நரேந்திர மோடி: புதிய இரும்பு மனிதர் – புத்தக அறிமுகம்

மோதியின் அரசியல் வாழ்க்கையின் முக்கியப் புள்ளிகளை சுருக்கமாக ஆனால் முழுமையாகத் தொட்டுச் செல்கிறது அரவிந்தன் நீலகண்டன் எழுதியிருக்கும் இந்த நூல். “டீக்கடைப் பையன்” முதல் “பிரதம மந்திரி மோடி?” வரை பதினாறு அத்தியாயங்களில் மோடியின் தொடக்க காலம், ஆர் எஸ் எஸ் பிரசாரக்கிலிருந்து குஜராத் முதல்வர் வரை அவர் படிப்படியாக வளர்ந்து வந்த அரசியல் வரலாறு, அவரது சாதனைகள், மோடி எதிர்ப்பாளர்களின் குற்றச் சாட்டுகள், அதற்கான எதிர்வினைகள் என்று கச்சிதமாக அமைந்துள்ளது. ஒவ்வொரு அத்தியாயத்திலும் மோடியின் வாழ்க்கை சம்பவங்களை மட்டுமல்லாமல், அந்தக் குறிப்பிட்ட காலகட்டத்தின் ஒட்டுமொத்த அரசியல் பின்னணியையும் சேர்த்தே சொல்லிச் செல்வது இளம் வாசகர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். முக்கியமான ஆதாரபூர்வமான தரவுகளை உள்ளடக்கி, அதே சமயம் எல்லா விதமான வாசகர்களும் படித்துப் புரிந்து கொள்ளும் வகையில் எளிய மொழி நடையில் உள்ளது இந்த நூல்..

View More நரேந்திர மோடி: புதிய இரும்பு மனிதர் – புத்தக அறிமுகம்

மோதியின் வரலாற்றுத் தவறுகள்

நேருவியர்களின் போலி மதச்சார்பின்மைக்கும், இந்துத்துவர்களின் ஒருங்கிணைந்த தேசியவாதத்திற்கும் இடையேயான மோதல் தான் இது. இதில், தங்கள் கட்சியின் முது பெரும் தலைவரான படேல், தங்களுக்கு எதிர்த் தரப்பில் போய் நின்று கொண்டிருப்பதை அசௌகரியத்துடனும், திகிலுடனும் காங்கிரஸ் உணர ஆரம்பித்திருக்கிறது… குஜராத் கலவரம் தொடர்பாக நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்? நான் குற்றவாளி என்று நிரூபிக்கப் பட்டால், எனக்குத் தண்டனை கொடுங்கள்; மோதியை தூக்கில் போடுங்கள். சும்மா மன்னிப்பு கேட்க சொல்லி விட்டு விடாதீர்கள் என்று தைரியமாக காமிராவுக்கு முன் எகிறுகிறார்… இதற்கு நடுவில், ஏதோ பயங்கரமான பரபரப்பு செய்தி தருவதாக எண்ணிக் கொண்டு “மோடியின் தள்ளி வைக்கப்பட்ட மனைவி” என்று பேஸ்புக்கில் பழைய குப்பையைக் கிளறிக் கொண்டிருக்கிறார்கள்….

View More மோதியின் வரலாற்றுத் தவறுகள்

அர்த்தமற்ற புகார்கள்

அடடா! நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்தாலும் அறிவித்தார்கள், காங்கிரஸ்காரர்கள் தூக்கம் கெட்டுவிட்டது. உணவு உள் செல்வதில்லை. சதா காலமும், தூக்கத்திலும் கூட மோதி நினைவுதான். கனவிலும் வந்து பயமுறுத்திக் கொண்டிருக்கிறார் பாவம் நரேந்திர மோடி… முன்பெல்லாம் இவர்களை எதிர்த்து நின்றவர்கள் மென்மையான போக்கைக் கடைப்பிடித்து வந்தார்கள். ஆனால் நரேந்திர மோதி அதிரடிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு தினம் ஒரு கூட்டம், ஒவ்வொரு மாநிலத்தில் நடத்துவதும், அதற்கு ஏராளமான பொதுமக்கள் வந்து கேட்டு அவருக்கு ஆதரவுக் குரல் எழுப்புவதும் இவர்கள் வயிற்றில் புளியைக் கரைக்கத் தொடங்கிவிட்டது. அதன் எதிரொலிதான் காங்கிரஸ் தலைவர்களின் ஓலம், ஐயய்யோ மோடி எங்களை அப்படிச் சொல்லிவிட்டார், இப்படிச் சொல்லிவிட்டார் என்று புகார்க்காண்டம் படிக்கத் தொடங்கியிருப்பது….

View More அர்த்தமற்ற புகார்கள்

மோதியை எதிர்க்கும் தலித் ஆதரவு முகமூடிகளும், முகத்தில் அறையும் உண்மைகளும்

குஜராத் கலவரத்தின் போது 74 இந்து தலித்களை இஸ்லாமியர்கள் கொன்று குவித்திருக்கிறார்கள். 500க்கும் மேற்பட்ட இந்து தலித் பெண்களை கற்பழித்திருக்கிறார்கள். கூட்டு வன்புணர்வு செய்து தங்களின் மத வெறியை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்…. மனித உரிமை, மானுட சம நீதி பேசக்கூடிய மகானுபாவர்களே, உங்களை கேட்கிறேன். அதே 2002 குஜராத் கலவரத்தில் இறந்து போன, எந்த பாவமும் அறியாத 258 இந்துக்களின் உயிர்க்கு, உடமைக்கு அவர்களின் குடும்பங்களுக்கு என்ன பதில்? துள்ளத் துடிக்க கொல்லப்பட்ட, எரிக்கப்பட்ட அந்த அப்பாவி 14 குழந்தைகள் உள்ளிட்ட 56 இந்துக்களுக்கு நீங்கள் சொல்லும் ஆறுதல் என்ன? நடு நிலை போர்வையில் இருக்கும் அடிப்படைவாதி ஓநாய்களே, நெஞ்சு பொறுக்க முடியாமல் கேட்கிறேன்… தலித் சகோதரர்களே, தலித்களின் வாழ்வில் விளக்கேற்ற வந்திருக்கும் ஒரு சுயநலமற்ற சிறந்த அரசியல் தலைவர் நரேந்திர மோதி. மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்திலிருந்து வந்திருக்கும் உங்களில் ஒருவரான மோதியை அவமதிக்கும் செயலை, உங்கள் பின்னால் ஒளிந்து கொண்டு, இஸ்லாமிய அமைப்புகள் செய்வதன் அரசியல் நோக்கங்களையும் சதிகளையும் உணர்ந்து கொண்டு விழிப்படையுங்கள்… மேற்கு வங்கத்தில் 30,000 தலித்களை கொன்ற இடது சாரிகள் இது வரை பகிரங்க மன்னிப்பு கேட்டதில்லை. ஆனால் வெறும் 794 இஸ்லாமியர்கள் இறந்ததற்கு மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சொல்லி திரிகிறார்கள்…

View More மோதியை எதிர்க்கும் தலித் ஆதரவு முகமூடிகளும், முகத்தில் அறையும் உண்மைகளும்