திரு GPS (கோமடம் பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன்) அமைதி, அறிவுபூர்வ ஆழ்ந்த சிந்தனையுடன் அகிம்சை வழி போராளியாக எளியவராக நடமாடும் நூலகராக சிறந்த வாசகராக மொழி பெயர்ப்பாளராக வாழ்ந்தவர்… Hindu Voice என்ற மும்பை பத்திரிக்கையின் தமிழக செய்தியாளாராக பல ஆண்டுகள் பணிபுரிந்தவர். பற்பல இந்துத்துவ சிந்தனையாளர்களோடும் தொடர்பு கொண்டு ஒரு இயக்கம் செய்ய வேண்டிய பல வேலைகளை தனி ஒருவராக செய்து வந்தவர்.
View More அஞ்சலி: ஸ்ரீரங்கம் G.P.ஸ்ரீனிவாசன்Tag: தன்னலமற்ற மக்கள் சேவை
சேவையே வாழ்வாக: கே.சூரியநாராயண ராவ்
தேசபக்தி, வீரம், தன்னலமற்ற சமூகத் தொண்டு ஆகிய உயர் லட்சியங்களால் சுடர்விட்டு எரிந்து கொண்டிருந்த சூரிஜி, தனது பி.எஸ்.சி ஹானர்ஸ் (கணிதம்) பட்டத்தைப் பெற்றவுடன் 1946ம் ஆண்டிலேயே முழுநேர பிரசாரகராக சங்கத்தில் இணைந்தார்… 1969 மாநாட்டில் தீண்டாமையும் சாதிக்கொடுமைகளும் இந்துமதத்திற்கு எதிரானது, இந்து சாஸ்திரங்கள் அவற்றை அங்கீகரிக்கவில்லை என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை அங்கு கூடியிருந்த துறவியர் மற்றும் ஆன்றோர் பேரவை வெளியிட்டது. மாநாட்டின் முழுப் பொறுப்பாளராக இருந்து அதனை வெற்றிகரமாக நடத்தி முடித்த பெருமை சூரிஜி அவர்களையே சாரும்.. தமிழ்நாட்டின் பட்டிதொட்டிகளில் எல்லாம் சுற்றுப் பயணம் செய்து பல ஊர்களிலும் உள்ள சங்கத் தொண்டர்களிடமும் பலதரப்பட்ட மக்களிடமும் மிக சகஜமாகப் பழகி வந்தார்….
View More சேவையே வாழ்வாக: கே.சூரியநாராயண ராவ்ஒரு நிஷ்காம கர்மி
உயர்ந்த மனிதர். சுமார் ஆறரை அடி உயரம். சற்று நீண்டு தொங்கும் தாடி. அப்போது இன்னம் நரை தோன்றாத காலம். மேஜையில் இருக்கும் விளக்கொளியில் குனிந்து படிக்கும் காட்சி நன்றாக இருக்கும். ஒருவாறாக, உ.வே. சாமிநாத ஐயர் ஒரு நூற்றாண்டுக்கு முன் சின்ன சிமினி விளக்கொளியில கும்பகோணம் பக்த புரி அக்ரஹாரத்துத் திண்ணையில் உட்கார்ந்திருக்கும் ஒரு சாயலை அபிஜீத் ஐந்துக்குப் பத்து காபினில் மின்சார விளக்கொளியில் உட்கார்ந்திருக்கப் பார்ப்பதாகத் தோற்றம் தரும். ஒரு சின்ன மாற்றம். அபிஜீத் கையில் ஒரு கணேஷ் பீடி மேஜையில் ஒரு டீ கப். அதிகப் படியாகக் காட்சி தரும். இல்லையெனில் இளம் வயது தாகூர் தான்…. யமுனை நதியைக் கடந்தால் பட்பட் கஞ்சில் வீடு. தந்தை விட்டுப் போன லைப்ரரி. அது மட்டுமல்ல. புத்தகங்களோடும் சிந்தனை உலகோடும். கலைப் பிரக்ஞையொடும் வாழ்வதில் தான் அர்த்தம் உண்டு என்று நினைக்கும் கலாசாரம்….
