பாராளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் அவர்கள் ராஜாங்க ரீதியான இரகசிய ஒப்பந்தம் பழைய காங்கிரஸ் அமைச்சர் அந்தோனி சார்பில் கை எழுத்து இடப்பட்டது என்று கூறி அந்த ஒப்பந்தத்தையும் காண்பித்து விட்டார். பிரான்ஸ் அரசாங்கமும் தெளிவாக ராகுல் காந்தி தனிப்பட்ட முறையில் சொன்னதாக சொன்ன தகவலை மறுத்து விட்டது.. முதலில் UPA அரசாங்கம் சொன்ன விலை மிகவும் குறைவான ஒன்று என்று இந்த துறை சார்ந்த வல்லுனர்கள் தெளிவாக ஆதரங்களுடன் சொல்லி விட்டனர். ஆனால் இப்போது மோடி அரசாங்கம் வாங்க இருப்பதோ அதி நவீன தொழில் நுட்பத்தில் தயாராகி கொண்டிருக்கும் விமானங்கள். அதிலும் பார்த்தோம் என்றால், இவர்கள் பழைய விமானங்களுக்கு செலவிட வேண்டிய பணத்தை விட வெறும் ஐந்து மில்லியன் டாலர்கள் மட்டுமே இதற்கு அதிகம். அது மட்டும் இல்லாமல் நமக்கு சாதகமாக என்னென்ன தேவைப்படுமோ அத்தனை சரத்துகளையும் நாம் இதில் உடன்பட வைத்து இருக்கிறோம்…
View More ரஃபேல் போர் விமான விற்பனை: ராகுல் உளறல்களும் உண்மைகளும்Tag: ஊடகப் பொய்ப் பரப்புரை
கரப்பு (அல்லது) பத்திரிகைக் குழுமம் நடத்துவது எப்படி?
” கலைஞர் கை விரல் நகங்களைப் பரிசோதித்த காவேரி மருத்துவமனை டாக்டர்கள் அசந்து போனார்களாம். எத்தனை பிரதமர்களை அடையாளம் காட்டிய விரல்களின் நகங்கள்” என்று தலைமை மருத்துவர் சொன்னதும் ஸ்டாலினும் அழகிரியும் கண்ணீரால் ஆஸ்பத்திரி வராண்டாவையே கழுவினார்களாம்”… நீங்கள் மோதியை எதிர்த்து எழுதுவதாக மவுண்ட் ரோட் மன்றோ சிலை மேல் சத்தியம் செய்தால் பல விசேஷ , சுவிசேஷ கருத்துக்களால் தூண்டப்பட்ட தன்னார்வ, சுயநிதி, அரசு சாரா அமைப்புகள் நிதி உதவி செய்யும். உங்கள் பெற்றோர், மனைவி, நாடு, மனசாட்சி மற்றும் குழந்தைகளை பிணையாகக் கொடுக்க நேரிடும். அதனாலென்ன? குழுமம் முக்கியமல்லவா?….
View More கரப்பு (அல்லது) பத்திரிகைக் குழுமம் நடத்துவது எப்படி?இந்திய ஊடகங்களில் ஊற்றெடுக்கும் பாசிசம் – துஃபாயில் அகமது
ஜனநாயக நாடுகளில், பாசிசம் பழைய பாணியில் இல்லாமல் “கருத்துக்களின் பரவலாக” ஜீவித்துக் கொண்டிருக்கிறது. சர்வாதிகார ஆட்சிமுறை சார்ந்த இயக்கம் என்ற வகையில், தனது தலைவர்கள் ஆட்சியில் இருந்த வரை, இந்தியாவில் பாசிசம் அமைதியாக, சமர்த்தாக இருந்தது. இந்த பாசிச வர்க்கத்தினரால் விரும்பப் படாத ஒரு தலைவரை 2014ல் மக்கள் பெரும் ஆதரவுடன் தேர்ந்தெடுத்த போது, இந்திய சமுதாயத்தில் இருந்த பெர்லின் சுவர் உடைந்து நொறுங்கியது. இன்னும் முழுதாக சுத்தம் செய்யப் படாமல் அதன் இடிபாடுகள் அங்கங்கு விழுந்து கிடக்கின்றன. பழைய கட்சியாலும், வாரிசு அரசியலாலும், கருத்தியலாலும் ஆதாயம் அடைந்த பத்திரிகையாளர்கள் கூச்சலிடுகிறார்கள்… இந்திய அறிவுஜீவிகள் என்பவர்கள், இந்திய வாக்காளர்களின் தீர்ப்பை சகித்தன்மையுடன் ஏற்க மறுக்கிறார்கள். டிவி ஸ்டுடியோக்களிலிருந்து இந்தியாவில் சகிப்புத்தன்மை இல்லாமல் போய்விட்டது என்று குற்றம் சாட்டுகிறார்கள் இவர்கள். ஜனநாயகம் உண்மையிலேயே முதிர்ச்சியடையும் போது இந்த வகையான அறிவுஜீவிகள் அழிவார்கள்….
