பாம்பன் சுவாமிகள் தனித்தமிழ் ஆதரவாளர் என்பதுபோல ’ஆரியத்துக்கு எதிரான அவரை செரிக்க பார்க்கும் பார்ப்பனீய தந்திரம்’ என்றெல்லாம் ஒரு சிலர் அன்பான தனி செய்திகள் அனுப்புகிறார்கள். அவர்களுக்கு: உரையிற் பணித்தவாறு வித்தைப் பதினெட்டிலும் வேதமே சிறப்புடைப் பிரமாணமென்றல் பரதகண்டத்துப் பண்டைநூலறிவுடையார் யாவரும் ஒப்பும் ஒரு முடிபினை ஏன்று கொள்ளும் எம்மாலும்… அன்றைக்கு சைவருள் சிலபலர் வேத நிந்தனை செய்ய முற்பட காரணம் வேதத்துள் பலதெய்வ வழிபாடு உண்டு என்றும் வேத சடங்குகள் குறித்த இழிவான பார்வையும். இதற்கான காரணம் முக்கியமாக அன்றுநிலவிய புரோட்டஸ்டண்ட் மனநிலை. அடிமைநிலையில் தளர்வுற்றிருந்த மக்களின் அறிவு காலனிய பிரச்சாரத்தை ஏற்றுக்கொண்டதும் ஆச்சரியமல்ல. ஆனால் சுவாமிகள் இவற்றை மறுதலிக்கிறார். கன்மகாண்டத்தை அவர் இழிவாகவும் பார்க்கவில்லை. அதனை செய்வோரை அவர் அறியாமையில் இருப்பதாகவும் சொல்லவில்லை…
View More பாம்பன் சுவாமிகளின் முழுமையான வைதிக சிந்தனைTag: ஆகமம்
ஆதி சைவர்கள் என்ற தமிழக அந்தணர்கள்
ஆதிசைவர் என்ற சொல்லின் பொருளும் அவ்வாறு அழைக்கப்படும் மரபார் குறித்த தெளிவின்மையும் தமிழ் மக்களிடையே ஏற்பட்டிருப்பதால் இந்த வினா விடைத் தொகுப்பை எழுதியுள்ளேன்… சைவாகமங்கள் தொடர்பான வரலாற்று ஆதாரங்கள் பொதுயுகம் 5ம் நூற்றாண்டு முதலே கிடைக்கின்றன. இதன்படி, சைவாகம மரபு 1500 ஆண்டுகள் பழமையானது என்று உறுதிபடக் கூறலாம்.. அடிப்படையில் வைதிகர்கள் என்பதால், மற்ற பிராமணர்களைப் போலவே, ஆண்கள் உபநயனம் (பூணுல்) என்ற சடங்கின் மூலம் பிரம்மோபதேசம் பெற்று வேதங்களை ஓதுவதற்கும் வேள்விக் கிரியைகளை செய்வதற்கும் தகுதி பெறுகின்றனர்.. அவ்வாறாயின் கடந்த காலங்களில் ஏன் பிற அந்தணர்கள் கோயில் அர்ச்சகர்களை, குறிப்பாக ஆதிசைவர்களை ஒதுக்கி வைத்தனர்? இலங்கையிலுள்ள அந்தணர்கள் என்பது இவர்கள் தானா?…
View More ஆதி சைவர்கள் என்ற தமிழக அந்தணர்கள்சைவ சமய நம்பிக்கை உறுதிமொழி
தமிழ்ச்சூழலில் சைவம், சைவசித்தாந்தம் குறித்து பல்வேறு குழப்படியான கருத்துக்களும், சைவத்தின் அடிப்படைகளுக்கே முற்றிலும் எதிரான கருத்துக்களும் திட்டமிட்டுப் பரப்பப்பட்டு வருகின்றன. இச்சூழலில் டாக்டர் லம்போதரன் இராமநாதன் அவர்கள் வரைந்துள்ள இந்த அருமையான பத்து அம்ச உறுதிமொழி அனைத்து தமிழ்ச்சைவர்களுக்கும் சிறந்த வழிகாட்டியாகத் திகழும்…
View More சைவ சமய நம்பிக்கை உறுதிமொழிஆகமங்கள் கூறும் ஆலய வழிபாடு – ஒரு பார்வை
சிவாகமங்கள் பரமசிவனால் ஐந்து மாமுனிவர்களுக்கு அருளப்பெற்றவை ஆகும். இந்தச் சிவாகமங்களை விளக்குவதற்காக 18 சிவாச்சார்யர்கள் பிற்காலத்தில் 18விதமான நூல்களை எழுதியுள்ளனர். அவைகள் மூலமான சிவாகமங்கள் கூறும் விளக்கத்தை மேலும் விளக்கவே அவைகள் உருவானவை. சிவாகமங்களில் காமிகம், காரணம், மகுடம் என்கிற ஆகமங்கள் முழுமையாகக் கிடைக்கின்றன. இந்த ஆகமங்களின் வழியிலேயே கோவில் வழிபாடுகள் இடம்பெறுகின்றன.
