தனது தோல்வியை ஏற்ற பிரதமர் இந்திரா, 1977 மார்ச் 21-இல் நெருக்கடி நிலையை விலக்கிக் கொள்வதாக அறிவித்தார். ஜனநாயகம் மீண்டது. மக்களின் அடிப்படை உரிமைகள் மீளக் கிடைத்தன. அந்த அடித்தளம் மீது நின்றுகொண்டுதான் இப்போது நாம் பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமைகள் குறித்து முழங்குகிறோம். வரலாற்றிலிருந்து பாடம் கற்காதவர்கள் முட்டாள்கள். நாட்டுக்கு துயரமான அனுபவத்தை அளித்த காங்கிரஸ் கட்சியின் கொடிய முகத்தை உணர்ந்த பலர் இப்போது பல்வேறு அரசியல் கட்சிகளாக இருக்கிறார்கள். இன்றைய பாரதீய ஜனதா கட்சி, நெருக்கடி நிலையைக் களையப் போராடிய சக்திகளுள் தலையாயது. 25 ஆண்டுகால தொடர்ந்த முயற்சிகள் அதனை அதீத பலமுள்ள மத்திய ஆளும் கட்சியாக்கி இருக்கின்றன. ஆனால், 1975-77-இல் இந்திராவின் எதேச்சதிகாரத்திற்கு எதிராகப் போராடிய பிற அரசியல் கட்சிகளின் தற்போதைய நிலை என்ன?…..
View More நெருக்கடி நிலை யாருக்கு?Tag: இந்திய அரசியல்வாதிகள்
பீஹார் 2015 – ஒரு போஸ்ட் மார்ட்டம்
பி ஜே பியின் தோல்விக்கு தாத்ரியோ, எழுத்தாளர்கள் போராட்டங்களோ பத்திரிகைகளோ எந்த விதத்திலும் காரணம் இல்லை. இவை எதுவுமே நடந்திருக்கா விட்டாலும் கூட இதே முடிவுகள்தான் வந்திருக்கக் கூடும்… பீகார் வாக்களர்களுக்கு பொருளாதார அறிவு எல்லாம் பெரிதாகக் கிடையாது. அடிப்படையில் உணர்ச்சி வேகத்திலும் ஜாதி மத அடிப்படைகளிலும் ஓட்டுப் போடும் முட்டாள்கள் அவர்கள். அவர்களிடம் அச்சா தீன் என்று நீ எதைச் சொல்வாய் என்று கேட்டால் பதில் சொல்லத் தெரியாது. வளர்ச்சி என்றால் எது என்ன என்பதை அவர்களால் சொல்லக் கூட முடியாது. அவர்களுக்குத் தெரிந்த ஒரே வளர்ச்சி எல்லாம் அவர்கள் பையில் கிடைக்கும் பணம் மட்டுமே… ஆகவே உண்மையான வளர்ச்சித் திட்டங்களை சற்று குறைத்துக் கொண்டு பொது மக்களுக்கு வரிச் சலுகை மூலமாக லஞ்சம் அளித்து ஓட்டுக்களைக் கவர பி ஜே பி முயலலாம். சாலைகளும், துறைமுகங்களும், டிஜிட்டல் இண்டியாவும், ஸ்மார்ட் சிட்டிகளும் இல்லாமல் போனாலும் அவர்களுக்குக் கவலையில்லை அவர்களுக்குத் தேவையெல்லாம் இலவசங்களும் வரிக் குறைப்புக்களும் மட்டுமே….
View More பீஹார் 2015 – ஒரு போஸ்ட் மார்ட்டம்பாரத தேசத்தில் ஜனநாயகம் ஆரோக்கியமாக இருக்கிறதா?
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்கள் கூட கட்சி அமைத்துக் கொண்டு, காலம் காலமாக வளர்ந்து நிற்கும் ஆலமரத்துக்கும் அரச மரத்துக்கும் சவால் விட்டுக் கொண்டிருப்பது எப்படி? எந்த வகையிலும் வருமானம் வர வாய்ப்பில்லாத சிலர் ஒன்றுகூடி கட்சி அமைப்பதும், அவர்களிடம் கோடி கோடியாகப் பணம் கொட்டிக் கிடப்பதும் எப்படி? தெரியவில்லையே… நமது தேர்தல் முறைகளில் மாற்றம் கொண்டு வருவது அப்புறம் இருக்கட்டும். நமது மக்கள் மனங்களில், அரசியல் கட்சியினரின் மனங்களில், பதவிக்கென்று ஆலாய் பறக்கும் சுயநலமிகள் மனதிலும், இவர்களது ஆதாயங்களைக் காட்டிலும், இந்த நாட்டின் எதிர்காலமும், மக்களின் வளமும், செல்வமும், பெருமையும் பெரிது, மிகப் பெரிது என்ற எண்ணத்தை முதலில் உருவாக்க வேண்டும். இந்த மாற்றத்தை எந்த சட்டத்தாலும் கொண்டுவர முடியாது. மனமாற்றம் ஒன்றுதான் இதற்கு வழி…
View More பாரத தேசத்தில் ஜனநாயகம் ஆரோக்கியமாக இருக்கிறதா?ஜனநாயக மரபுகளைக் காப்போம்!
கடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரின் செயல்பாடுகளில் மக்களை திகைக்க வைத்த செய்தி சோனியா காந்தியின் புதல்வர் ராகுல் காந்தி எழுந்து அவையின் மையப் பகுதிக்கு வந்து ஆர்ப்பாட்டம் செய்துவிட்டு வெளியேறி, அங்கு பத்திரிகையாளர்களிடம் அவையில் ஒரே ஒரு குரல் மட்டும்தான் கேட்கிறது. மற்ற குரல்களுக்கு அங்கு இடமில்லை என்பதுபோல சொல்லியிருப்பதுதான்…. பிரதமர் மோடி தன்னுடைய ஒவ்வொரு செயலிலும், பேச்சிலும் கண்ணியத்தையும், ஒழுங்கையும், நாட்டு நலனே மற்ற எல்லா நலன்களுக்கும் மேலானது என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லியும் நடந்து காட்டியும் வருகிறார்….
View More ஜனநாயக மரபுகளைக் காப்போம்!அரசியல் கட்சிகளின் எழுச்சியும் வீழ்ச்சியும்
இருக்கும் கட்சிகள் எதிலும் விருப்பமோ, ஆர்வமோ நம்பிக்கையோ இல்லாமல், தனது சொந்த செல்வாக்கினால் பின்பற்ற சிலர் கிடைத்து விட்டால் புதிய கட்சிகள் துவங்கப்படுகின்றன. இப்போதெல்லாம் தேர்தல் நெருங்கும் சமயத்தில் சாதி, மத, இன, மொழி அடிப்படையில் சிறு சிறு கட்சிகள் தோன்றி பெரிய கட்சிகளோடு தேர்தல் பேரம் பேசி அதில் கிடைப்பதைப் பெற்றுக்கொண்டு அத்தோடு ஒதுங்கிவிடும் கட்சிகளும் உண்டு…. இந்த சூழ்நிலையில் அரசியல் கட்சிகள் மற்ற நாடுகளில் எப்படித் தோன்றின, எப்படி வளர்ச்சியடைந்தன எனும் விஷயத்தையும் சற்று பார்க்கலாமல்லவா? கி.பி. 1600க்கு முன்பு வரை இப்போது இருப்பதைப் போன்ற அரசியல் அமைப்புகள், கட்சிகள் எல்லாம் இருக்கவில்லை. ஜனநாயகம் எனும் கருத்து கிரேக்கத்தில்தான் உதயமானது….
View More அரசியல் கட்சிகளின் எழுச்சியும் வீழ்ச்சியும்நரேந்திரர் வழியில் நாளைய இந்தியா
எனது கனவு பதவியோ அதிகாரமோ அல்ல, பாரதத்தை மீண்டும் உலகின் குருவாக ஆக்கிட வேண்டும் என்ற சுவாமிஜியின் கனவே என் கனவும்… விவேகானந்தரை வைத்து மோடி அரசியல் செய்கிறார் என்று புலம்புகிறார்கள் ஒரு சாரார். அதில் என்ன தவறு?…. கடந்த பத்தாண்டுகளில் 80,000 புதிய வகுப்பறைகளையும், 22000 கம்ப்யூட்டர் பரிசோதனை சாலைகளையும் அரசுப் பள்ளிகளில் குஜராத் மாநில அரசு நிறுவியுள்ளது. ..காங்கிரஸ் காரர்கள் நரேந்திர மோடி மீது வைக்கும் அதிக பட்ச ஊழல் ’குற்றச் சாட்டு’ அவரிடம் 200க்கும் மேற்பட்ட ’குர்தா’க்கள் இருக்கின்றன என்பது தான்… அம்மாநில உழவர்களின் பூரித்த முகங்களும், தரிசு நிலமாகக் காய்ந்து கிடந்த கட்ச் பாலைவனம் முழுதும் இன்று சாலைகளின் இருமருங்கிலும் அலையடிக்கும் பசுமையுமே…
View More நரேந்திரர் வழியில் நாளைய இந்தியாகட்சிகளுக்கு ஒரு ‘லிட்மஸ் சோதனை’ : ஜனாதிபதி தேர்தல்
