ஸ்மார்த்த என்ற சொல் அதன் நேர்ப்பொருளில் வேதநெறியைக் கடைப்பிடிக்கும் அனைவரையுமே குறிக்கும். ஆயினும் நடைமுறையில், தத்துவரீதியாக ஆதி சங்கரரின் அத்வைத வேதாந்தத்தை ஏற்று, வைதிக சடங்குகளையும் நெறிகளையும் கடைப்பிடிக்கின்ற, வழிபாட்டு ரீதியாக சிவன், விஷ்ணு முதலான அனைத்து இந்து தெய்வங்களையும் பேதமின்றி வழிபடுபவர்களாக உள்ள பிராமணர்களைக் குறிப்பதாக இச்சொல் புழக்கத்தில் உள்ளது. பொதுவாக ஐயர் என்ற பின்னொட்டுடன் இவர்கள் அழைக்கப் படுகின்றனர்.. ஸ்மார்த்தர்கள் விபூதி அணிவது என்பது தொன்றுதொட்டு வருகின்ற வழக்கம் என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன.. பாரதம் முழுவதும் உள்ள பிராமணர்களை எடுத்துக் கொண்டால், அதில் ஸ்மார்த்த என்ற வகையினரில் வருவோரே மிகப் பெரும்பான்மையினர்…
View More ஸ்மார்த்தர் : ஓர் அறிமுகம்Tag: வேதநெறி
பாம்பன் சுவாமிகளின் முழுமையான வைதிக சிந்தனை
பாம்பன் சுவாமிகள் தனித்தமிழ் ஆதரவாளர் என்பதுபோல ’ஆரியத்துக்கு எதிரான அவரை செரிக்க பார்க்கும் பார்ப்பனீய தந்திரம்’ என்றெல்லாம் ஒரு சிலர் அன்பான தனி செய்திகள் அனுப்புகிறார்கள். அவர்களுக்கு: உரையிற் பணித்தவாறு வித்தைப் பதினெட்டிலும் வேதமே சிறப்புடைப் பிரமாணமென்றல் பரதகண்டத்துப் பண்டைநூலறிவுடையார் யாவரும் ஒப்பும் ஒரு முடிபினை ஏன்று கொள்ளும் எம்மாலும்… அன்றைக்கு சைவருள் சிலபலர் வேத நிந்தனை செய்ய முற்பட காரணம் வேதத்துள் பலதெய்வ வழிபாடு உண்டு என்றும் வேத சடங்குகள் குறித்த இழிவான பார்வையும். இதற்கான காரணம் முக்கியமாக அன்றுநிலவிய புரோட்டஸ்டண்ட் மனநிலை. அடிமைநிலையில் தளர்வுற்றிருந்த மக்களின் அறிவு காலனிய பிரச்சாரத்தை ஏற்றுக்கொண்டதும் ஆச்சரியமல்ல. ஆனால் சுவாமிகள் இவற்றை மறுதலிக்கிறார். கன்மகாண்டத்தை அவர் இழிவாகவும் பார்க்கவில்லை. அதனை செய்வோரை அவர் அறியாமையில் இருப்பதாகவும் சொல்லவில்லை…
View More பாம்பன் சுவாமிகளின் முழுமையான வைதிக சிந்தனைசைவ சமய நம்பிக்கை உறுதிமொழி
தமிழ்ச்சூழலில் சைவம், சைவசித்தாந்தம் குறித்து பல்வேறு குழப்படியான கருத்துக்களும், சைவத்தின் அடிப்படைகளுக்கே முற்றிலும் எதிரான கருத்துக்களும் திட்டமிட்டுப் பரப்பப்பட்டு வருகின்றன. இச்சூழலில் டாக்டர் லம்போதரன் இராமநாதன் அவர்கள் வரைந்துள்ள இந்த அருமையான பத்து அம்ச உறுதிமொழி அனைத்து தமிழ்ச்சைவர்களுக்கும் சிறந்த வழிகாட்டியாகத் திகழும்…
View More சைவ சமய நம்பிக்கை உறுதிமொழிவேதம் நிறைந்த தமிழ்நாடு – டாக்டர் ரங்கன்ஜி
டாக்டர் ரங்கன்ஜி ‘வேதம் நிறைந்த தமிழ்நாடு’ என்ற சிறப்பான குறுஞ்சொற்பொழிவுத் தொடரைக் கடந்த சில மாதங்களாக நிகழ்த்தி வருகிறார். சங்க இலக்கியங்களில் வேதம், வேதியர், வேத தெய்வங்கள், வேத வேள்விகள், வேதாந்த தத்துவம், ராமாயணம், மகாபாரதம், புராணங்கள், முருகன், சிவபெருமான், திருமால், சக்தி எனப் பலவற்றையும் பற்றிய குறிப்புகள் வரும் இடங்களையெல்லாம் எளிமையாக, அழகாக, ஆதாரபூர்வமாக எடுத்துரைக்கிறார்…