View More ஒரு நிஷ்காம கர்மிஹிந்து ஆன்மீக மற்றும் சேவைக் கண்காட்சி 2013
சென்னை: பிப்ரவரி 19 முதல் 24 வரை, நூற்றுக் கணக்கான இந்து ஆன்மீக,…
View More ஹிந்து ஆன்மீக மற்றும் சேவைக் கண்காட்சி 2013எழுமின் விழிமின் – 14
நமது சொந்த மக்களினமாகிற கடவுள் மட்டும் தான் இப்பொழுது விழித்துக் கொண்டிருக்கிறார். எங்கு நோக்கினும் அவரது கைகள்; எங்கும் அவரது திருவடிகள்; எங்குமே அவரது காதுகள்.. நம்மைச் சூழ்ந்து காணப் படும் விராட் புருஷனை வழிபடாமல் வீணான மற்ற தெய்வங்களின் பின்னால் ஏன் போக வேண்டும்?… எல்லாவற்றையும் பரிகாசம் பண்ணுவது, எதைப் பற்றியும் முனைந்து சிந்தியாதிருப்பது ஆகிய இந்த நோய் நமது தேசிய இரத்தத்தில் நுழைந்திருக்கிறது. இந்த பயங்கர வியாதியை விட்டுத் தொலையுங்கள். வலிமையுடன் இருங்கள். சிரத்தையுடன் இருங்கள். மற்றவையெல்லாம் தாமாக வந்தடைந்தே தீரும்..
View More எழுமின் விழிமின் – 14எழுமின் விழிமின் – 13
ஹிந்து சமயத்தைப் போல உயர்வாக மனித குலத்தின் மேன்மைச் சிறப்பைப் பற்றி வேறெந்தச் சமயமும் இந்த உலகத்தில் போதிக்கவில்லை. அத்துடன் ஏழை எளியவர்களின் கழுத்தின் மீது ஏறி மிதிக்கிற சமயமாக இவ்வுலகில் ஹிந்து சமயத்தைப் போல வேறெதுவும் இல்லை. இக்குற்றத்திற்குச் சமயம் பொறுப்பு அல்ல; ஹிந்து சமயத்திலுள்ள வெளி வேஷக்காரர்கள், வறட்டு ஆசாரவாதிகள் ஆகியோரே காரணம்… அறியாமை எனும் இருண்ட மேகம் இந்நாட்டைக் கவிந்திருக்கிறதென்பதை உணர்கிறீர்களா? அவ்வுணர்ச்சி உங்கள் மன அமைதியைக் குலைத்து, உங்களுக்குத் தூக்கமில்லாமல் செய்துவிடுகிறதா? அது உங்கள் குருதியில் கலந்து, இரத்தக் குழாய்களில் ஓடி, இதயத் துடிப்போடு சேர்ந்து துடிக்கிறதா?…
View More எழுமின் விழிமின் – 13இந்த வாரம் இந்து உலகம் – ஏப்ரல்-20, 2012
அதி நவீன அறிவியல் தொழில் நுட்பத்திலும் சரி, இராணுவ தயாரிப்பு நிலையிலும் சரி, தான் யாருக்கும் சளைத்ததல்ல என்று இந்தியா நிரூபித்து விட்டது.. இந்த அளவு தீர்க்கமான வரலாற்று, கலாசார பிரக்ஞையுடன் ஒரு தமிழக முதல்வர் செயல்படுவது தமிழக மக்களுக்குக் கிடைத்த வரம்!… எஸ்.பி.ஓ.ஏ. பள்ளியின் கிறிஸ்தவ ஆசிரியர்கள் பள்ளியை முழுவதுமாக கிறிஸ்தவமயமாக்கி விட்டிருந்தனர். எல்லாக் கூட்டங்களிலும் கிறிஸ்தவப் பிரார்த்தனைகள் மட்டுமே இருக்க வேண்டும் என்பதை எழுதப் படாத விதி போல… கல்வி உரிமைச் சட்டத்தில் (RTE) இருந்து மதரஸாக்கள், வேதபாடசாலைகள் இரண்டுக்கும் விதிவிலக்கு – ஏன்?.. பாஜகவின் மாபெரும் மதுரை மாநாட்டை வேண்டுமென்றே தமிழக ஊடகங்கள் புறக்கணித்து இருட்டடிப்பு செய்கின்றன…
