சமூக, அரசியல் விழிப்புணர்வு பெற்ற ஹிந்துவே, ஹிந்துத்துவ வாக்காளன். ஒரு ஹிந்துத்துவ வாக்காளனாக, எனக்கு மூன்று எதிர்பார்ப்புகள் / கோரிக்கைகள் உள்ளன. அவை மீது கவனம் செலுத்தும் கட்சிக்கே, என் ஓட்டு… இட ஒதுக்கீட்டில், ‘க்ரீமி லேயர்’ அதாவது, பின்தங்கியவர் களில் வசதிபடைத்தவர் நீக்கம் என்ற வழிமுறை, கேலிக்கு உரியதாகவும், நடைமுறை சாத்தியம் இல்லாததாகவும் ஆகி விட்டது… ஹிந்து ஆலயங்கள், மதச்சார்பற்ற அரசின் கையில், பெரும் சுரண்டல் களங்களாக, பாரம்பரியங்களை, கலைச்சொத்துகளை, வழிபாட்டு மரபுகளை ஒழித்து, மதமாற்றிகளின் நோக்கத்தை பூர்த்தி செய்யும் கருவிகளாக மாறி நிற்கின்றன…
View More ஒரு ஹிந்துத்துவ வாக்காளனின் கோரிக்கைகள்Tag: இந்து வாழ்வுரிமை
குடியுரிமை சட்டத்திருத்த எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு
பாஜகவை எதிர்ப்பதற்காக, பாகிஸ்தானிலும், பங்களாதேஷிலும், ஆப்கானிஸ்தானிலும் மோசமான நிலையில் வாழும் இந்துக்களின் எந்த ஒரு அவலநிலையையும், கிறிஸ்துவர்களின் அவலநிலையையும் பேசக்கூடாது என்று இங்கே ஒரு அறிவுஜீவி வர்க்கம் நினைக்கிறது. இந்துக்கள் பாஸிஸ்டுகள், இந்து மதமே கேவலமானது, இந்துக்கள் கொன்றொழிக்கப்பட்டால் அது நல்லதுதான் என்று அளவுக்கு இவர்களது மனத்தில் இந்து மதத்துக்கும் இந்துக்களுக்கும் எதிரான கடும் வெறுப்பு நச்சாக ஆக்கிரமித்திருக்கிறது… இதன் மூலம் குடியுரிமை பெறப்போகும் மக்களின் எண்ணிக்கை 31313 பேர்கள் மட்டுமே. 2014க்கும் அப்புறம் இந்தியாவுக்குள் வந்த மக்களுக்கு குடியுரிமையை இந்த சட்டம் வழங்கவில்லை. ஏற்கெனவே இங்கே இந்தியாவின் குடிமகன்களாக வாழும் எவருடைய குடியுரிமையையும் இந்த சட்டம் பறிக்கவில்லை… பாகிஸ்தானிலும் பங்களாதேஷிலும் இந்தியாவை விட வறுமை, வேலைவாய்ப்பின்மை. இஸ்லாமியர்கள் தனியான தேசிய இனம், பிரிவினை வந்தாலே இஸ்லாமிய சொர்க்க பூமி உருவாகி பாலும் தேனும் பெருக்கெடுக்கும் என்று தம்பட்டம் அடித்து லட்சக்கணக்கான இந்துக்கள், சீக்கியர்கள், இஸ்லாமியர்களைக் கொன்றழித்து உருவான பாகிஸ்தான் பயங்கரவாதத்தை உலகெங்கும் ஏற்றுமதி செய்யும் நாடாக உருவாகியுள்ளது…
View More குடியுரிமை சட்டத்திருத்த எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பின்னால் இருக்கும் இந்து வெறுப்புஇலங்கை இனப்பிரச்சனை: மோடிக்கான சவாலும் தெரிவுகளும்
இந்தியப் பிரதமராக மக்களின் பேராதரவுடன் பொறுப்பேற்றுள்ள நரேந்திர மோடி ஈழத்தமிழர்கள் மத்தியில் இந்திய அரசியல்வாதிகள் மீதான வெறுப்பையும் அவநம்பிக்கையையும் தாண்டி ஒளிக்கீற்றாகவே பார்க்கப்படுகிறார்… தற்போதைய சூழ்நிலையில் தமிழ் மக்கள் மூன்று முக்கிய நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர் – இராணுவ மயமாக்கப் பட்ட சூழல், திட்டமிட்ட நிலப்பறிப்பும் குடியேற்றங்களும், மதமாற்றம்… முக்கியமான வரலாற்றுப் பிழை இலங்கையின் ஒற்றையாட்சிக் கட்டமைப்பை மாற்றாமலேயே அதற்குள்ளாகவே மாகாணங்களுக்கு அதிகாரங்களை பகிரமுடியுமென்று இந்தியா நினைத்தமை. அந்த அமைப்புக்குள் பகிரப்படும் அதிகாரங்கள் மத்திய அரசினால் எந்தநேரத்திலும் மீளப்பெறக் கூடியவை… இலங்கை இனப்பிரச்சனைக்கான இறுதித் தீர்வுகளில் இலகுவானதும் அதிகபலப்பிரயோகம் இன்றி நடைமுறைப்படுத்தக் கூடியதுமான தீர்வு முழுமையான சமஷ்டி அமைப்பினை ஏற்படுத்துவதாகும். இதனை வரையறுக்கப்பட்ட காலப்பகுதியில் இலங்கை அரசு செய்வதற்கு மறுத்தால், இந்திய அரசு மற்ற இரண்டு சிக்கலான தெரிவுகளுக்கு செல்வது தான் பிரசினைக்கு தீர்வு காணும் வழிகளாக ஆகும்….
