபோறோம். அதிலேயும் பிராமணன் பண்ற தப்பு இந்த ஒலகத்தையே பாதிக்கும்டா. இதை என்னிக்குத்தான் நீங்க புரிஞ்சுக்கப்போறேளோ?
View More “காமாச்சியைக் கரையேத்தணும்!”Tag: புரட்சி
காஸ்ட்ரோ சேகுவேரா நேரு புரட்சி வீழ்ச்சி
1959ம் ஆண்டு ஆல் இந்தியா ரேடியோவின் பானுமதிக்கு அளித்த பேட்டியில் சேகுவேரா “லத்தீன் அமெரிக்காவில் மக்கள் கடும் ஏழ்மையால் துன்பபடுகிரார்கள். உங்கள் ஊரில் காந்தி இருந்தது போல் எங்கள் ஊரில் அவர்களை நல்ல வழிக்கு கொன்டுவர தலைவர்கள் இல்லை. அதனால் நான் ஆயுதம் ஏந்த வேண்டி இருந்தது” என்றார். காந்தியின் சத்தியாகிரகம், அகிம்சை அனைத்தும் அவருக்கு பிடித்ததாக கூறினார். ஊருக்கு திரும்பியதும் காஸ்ட்ரோவுக்கும் அவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டது. அமெரிக்காவுக்கு பதில் இப்போது ரஷ்யா மூன்றாம் உலகநாடுகளை சுரண்டுவதை லேட்டாக புரிந்துகொண்டார். ரஷ்யா அவருக்கு உதவ மறுத்துவிட்டது. காங்கோவில் நடந்த போராட்டம் தோற்று, பொலிவியா திரும்பினார்…
View More காஸ்ட்ரோ சேகுவேரா நேரு புரட்சி வீழ்ச்சிபஞ்சம், படுகொலை, பேரழிவு: கம்யூனிசம் – புத்தக விமர்சனம்
ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் முதியவர்களுமாகப் படுகொலை செய்யப் பட்டதைப் பக்கம் பக்கமாகப் படிக்கும் போது, மரணங்கள் வெறும் புள்ளி விவரங்களாக ஆகி விட்ட நிதர்சனம் மனதைச் சுடுகிறது… கொள்கை மோகம் மட்டுமல்ல, சுய-அகங்கார நோக்கங்களும் நேருவை ஸ்டாலினின் சோவியத் யூனியனுடன் மையல் கொள்ள வைத்திருந்தன.. ‘திபெத்தில் எரிந்த நாலந்தா’ அத்தியாயத்தைப் படித்து முடித்த போது, காட்டெருமையின் குளம்புகளில் சிக்கிக் கொண்ட குழந்தை என்ற வர்ணனை தான் மனதில் எழுந்தது… எல்லா சான்றுகளுமே கம்யூனிஸ்டுகளே வெளியிட்டுள்ள பல நூல்களில் இருந்தும், ரஷ்ய, சீன பதிப்புகளில் இருந்துமே தரப்பட்டிருப்பது…
View More பஞ்சம், படுகொலை, பேரழிவு: கம்யூனிசம் – புத்தக விமர்சனம்எமர்ஜென்ஸி – ஜே.பி.யின் ஜெயில் வாசம்
தனது கொள்கைக்கு நேர் மாறான ஜனசங்கத்தைச் சேர்ந்த அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களிடம் உதவி கேட்க ஜெ.பியால் முடிகிறது. தாய்நாட்டிற்கு முன்னால் வேறு எதுவும் பெரியதில்லை என ஜெ.பியின் வேண்டுகோளுக்கு செவி சாய்க்கிறார் வாஜ்பாய்…அடுத்த கிங்மேக்கரான மூப்பனார் முதல் இன்றைய தங்கபாலு மற்றும் மூப்பனாரின் மகன் ஜி.கே.வாசன்வரை எல்லோரும் நேரு, காந்தி பரம்பரைக்கு கிட்டத்தட்ட அடிமை சாசனம் எழுதிக் கொடுத்ததைப் போல நடந்துகொண்டுள்ளனர்…
View More எமர்ஜென்ஸி – ஜே.பி.யின் ஜெயில் வாசம்எது உழைப்பாளர் தினம்?
மே 1 உலக உழைப்பாளிகள் தினம் அல்ல. கோடானுகோடி மக்களை இரக்கமின்றி அழித்தொழிக்கும் ஒரு அரக்க சித்தாந்தம் அற உணர்ச்சி முலாம் பூசி நடிக்கும் ஒரு நாடக தினமே மே 1… நகரம்-கிராமம், ஏழை-பணக்காரன், முதலாளி-தொழிலாளி, உடல் உழைப்பு-மூளை உழைப்பு, விவசாயத் தொழிலாளி-ஆலைத் தொழிலாளி என்று பாகுபடாமல், இயற்கையும் மானுடமும் இணைந்து பணியாற்றும் ஒரு தினமாக அது கொண்டாடப்பட வேண்டும். நமக்கு எது அந்தத் தினம்?
View More எது உழைப்பாளர் தினம்?சாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம் – 5
“ஸ்ரீ ஐயன் காளியின் ஆக்ஞைக்கு இணங்க நமது சகோதரிகளின் கல்மாலைகளை அறுத்தெறியவே நாம் முழு சம்மதத்துடன் இங்கு கூடியிருக்கிறோம்.” அம்மேடையிலேயே அருவாள் கொண்டு கல்மாலைகள் அறுத்தெறியப் பட்டன.. ”எனது இனத்தவர்களுக்கு வீடோ, பூஜை நடத்த கோவிலோ கிடையாது. எனவே இவ்விஷயத்தில் வேறு சமுதாயத்தினருக்குச் செய்வதை விடக் கூடுதலாக எங்களுக்கு அரசாங்கம் செய்து தரவேணுமென்று வேண்டுகிறேன். எங்கள் தேவைகளுக்காக கிணறுகளும், கோயில்களும் நிர்மாணித்துத் தரவேண்டும்”
View More சாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம் – 5ஆலமும் அமுதமும்: திருவாரூர் கலியாண சுந்தரன்
இக்கால உலக எரியைத் தணிக்கும் ஆற்றல் சன்மார்க்கத்துக்கே உண்டு. சன்மார்க்கம் தண்மை வாய்ந்தது. அத்தன்மை பொழியும் இடம் எது? நாடு எது? … முறையீட்டை முறையிட்டேன். அழுகையை அழுதேன்; அன்புப்புரட்சியை அறைந்தேன். அப்புரட்சியை நாடோறும் நீங்கள் செய்யலாம். உண்மை அழுகைக்கு பலர் வேண்டுவதில்லை. ஒரு சிலர் போதும். அஃது உலகை உய்விக்கும்.
View More ஆலமும் அமுதமும்: திருவாரூர் கலியாண சுந்தரன்