View More இந்த வாரம் இந்து உலகம் – ஏப்ரல்-20, 2012அஞ்சலி: சுவாமி நித்யானந்தர் (தபோவனம்)
சுவாமி: இங்கு எதற்கு வந்தாய்? சிறுவன்: நான் துறவியாக விரும்புகிறேன்; சுவாமி: அப்படியா! நீ சிறு பிள்ளையாக இருக்கிறாய். ஊருக்குச் சென்று எஸ்.எஸ்.எல்.சி. படித்து முடித்துவிட்டு சர்டிஃபிகேட் எடுத்துக்கொண்டு வா, சேர்த்துக் கொள்கிறேன்… தான் கொண்டு வந்த மதிய உணவை அவருக்குக் கொடுத்துவிடுகிறார். அந்தப் பாட்டி தினந்தோறும் இவர் வருகைக்காக காத்திருக்கிறார்… மாணவர்களுக்கு வார்டனாக இருந்ததால் அனைவரும் ‘வார்டன் சுவாமிஜி’ என்றே அழைத்து வந்தனர். தலைமை ஸ்தானத்தை அவர் தேடிச் செல்லவில்லை. அது தானே தேடி வந்தது…
View More அஞ்சலி: சுவாமி நித்யானந்தர் (தபோவனம்)ஜனவரி 25-29: சென்னையில் மாபெரும் ஹிந்து சேவைக் கண்காட்சி !
நூற்றுக் கணக்கான பல்வேறு வகைப்பட்ட ஹிந்து சமய, சமூக, ஆன்மீக அமைப்புகள் பங்கு பெறுகின்றன. டி.ஜி. வைஷ்ணவ கல்லூரி வளாகம், அரும்பாக்கம் சென்னை. ஜனவரி 25 முதல் 29ம் தேதி வரை. கண்காட்சி நேரம்: காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை. வாருங்கள்! ஹிந்து அமைப்புகள் ஆற்றும் அளப்பரிய சேவைப் பணிகள் பற்றி அறிந்து கொள்ளுங்கள். அனுமதி இலவசம். அழைப்பிதழ் கீழே…
View More ஜனவரி 25-29: சென்னையில் மாபெரும் ஹிந்து சேவைக் கண்காட்சி !நிகரில்லா நிவேதிதா – இரு புத்தகங்கள்
மேற்கத்திய நாட்டிலிருந்து எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் இந்திய மக்களின் முன்னேற்றத்தின் மீது முழு அக்கறையும் அன்பும் மதிப்பும் கொண்டு வாழ்நாள் முழுக்க தன்னைத்தானே தேய்த்து அழித்து சமர்ப்பித்த ஒருவர் உண்டு. அவரது சமாதி தினத்தின் நூற்றாண்டு விழா இவ்வருடம்… மாற்று வழிகளில் உலக அறிவியலாளர்களையும் இதர இந்திய நேசிப்பாளர்களையும் தொடர்பு கொண்டு அவர் அறிவியல் கண்டுபிடிப்புகள் உலக பிரசித்தி அடைய உதவி செய்தார்… தாழ்த்தப்பட்ட மக்கள் வாழ்ந்த பகுதிகளில் உள்ள சாக்கடைகளை பிளேக் காலங்களில் நிவேதிதாவும் அவருடன் பணியாற்றிய இளைஞர்களும் களமிறங்கி சுத்தப்படுத்தினார்கள்…
View More நிகரில்லா நிவேதிதா – இரு புத்தகங்கள்