View More ஆகமங்கள் கூறும் ஆலய வழிபாடு – ஒரு பார்வைஆகம வழிபாட்டில் மகத்துவம் மிக்க தீக்ஷை முறைகள்
சிவாகம தீக்ஷை சைவசித்தாந்த தத்துவ உட்செறிவு மிக்கது. இதனால், இக்கிரியையில் வெளிப்படையான சடங்குகளை விட, உள்முகமான செயற்பாடுகளே அதிகமாக இருக்கக் காணலாம்… சாந்தீத கலை, சாந்தி கலை, வித்யாகலை, பிரதிஷ் டா கலை, நிவிர்த்தி கலை ஆகிய கலைகளை குறிக்குமாறு முறையே சிரசு, நெற்றி, மார்பு, நாபி, முழங்கால் ஆகியவற்றில் பூக்கள் கட்டித் தொங்க விடப்படும். பின், மந்திர பூர்வமான ஹோமங்கள் நடந்து அந்த நூல் கழற்றி, சிவகும்பத்தின் முன் வைக்கப்படும். பிறகு இரவு யாகசாலைக்கு அருகில் சீடனை தூங்கச் செய்வார். மறுநாள் துயில் நீங்கி அதிகாலை எழுந்ததும் குருவும் சீடனும் நித்திய கருமங்கள் முடித்து, சிவபூஜை செய்து, யாகபூஜை முடிந்ததும், சீடன் முதல் நாள் இரவு கனவு கண்டாரா? என்று அறிந்து அதற்கேற்ப ஹோமங்கள் நடக்கும்…
View More ஆகம வழிபாட்டில் மகத்துவம் மிக்க தீக்ஷை முறைகள்கதிர்காமப் பண்பாடு – ஒரு காட்சி
கதிர் (ஒளி) காம (அன்பு) நிறைந்த இடம் என்று தமிழ்ச் சொல்லாகக் கொள்வோரும், கதிரு என்ற சிங்களச் சொல்லின் மரூஉ எனக் கொள்வோருமாக, ஆய்வாளர்கள் தமது இனத்துவ அடையாளமாக கதிர்காமத்தைக் காட்ட முயற்சிக்கின்றனர்… 1908 முதலாக தமிழ் இந்துக்கள் தம்மிடம் இக்கோவிலை ஒப்படைக்க வேண்டும் என்று கோரியும், அது சாத்தியமாகவில்லை… பழங்குடிகளான வேடுவர்களுக்கும் முருகன் பேரில் அலாதி பக்தி இருக்கிறது. தங்கள் மாப்பிள்ளைக் கடவுள் என்று போற்றுகிறார்கள்… கதிர்காமத்தில் திரைக்குப் பின் வைத்துப் பூசிக்கப்பெறும் புனித பெட்டி யானையில் உலா வருகிறது. இதனுள் சுப்பிரம்மண்ய யந்திரம் உள்ளது என்று நம்பிக்கை…
View More கதிர்காமப் பண்பாடு – ஒரு காட்சிஆகம வழி நின்ற ஆலய யாகபூஜைகள் – சிறு விளக்கம்
இந்து சமய கிரியை வழிபாட்டு முறையிலே ‘யாகம்’ என்பது தொன்மையானது. இதனைத்
தமிழில் வேள்வி என்று கூறுவார்கள். வேட்டல் என்ற சொல்லும் இதே பொருளுடையது. யாகம் என்ற சொல் யஜ் என்ற அடியை உடையது. யஜ் என்றால் வழிபாடு, ஆகவே பக்தி பூர்வமான சிறப்பான வழிபாடு யாகம் எனலாம். இதனையே யக்ஞம் என்ற சொல்லும் விளக்கி நிற்பதாகவும் காட்டுவர். யாகம் என்று சொல்லும் போது, எரியோம்பல் என்கிற அக்னி வழிபாடே முதன்மை பெறுகின்றது. அதற்கு அங்கமாக அந்த அக்னி குண்டத்திற்கு அருகிலும், சுற்றிலும், யாகமண்டபம் அமைத்து, கும்பங்களை ஸ்தாபித்து, பல்வேறு தேவ தேவியர்களை ஆவாஹனம் செய்து வழிபடும் வழக்கம் ஏற்பட்டது.