View More வேதம் நிறைந்த தமிழ்நாடு – டாக்டர் ரங்கன்ஜிசித்தர்கள் வேத மறுப்பாளர்களா: சுகிசிவம் கருத்துக்கு எதிர்வினை
‘ஓதுகின்ற வேதம்எச்சில்’ என்கிறார் சிவவாக்கியர். பார்த்தாயா வேதத்தை எச்சில் என்று சொல்லிவிட்டார் எப்படிப்பட்ட வேத மறுப்பாளர்! அடுத்த இரண்டாம் வரியில் மதியும் எச்சில் ஒளியும் எச்சில் என்கிறார். எனவே அவர் வேத மறுப்பாளர் மட்டுமல்ல. ஒளி மறுப்பாளரும் கூட என்று சொன்னால் எவ்வளவு அபத்தமோ என்று எழுதும் போதே, ’ஒளி என்றால் நெருப்பு. எச்சில் என்றால் நீர். எனவே ஆரிய ஒளியே திராவிட நீர்தான் என்று சிவவாக்கியர் சொல்லுகிறார்’ என்று அடுத்து காணொளி படைப்பாரோ என்று மனம் திடுக்கிடாமல் இல்லை… வேதமே தன்னை தானே பகடி செய்யும் தைரியம் கொண்ட நூல்தான். தன் தெய்வங்களை தானே கேள்வி கேட்கும் தைரியம் வேத ரிஷிகளுக்கு உண்டு… முருகனின் அன்னை சித்த சேனானியாகவும் வேதமாதாவாகவும் வேதத்தின் ஆத்மாகாவும் இருப்பாள் என்றால் முருகன் சித்த சேனனாகவும் சுப்ரமணியனாகவும் ஏன் இருக்க முடியாது?…
View More சித்தர்கள் வேத மறுப்பாளர்களா: சுகிசிவம் கருத்துக்கு எதிர்வினை‘வேதம் நிறைந்த தமிழ்நாடு’ ஓசூர் கருத்தரங்கம்: வீடியோ பதிவுகள்
ஓசூரில் ஜூன் 10, 2018 ஞாயிறு முற்பகல் மைத்ரி அமைதி மையம் ஏற்பாடு செய்து நடத்திய ‘வேதம் நிறைந்த தமிழ்நாடு’ கருத்தரங்கம் சிறப்புற நிகழ்ந்தது. சங்க இலக்கியத்தில் வேதப்பண்பாடு என்பது குறித்து ஜடாயுவும், நாங்கள் ஆதி இந்துக்கள் என்ற தலைப்பில் ம.வெங்கடேசனும் உரையாற்றினர்… அடுத்து, தனது உரைக்கு முன்பாக, முந்தைய பேச்சாளர்கள் கூறிய சில கருத்துக்களின் தொடர்ச்சியாக, கிராம தெய்வங்களும் வேதப்பண்பாடும் என்பது குறித்து ரங்கன்ஜி பேசினார். இறுதியாக, பாரதியாரும் வேதமும் என்ற தலைப்பில் ரங்கன்ஜி உரையாற்றினார். உரைகளுக்கு நடுவில் பார்வையாளர்களுடனான கேள்வி பதில்களும் சிறப்பாக இருந்தன. இந்த உரைகளின் முழு வீடியோ பதிவுகளையும் இங்கு காணலாம்…
View More ‘வேதம் நிறைந்த தமிழ்நாடு’ ஓசூர் கருத்தரங்கம்: வீடியோ பதிவுகள்திருக்குறள் கூறுவது தர்ம சாஸ்திரங்களே
திருக்குறளில் கூறப்பட்டிருப்பது வேதங்கள் மற்றும் தர்ம சாஸ்திரங்களின் கருத்துக்கள் தான் என்பதைச் சொல்லத் தைரியம் வேண்டும்; அதை நூலாகவும் கொண்டுவரக் கூடுதல் தைரியம் வேண்டும். அது டாக்டர் நாகஸ்வாமியிடம் இருக்கின்றது.. மன்னரைப் பற்றிக் கூறும் இடத்திலெல்லாம் தர்ம சாஸ்த்திரங்களைக் குறிப்பிடும் திருவள்ளுவர், கருணை, தயை, உறுதி, அறம் என்று மனு நீதியின் ராஜ தர்மத்தில் கூறப்பட்டுள்ள அனைத்து நற்பண்புகளின் மொத்த உருவமாக மன்னனைக் காட்சிப்படுத்துகிறார். ‘அமைச்சர்’ பற்றி அவர் விவரிப்பது நமக்கு சேர, சோழ, பாண்டிய, பல்லவ, நாயக்க மன்னர்களின் செப்புப் பட்டயங்களில் குறிப்பிடப்பட்டுள்ள பல அமைச்சர்களை நினைவூட்டுகிறது.. வரலாற்று ஆசிரியரும், தொல்லியல் ஆய்வாளரும், இலக்கிய எழுத்தாளருமான முன்னாள் தமிழகத் தொல்லியல் துறையின் இயக்குனர் டாக்டர் நாகஸ்வாமி அவர்கள் எழுதியுள்ள “THIRUKKURAL – An Abridgment of Sastras” என்கிற நூல் இந்த நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது…