View More இந்திய ஊடகங்களில் ஊற்றெடுக்கும் பாசிசம் – துஃபாயில் அகமதுபெருமாள் முருகன் விவகாரம்: அறிவுலகவாதிகளும், சாமானிய மக்களும்
நாவலாசிரியரின் எழுத்துரிமை பற்றி இரு வேறு கருத்து இருக்க முடியாது. அது பாதுகாக்கப்பட வேண்டியது தான். ஆனால் அதற்காக வாதாடும் அறிவுலக வாதிகள், தாங்கள் நியாயம் எனக் கருதும் விஷயத்துக்காக எந்த வித வன்முறையுமின்றி அமைதியாகப் போராடும் சாமானிய மக்களை எப்படி வேண்டுமானாலும் வசை பாடலாமா? ஜாதியவாதிகள் என்று அவர்களைச் சொல்வதற்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை. ஏனெனில் அந்த எதிர்ப்புகளை தலித்துகள் உள்ளிட்ட அனைத்து ஜாதி மக்களும் ஒன்றிணைந்து நடத்தி வருகின்றனர். கோவில் தேர்த்திருவிழாவில் தலித்துகள் உள்ளிட்ட அனைத்து ஜாதியினருக்கும் பொறுப்புக்கள் உள்ளன… ஊடகங்களில் சிலவாவது திருச்செங்கோடு சென்று அவர்களைச் சந்தித்து அங்கு என்ன நடந்து வருகிறது என்று நேரடியாகத் தெரிந்து கொள்ளலாமே? அதற்கு என்ன தயக்கம்? இந்த விஷயத்தைப் பொறுத்த மட்டில் ஏன் தலைநகரில் இருந்து ஒரே மாதிரியாகவே கருத்துக்கள் வருகின்றன? தங்களின் தெய்வத்தைக் கொண்டாடி வழிபட்டு அமைதியாக அங்கு வாழ்ந்து வரும் மக்களை ஏன் மற்றவர்கள் கடுமையான வார்த்தைகளால் வசை பாட வேண்டும்? அவர்கள் என்ன குற்றத்தைச் செய்தார்கள்? அறிவு ஜீவிகள் என்றும் விபரம் தெரிந்தவர்கள் என்றும் சொல்லிக் கொண்டு பெரு நகரங்களில் உட்கார்ந்து, தூரத்தில் வாழ்ந்து வரும் மக்கள் மேல் பழி சுமத்திக் கொண்டே போவது எந்த வகையில் நியாயம்?….
View More பெருமாள் முருகன் விவகாரம்: அறிவுலகவாதிகளும், சாமானிய மக்களும்ஜெயேந்திரர் விடுதலை…
சங்கரராமனை உண்மையில் கொலை செய்தது யார் என்கிற கேள்வி இயல்பாகவே எழுகிறது. காவல்துறை இந்த விஷயத்தில் ஜெயேந்திரரை சிக்க வைக்க வேண்டும் சங்கர மடத்துக்கு எத்தனை அவப்பெயரை ஏற்படுத்த முடியுமோ அத்தனை அவப்பெயரை ஏற்படுத்த வேண்டுமென்கிற ஒற்றை நோக்கத்தில் செயல்பட்டது என்பதுதான் உண்மை. குற்றவாளியை நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை பெற்று தர வேண்டும் என்பதைவிட சங்கர மடத்துக்கும் சங்கராச்சாரியாருக்கும் முடிந்த அளவு கெட்ட பெயரை பெற்றுத் தர வேண்டும் என்பதே லட்சியமாகக் கொண்டு செயல்பட்டது காவல்துறை… அதே சமயம் தொடர்ந்து கிறிஸ்தவ கல்வி நிலையங்களில் பெண்களுக்கு எதிரான கொடுமை நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஓமலூர் சுகன்யா நினைவிருக்கிறதா? ஜெயேந்திரரிடம் நடந்த அதே ஊடக ஓநாய்த்தனத்துடன் ஊடகங்கள் பாதிரிகளிடம் நடந்தனவா? வாராவாரம் விசாரணை செய்திகள் வதந்திகளாக ஊடகங்களில் காவல்துறையால் கசிந்துவிடப்பட்டனவா? எதுவும் இல்லை….
