பா.ரஞ்சித்திடம் பெரியார் முகமூடியை போடு இல்லையென்றால் நீ ஜாதி வெறியன் என்ற லாவணியை பாட ஆரம்பித்திருக்கிறார்கள். இது மெல்ல விவாதமாவது தமிழகத்தின் தலையாய தேவை. இன்றும் பெரியாரியம் யாருக்கு ஒரு முகமூடி என்பதை அரசியல் எதார்த்தம் சொல்லும். பிற்படுத்தப்பட்ட எழுச்சியும், அதிகாரமும் பட்டியல் ஜாதிகளுக்கு உறுத்தக்கூடாது என்ற ஏற்பாடு மட்டுமே பிராமண வெறுப்பு பேசுகிற திராவிடத்தின் மைய நோக்கம்… நீதிக்கட்சி இந்து மதத்திற்கு விரோதமாக இல்லை, ஆனால் தி.க/திமுகவின் இந்து மத விரோத கருத்துகள் மிஷனரி, இஸ்லாமிய மதமாற்றும் அரசியலுக்கு பயன்பட்டன. பிற்படுத்தப்பட்ட அதிகார எழுச்சி, ஆபிரஹாமிய மதமாற்ற குழுக்கள் மட்டுமே இன்றும் பெரியார் என்கிற முகமூடியை வேறு வேறு காரணத்திற்காக நீட்டித்துக் கொண்டிருக்கின்றன… ஆக, அன்று திமுக இன்று சீமான் பேசுவது போல இன்னும் சிறப்பாகவே பேசியது. தமிழர் ஆட்சி ஒப்பற்ற பேராட்சி ஆனால் பிராமணியம் சதி செய்து ஒழித்துவிட்டது என்று முன் வைத்தது. இன்று அதை மாற்றி சீமான் தெலுங்கர்கள் ஒழித்துவிட்டார்கள் என்கிறார். ஆனால் வரலாறு என்னவோ யாராவது தண்ணீர் தரமாட்டார்களா என்று சாவின் நொடியில் இழுத்துக் கொண்டிருக்கிறது இந்த நொடி வரை…
View More திராவிட அரசியலின் மூன்று பரிமாணங்கள்Tag: ஈ.வே.ரா
அவதூறுகளை எதிர்கொள்ளுதல்:சீமானை முன்வைத்து
அவதூறுகள் பல வழிகளில் பலவிதங்களில் வருகின்றன. ‘நீ நல்ல அப்பனுக்கு பிறந்திருந்தா லிங்கத்தோட பொருளை சொல்லுடா’ என்றெல்லாம் கேட்கும் அற்பத்தனமான ஆபாச அறிவின்மை இந்த அவதூறு சங்கிலியின் முதல் கண்டுபிடிப்புமல்ல கடைசி கண்ணியுமல்ல. கம்பீரமான பெரும் ஊர்வலங்கள் மெல்ல நகரும் வீதிகளில் தெருநாய்கள் குரைப்பதற்கும் சுதந்திரம் இருந்தே ஆக வேண்டும். ஆனால் …
View More அவதூறுகளை எதிர்கொள்ளுதல்:சீமானை முன்வைத்துஈ.எம்.எஸ் முதல் ஜெயமோகன் வரை…
ஏனெனில் இது மூத்தார் வழிபாட்டு மனநிலை அல்ல… திராவிடமெனும் முற்றிய இனவாத மனநோய்… ஜெயமோகனின் கருத்தில் ஆர் எஸ் எஸ் சதியை கண்டுபிடிக்கும் அ.மார்க்ஸ் மூத்தார் வழிபாட்டு மன உணர்விலிருந்து அதை பேசவில்லை. ’இதை ஏன் தேவபாடைக்கு ஜெயமோகன் சொல்லக்கூடாது?’ என அறைகூவலிடும் சித்தாந்தவாதி இதை மூத்தார் மனநிலையிலிருந்து முழங்கவில்லை. இந்த மனநோயின் மூலகர்த்தா ஈவேராமசாமியே தான்…. ஈவேராவின் பகுத்தறிவு நமக்கு சொல்லி தந்தது எந்த கருத்தாக்கத்திலும் எந்த பாரம்பரிய வெளிப்பாட்டிலும் இன-வாத சூழ்ச்சிகளை கண்டுபிடிக்கத்தான். அதைத்தான் இன்றைக்கு அவர் வழி வந்தோர் செயல்படுத்திக் கொண்டிருக்கின்றனர்….