காங்கிரஸ் தரப்பில் ஜனாதிபதி தேர்தலில் களம் இறக்கப்படுபவர் யார் என்பதே ஜுனில் தான் தெரியும். அதற்குள் நமது ஊடக அறிஞர் படை தனது வேலையைத் துவங்கிவிட்டது… தான் களத்தில் இருந்து விலகி இருக்கவில்லை என்பதை அப்துல் கலாம் கோடிட்டுக் காட்டி இருக்கிறார்… மாநில தலைவர்களின் அரசியல் ராஜதந்திரம் தான் அடுத்த ஜனாதிபதியை தீர்மானிக்கும் நிலையில் உள்ளது. அதை அந்தத் தலைவர்கள் உணர வேண்டும். பாஜக, இவ்விஷயத்தில் கூடுதல் ராஜதந்திரத்துடன் செயல்பட்டால், அடுத்த தேர்தலுக்கு முன்னதாகவே ‘ஊழல்’ காங்கிரஸ் கட்சிக்கு பாடம் கற்பிக்க முடியும்…
View More கட்சிகளுக்கு ஒரு ‘லிட்மஸ் சோதனை’ : ஜனாதிபதி தேர்தல்சுப்பிரமணிய சுவாமிக்கு ஹார்வர்ட் விதித்த ஃபத்வா
தொடர்ச்சியாக ஊழலுக்கு எதிராக போராடி வரும் சுப்பிரமணியன் சுவாமி பலம் படைத்த ஊழல்வாதிகளின் முக்கிய இலக்காக இருந்து வருவதில் வியப்பேதும் இல்லை. இருந்தும் அவர் மீது முதலில் தாக்குதல் தொடுத்தவர்கள் மதச்சார்பற்ற, இடது சாரிகள் என்பது ஒரு முரண்நகை. அண்மையில் டி.என்.ஏ இதழில் ஹிந்துக்கள் மற்றும் இந்தியாவின் மீது பாயும் இஸ்லாமிய பயங்கரவாதம் குறித்து ஒரு கட்டுரை ஒன்றை எழுதினார். இது இஸ்லாமியவாதிகளாலும் இடதுசாரிகளாலும் எதிர்க்கப் பட்டது; விளைவாக ஹார்வர்ட் பல்கலைக்கழகம் அவர் நடத்தி வந்த வகுப்புகளை நிறுத்தியது. இது ஒரு இடது சாரிக் குறுங்குழுவின் முயற்சியில் பேச்சுரிமையே தடை செய்யப் பட்டது போல அல்லவா இருக்கிறது!
View More சுப்பிரமணிய சுவாமிக்கு ஹார்வர்ட் விதித்த ஃபத்வாதிருடன் கையில் சாவி : தொடரும் காங்கிரஸ் சாகசம்
1995-ல் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் 4 உறுப்பினர்களை விலைக்கு வாங்கி வென்றது காங்கிரஸ். அதனை அன்று நாடாளுமன்றத்தில் அம்பலப்படுத்தியவர் பாஜக தலைவர் வாஜ்பாய்…. பல மந்த நிலைகளைத் தாண்டி ஊர்ந்து வந்த வழக்கின் இறுதியில், அமர்சிங், இப்போது கைது செய்யப்பட்டுள்ளார்…காவல்துறையின் பாரபட்சமான அணுகுமுறை இவ்வளவு பட்டவர்த்தனமாக வெளிப்பட்டும் கூட, ‘திருவாளர் புனிதர்’ மன்மோகனும் அவரது அரசும் எந்த வெட்கமும் இன்றி ஆட்சியில் தொடர்கின்றனர்….
View More திருடன் கையில் சாவி : தொடரும் காங்கிரஸ் சாகசம்அண்ணா ஹசாரேவுக்கு ஒரு மனம்திறந்த கடிதம்
மாப்பிள்ளை நல்லவர் தான், ஆனால், கொஞ்சம் வக்கிரப்புத்தி உண்டு” என்று சொல்வது எப்படி அபத்தமோ, அப்படி இருக்கிறது, நீங்கள் சொல்வது… பிரதமரைவிட அதிக சக்தி வாய்ந்தவரான சோனியாவுக்குத் தெரியாமல் ஏதாவது ஊழல் நடந்திருக்க வாய்ப்புள்ளது என்று கருதுகிறீர்களா?… மக்களின் ஊழலுக்கு எதிரான கருத்தோட்டத்தை அரசியல் போராட்டமாக மாற்றுவதும் ஆட்சி மாற்றம் காண்பதும் தான் இப்போதைய தலைபோகிற காரியம்…
View More அண்ணா ஹசாரேவுக்கு ஒரு மனம்திறந்த கடிதம்