எல்லா ஆசைகளையும் விட்டொழிப்பது என்பது சாமான்ய காரியமல்ல என்றாலும், இந்த வகையான சிறிய ஆசைகள் கூட இல்லாது இருப்பவனுக்கே மனம் ஒரு ஸ்திரநிலைக்கு வந்து அவனை மேலும் உள்நோக்கிச் செல்ல வைக்கும். அவனுக்கே தத்துவ தரிசனமும் கிட்டும். […]
View More ரமணரின் கீதாசாரம் – 13Tag: ஸ்ரீ ரமண மகரிஷி
ரமணரின் கீதாசாரம் – 5
ஒரு பொருளின் இருப்பையும், இல்லாமையையும் உணர்கிறோமே, அந்த உணர்வு என்பதற்கு ஒரு வடிவமும் இல்லை, அதை நாம் நம் புலன்களாலும் அறிவதில்லை. ஆக புலன்களால் அறியப்படுவது என்பது நம்மைச் சுற்றி பிரபஞ்சத்தில் உள்ள மற்ற பொருட்களுக்கே அன்றி நமக்கோ நமது உணர்வுக்கோ இல்லை என்றே ஆகிறது.
View More ரமணரின் கீதாசாரம் – 5ரமணரின் கீதாசாரம் – 4
எது என்றும் உள்ளதோ அது நிலைத்து நிற்கும், எதற்கு இருப்பு இல்லையோ அது இல்லாததே. இன்று இருக்கிறது, நாளை இல்லாது போகும் தன்மை கொண்டது அது. ஆக முன்னும் பின்னும் இல்லாது இடையில் மட்டும் இருக்கும் தேகத்தை எப்படி நிலையானது என்று கொள்ள முடியும்?
View More ரமணரின் கீதாசாரம் – 4ரமணரின் கீதாசாரம் – 2
தேகம் வேறு, ஆன்மா வேறு என்று பகுத்து அறியும் அறிவே பகுத்தறிவு. அது அனைத்து சீவராசிகளையும் ஒன்றாகவே பார்க்க வைப்பதால், அது ஒரு புண்ணியச் செயல். அப்படியில்லாது இவர் வேறு, அவர் வேறு என்ற ரீதியில் நான்-நீ என்று பகுத்துக் காட்டும் அறிவு பகுத்தறிவு ஆகாது. அப்படி பேதங்களைப் புகுத்தும் எதுவும் பாவச் செயல்களே.
View More ரமணரின் கீதாசாரம் – 2ரமணரின் கீதாசாரம் – புதிய தொடர்
கடல் போன்ற உபநிடதங்களைக் கடைந்து, கண்ணன் வழங்கிய ஆரமுதான கீதையின் சாரமாக, நமக்காக பகவான் ரமணர் தந்த, சுருக்கமான பொருட்செறிவு மிகுந்த “பகவத்கீதாசாரம்” பற்றிய புதிய தொடர்!
View More ரமணரின் கீதாசாரம் – புதிய தொடர்பிறப்பும் சிறப்பும் இறப்பும் – 3
ஒருவரை நல் வழியில் கொண்டு வருவதற்கு, மரண பயத்தைப் போன்றதொரு சாதனம் வேறு கிடையாது. ஞானம் பெறுவதற்கும், நாம் உலகில் நல்லதையே நினைத்து, நல்லதையே பேசி, நல்லதையே செய்வதற்கும் அது ஒரு பயனுள்ள சாதனம் தான்…. “நான்” எனும் கணவன் இறந்துவிட்டால் அவனது மூன்று மனைவிகளும் கைம்மை அடைவதைப்போல, கர்த்தா நான் இல்லை என்றால் கர்மம் மூன்றும் நம்மை ஒட்டாது…
View More பிறப்பும் சிறப்பும் இறப்பும் – 3பிறப்பும் சிறப்பும் இறப்பும் – 2
இந்திய பண்பாட்டில் திளைத்த நமது முன்னோர்கள் பிறவிகள் பற்றி எவ்வளவு முக்கியமான விஷயங்களை நமக்கு அரிய பொக்கிஷங்களாகத் தந்து விட்டுச் சென்றிருக்கின்றனர் என்ற பெருமிதம் வந்தது. வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை விதைத்தவன் தினை அறுப்பான் என்றும், செய்யும் தொழிலே தெய்வம், தெய்வம் நின்று கொல்லும் என்றெல்லாம் சொன்னார்களே, நாம் அவை அனைத்தையும் சரியாக உணர்ந்திருக்கிறோமோ என்ற சந்தேகமும் வந்தன.
View More பிறப்பும் சிறப்பும் இறப்பும் – 2குரு வலம் தந்த கிரி வலம்
“பகவத் கீதை”யின் சாராம்சத்தை சுருக்கமாக விளக்குமாறு கேட்டேன். அவர் “பணியில் கருத்தாய் இரு; அது அளிக்கும் பலன்களில் நாட்டம் கொள்ளாதே” என்பதுதான் அதன் மையக் கருத்து என்றார். அதை உடனே புரிந்துகொண்டேன் என்றோ, ஒத்துக்கொண்டேன் என்றோ என்னால் சொல்ல முடியாது. அதன் மகிமையையும், பாரத கண்டத்தின் பண்டைய வழிகள் எப்படி மனிதனை நல்வாழ்க்கையின் மூலம் உயர்த்திச் செல்கிறது என்பதையும் நான் அப்போது உணர்ந்திராவிட்டாலும், அந்த கீதையின் கருத்துதான் என்னை மேலும் படித்து அறிந்து கொள்ள உதவியது என்று நிச்சயமாகச் சொல்ல முடியும்.
View More குரு வலம் தந்த கிரி வலம்மஹா யோகம்
…உபதேச உந்தியார் எனும் உபதேச நூல் முதலாக வந்தது. அது உருவான கதையைக் கேட்பதற்கும் சுவாரசியமாக இருக்கும். அவரது முதன்மை அடியார்களில் ஒருவரான முருகனார்தான் அதற்குக் காரணகர்த்தா ஆனார். முருகனார் ஒரு தமிழ் பண்டிதர். அவர் ரமணரை முதன் முதலில் பார்க்க வரும்போதே ஒரு செய்யுள் இயற்றிக் கொண்டு வந்தபோதும், ரமணரைக் கண்ட மாத்திரத்தில் சப்த நாடியும் ஒடுங்கி அவரது ஒளி பொருந்திய கண்களையும் முகத்தையும் பார்த்துப் பிரமித்துப்போய் செய்வதறியாது நின்று விட்டார். ரமணருக்கு நிலவரம் தெரிந்து சற்றே கிண்டலாக,…
View More மஹா யோகம்