முருகனை நாடிச் செல்ல ஒரு முந்துதமிழ்ப் பயணவழிகாட்டி

முந்து தமிழ் மாலை என்ற சொற்பதம் திருமுருகாற்றுப்படையைக் குறிக்க நல்லதொரு சொல்லாகும். இது காலத்தால் முந்தியது. உள்ளடக்கச் சிறப்பால் முந்தியது. இலக்கியச் செழுமையால் முந்தியது. இந்நூல் முருகனைப் பலவாறாகப் போற்றித் துதி செய்கிறது. அவனைப் போற்ற இது அரிய ஒரு நூலாகும். முருகாற்றுப்படையை சொன்னால் முருகன் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. பிற்காலத்தைய பக்தி நெறி வளர்ச்சிக்கு இந்நூலின் பங்களிப்பு மிகப்பெரியது. பக்தி நெறிக்கு மட்டுமல்ல அற இலக்கிய எழுச்சிக்கும் காவிய எழுச்சிக்கும் கூட இந்நூல் பங்காற்றியிருக்கிறது.

View More முருகனை நாடிச் செல்ல ஒரு முந்துதமிழ்ப் பயணவழிகாட்டி

தலபுராணம் என்னும் கருவூலம் – 6

வெளித்தோற்றத்தில் இந்த இரட்டைகளிடையே வேறுபாடு உள்ளதுபோலக் காணப்பட்டாலும், அவை ஒன்றையொன்று தழுவியே நிற்கின்றன. பாமரம், வைதிகத்தை நோக்கி முன்னேற, வைதிகம் பாமரத்தைத் தழுவி அணைத்துக் கொள்வதை, இந்துப் பண்பாட்டின் வெளிப்பாடுகளாகிய இசை, இலக்கியம், சமயம் ஆகிய அனைத்திலும் காணலாம்…. சிறுதெய்வங்களுக்குத் தலபுராணங்கள் ஏற்றம் தந்து விடுகின்றன. நாளடைவில் சிறுதெய்வங்களும் வைதிகக் கடவுளராகி வேதநெறியில் வழிபடத் தக்கோராக மாற்றம் அடைந்துவிடுகின்றனர்.

View More தலபுராணம் என்னும் கருவூலம் – 6

கொடியேற்ற விழா என்னும் தெய்வீக நிகழ்வு

கொடிப்படம் நமக்கு அஞ்சேல் என்று அபயம் காட்டும் இறைவனைக் குறிக்கிறது. பதாகை முத்திரை வடிவமாய் இறைவன் தனது வலது கரத்தை விரித்துக் காட்டினாற் போல இது அமைந்துள்ளது… எந்த நாட்டில் கொடிமரம் இருக்கிறதோ அங்கு அரசு விருத்தியாகும்.. சர்வ வாத்திய கோஷம் முழங்க மண் வெட்டியால் மண்ணை மும்முறை எடுத்து தாம்பாளத்தில் சேர்த்து யாகசாலையில் கொண்டு சென்று வைப்பார்… வீதியின் ஒன்பது திசைகளிலும் சந்தியாவாஹனம் செய்யப்படும். இதனால் இதை “நவசந்தி ஆவாஹனம்” என்பது வழக்கு.

View More கொடியேற்ற விழா என்னும் தெய்வீக நிகழ்வு

சோமபானம் என்னும் மர்மம்

இந்திய ஆன்மிக அனுபவம் என்பதை போதை என்பதாக மட்டுமே காணும் ஐரோப்பிய இனமையப் பார்வையையும் இங்கு காணலாம். மேலும் ஆரிய-படையெடுப்புக் கோட்பாட்டாளர்களுக்கு இந்தியாவுக்கு முழுக்க முழுக்க அன்னியமானதான ஒரு தாவரத்தைக் கண்டடைய வேண்டிய அவசியமும் இருக்கிறதென்பது விஷயத்தை இன்னும் சிக்கலாக்குகிறது…. ஆரியப் படையெடுப்புக் கோட்பாட்டுக்கு நவீன ஆராய்ச்சி அளித்துள்ள மற்றொரு அடி.

View More சோமபானம் என்னும் மர்மம்

வேதநெறியும் தமிழ்சைவத்துறையும் – 4

பசு, பதி, பாசம் இம்மூன்றும் உள்பொருள்கள் எனப் பேசுவது சைவசித்தாந்தம்; சம்பந்தர் இந்தக் கலைச் சொற்களை வேதத்தினின்றும் எடுத்து ஆண்டார்… வைதிகர் என்னும் பெயர் பிராமணர்களுக்கு மட்டுமே வழங்குதல் பிற்காலத்தில் நேர்ந்து விட்டபிழை; வேதவழக்கை உடன்பட்ட அனைவரும் வைதிகரே.

View More வேதநெறியும் தமிழ்சைவத்துறையும் – 4