ஆர்யா என்ற சந்தத்தில் அமைந்த அழகும் இனிமையும் ததும்பும் இந்தத் துதிப்பாடல் ஆதிசங்கரர் அருளியது என்று சம்பிரதாயமாக கருதப்படுகிறது.. இளஞ்சூரியனென முகமலர் – கருணை ரசம் நிறைந்து ததும்பும் கண்கள் – உயிர்தருவோனைப் போற்றுவேன் – அழகிய மகிமையுடையோன் – அஞ்சனையின் பேறானோன்..
View More ஸ்ரீ ஹனுமத் பஞ்சரத்னம் – தமிழில்Tag: ஹனுமான்
அனுமன் எனும் ஆதர்சம்
நாகங்களின் தாயான சுரசை என்பளை விட்டு அனுமரை விழுங்கச் சொல்லி நிர்பந்திக்கிறார்கள். அனுமர், அநாவசியமாக சண்டை போடாமல், புத்தியை மட்டும் பயன்படுத்தி அவள் வாயினுள் நுழைந்து திரும்பி சாகசம் பண்ணித் தப்பிப்பதன் மூலம், தேவையில்லாத நேரத்தில் சக்தியைச் செலவழிக்கக் கூடாது. அடுத்தது சிம்ஹிகை என்ற அரக்கியிடம் சிக்கினார். அனுமர், அங்கே பலத்தைப் பிரயோகித்தார். தேவையான இடத்தில் பலப்பிரயோகம் பண்ணிடணும்… சீதையிடம் தன்னை அறிமுகப் படுத்திக் கொள்ளும் விதம், “தங்கள் கணவரால், தாங்கள் எங்கேயிருக்கிறீர்கள் என்று கண்டு வரப் பணிக்கப்பட்ட நபர்” என்ற வாசகத்தில் துளியும் மிகையன்றி, துளியும் குறையன்றி சொல்லும் நேர்மையைப் போதிக்கிறார்….
View More அனுமன் எனும் ஆதர்சம்ஸ்ரீமத் ராமாயணக் கதாபாத்திரங்களின் தெய்வீகப் பின்னணி – 7
வானர சேனைகள் கடல் கடந்து இலங்கை போவதற்கு ராமர் கடல் அரசனிடம் வேண்டிக்கொண்டார். ஆனால் அந்த வேண்டுகோளுக்குப் பயன் ஏதும் இல்லாது போகவே, அவர் கடல் அரசனுக்கு ஓர் எச்சரிக்கை விடுத்தார். அதைக் கேட்ட அரசன் உடனே அங்கு தோன்றி கற்களால் ஆன பாலம் ஒன்றை நளன் கட்டலாம் என்று கூறி, அவரிடம் மன்னிப்பு கேட்டான். … உத்தர காண்டம் வால்மீகி ராமாயணத்தின் பிற்சேர்க்கையாக இருக்கலாம் என்றும், ராமருடைய பட்டாபிஷேகத்துடன் முடியும் யுத்த காண்டமே ராமாயணத்தின் இறுதிப் பகுதியாக இருந்திருக்க வேண்டும் என்று சில பக்தர்களின் எண்ணமாக இருக்கிறது. ஆறு காண்டங்களில் தொடராக நடக்கும் நிகழ்வுகளைக் கண்ட நமக்கு, ஏழாவது காண்டம் துயர் நிறைந்ததாக உள்ளதால் அது ஒரு இடைச் செருகல் என்று சொல்லப்படுவது ஒரு நிறைவான வாதமாக எடுபடவில்லை….
