காஞ்சியில் ஆதி சங்கரர் காமாட்சி தேவியின் வழிபாட்டை நிலைநிறுத்தினார் என்ற குறிப்பு மாதவீய சங்கர விஜயத்தில் (பொ.பி 14ம் நூற்.) உள்ளது. இந்தக் குறிப்பில் கூறப்பட்டுள்ள கோயில் காமக்கோட்டம் எனப்படும் ஸ்ரீகாமாக்ஷி ஆலயம் தான் என்று வரலாற்று அறிஞர் முனைவர் சங்கரநாராயணன் கருதுகிறார். பாரததேசத்தின் பல பிரதேசங்களில் உள்ள கோயில்களிலும், அங்குள்ள சிவ, விஷ்ணு, சக்தி மூர்த்திகளின் வழிபாடுகள் ஸ்ரீசங்கரரால் நிறுவப்பட்டன அல்லது சீரமைக்கப் பட்டன என்ற சம்பிரதாயத்தைப் பெருமிதமாகக் குறிப்பிடுகிறார்கள்… தமிழ்நாட்டில் கோயில் மரபுகளைப் பற்றிய எந்த வரலாறானாலும், எந்த ஆதாரமுமில்லாமல் அது தொடர்பாக பிராமண சதி (அல்லது ஸ்மார்த்தர் சதி, வைணவ சதி இத்யாதி) என்று சதிவலை தியரிகளை எடுத்துவிடுவது ஒரு வழக்கமாகப் போய்விட்டது. கிராம தேவதையான காஞ்சி காமாட்சியை பிராமணர்கள் அபகரித்து விட்டார்கள் என்பதும் இதேபோன்ற ஒரு அவதூற்றுக் கதையே அன்றி வேறில்லை…
View More காஞ்சி காமாட்சியும் சங்கரரும்Tag: காஞ்சி
மணிமேகலை 29 — கச்சி மாநகர் புக்க காதை
தன்முன் நிற்பது பதின்பருவத்தில் பருவவேறுபாட்டில் ஆண்களின் கோரப் பார்வைக்குத் தப்பி ஓடியொளிந்த ஒரு சாதாரணப் பெண்ணாக விளங்கிய அந்த மணிமேகலையல்லள், இவள் புதியவள், புத்த நெறியில் தன்னைக் கரைத்துக்கொண்டவள், அனைவரும் கைகூப்பித் தொழும் பெண்தெய்வமாக விளங்குபவள்,அவள் மீது கவிந்திருந்த கணிகையின் மகள் என்ற நிழல் முற்றிலும் விலகி புத்தஞாயிறின் கிரணங்கள் பூரணமாகப் பொலியத் தொடங்கிவிட்டது. இனி அவள் என் மகள் இல்லை. நான்தான் மணிமேகலையின் தாய்!
View More மணிமேகலை 29 — கச்சி மாநகர் புக்க காதைகாஞ்சி மாமுனிவர் குறித்த விமர்சனங்கள்: ஓர் எதிர்வினை
ஆஸேது ஹிமாசலம் பரந்து விரிந்த ஹிந்துஸ்தானத்தில் இவ்வாறு ஹிந்து தர்மம் தழைக்க வாழ்ந்த பல நூறு துறவியரில் ஒருவர் காஞ்சி மஹாஸ்வாமிகள் என்று அன்புடன் அழைக்கப்பெடும் பூஜ்ய ஸ்ரீ சந்த்ரசேகரேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகள். ஸ்ரீ காஞ்சி மஹாஸ்வாமிகள் சம்பந்தமாக நமது தமிழ் ஹிந்து தளத்தில் பதிவான சில கருத்துக்களில் எனக்கு கருத்து வேறுபாடுகள் உண்டு. பிறப்படிப்படையிலான வர்ணம் என்ற கருத்து “தெய்வத்தின் குரல்” தொகுப்பில் பேசப்படுகிறது. சங்கத்திலும் ஹிந்து இயக்கங்களிலும் ஒன்றாய் உண்டு விளையாடி ஹிந்து எழுச்சிக்கும் ஒற்றுமைக்கும் பாடுபடும் எவராலும் இக்கருத்தை ஏற்கவியலாது என்பது விஷயம். எது எப்படி இருப்பினும் ஒட்டு மொத்த தொகுப்பையே ஆபாச மஞ்சள் புத்தகங்கள் என உருவகப்படுத்துவது முற்றிலும் ஏற்கவியலாது.
View More காஞ்சி மாமுனிவர் குறித்த விமர்சனங்கள்: ஓர் எதிர்வினைநமது கோவில்களில் நவீன மாற்றங்கள்
நமது கோவில்களில் எத்தனை வகைகள் உண்டு? பழமையும், பெருமையும் வாய்ந்த கோவில்கள் எவ்வாறு அமைக்கப் பட்டுள்ளன? பெரும் தூண்களும், மண்டபங்களும், கலை நயத்துடன் விளங்கும் ஒழுங்கின் பின்னணி என்ன? அருளொளி வீசும் தெய்வீக நிலையங்களான கோயில்களில் ஏற்படுகிற நவீன மாற்றங்களுக்கு தக்கவாறு நாம் செய்ய வேண்டியது என்ன?
View More நமது கோவில்களில் நவீன மாற்றங்கள்தலபுராணம் என்னும் கருவூலம் – 2
இந்தப் பாடலில் ஏனையோர் கூறுமாறு பிராமணர் முதலியோர் முகம் முதலிய உறுப்புகளில் தோன்றியதாகக் கூறிய சுவாமிகள், நான்காம் வருணத்தவரை, “முகம், தோள், தொடை ஆகிய உறுப்புகளையெல்லாம் தாங்கி நிற்கும் சரணம் என்று உரைக்கும் உறுப்பினில்” தோன்றியவர்கள் எனக் கூறுகின்றார். சரணம் என்பதற்குக் கால் என்ற பொருளோடு, புகலிடம் என்பதும் பொருள். ஏனைய மூவருக்கும் புகலிடமாக இருப்பவர் நான்காமவர் என்றும், தம் உழவுத் தொழிலின் மேன்மையால் மூவரையும் நிலைபெறத் தாங்கும் வேளாளர் என்னும் பெயரைத் தமக்கே உரியவர்கள் என்றும் விளக்கினார். வேளாளர் என்பதற்கு பிறருக்கு உபகாரியாம் தன்மை உடையவர் என்று பரிமேலழகர் பொருள் உரைப்பார்….
View More தலபுராணம் என்னும் கருவூலம் – 2