அந்தியில் சூரியதேவனை உபாசிக்கின்றனர். அந்த சூரியனும் சிவஸ்வரூபம் அன்றோ? என்கிறார் அப்பர். இக்கருத்து எங்கிருந்து வருகிறது? நேரடியாக வேதத்திலிருந்து தான். “கரிய கழுத்துடைய நீலக்கிரீவராகிய அவரே சிவந்த வர்ணமுடைய இந்த சூரியனாக வெளிக்கிளம்புகிறார். (சூரிய ரூபியாகிய) இவரை இடையர்களும் கூடக் காண்கின்றனர். தண்ணீர் சுமந்து வரும் பெண்களும் காண்கின்றனர். இந்த ருத்திரனை மற்றும் எல்லாப் பிராணிகளும் கூடக் காண்கின்றன” என்கிறது ஸ்ரீருத்ரம்…
View More வைதிக மாமணி அப்பர்Tag: தேவாரம்
இந்துத்துவம் என்னும் ஆன்ம சாதனை
‘எல்லாம் காலம் காலமா இருக்குப்பா. என்ன மதமாற்றம் பண்ணி என்ன செய்யப் போறாங்க.. இந்த இந்துத்துவ பூச்சாண்டி எல்லாம் தேவை இல்லை’ போன்ற மேதாவி வாதங்கள்.. ‘ஈசனும் நானே, சிவலிங்கமும் வெள்ளமும் நானே, எனவே எதிலிருந்து எதை காப்பது’ என்றெல்லாம் வெத்து ஞானமரபுத்தனம் பேசி அன்னை விலகவில்லை. மாறாக தன்னைவிட மேலாக சிவலிங்கத்தை கருதி வெள்ளத்திலிருந்து அதைக் காப்பாற்ற அதை அணைத்துக் கொள்கிறாள். எனில், இந்து வெறுப்பு வெள்ளம், மதமாற்ற வெள்ளம், திராவிட அரசு இயந்திர வெள்ளம் ஆகியவற்றிலிருந்து நம் சமுதாயத்தையும், ஆலயங்களையும் பாதுகாக்க நாம் எப்படிப்பட்ட தியாகத்துக்கு நம்மை தயார் செய்ய வேண்டும்…
View More இந்துத்துவம் என்னும் ஆன்ம சாதனைசைவ மதமும் சமஸ்கிருத மொழியும்
சைவத் தமிழ் நூல்களிலும் திருமுறைகளிலும் சைவ சித்தாந்தங்களிலும் வடமொழி மேன்மை போற்றப்படுகிறது. இவற்றை மதிப்பவர் வடமொழி பிடிக்காது என்றால் சாப்பிடுவதற்கு சாதம் வேண்டும் ஆனால் அரிசி பிடிக்காது என்று சொல்லும் சிறுபிள்ளைத்தனம் போன்றது… ஆரியந்தமிழோடு இசையானவன் என்றும் வடமொழியும் தென் தமிழும் மறைகள் நான்கும் ஆனவன் காண் என்றும் அப்பர் சுவாமிகள் ஆறாம் திருமுறையில் அடித்துக் கூறுகிறார். எமது சைவம் விரிவுபடுவதை விரும்புவோம். பிரிவுபடுவதை விடுவோம்..
View More சைவ மதமும் சமஸ்கிருத மொழியும்அஞ்சலி: முனைவர் கோ.ந.முத்துக்குமாரசுவாமி
வேதநெறியும் தமிழ் சைவத்துறையும் (2009) என்பதில் தொடங்கி சுமார் அறுபதுக்கும் மேற்பட்ட அவரது கட்டுரைகள் தமிழ்ஹிந்து தளத்தில் வெளிவந்துள்ளன. ஐயா அவர்களின் கட்டுரை ஒவ்வொன்றும் அவரது ஆழ்ந்த தமிழ்ப் புலமைக்கும், அவரது சைவசித்தாந்த ஞானத்தெளிவுக்கும், அவரது சிவபக்திச் சிறப்பிற்கும் சான்று பகர்வனவாக இருக்கும். திருமுறைகளைப் பேசுவதும் எழுதுவதும் மட்டுமல்லாது, இசைக்கவும் வல்லவர். ஆழ்ந்த கர்நாடக சங்கீத ரசனை கொண்டவர். பேராசியரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற பின்பும், தொடர்ந்து சைவ அன்பர்களுக்கும் மாணாக்கர்களுக்கும் கற்பித்து வந்தவர். .
