ஒரு கொண்டாட்டமான திரைப்படத்தை மட்டும் அணுகும் நோக்கில் இனி ரஜினியின் படங்களை அணுகமுடியாது. அத்திரைப்படத்தை எடுப்பவர்கள் யார், அவர்களது அரசியல் என்ன என்பதைக்கொண்டே தீர்மானிக்கமுடியும்… மிகத் தெளிவாக தமிழர்களை, ராவணனை ஹிந்துக்களுக்கு எதிரானவர்கள் என்று காட்டுகிறார்கள். அதற்கான காரணமாக ராமனைக் கெட்டவனாகச் சித்திரிக்கிறார்கள். இந்த அரசியலுக்கு அப்படியே தன்னை ஒப்புக்கொடுத்திருக்கிறார் ரஜினி. ஆனால் இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ரஜினி என்றுமே திரைப்படத்தில் எடுப்பார் கைப்பிள்ளைதான்…இப்படத்தில் ரஜினி காவல்துறையை அடிக்கிறார். கொல்லுகிறார். கொல்லத் துணை நிற்கிறார். புரட்சிக்குத் துணை போகிறார். ஒட்டுமொத்த அரசுக்கு எதிரான போராட்டங்களை ஆதரிக்கிறார். ஆனால் நிஜத்தில் ரஜினி இவை அத்தனையும் மறுத்தார்…
View More காலா: திரைப்பார்வைTag: திராவிடர்
ஹரப்பா கந்தனும் கார்த்திகை மாதரும்
ஹரப்பா பண்பாட்டு இலச்சினை அது. எழுவர் கை கோர்த்து நிற்கின்றனர். மேலே ஒரு மரம் நெருப்பை போல பிளந்து நிற்க அதிலிருந்து கை வளையங்களும் இரு கொம்புகள் கொண்ட தலையணியும் அணிந்த ஒரு தெய்வம் வெளிப்படுகிறது. அதன் முன்னர் ஒரு பூசகர். பெண்ணாக இருக்க வாய்ப்புள்ளது. அருகில் ஒரு ஆடு. எதை அல்லது யாரை குறிக்கிறது இந்த இலச்சினை?…. பலவாறாக வெளிப்படும் பன்மையை ஏற்பவனாகவும் அனைத்து பன்மைகளும் ஒருங்கிணையும் ஒருமையாகவும் ஆறுமுகன் உள்ளான். பாரத பண்பாட்டின் சமன்வய இயக்கத்தின் முதன்மை வெளிப்பாடுகளில் முக்கியமானவர் முருகக் கடவுள்… அந்த ‘அறுவர் பயந்த ஆறமர் செல்வனை’ இந்த திருக் கார்த்திகை திருநாளில் வணங்குவோம். அதே நேரத்தில் இத்திருநாளின் பழமை வேர்கள் பல்லாயிரம் ஆண்டுகள் பழமையானவை என்பதை உணர்வோம்….
View More ஹரப்பா கந்தனும் கார்த்திகை மாதரும்திராவிட இனம் – வரலாற்று உண்மையா?
திராவிட இனம் என்ற கொள்கைக்கு வரலாறு, அகழ்வாராய்ச்சி அடிப்படையில் ஆதாரங்கள் உள்ளனவா? திராவிடர்களுக்கு அவர்களது தனி அடையாளத்தை அளித்தவர் பிஷப் கால்டுவெல். அவரை ஏன் மோசமாக சித்தரிக்கிறீர்கள்? சமூகநீதியை வலியுறுத்துகிறது என்பதால் தானே திராவிட இயக்கத்தை எதிர்க்கிறீர்கள்? .. மேலும் சில கேள்விகள், விவாதங்கள் – வீடியோ வடிவில்…
View More திராவிட இனம் – வரலாற்று உண்மையா?தமிழ்நாட்டுப் பாடநூல்களில் “வரலாறு காணாத” தப்புக்கள்
ஒரு அட்டவணை திராவிடர்கள் மற்றும் ஆரியர்களின் பண்புகளை கட்டம் கட்டி அழகாக ஒன்பது பாயிண்டுகளில் பட்டியலிடுகிறது. காலனிய காலகட்டத்தின் பிழையான இனவாத கருத்துக்களில் இருந்து கொஞ்சம் கூட நகராமல் அதையே இங்கு சொல்கிறார்கள் – நவீன மானுடவியலும், மரபணு அறிவியலும் ஒட்டுமொத்தமாக அதைப் பொய்யானது என்று நிரூபித்துவிட்ட போதும்.. ”லெமூர் மூதாதைகளிலிருந்து தமிழ் பேசிக்கொண்டே உருவான ஆதி மானுடம்” எப்படி அபத்தத்திலும் மகா அபத்தமான கருதுகோள் என்பது புரிய வரும்…(மூலம்: மிஷேல் டேனினோ)
View More தமிழ்நாட்டுப் பாடநூல்களில் “வரலாறு காணாத” தப்புக்கள்சாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம் – 1
சாதிகள், சாதியம் இவற்றின் வரலாற்றுப் பின்னணி என்ன? சாதியம் குறித்து இந்து தருமம் கூறுவதென்ன? சாதி இந்தியாவில் மட்டும் தான் இருக்கிறதா? சாதியத்தை எதிர்க்க இந்து தருமம் அளிக்கும் கருத்தியல் என்ன? இத்தகைய கேள்விகளுக்கு இந்தச் சிறு நூல் சுருக்கமாக விடையளிக்க முயல்கிறது. (எழுதியவர்கள்: அரவிந்தன் நீலகண்டன், ஜடாயு, பனித்துளி)
View More சாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம் – 1