View More ஈ.எம்.எஸ் முதல் ஜெயமோகன் வரை…பாரதி: மரபும் திரிபும் – 3
”நீதிக்கட்சி அரசு பாடுபட்டது யாருக்காக’ என்ற நூலே பொய்களால் ஆனது. தாழ்த்தப் பட்டவர்களை ஏமாற்றும் நோக்கத்துடன் வெளியிடப் பட்டது… சூழ்ச்சிக் கொள்கையை மக்கள்முன் வைத்துத்தான் கபடநாடகம் ஆடி நீதிக்கட்சிக் காரர்கள் ஆட்சிக்கு வந்தனர் என்கிறார் எம்.சி.ராஜா… .’வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம்’ என்ற பெயரால் செய்யப்படும் எந்தத் திட்டத்திலும் மருந்துக்குக்கூட உண்மை இல்லை. ஆனால் உண்மையில் நிலைத்திருப்பது ‘வகுப்புவாத ஏகாதிபத்தியமும், சாதியின் கொடுங்கோன்மை’யுமே ஆகும்… நீதிக்கட்சிக்காரர்கள் பிரிட்டிஷாருக்கு வால்பிடித்ததினால்– ஆதரவாக இருந்ததினால்– பிரிட்டிஷாருக்கு ஆதரவாக இந்துமதத்தை அவர்கள் கடுமையாக விமர்சித்ததினால்– மட்டுமே பாரதி அவர்களை தேசத்துரோகிகள் என்று விமர்சித்தார்.
View More பாரதி: மரபும் திரிபும் – 3உயர்ந்த பதவியும் கீழான எண்ணங்களும்: திராவிட இயக்க நூற்றாண்டை முன்வைத்து..
..இவர்கள் பத்திரிகைகளைப் படிக்க வேண்டுமாம், அப்படிப் படித்தால் பார்ப்பனக் கூட்டம் அஞ்சி நடுங்க வேண்டுமாம். சொல்பவர்கள் சாதாரண மூன்றாம் தரப் பேர்வழிகள் அல்ல. பெரிய பதவிகளில் உட்கார்ந்திருந்தவர்கள். ..சுய நலத்தின் காரணமாக மக்களைப் பிரித்து வைத்து ஒருவருக்கொருவர் விரோதத்தை வளர்த்து அந்தத் தீயில் குளிர் காயும் அற்பத் தனம். இதை சொல்பவர்களில், பேராசிரியர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களும் இருப்பதுதான் வேதனை…
View More உயர்ந்த பதவியும் கீழான எண்ணங்களும்: திராவிட இயக்க நூற்றாண்டை முன்வைத்து..நீதிக்கட்சியின் மறுபக்கம் – 04
ஆக இதிலிருந்து நாம் ஒரு விஷயத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். அதாவது நீதிக்கட்சியை ஆரம்பிக்கவும், ஆதரிக்கவும் சொந்தப் பிரச்சினைகளே காரணமாக இருந்தன. டி.எம்.நாயர் தேர்தலில் தோற்றுப் போனதாலும், தியாகராய செட்டியார் தம்மை மேடையில் உட்கார வைக்கவில்லை என்பதாலும் பிராமணர்கள் மேல் இவர்கள் வெறுப்புக்கொண்டனர். இந்த சொந்த பிரச்சினைகளால் எழுந்த வெறுப்பால்தான் பிராமணரல்லாத கட்சியை ஆரம்பிக்க எண்ணம் கொண்டார்களே தவிர, தாழ்த்தப்பட்டவர்கள் முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற காரணத்திற்காக அல்ல என்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.
View More நீதிக்கட்சியின் மறுபக்கம் – 04