View More இலங்கை இனப்பிரச்சனை: மோடிக்கான சவாலும் தெரிவுகளும்நேருவிய மனுவாதிகளுக்கு காந்திய அன்புடன் – 2
கிழக்கு வங்க அகதிகளில் பெரும்பாலானோர் நாமசூத்திரர் எனும் தலித் வகுப்புகளை சார்ந்தவர்கள். அங்குள்ள வனவாசி சமுதாயங்களை சார்ந்தவர்கள். நேருவுக்கு இவர்கள் பெரிதாகப்பட்டிருக்க மாட்டார்கள். நேரு அரசாங்கம் கிழக்கு வங்க அகதிகளை வெறுப்புடன் நடத்துவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்பதை பாபா சாகேப் அம்பேத்கர் சுட்டிக்காட்டியிருக்கிறார். ரசாக்கர்கள் கன்னியாஸ்திரீகளை கொன்றால் முகம் சிவக்க சினந்த நேருவுக்கு ரஸாக்கர்கள் தொடர்ந்து இந்துக்களை கொன்றும் சூறையாடியும் வந்தது ஒரு பொருட்டாகவே தெரியவில்லை என்பதை பாருங்கள். இதைத்தான் நேருவின் நாஸி மனநிலை என்றது… இந்த மனநிலை இன்றைக்கும் நீடிக்கிறது. நேருவிய நாளேடான தி இண்டு ஹிந்துத்துவர்களை கொன்ற போலீஸ் பக்ருதீன் கைதானதும் அவனது தாயார் குறித்த உருக்கமான கதையை அடுத்ததாகவும், அவனது காதல் கதையை அடுத்ததாகவும் வெளியிடுகிறது. கொலை செய்யப்பட்ட குடும்பங்களின் உணர்வுகளுக்கு அங்கே இடமில்லை….
View More நேருவிய மனுவாதிகளுக்கு காந்திய அன்புடன் – 2ஜனாப் ஜவஹரும் போதிசத்வரும்
”நாம் காஷ்மீரை விட கிழக்கு வங்கத்தில் நிலவும் சூழல் குறித்தே அதிக கவலைப்பட வேண்டும். ஏனென்றால் கிடைக்கும் எல்லா செய்திதாள்களின் படியும் காஷ்மீரைக் காட்டிலும் நம் மக்களின் நிலை சகிக்கமுடியாததாக உள்ளது. .” என்றார் போதிசத்வ பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர் …”கிழக்கு வங்காளத்திலிருந்து (அதாவது பாகிஸ்தானிலிருந்து) ஹிந்துக்கள் மேற்கு வங்காளத்துக்குள் வருவதை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டுமென்பதில் நான் தொடக்கத்திலிருந்தே உறுதியாக இருக்கிறேன்.” என்றார் ஜனாப் ஜவஹர்லால் நேரு… நேருவிடம் வெளிப்படுவது மனித நேயம் அல்ல. மதச்சார்பின்மை அல்ல. இங்கு வெளிப்படுவது அப்பட்டமான வெறுப்பு. இந்துக்கள் மீதான வெறுப்பு. தப்பிக்கும் யூதர்களை பிடித்து வதை முகாம்களில் அடைத்த நாசிகளின் வெறுப்புதான் துல்லியமாக நேருவிடமும் வெளிப்பட்டது….
View More ஜனாப் ஜவஹரும் போதிசத்வரும்நேரு, மோடி, ஈழத்தமிழர்கள்
காலம் காலமாக உருவாகி வந்த இந்த உறவுகளின் வலைப்பின்னல்களை உதாசீனப்படுத்திவிட்டு பேசப்படுவது பாரத ஒற்றுமையோ அல்லது தமிழ் உணர்வோ அவை பொய்யானவையே. அவை நம்மை – பாரதியராகவும் சரி தமிழனாகவும் சரி – பலவீனப்படுத்தும். இந்த பண்பாட்டு ரத்த உறவுகளின் வலைப்பின்னல்களே ஹிந்துத்துவம்…. எனவேதான் வலிமையான பாரதத்துக்காக தென்னக மீனவ மக்களின் நன்மைக்காக கடலையே கண்டறிந்திராத அந்த வடக்கு மாநிலத்தில் குரல் கொடுத்த அந்த மனிதர் இன்றைய சூழலில் தமிழராகிய நமக்கு, தாயக தமிழரோ, ஈழத்தமிழரோ, புலம்பெயர்ந்த தமிழரோ எல்லாத் தமிழருக்கும், முக்கியமானவர் ஆகிறார்….
