வெ.சாமிநாத சர்மா அவர்கள் மணி அய்யாவிடம் தனது வாழ்நாளில் பேர் சொல்லும்படி 100 புத்தகங்களாவது எழுதி விடு என்றாராம். அதனை தாரக மந்திரமாக கொண்டு தரமான ஆய்வு புத்தகங்களை மட்டும் எழுதி வருபவர். சுமார் 80 புத்தகங்களுக்கு மேல் எழுதியுள்ளார். பெ.சு.மணி ஐயா பல்கலை கழக வளாகங்களில் பேராசிரியராக பணிபுரிந்து கை நிறைய சம்பளம் வாங்கி வேலை செய்பவருமல்ல. அஞ்சல் துறையில் இரவு முழுவதும் கடிதங்கள் பிரிக்கும் வேலையை செய்து கொண்டு பகல் முழுவதும் சைக்கிள் மிதித்து நூலகம் தோறும் சென்று தேனீ போன்று உழைத்து கொண்டு வந்த புத்தகங்கள் பல கல்லூரி பேராசிரியர்களுக்கு முன்னேறுவதற்கு இவரது புத்தகங்கள் படிக்கல்லாய் திகழ்ந்தது…
View More அஞ்சலி: தமிழறிஞர், ஆய்வாளர் பெ.சு.மணிTag: பத்திரிகையாளர்
அஞ்சலி: பி.ஆர்.ஹரன்
தன்னலம் என்பதைச் சிறிதும் கருதாது இந்து ஒற்றுமைக்கும், இந்து விழிப்புணர்வுக்கும் அயராது உழைத்த ஒரு மகத்தான கர்மயோகியைத் தமிழ்நாட்டு இந்துக்கள் இழந்து நிற்கின்றனர். தனது எழுத்துக்களுக்காக ஹரன் ஒருபோதும் சொந்தம் கொண்டாடியதோ அல்லது அதை ஏதோ பெரிய விஷயமாக நினைத்ததோ இல்லை. தர்மத்தைக் காப்பதும் இந்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதுமான புனித வேள்வியில் தான் சமர்ப்பிக்கும் ஆகுதிகளாகவே அவற்றை அவர் எண்ணினார். எழுத்துக்களுடன் கூட, செயல்வீரராகவும் களப்பணியாளராகவும் அவரது பங்களிப்புகள் சிறப்பானவை. பசுக்கள் பாதுகாப்பு, அராஜகமாக கால்நடைகளைக் கடத்துவதற்கு எதிரான போராட்டம் ஆகியவற்றில் அவர் ஆத்மார்த்தமாக ஈடுபட்டார். துணிச்சலுடன் கடத்தல் சம்பவங்களை ஆவணப்படுத்துவது, காவல் துறையினரிடம் புகார் கொடுத்து பசுக்களை மீட்பது ஆகியவற்றிலும் பெரும் முனைப்புடன் செயல்பட்டு வந்தார்… பாரதம் முழுவதும் பல புனிதத் தலங்களுக்கு யாத்திரை செய்வதும், சாதுக்களையும் மகான்களையும் சந்திப்பதும் அவரது மனத்திற்குப் பிடித்த விஷயங்கள்…
View More அஞ்சலி: பி.ஆர்.ஹரன்சோ: சில நினைவுகள் – 3
அங்கு அறைக்குள் நண்பர்களுடன் ஜெபமணி அவர்களும் பிறரும் சோவுடன் கூடியிருந்தனர். சோ எந்தவித பதட்டமும் அச்சமும் இல்லாமல் நிதானமாக இருந்தார். சற்று முன் அவர் மீது கொலைவெறி தாக்குதல் நடந்ததன் அடையாளம் ஏதும் இல்லாமல் அமைதியாக இருந்தார். அவர் மீதான ஒரே கொலை முயற்சி வன்முறைத் தாக்குதல் அது மட்டுமே. அந்த ஒரே ஒரு கொலை முயற்சி வன்முறைத் தாக்குதல் இந்தியாவின் வரலாற்றையே தீர்மானிப்பதில் முடிந்தது. அதற்கு ஒரு சாட்சியாக நான் அந்த இரவில் இருந்தேன்… ராஜீவ் காந்தி சோ மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தார். அவர் சோவிடம் பல விஷயங்களைக் கலந்தாலோசித்துக் கொண்டிருந்தார். ராஜீவின் ஆதரவுடனான மைனாரிடி அரசை நடத்திக் கொண்டிருந்த சந்திரசேகர் ஒரு மாநில அரசை டிஸ்மிஸ் செய்த ஒரே காரணம் சோவும், சுப்ரமணியம் சுவாமியும் கொடுத்த அழுத்தம் மட்டுமே…
View More சோ: சில நினைவுகள் – 3சோ: சில நினைவுகள் – 2
என் டி ஆருக்கு மெஜாரிடி இருந்தும் கூட இந்திரா அவரது அரசை கலைக்க ஏற்பாடு செய்தார். அதற்கெதிரான போராட்டத்தில் சோவின் பங்கு முக்கியமானது. ஜனநாயகத்திற்காக சோ என் டி ஆருக்கு அளித்த ஆதரவுகள் மூலமாக அவரது செல்வாக்கு வட இந்தியத் தலைவர்களிடம் வெகுவாக உயர்ந்தது… தமிழகமெங்கும் புலிகள் வீடுகள் வாடகைக்கு எடுத்துத் தங்கி துப்பாக்கிகளுடன் சுதந்திரமாகத் திரிந்து வந்தனர்.