View More ஜெயேந்திரர் விடுதலை…தி ஹிண்டு பத்திரிகைக்கு கண்டனம்
தி ஹிண்டு பத்திரிகை ஜனவரி-3 அன்று வெளியிட்ட ஒரு பத்திக் கட்டுரையில் இந்திய…
View More தி ஹிண்டு பத்திரிகைக்கு கண்டனம்ஏமாற்றும் சக்தியை அனுபவியுங்கள்
முதலிலேயே பொறி தட்டியது. ஊகம் சரிதான். The usual suspects. வழக்கமான முகமூடிக் கொள்ளையர்கள் தான்… கிறிஸ்தவ மதமாற்றப் பிரசார விளம்பரம் என்று பார்த்தவுடனேயே தெரிந்தால், பஸ்களிலும், அரசு பொது இடங்களிலும் வைக்க சம்பந்தப் பட்ட அரசுத் துறை நிர்வாகத்தினர் அதை அனுமதித்திருப்பார்களா என்பதும் சந்தேகமே. எனவே இந்த விளம்பரதாரர்கள் மக்களை மட்டுமல்ல, அரசையும் சேர்த்து ஏமாற்றியிருக்கிறார்கள்.
View More ஏமாற்றும் சக்தியை அனுபவியுங்கள்இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம்-05
கேரளம் கேவலமான கதை
[…] சுதந்திரம் பெறுவதற்கு முன்பே கேரளத்திற்கும் பாக்கிஸ்தானுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. பாக்கிஸ்தான் எனும் தனி நாடு ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக முகமது அலி ஜின்னா பிரச்சாரம் செய்த தென்னகப் பகுதி கேரளவில் உள்ள மலபார். […] அப்போதிருந்து முகமதியத் தீவிரவாதம் நாளொரு கொலையும், பொழுதொரு ஆக்கிரமிப்புமாய் பாக்கிஸ்தான் உதவியுடன் இங்கு பிரம்மாண்டமாகப் பரவி விட்டது.
View More இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம்-05இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 04
[….] கோவை குண்டு வெடிப்பிற்குப் பல ஆண்டுகள் முன்பிருந்தே, இஸ்லாமிய மத நம்பிக்கையின் பெயரில், இந்துக்கள் தொடர்ந்து கோயம்புத்தூரில் கொலை செய்யப்பட்டு வருகின்றனர் என்பது பொதுமக்களிடம் இருந்து மறைக்கப்படும் உண்மைகளில் ஒன்று. […] கோயம்புத்தூர் குண்டு வெடிப்புக்கு ஒரு வருடம் முன்பு முகம்மதியா அரிசி ஆலையில் குண்டு வெடித்தது அல்லவா? அந்த அரிசி ஆலைக்கு அருகாமையிலேயே, ஒரு மிகப் பெரிய அரசியல்வாதி ஒருவர் பொதுமேடையில் பேசிக்கொண்டிருந்தார். யார் அவர்?
View More இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 04மன்மோகன் சிங்கின் வட்டமேஜை நேர்காணலில் கேட்கப் படாத கேள்விகள்
இவர் மெத்தப் படித்தவர். உலகத்திலேயே சிறந்த தகுதிகள் கொண்டவராம். ஆனால் படிக்காத ஒரு காமராஜர் பேச்சில் இருந்த தெளிவும் துணிவும் என்றுமே இவரது பேச்சில் இருந்தது கிடையாது… அவரிடம் கேட்கப் பட்ட சில கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்களில் இருந்த குழப்பங்களையும், மழுப்பல்களையும், ஏமாற்றுக்களையும், சமாளிப்புக்களையும் அதில் இருந்த ஓட்டைகளையும் , அவரிடம் அவசியமாகக் கேட்டிருக்கப் பட வேண்டிய ஆனால் கேட்கப் படாத கேள்விகளையும் அலசலாம்… அயோக்கியர்களை அகற்றுங்கள். இந்தியா நமது தேசம்; அதை அந்நியருக்கும் இனிமேலும் விற்க மாட்டோம் என்று உறுதி செய்யுங்கள்.
View More மன்மோகன் சிங்கின் வட்டமேஜை நேர்காணலில் கேட்கப் படாத கேள்விகள்