View More திருக்குறள் கூறுவது தர்ம சாஸ்திரங்களேவேதம் நிறைந்த தமிழ்நாடு: நூல் வெளியீடு
தொல்லியல் ஆராய்ச்சியாளரும் அறிஞருமான டாக்டர் ஆர்.நாகஸ்வாமி எழுதிய “Tamil Nadu – The Land of Vedas” என்கிற ஆங்கில நூல் வெளியீட்டு விழா இம்மாதம் 12-ம் தேதி சென்னையில் நடந்தது. “தமிழகத்தின் பழம்பெருமை வாய்ந்த கலாச்சாரம் வேதத்தை அடிப்படையாகக் கொண்டது தான். சிறப்பு வாய்ந்த தமிழ்ப் பண்பாட்டிற்கு வேதத்தின் பங்களிப்பு அளவிலடங்காது. என்னுடைய இந்த நூலை இரண்டு பாகங்களாகப் பிரிக்கலாம். முதல் பாகத்தில் தமிழகத்திற்கும், தமிழ் கலாச்சாரத்திற்கும் வேதங்கள் ஆற்றிய பங்கை தமிழ் இலக்கியங்களின் சான்றுகள் மூலமாக நிறுவியுள்ளேன். புறநானூறு முதற்கொண்டு சங்ககால இலக்கியங்களில் ஆரம்பித்து தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளவற்றை ஆராயந்து சொல்லியிருக்கிறேன். இரண்டாம் பாகத்தில் கல்வெட்டுக்கள், செப்புப்பட்டயங்கள் மூலம் தமிழகத்துக்கு வேதத்தின் பங்களிப்பையும் நிறுவியுள்ளேன். இந்தப் புத்தகத்தில் கூறப்பட்டுள்ள ஒவ்வொரு விஷயமும் ஆதாரங்களின் அடிப்படையில் கூறப்பட்டவை” என்றார் டாக்டர் நாகஸ்வாமி….
View More வேதம் நிறைந்த தமிழ்நாடு: நூல் வெளியீடுதவ முனிவனின் தமிழாகமம்
திருமுறைகள் இருக்கு முதலிய வேதங்களை பெயர் சுட்டிக் குறிப்பிடுவதும் அவை விதித்த கருமங்களை செய்யுமாறு பணிப்பதும் பல இடங்களில் காணலாம். சைவத்தின் சிறப்பு நூலான ஆகமங்களின் கருத்துக்கள் பலவற்றை திருமூலர் பெருமான் அருளிய திருமந்திரத்தில் பரக்கக் காணலாம்… ககாராதி ஐந்தும், அகாராதி ஆறும், சகாராதி நான்கும் என்றெல்லாம் இந்தப் பாடலில் உள்ளது. இப்படி எல்லாம் தமிழ் நெடுங்கணக்கில் எழுத்துக்கள் உள்ளனவா.? இல்லை. இது பிரசித்தி பெற்ற பஞ்சதசாக்ஷரி என்ற ஸ்ரீ வித்யா உபாசனையின் மஹாமந்திரமே ஆகும்… சிவாகம ஆய்வுகள் மேம்படுத்தப்பட வேண்டும். ஆகமங்கள் குறித்து நடைபெற்று வரும் ஆய்வுகள் போதுமானதாக இல்லை என்றே அறியலாம். ஒரு சில ஆகமங்கள் தவிர இன்னும் பல அச்சேறவில்லை. அச்சேறிய ஆகம நூல்களிலும் இருக்கிற பாடபேதம், பிற்சேர்க்கை, விளக்க குறைவு, பொருந்தாத சொற்கள் என்று நீண்ட ஆய்வுகள் நடந்ததாக அறிய முடியவில்லை…
View More தவ முனிவனின் தமிழாகமம்வேதம் புனிதமடைந்தது!
இந்து ஆன்மீக சாதகர் சிவானந்த சர்மா அவர்கள், கர்நாடகத்தில் உள்ள பாரம்பரியம் மிக்க சிருங்கேரி மடத்தின் ஆசிரமத்தில் இணைந்துள்ளார்.. பறையர் சமூகத்தைச் சேர்ந்த சிவானந்த சர்மா அவர்கள், திரு. பி.ஆர்.குஞ்சன் மற்றும் திருமதி தங்கம்மா தம்பதியரின் இளைய மகன் ஆவார்…இறுக்கமான பழமைவாத நிலைப்பாட்டைத் துறந்து, உண்மையான இந்து நெறிகளின் அடிச்சுவட்டில்… இதனுடன் நின்று விடாமல், மேன்மேலும் இச்செயல்பாடு வளர வேண்டும்…
View More வேதம் புனிதமடைந்தது!