View More ஸ்ரீமத் ராமாயணக் கதாபாத்திரங்களின் தெய்வீகப் பின்னணி – 7ஸ்ரீமத் ராமாயணக் கதாபாத்திரங்களின் தெய்வீகப் பின்னணி – 6
போகும் வழியில் காணப்படும் மலைக் குன்றுகளையும், நதி ஓடைகளையும் “சீதை எங்கே? எங்கே?” என்று ராமர் கேட்டுக்கொண்டே போக, அவைகளுக்கு ராவணன் மேல் இருந்த அச்சத்தால் அவை எல்லாமே மௌனம் சாதித்தன. அவ்வாறு அவர் மான்களின் கூட்டத்தைப் பார்த்துக் கேட்கவே அவை யாவும் ராமருக்கு உதவி செய்வது போல, எல்லாமே வானத்தை பலமுறை தொடர்ந்து பார்த்துக்கொண்டே, தெற்கு நோக்கிப் பாய்ந்தோடின. அதிலிருந்து சீதை வான் வழியே, தென்திசை நோக்கிக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறாள் என்று லக்ஷ்மணன் புரிந்துகொண்டான்… சுக்ரீவனை விட வாலி வலிமை படைத்தவன் என்று இருந்தாலும், வாலியை விடுத்து சுக்ரீவனைத் தனது கூட்டாளியாக ராமர் ஏன் தேர்ந்தெடுத்தார்? மற்ற கரடிகள், குரங்குகள் போல வாலி, சுக்ரீவன் இருவருமே ராமரின் உதவிக்காக இறைவனால் உருவாக்கப்பட்டிருந்தபோதும், வாலியின் நடத்தை எதிர்பார்த்ததற்கு மாறாக இருந்தது….
View More ஸ்ரீமத் ராமாயணக் கதாபாத்திரங்களின் தெய்வீகப் பின்னணி – 6ஸ்ரீமத் ராமாயணக் கதாபாத்திரங்களின் தெய்வீகப் பின்னணி – 4
தங்களது குறிக்கோளுக்காக மனிதர்களாக அவதரித்து இவ்வுலகில் கடும் துன்பங்களை இருவருமே அனுபவித்திருந்தாலும், அதில் ராமரைவிட சீதையின் பங்கே மிக அதிகமாக இருந்தது. அவர்கள் பட்ட கஷ்டங்களைப் படிக்கும்போது நமது கண்களில் கண்ணீர் தானே துளிர்க்கும். அப்படியென்றால் விஷ்ணுவும் அவரது பத்தினியும் அவ்வளவு துன்பப்பட்டார்களா என்று கேட்டால், “இல்லையே! தெய்வ நியதிப்படி தெய்வங்கள் எப்படி கஷ்டங்களுக்கு உள்ளாகும்?” என்பதுதான் பதிலாக இருக்கும். அப்படியானால் “அவர்கள் என்ன துன்பப்பட்டதுபோல நடித்தார்களா?” என்பதுதான் நமது அடுத்த கேள்வியாக இருக்கும். அலசிப் பார்த்தால் அப்படி நினைப்பதும் சரியில்லை….
View More ஸ்ரீமத் ராமாயணக் கதாபாத்திரங்களின் தெய்வீகப் பின்னணி – 4எழுமின் விழிமின் – 30
ஒரு நீர்த்துளி விழுந்ததும், முத்துச் சிப்பிகள் தமது ஓடுகளை அக்கணமே மூடிக்கொண்டு கடலின் அடிமட்டத்துக்குப் பாய்ந்து சென்று விடுகின்றன. அங்கே அந்த நீர்த்துளியைப் பொறுமையுடன் முத்தாக வளர்க்கக் காத்திருக்கின்றன. நாமும் அதுபோலவே இருக்க வேண்டும்…. நீ உண்மையாகவே விரும்பிய ஏதேனும் உனக்குக் கிடைக்காமல் இருந்ததா? அப்படி ஏற்பட்டிருக்க முடியாது. ஏனெனில் தேவை தான் மனித உடலை உண்டாக்குகிறது. முதலில் ஒளி இருந்தது. அதுதான் உனது தலையில், ‘கண்கள்’ என்று அழைக்கப்படுகிற துளைகளைப் போட்டது….. இதய பூர்வமான உணச்சிதான் வாழ்க்கை ஆகும்; அதுவே சக்தி. அதுவே வீரியம். அது இல்லாமல் அறிவுத் திறமையைக் கொண்டு எவ்வளவுதான் பாடுபட்டாலும் கடவுளை எய்த முடியாது….
