பெரும் ஆய்வு நாற்காலிகளில் அமர்ந்த இவர்களில் பலர் தம்மைக் கிறித்தவர் என்று கூறிக்கொள்கின்றனரா என்றால் சொல்லமுடியாது. மேலை நாட்டு நிறவெறி, — ’உயர் நாகரிகம் தங்களது; கீழை நாட்டினர் கீழானவர்கள்; நாகரிகம் அற்ற மிருகப் பிராயத்தினர்; காட்டுமிராண்டிகள்; எனவே நாகரிக உலகின் சலுகைகளான பொது நீதி, மதிப்பான அணுகுமுறை, தங்கள் உடைமைகளின் மீதும் கருத்துகளின் மீதும் பிரத்யேக உரிமை பாராட்டத் தகுதியற்றவர்கள்’ — இது போன்ற மனநிலை, இவைதான் அவர்களுக்குள் பொதிந்து இயக்குகிறது என்பது நமது பிரமை பிடித்த பார்வையன்று என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது பல சமயங்களில் அவர்களுடைய சொல்லாடல்களும், அவற்றின் தொனியும்.
View More Invading the Sacred: அமெரிக்காவில் நிகழும் இந்துமத ”ஆய்வுகள்” – பகுதி (1)Tag: இந்துப் பார்வை
ஹிந்து தர்மத்தின் அதிகாரி யார்?
என்னதான் மாபெரும் கருணை பொங்கும் இதயத்திலிருந்து மானுடத்துயரனைத்தையும் நீக்க உருவெடுத்ததாகத் தன்னைக் காட்டிக்கொண்டாலும், ஒற்றைப்பார்வைகளும், ஒற்றை அதிகார பீடங்களும் அழிவைத்தான் ஏற்படுத்தும் …ஹிந்து தர்மத்தில் சாஸ்திர சம்பிரதாயங்கள் உறைநிலை கொண்டவை அல்ல. அவை நெகிழ்ச்சித்தன்மை கொண்டவை. காலந்தோறும் பரிணாம மாற்றம் அடைபவை. மானுட நலத்தையே தம் இலட்சியமாகக் கொண்டவை. அனைத்துயிரும் அனைத்துலகும் இன்புற்றிருப்பதையே அவை நோக்குகின்றன. அவற்றின் நோக்கம் சனாதனமானது, அழிவற்றது. அதற்கான வடிவங்கள் மாறிக்கொண்டே இருக்கும்.
View More ஹிந்து தர்மத்தின் அதிகாரி யார்?மகாத்மா காந்தியும் ஹிந்து தருமமும்
ஹிந்து சிந்தனையை -ஒற்றைத்தன்மையற்ற பார்வையை- அவர் மானுடத்தின் சமுதாய பிரச்சனைகளுக்கு பயன்படுத்தினார். இதனால் கிடைத்த சாத்தியக்கூறுகளின் விதைகள் இன்னும் காந்திய சிந்தனையில் புதைந்து கிடக்கின்றன. அதனால் பணபலமும் அதிகாரபலமும் இல்லாமல் தர்மத்தை மட்டுமே நம்பி போராடும் எந்த மக்கள் கூட்டத்துக்கும் அவை மிகச்சிறந்த ஆயுதங்களாக உதவக்கூடியவை.
View More மகாத்மா காந்தியும் ஹிந்து தருமமும்மதங்களும் மாற்றுத் திறன் கொண்டவர்களும்
கண்ணனின் கீதைக்கு நிகராக அஷ்டவக்ர கீதை என்ற புகழ்பெற்ற நூலை அருளிய அஷ்டவக்ரர் உடலில் எட்டு கோணல்களைக் கொண்டவர். நவக்ரஹங்களில் ஒரு தெய்வமான சனி பகவான் ஒரு கால் இல்லாதவர்… மிராக்கிள் ஹீலிங் (Miracle Healing) என்றொரு தனி அறிவியலையே இவர்கள் கண்டுபிடித்து வைத்திருக்கிறார்கள். இவர்கள் குறிவைப்பது ஏழை எளியவர்கள், நோயாளிகள் மாற்றுத் திறன் கொண்டவர்கள் போன்றவர்களைத்தான்….
View More மதங்களும் மாற்றுத் திறன் கொண்டவர்களும்