View More நேரு, மோடி, ஈழத்தமிழர்கள்மலேசிய தமிழ் ஹிந்துக்களின் உரிமைகளுக்காக ஹிண்ட்ராப் தலைவர் தொடர் உண்ணாவிரதம்
இந்துக்களின் குழந்தைகள் காலம் காலமாக அடிமையாக இருக்க வேண்டும் என்பதற்காக கல்வி உரிமையை மறுக்கும் மலேசிய அரசுக்கு தமிழ் ஹிந்துக்களின் அடிப்படை உரிமைகளை வலியுறுத்தி ஹிண்ட்ராப் அமைப்பு தொடர்ந்து போராடி வருகிறது.. இதன் தலைவர் வேதமூர்த்தி மகா சிவராத்திரி தொடங்கி கடந்த 10 நாட்களுக்கு மேலாக அகோர வீரபத்திரர் ஆலயத்தில் உண்ணா நோன்பு இருக்கிறார்… உரிய அளவிலான நிதி ஒதுக்காமலும், ஆசிரியர்களை நியமிக்காமலும் தமிழ் மாணவர்கள் படிப்பதை தடுத்து நிறுத்த என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை செய்கிறது மலேசிய இஸ்லாமிய அரசு. உயர்கல்வியிலோ தமிழ் இந்துக்கள் படிக்கவே கூடாது என்பதற்காக தனது தேசத்தில் உள்ள சுமார் 8 லட்சம் இடங்களில் 5000 இடங்களை மட்டும் இந்துக்களுக்கு ஒதுக்கி இருக்கிறது…
View More மலேசிய தமிழ் ஹிந்துக்களின் உரிமைகளுக்காக ஹிண்ட்ராப் தலைவர் தொடர் உண்ணாவிரதம்இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இந்தியாவில் குடியுரிமை: கையெழுத்து இயக்கம்
முப்பதாண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவதில்…
View More இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இந்தியாவில் குடியுரிமை: கையெழுத்து இயக்கம்அசாம் கலவரம்: அழியும் இந்துக்கள், அரசு அலட்சியம்!
1990ம் ஆண்டு வரை போடோ பழங்குடியினர் பெரும்பான்மை ஆக இருந்தார்கள். 2012ல் 22 மாவட்டங்களில் 14 மாவட்டங்களில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை 50 சதவிதத்திற்கு மேல் உயாந்துள்ளது… அசாமில் உள்ள அந்நியர்களை வெளியேற்றுவது சம்பந்தமான உடன்பாட்டை மத்திய அரசு மாணவர் அமைப்புடன் ஏற்படுத்தியது. அதற்குப் பிறகும் ஊடுருவல் காரர்களை வெளியேற்றாமல் இருப்பது இந்திய அரசே இந்திய மக்களுக்கு புரியும் துரோகமாகும்… பங்களாதேசில் இருந்து ஊடுருவும் இஸ்லாமியர்களால் தங்கள் அரசியல் அறுவடை நடத்தலாம் என்ற எண்ணம் இருக்கும் வரை அசாமிலும், மற்ற வடகிழக்கு மாநிலங்களீலும் வெடிக்கும் இத்தகைய கலவரங்களைக் கட்டுப்படுத்த இயலாது…
View More அசாம் கலவரம்: அழியும் இந்துக்கள், அரசு அலட்சியம்!இந்த வாரம் இந்து உலகம் (மார்ச்-17, 2012)
திருவிழாவின் போது நடுத்தெருவில் பொங்கல் வைத்ததாக குற்றம் சாட்டப் பட்டு 1000 பெண்களை திருவனந்தபுரம் காவல்துறை கைது செய்து தடை உத்தரவை மீறியதற்காக வழக்கும் பதிவு செய்த சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது… சிந்த் மாகாணத்தில் சிறுமிகள், திருமணமான பெண்கள் உட்பட 25-30 இந்துப் பெண்கள் ஒவ்வொரு மாதமும் கடத்தப் பட்டு மதமாற்றப் படுகிறார்கள்… மதுரை மீனாட்சி கோயிலைச் சுற்றி சட்டத்தை மீறிக் கட்டப்பட்டுள்ள 770 கட்டடங்கள் குறித்து இன்னும் 60 நாட்களுக்குள் நடவடிக்கை… உபனிஷத ஞானச் செல்வத்தினை வாராவாரம் தொலைக்காட்சித் தொடர் வடிவில் வழங்கும் ஒரு சீரிய முயற்சி “உபநிஷத் கங்கா”…
View More இந்த வாரம் இந்து உலகம் (மார்ச்-17, 2012)