View More அஞ்சலி: முனைவர் கோ.ந.முத்துக்குமாரசுவாமிஆணைநமதென்றபிரான் – திருஞான சம்பந்தர்
சம்பந்த பெருமான் தமது பதிகங்கள் ஒவ்வொன்றின் திருகடைக்காப்பிலும் அப்பதிகங்களை ஒதுவதால் ஆன்மாக்கள் பெற்றுய்யும் பலன்களை எடுத்துரைப்பார். பல பதிகங்களில், பயன்களை கூறினாலும், அவர் அருளிய நான்கு பதிகங்களில் மட்டும் “*ஆணைநமதே *” என்று திருகடைக்காப்பில் அருளிப்பாடுகின்றார்… நம்பியாண்டார் நம்பிகள் போல் அக்கால மக்களுக்கும் இவ்வார்த்தை மிகவும் பிடித்துவிட்டது. அவர்கள் தங்கள் பெயராகவே வைத்துக்கொண்டனர். பிரான் மலை கல்வெட்டில், இத்தன்ம சாசனத்துள் கையெழுத்திட்டவருள் ஒருவர் “ஆணை நமதென்ற பெருமாள்” என்று உள்ளது…
View More ஆணைநமதென்றபிரான் – திருஞான சம்பந்தர்கைத்தடி மான்மியம் (அ) எந்த வயதில் இறைநம்பிக்கையை வளர்த்துக்கொள்வது?
‘ சாகப்போகிற நேரத்திலே சங்கரா ! சங்கரா ! என்று அழுது என்ன பயன் ? ‘ என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு . இந்தப் பழமொழி எதைக் காட்டுகிறது ? மிக இள வயதிலே இறைநம்பிக்கையை வளர்த்துக் கொள்வது நல்லவிஷயம் . இது அவரவர் கர்மாவை ஒட்டியது என்றாலும் , மனித முயற்சி என்று உண்டு என்று மறுப்பதற்கில்லை.. இளம் வயது – மனத்துடிப்பும் , உடலுறுதியும் உள்ள பருவம் . மிக முக்கியமாக உடல் திறன் . கிழ வயதில் இறை நம்பிக்கை கொண்டு எவ்வாறு நம் பாரத தேசம் முழுவதும் உள்ள திருக்கோவில்களுக்கு சிரமம் இல்லாமல் சென்று வர முடியும்?.. இனி ‘ கடவுள் இல்லை ‘ ‘ கடவுளை புதைக்க வாரீர் ‘ என உலக மக்களுக்கு அறைகூவல் விடுத்த நாத்திகரான நீட்ஷேவின் கைத்தடி குறித்த ஒரு சுவாரசியமான சம்பவம்…
View More கைத்தடி மான்மியம் (அ) எந்த வயதில் இறைநம்பிக்கையை வளர்த்துக்கொள்வது?இராவணனின் சிவபக்தி: ஒரு சைவசமய விளக்கம்
இறைவன் முதலில் மறக்கருணை காட்டி பின்னர் அறக்கருணை நல்கி அரக்கனை வழி நடத்தியது அவன் பக்தன் அல்லமால் வேறு என்ன? இராவணன் இறைவனுக்கு பிரியமான சாம கானம் பாடி துதித்தான் என்றால் அவன் சிவபக்தன் இல்லையா?… இராமன், இராவணன் இருவருமே சிவபக்தர்கள்தாம். ஆயினும் இருவருக்கும் உளப்பண்பு வேற்றுமையுண்டு. இராவணனை, “மானன நோக்கியை தேவிதன்னை யொரு மாயையால், கானதில் வவ்விய காரரக்கன்” என்றும், பெரியோர் கூறும் “உரையுணராத” அகந்தையுடையவன் என்றும், “காமம் என்னும் உறு வேட்கை“ மிக்கவன் என்றும் சம்பந்தர் கூறினார். ‘ஈனமிலாப் புகழ் அண்ணல்’ என்ற தொடரால் இராமபிரானது நற்குணம் அனைத்தையும் கூறிப் பிள்ளையார் பாராட்டினார் எனலாம்…
View More இராவணனின் சிவபக்தி: ஒரு சைவசமய விளக்கம்மார்கழிமாதத் திருவாதிரை நாள் வரப் போகுதையே
பெரியோர்கள் பிறவாமையை வேண்ட, அப்பர் பெருமான் பிறப்புக்கு அஞ்சாமல், தில்லைத் திருக்கூத்தினைக் காணும் பேறு கிட்டுமாயின் மனித்தப் பிறவியும் வேண்டுவதே என்றார். இடையில் அப்பர் பெருமானுக்கு ஒரு ஐயம் வந்தது. தில்லைத் தரிசனம் பிறவியைக் கொடுக்குமோ? தில்லைச் சிற்றம்பலம் இப்பிறவியில் உலக வாழ்க்கைக்கு இன்றியமையாது வேண்டிய அன்னம் (சோறு) முதலிய பொருள்களைக் கொடுக்கும். மறுமையில் பொன்னுலகு (சுவர்க்கம்) முதலிய பதங்களையும் மீட்டும் பிறவி எடுக்காத வீட்டுலகையும் தரும். என்றாலும், இந்தப் பூவுலகில் என் அன்பு மேலும் மேலும் பெருகி இன்புறுவதற்கு ஏதுவாகத் தில்லையம்பலக் கூத்தினைத் தரிசிப்பதற்குப் பிறவியைத் தருமோ? எனக் கேட்கின்றார்…
View More மார்கழிமாதத் திருவாதிரை நாள் வரப் போகுதையேவேளாங்கண்ணி: உண்மையான வரலாறு என்ன?
