ராமருடன் தான் வாழ்நாள் முழுதும் கொண்டிருந்த அன்பில் எந்த மாசு, மருவும் இல்லை என்பதே உண்மை என்பதால் தன்னை ஈன்ற பூமாதேவியே தன்னை அவள் கரங்களில் தாங்கிக் கொள்ளட்டும் என்று சீதை பிரார்த்தனை செய்கிறாள். மூன்று வரிகளில் உள்ள அந்த சீதையின் வேண்டுதல், ராமாயணத்திலேயே எவருடைய மனதையும் உருக்கி மிகுந்த இரக்கம் கொள்ள வைக்கக்கூடிய வரிகள்… உண்மையில் எல்லாவிதமான ரசங்களும் ராமாயணத்தில் இடம் பெற்றிருக்கின்றன என்றாலும், மற்றவைகளை விட சோக ரசம் முதன்மையாக இருக்கிறது. ராமாயணத்தை ஓர் இலக்கியக் கலைப் படைப்பாக மட்டுமே காண்பது சரியான பார்வையாக இருக்க முடியாது. அதை மோக்ஷத்தைத் தர உதவும் ஆன்மிகத்தைப் போதிக்கும் சமய நூலாகவே பார்க்கவேண்டும். அதில் பரவலாகக் காணப்படும் சோகத்திற்கு ஓர் ஆன்மிக முக்கியத்துவம் இருக்கிறது….
View More ஸ்ரீமத் ராமாயணக் கதாபாத்திரங்களின் தெய்வீகப் பின்னணி – 8 (நிறைவு)Tag: பட்டாபிஷேகம்
இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 31 (இறுதி பகுதி)
இராமர் எங்கிருக்கிறாரோ அதுதான் அயோத்தி. ஆக அயோத்தி போகவேண்டும் என்பது இறைவனை அடைய வேண்டும் என்பதைத்தான் குறிக்கிறது. அப்படிப் போய் இறைவனை அடைவதற்கு, வானரர்கள் இராமரைத் தவிர வேறு யாரிடம் போய் வேண்டுவது? இறைவனுக்கு நாம் வேண்டிக்கொள்வதில், “இறைவா! நாங்கள் உன்னை அடைவதற்கு வழி காட்டு” என்பதைத் தவிர வேறு எந்த கோரிக்கை அதை விடச் சிறந்ததாக இருக்கிறது?… வால்மீகி ஒவ்வொரு இன்னல்களிலும் மனிதனான இராமர் எப்படி தன் நிலைப்பாடை எடுக்கிறார் என்பதைக் காட்டும்போது, அந்தக் காலத்தைய அவல நிலைச் சூழல்களையும் படம் பிடித்துக் காட்டுகிறார். இப்படியும் ஒருவனால் இருக்க முடியும் என்று காட்டுவதே இந்த இலக்கியத்தின் இலக்கு. அதைக் கேட்டு ரசித்து, அது சொல்லும் வழியில் நடக்க நமக்கு அந்த இராமரே வழி காட்டட்டும்….
View More இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 31 (இறுதி பகுதி)இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 5
தேவி, செல்வத்திற்காக இந்த உலகில் வாழவேண்டும் என்ற விருப்பம் எனக்குக் கிடையாது. தர்ம சிந்தனை ஒன்றே குறிக்கோளாக வாழும் தவச் சீலர்களுக்கு ஒப்பானவன் நான், இதைத் தெரிந்து கொள்…. கோழைகளும், பயத்தால் முடியாதவர்களுமே விதி என்று சொல்லி செயல்களைத் தவிர்ப்பார்கள். தனது உரிமையை நிலை நாட்டக்கூடிய வலிமை கொண்டோர் விதியை எதிர்த்துப் போராடுவார்கள்.. வேதங்களோ, சாஸ்திரங்களோ ஆணையும் பெண்ணையும் பிரித்துப் பார்ப்பதே இல்லை. அந்தந்தச் சூழ்நிலையைத்தான் கவனிக்கவேண்டும். மனைவிக்கு இந்த மாதிரி துயரம் வந்திருக்குமானால் இதேபோல் சேவை செய்யவேண்டும் என்று கணவனது கடமையாகச் சொல்லப்பட்டிருக்கும்..
View More இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 5இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 4
தர்ம சிந்தனை மிக்க, பண்பு, ஒழுக்கம் மிக்கவும் உள்ள மனிதர்களின் மனம்கூட இடம், காலம், தேவைக்கேற்ப நிலையில்லாத வண்ணம் மாறலாம் என்பதே எனது எண்ணம்.. பருவ காலங்களிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடினாலும், ஆறுகள் அனைத்தின் நீரையும் தன்னகத்தே கொள்ளும் கடல் என்றும் உள்ள தனது கரை என்னும் சிறிய எல்லையை மதித்து அதைத் தாண்டுவதில்லை… அவள் என்ன வந்தாலும் தனக்கு வேண்டியதைப் பெறாமல் விடுவதாக இல்லை. அவள் தசரதரைக் கோழை என்றும், கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற இயலாத கையாலாகதவன் என்றும் ஏசினாள். தங்களுக்கு என்னதான் இழப்பு வந்திருந்தாலும், தங்கள் வாக்கைக் காப்பற்றியவர்களைப் பற்றிப் பேச ஆரம்பித்துவிட்டாள்…
View More இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 4