மிகப் பெரிய பாறைகளின் அடிப்பகுதியைக் குடைந்து குடைந்தே உருவாக்கப் பட்டுள்ள ஒற்றைக் கல் கோயில்கள் இவை. உள்ளே தண்ணென்ற குளிர்ச்சியுடன் இருக்கின்றன. மொத்தம் நான்கு குகைக் கோயில்கள். ஒவ்வொன்றிலும் கருவறையும், தூண்களுடன் கூடிய மண்டபங்களும், அற்புதமான சிற்பங்களும் உள்ளன…. கீழே தெரியும் பிரம்மாண்டமான குளம் அகஸ்திய தீர்த்தம். குளத்தின் மூன்று புறமும் மலைகள். ஒரு புறம் பாதாமி நகரம். குளத்தில் இறங்கிச் செல்ல நீண்ட படிக்கட்டுகள் எல்லாப் பக்கங்களிலும் அமைக்கப் பட்டுள்ளன… சாளுக்கிய கலைப் படைப்புகளை காஞ்சி, மகாபலிபுரத்தில் உள்ள பல்லவ சிற்பங்களுடன் ஒப்பிடுவது தவிர்க்க முடியாதது. இரண்டும் ஒரே காலகட்டத்தைச் சார்ந்தவை என்பதால் ஒரே வித கலைப்பாணிகளைப் பார்க்க முடிகிறது. இரண்டுக்கும் இடையில் கலைரீதியான போட்டியும் இருந்திருக்கலாம்…
View More ஒரு கர்நாடகப் பயணம் – 3 (பாதாமி)Tag: அருங்காட்சியகம்
ஆழமில்லாத கடலும் ஆழமான நம்பிக்கைகளும்
ஆழமில்லாத அந்த கடல் பகுதியில் இந்த தேசத்தின் பல பகுதிகளில் வாழும் இந்துக்கள் தங்கள் பெற்றோர், முதாதையர்களுக்கு இறங்கி நின்று தர்ப்பணம் என்று அழைக்கபடும் அஞ்சலியை செலுத்துகிறார்கள். எண்ணற்ற இந்திய மொழிகளின் தொனியில் சம்ஸ்கிருத மந்திரங்கள் ஒலிப்பதை கேட்கமுடிகிறது. இங்கு செய்யும் இந்த புனித காரியத்தால் அவர்களது ஆத்மாக்கள் சாந்தியுடன் சொர்க்கம் அடையும் என்ற ஆழந்த நம்பிக்கை. வருபவர்களில் பலர் தங்கள் சிறுவயது குழந்தைகளுடன் வந்திருக்கும காட்சியை கண்டபோது அந்த பிஞ்சுமனங்களில் இப்படிவிதைக்கபடும் நம்பிக்கை விதைகள் தான் இந்து மதம் என்ற அழியாத விருட்சம் பல ஆயிரமாண்டுகளாக தொடர்ந்து வளர்கிறதோ என்ற எண்ணம் எழுந்தது.
View More ஆழமில்லாத கடலும் ஆழமான நம்பிக்கைகளும்ஸ்ரீ பத்மநாபனின் பொற்களஞ்சியம் யாருக்கு சொந்தம்?
(மூலம்: டாக்டர் ஆர்.நாகசாமி) எங்கும் நிறைந்த, எல்லாம் வல்ல கடவுளை, சட்ட வரையறைக்கு உட்பட்ட ஒரு நபர் போலக் காண முடியுமா? இத்தகைய “கடவுளால்” சொத்துக்களுக்குச் சொந்தம் கொண்டாட முடியுமா?… கடந்த சில பத்தாண்டுகளில் (அருங்காட்சியகங்களில் வைத்திருந்த) விலைமதிக்க முடியாத பல அரிய புதையல்களுக்கு என்ன நேர்ந்தது என்றும் நாம் நன்றாகவே அறிவோம்… இச்செல்வங்களின் மதிப்பல்ல, கேரளத்தின் மேன்மையே உலகமெல்லாம் அறியும்படி வெளிக்கொணரப் பட்டுள்ளது …
View More ஸ்ரீ பத்மநாபனின் பொற்களஞ்சியம் யாருக்கு சொந்தம்?