கோலி என்னும் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த கோவிந்த் அதை ஒரு பொருட்டாக எண்ணாமல் உழைத்தவர் இன்று நாட்டின் உயர்ந்த பதவியை அலங்கரிக்க இருக்கிறார். இந்திய குடிமை பணியில் வெற்றி பெற்றவர் தான் விரும்பிய துறை கிடைக்காததால் சட்டம் படித்து வழக்கறிஞர் ஆனவர். அரசியல் சாசன சட்டத்தில் மிக தேர்ச்சி உள்ளவர் என்று சொல்லப்படுகிறது அதோடு பெரும் அறிஞர். இந்திய கலாச்சாரத்திலும் பண்பாட்டிலும் மிகுந்த நம்பிக்கை உடையவர்…. அப்துல் கலாம், பி.ஏ. சங்மா, இப்போது ராம்நாத் கோவிந்த் – பாஜக அடுத்தடுத்து சிறுபான்மையினர் மற்றும் தலித்களையே உயர்பதவிகளுக்கு முன்நிறுத்துகிறது. இது சந்தர்ப்பவாத , தாஜா அரசியல் அல்லவா என்று நம்மவர்களே சிலர் கேட்கிறார்கள். உண்மையில் இவர்களுக்கு இன்னும் நம் தேச அரசியல் பிடிபடவே இல்லை….
View More பாஜகவின் ஜனாதிபதி தேர்வு ராம்நாத் கோவிந்த்: சில கண்ணோட்டங்கள்Tag: குடியரசுத் தலைவர்
ஜனநாயக மரபுகளைக் காப்போம்!
கடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரின் செயல்பாடுகளில் மக்களை திகைக்க வைத்த செய்தி சோனியா காந்தியின் புதல்வர் ராகுல் காந்தி எழுந்து அவையின் மையப் பகுதிக்கு வந்து ஆர்ப்பாட்டம் செய்துவிட்டு வெளியேறி, அங்கு பத்திரிகையாளர்களிடம் அவையில் ஒரே ஒரு குரல் மட்டும்தான் கேட்கிறது. மற்ற குரல்களுக்கு அங்கு இடமில்லை என்பதுபோல சொல்லியிருப்பதுதான்…. பிரதமர் மோடி தன்னுடைய ஒவ்வொரு செயலிலும், பேச்சிலும் கண்ணியத்தையும், ஒழுங்கையும், நாட்டு நலனே மற்ற எல்லா நலன்களுக்கும் மேலானது என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லியும் நடந்து காட்டியும் வருகிறார்….
View More ஜனநாயக மரபுகளைக் காப்போம்!23 ஆம் புலிகேசியும் இரு குடியரசு தலைவர்களும்
நேருவின் பொருளாதார அமைச்சர் டி.டி.கிருஷ்ணமாச்சாரி 1958 இல் ஆயுள் பாதுகாப்பீடு ஊழலில் பதவி விலக நேர்ந்தது. (இதை பாராளுமன்றத்தில் தன் மருமகன் ஃபெரோஸ்காந்தியே எழுப்பியது தற்செயலா அல்லது நேருவின் ராஜ தந்திரமா என்பது தெரியவில்லை.) நேருவின் உதவியுடன் செயல்பட்ட ஜெயந்தி தர்ம தேஜா பண மோசடி செய்து நாட்டை விட்டே ஓடினார். ஒரு இந்திய குத்ராச்சி என்று வைத்து கொள்ளூங்கள். ஆனால் மன்மோகன் சிங்கிற்கு நிலக்கரி ஊழலினாலோ 2-ஜி ஸ்பெக்ட்ரத்தினாலோ எந்த தனிப்பட்ட லாபமும் இல்லை என்பது போல நேருவுக்கும் இந்த ஊழலுக்கும் தனிப்பட்ட ஆதாயங்கள் இருந்ததாக நிரூபிக்கப்படவில்லை…. 1962 – இந்திய ராணுவம் மிக மோசமான முறையில் அரசியல் தலையீடுகளால் சீர்குலைக்கப்பட்டு சீனாவினால் துவம்சம் செய்யப்பட்டுக் கொண்டிருந்தது. நேரு இப்போது ராதாகிருஷ்ணனும் ராஜாஜியுமாக சேர்ந்து தமக்கு எதிராக சதியாலோசனைகள் செய்வதாக அச்சம் கொண்டிருந்தார்…