வேளாங்கண்ணியின் உண்மையான, பழைய பெயர் “வேலன கண்ணி”. அம்பிகைக்குத் தேவாரம் சூட்டிய திருநாமம் இது. இந்த ஊருக்கருகில் சுமார் 10 கிமி தொலைவில் ‘கருங்கண்ணி’ எனும் ஊரும் அமைந்துள்ளது. இப்பகுதியில் புதையுண்ட தெய்வச் சிலைகளும் ஐம்பொன் தெய்வத் திருமேனிகளும் மிகுந்த அளவில் அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப் பட்டுள்ளன. இன்றைய வேளாங்கண்ணியில் ரஜதகிரீசுவரர் சிவாலயம் ஒன்றும் அமைந்துள்ளது. இது பழமையான ஆலயமா அல்லது இன்றைய கபாலீசுவரர் ஆலயம் போன்ற புத்துருவாக்கமா என்பதை ஆய்வுக்குட்படுத்த வேண்டும்… இது தொடக்கத்திலிருந்தே மகிமை கொண்ட கிறித்தவ திருத்தலமாக நம்பப்பட்டது என்கிறார்கள். ஆனால், வாரன் ஹேஸ்டிங்க்ஸ் முதல் மவுண்ட்பேட்டன் வரையில் இந்தியாவை ஆண்ட நாற்பதுக்கும் மேற்பட்ட ஆங்கிலேய கவர்னர்களில் ஒருவர் கூட ஆரோக்கிய மாதாவை வந்து வழிபட்டதாகக் குறிப்பு இல்லை. இவ்வழிபாட்டுத்தலத்துக்கு 1962 வரை பஸிலிகா என்ற அந்தஸ்து வழங்கப்படாததன் காரணம் என்ன ? அற்புதங்கள் முன்பே நடந்ததாகக் கூறப்படுகிறது. ஆயினும், ஆங்கிலேயர் ஆண்ட காலத்தில் ஏன் பஸிலிகா அந்தஸ்துக் கிடக்கவில்லை ?….
View More வேளாங்கண்ணி: உண்மையான வரலாறு என்ன?திருஞானசம்பந்தர் உண்ட ஞானப்பால்
“பர்வதராஜ குமாரியே, உனது திருமுலைப்பாலானது வித்தியாமய பாற்கடலாய் பெருகுகிறது என்று நினைக்கின்றேன். ஏதனாலெனில், கிருபை மிக்கவளான உன்னால் கொடுக்கப் பெற்ற திருமுலைப் பாலைப் பருகி தமிழ்க் குழந்தையான ஞானசம்பந்தப் பிள்ளை புலமை மிகுந்த இசைத்தமிழ்ப் புலவர்களில் தலைமகனாக ஆகி விட்டார்” என்கிறார் சங்கரர்… அம்மையும் அப்பரும் எதிரில் வந்த மாத்திரத்தில் ஜீவான்மாவை மறைத்திருந்த திரோதானசக்தியான மாயை நீங்கி விட சர்வக்ஞானமும் ஆன்மாவிடத்தில் பிரகாசிக்குமாம். இங்கு ஞானசம்பந்தருக்குப் பாலூட்டல் என்பது குரு மந்திரோபதேசம் செய்வது போன்ற வெளித்தோற்றமான ஆத்மசுத்தி கிரியை என்பர்….
View More திருஞானசம்பந்தர் உண்ட ஞானப்பால்