View More எழுமின் விழிமின் – 30இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 21
இருப்பதற்குள் வலிமை மிக்க ஆயுதமான பிரம்மாஸ்திரம் இந்திரஜித்திடம் உள்ளதால், முதலில் இராவணன் அவனை அனுப்பினான்… தூதனுக்குரிய தண்டனை எதுவானாலும் கொடுக்கலாம்; ஆனால் தூதனைக் கொல்வது கூடாது என்று விபீஷணன் சொன்னான்… தனக்கு வந்த கோபத்தால் எப்படி இருந்த ஊர் இப்படியாகிப் போனதே என்று ஹனுமன் மனதிற்குள் வருந்தினான்… ததிமுகாவின் வயதிற்கும் மதிப்புக் கொடுக்காமல் தன் பங்கிற்கு அங்கதனும் அவரை நையப்புடைத்து அடித்து நொறுக்கி விட்டான்… இதைத்தான் தெரிந்தோ தெரியாமலோ கடவுள் இல்லை என்பவர்கள் கூட ‘மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு’ என்றார்கள்…
View More இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 21இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 20
அப்போது சீதை ஒரு தெய்வீக அன்னையாக வந்து ஆண், பெண், மற்றும் திருநங்கைகளைக் கூட எந்தவொரு வித்தியாசமும் பார்க்காது வாஞ்சையோடு கட்டி அணைத்து ஆரத் தழுவுவாள்… வேறு எதற்குமே இல்லாவிட்டாலும் நம்மை உலகுக்குக் கொண்டு வந்திருப்பதன் ஒரே ஒரு காரணத்திற்காக மட்டுமாவது நாம் பெற்றோர்களுக்கு நன்றிக் கடன்பட்டுள்ளோம். முன்பே இராமர் சொன்னது போல, அந்தக் கடனை நாம் என்றும் திருப்பிக் கொடுக்கவே முடியாது… அரக்கர்கள்தான் வெவ்வேறு உருவம் எடுத்து வருவதில் வல்லவர்கள் ஆயிற்றே, அதனால் தோட்டத்தை அழித்துக் கொண்டிருக்கும் வானரமும் வேறு எந்த அரக்கனோ….
View More இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 20இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 18
ஜாம்பவான் கூறினார் – “குரங்குகளில் புலியே! எழுந்திரு! அகன்ற கடலை நீ தாண்டுவாய்”.. மிக வலுவான சக்தி இருக்கும் அனுமானுக்கே அத்தகைய ஊக்கம் தேவைப்பட்டதென்றால், மற்றவர்களைப் பற்றிக் கேட்கவா வேண்டும்?… ஒருவனது பிறப்பிலிருந்து இறப்பு வரை பெண்ணினம் காட்டும் அன்பும் அரவணைப்பும் இல்லாமல் மனித குலமே தழைத்து வளர்ந்திருக்க முடியாது என்று உணர்ந்து அவர்களுக்கு அன்புடன் செலுத்தப்படும் ஒரு நன்றியுணர்ச்சிக் காணிக்கைதான், ஆதியிலிருந்தே இந்த மாதிரியான வழக்கம் இருப்பதன் காரணம்…
View More இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 18இராமன் – ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 15
பணக்காரனோ ஏழையோ, துன்பத்துடனோ இன்பத்துடனோ, குறையுடனோ குறையில்லாமலோ உள்ள நண்பன்தான் ஒருவனுக்குக் கடைசி புகலிடம்…. தர்ம நியதிப்படி தன் தம்பி, தன் மகன், நற்குணங்கள் கொண்ட தன் மாணவன் இம்மூவரும் சொந்த மகன்கள் போலவே நடத்தப்பட வேண்டும்….வாலி தனது தம்பியை தன் மகன் போல் கருதி அதற்குண்டான உரிமையைக் கொடுத்திருக்க வேண்டும். அப்படிச் செய்யாது அவமதித்ததாலும், அவனது மனைவியை அபகரித்துக்கொண்ட பாவத்திற்காகவும் அவனுக்கு ராஜநீதிப்படி தண்டனை கொடுக்கப்பட்டிருக்கிறது…
View More இராமன் – ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 15