View More 23 ஆம் புலிகேசியும் இரு குடியரசு தலைவர்களும்குடியரசுத் தலைவருக்கான காங்கிரசின் அற்புத அளவுகோல்கள்
உலகையே உறைய வைத்த இந்திய ஜன நாயகத்தின் கறுப்பு பக்கமாக வர்ணிக்க படும் எமர்ஜென்சியின் முக்கிய சதிகாரர் தான் நம் குடியரசுத் தலைவர் – ஜன நாயகத்தின் உச்சமான நாடு என மதிக்கப்படும் ஒரு நாட்டின் முதல் குடிமகன்… 1980,82 வாக்கில் வர்த்தக துறை & உருக்கு, சுரங்க அமைச்சராக இந்திய கனிம வளங்களை சூறையாட அனுமதிக்கிறார் பிரணாப்.. சத்பால் மிட்டல் நிறுவனத்தின் நலனுக்காக இந்திய தொலை தொடர்பு துறையின் வளர்ச்சியையே முடக்கி வைத்தார்… பாதுகாப்புதுறை அமைச்சராக ஸ்கார்பென் நீர்மூழ்கி பேரத்தில் பெரும் தொகையை கமிஷனாக பெறுகிறார். வெளியுறவு அமைச்சராக மிக ஆபத்தான 123 ஷரத்தில்,இந்திய மக்களுக்கு துரோகம் இழைக்கும் வகையில் முற்றிலும் அமெரிக்க சார்பாக நடந்து கொண்டார்..
View More குடியரசுத் தலைவருக்கான காங்கிரசின் அற்புத அளவுகோல்கள்முகர்ஜியை ஜனாதிபதி ஆக்கிய பானர்ஜி
ஐ.மு.கூட்டணி ஆட்சியைப் பொறுத்த வரை, கட்சிக்கு சோனியா தலைவராகவும், ஆட்சிக்கு நிழல் தலைமை வகிப்பவராக முகர்ஜியும் இருந்தனர். எனவே தான் முகர்ஜியை வேவு பார்க்கும் பணிகளில் சோனியா சத்தமின்றி ஈடுபட்டுவந்தார்… பானர்ஜி மட்டும் கலாமை தனது விருப்பத் தேர்வாக முன்வைக்காமல் இருந்திருந்தால், அன்சாரியை ஜனாதிபதி ஆக்கி இன்னொரு பொம்மையை அங்கு அமர்த்தி இருப்பார் சோனியா. அதற்கு வழி இல்லாமல், இப்போது தன்னிச்சையாக இயங்கும் பிரணாப் முகர்ஜியை சோனியாவே அறிவித்திருக்கிறார்… கலாமை மீண்டும் தேர்வு செய்யும் அற்புதமான வாய்ப்பு அவர்கள் முன்பு வந்தது. ஆனால், குறுகிய அரசியல் லாபங்களுக்காகவும், தனிப்பட்ட அரசியல் அபிலாஷைகளுக்காகவும் இந்த வாய்ப்பை தவற விட்டுள்ளனர், பிராந்தியக் கட்சிகளின் தலைவர்கள்.
View More முகர்ஜியை ஜனாதிபதி ஆக்கிய பானர்ஜிகட்சிகளுக்கு ஒரு ‘லிட்மஸ் சோதனை’ : ஜனாதிபதி தேர்தல்
காங்கிரஸ் தரப்பில் ஜனாதிபதி தேர்தலில் களம் இறக்கப்படுபவர் யார் என்பதே ஜுனில் தான் தெரியும். அதற்குள் நமது ஊடக அறிஞர் படை தனது வேலையைத் துவங்கிவிட்டது… தான் களத்தில் இருந்து விலகி இருக்கவில்லை என்பதை அப்துல் கலாம் கோடிட்டுக் காட்டி இருக்கிறார்… மாநில தலைவர்களின் அரசியல் ராஜதந்திரம் தான் அடுத்த ஜனாதிபதியை தீர்மானிக்கும் நிலையில் உள்ளது. அதை அந்தத் தலைவர்கள் உணர வேண்டும். பாஜக, இவ்விஷயத்தில் கூடுதல் ராஜதந்திரத்துடன் செயல்பட்டால், அடுத்த தேர்தலுக்கு முன்னதாகவே ‘ஊழல்’ காங்கிரஸ் கட்சிக்கு பாடம் கற்பிக்க முடியும்…
View More கட்சிகளுக்கு ஒரு ‘லிட்மஸ் சோதனை’ : ஜனாதிபதி தேர்தல்