சோ விடுதலைப் புலிகளைக் கடுமையாக எதிர்த்து வந்தார். அவர்களுக்கு அளிக்கப் படும் சுதந்திரம் தமிழ் நாட்டை ஒரு வன்முறை பூமியாக மாற்றி விடும் என்று கதறி வந்தார். அவர் ஒருவர் மட்டுமே புலிகளைத் துணிவாக எதிர்த்து எழுதி வந்தவர்… மாநிலத்தில் எம் ஜி ஆரின் மறைவு, மத்தியில் ராஜீவின் தோல்வி, வி பி சிங்கின் ஆட்சி என்று இந்தியா மீண்டும் ஒரு பெரும் புயலில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தது. அந்தக் குழப்பமான சூழலில் அரசியல் தெளிவு துக்ளக் மூலமாகவே அளிக்கப் பட்டுக் கொண்டிருந்தது. இந்த சமயங்களில் சோ அவரது உச்சத்தில் செயல் பட்டு வந்தார்…
View More சோ: சில நினைவுகள் – 2சோ: சில நினைவுகள் – 1
கிட்டத்தட்ட 46 வருடங்களாக என்னுடன் தொடர்ந்து நெருக்கமாக வருபவர் சோ. என் சிந்தனைகளை கருத்துக்களை ஆளுமையை இன்று நான் எழுதுவதை அனைத்தையுமே ஆக்ரமித்தவர் சோ… ஆரம்ப காலங்களில் அவர் எழுதிய வாஷிங்டனில் நல்லதம்பி போன்ற தொடர்கள் தி மு க வின் முட்டாள்களையும் ஊழல்களையும் கிழிப்பவையாக இருந்தன. வட்டம், மாவட்டம் என்று தோளில் ஆட்டுக்கள்ளன் துண்டுடன் இரண்டு தலைக்குப் பதிலாக மூளையில்லாத தலைகளைக் குறிக்கும் வகையில் இரண்டு வெறும் முட்டைகளுடன் கார்ட்டூன்கள் வரும். ஆரம்ப இதழ் துவங்கி கழுதை துக்ளக்கில் அட்டைப் படம் முதல் உள்ளே உள்ள கார்ட்டூன்கள் வரையிலும் இடம் பெறும்.எமர்ஜென்சி காலத்தில் கருணாநிதியை விமர்சிக்க சோ மறுத்து விட்டார். என்று இந்திராவை விமர்சிக்கும் சுதந்திரம் எனக்கு கிடைக்கிறதோ அன்று நான் கருணாநிதியையும் விமர்சிப்பேன் என்று சொல்லி விட்டார்…
View More சோ: சில நினைவுகள் – 1ஒரு நிஷ்காம கர்மி
உயர்ந்த மனிதர். சுமார் ஆறரை அடி உயரம். சற்று நீண்டு தொங்கும் தாடி. அப்போது இன்னம் நரை தோன்றாத காலம். மேஜையில் இருக்கும் விளக்கொளியில் குனிந்து படிக்கும் காட்சி நன்றாக இருக்கும். ஒருவாறாக, உ.வே. சாமிநாத ஐயர் ஒரு நூற்றாண்டுக்கு முன் சின்ன சிமினி விளக்கொளியில கும்பகோணம் பக்த புரி அக்ரஹாரத்துத் திண்ணையில் உட்கார்ந்திருக்கும் ஒரு சாயலை அபிஜீத் ஐந்துக்குப் பத்து காபினில் மின்சார விளக்கொளியில் உட்கார்ந்திருக்கப் பார்ப்பதாகத் தோற்றம் தரும். ஒரு சின்ன மாற்றம். அபிஜீத் கையில் ஒரு கணேஷ் பீடி மேஜையில் ஒரு டீ கப். அதிகப் படியாகக் காட்சி தரும். இல்லையெனில் இளம் வயது தாகூர் தான்…. யமுனை நதியைக் கடந்தால் பட்பட் கஞ்சில் வீடு. தந்தை விட்டுப் போன லைப்ரரி. அது மட்டுமல்ல. புத்தகங்களோடும் சிந்தனை உலகோடும். கலைப் பிரக்ஞையொடும் வாழ்வதில் தான் அர்த்தம் உண்டு என்று நினைக்கும் கலாசாரம்….
View More ஒரு நிஷ்காம கர்மிஅஞ்சலி: மலர் மன்னன்
இரண்டு நாட்கள் முன் இருக்குமா? மலர்மன்னனிடமிருந்து வந்தது தொலை பேசி அழைப்பு ஒன்று. அவருக்கு என்ன பதில் சொல்வது என்று தயங்கிக் கொண்டே தொலை பேசியை எடுத்தேன். சந்தோஷமாக சிரித்துக்கொண்டே, ”உங்க ரங்கநாதன் தெரு கட்டுரை நம்ம சென்னையில் வந்திருக்கு இந்த மாதம். பாருங்கோ நெட்லே கிடைக்கும். அச்சிலே வரதுக்கு நாளாகும்” என்றார். ”பாக்கறேன். ஆனால் நெட் கனெக்ஷன் போயிடுத்து” என்று கொஞ்சம் நிம்மதி அடைந்து அவருக்கு பதில் சொன்னேன். அவருக்கும் எனக்கும் இடையே சுமார் இருபது நாட்களுக்கும் மேலாக அவருடைய புத்தகம் “திராவிட இயக்கம், புனைவும் உண்மையும்” பற்றித் தான் பேச்சு. அது பெற்றுள்ள வரவேற்பு பற்றி அவருக்கு ரொம்ப சந்தோஷம். ”ராமகோபாலன் பத்து காபி வாங்கிண்டு போயிருக்கார். அவரைச் சுத்தி எல்லாருக்கும் கொடுக்கறதுக்கு” என்று. சொன்னார். புத்தகம் ஸ்டாலுக்கு வரதுக்கு முன்னாலேயே நெட்லேயே எல்லாம் வித்துப் போச்சாம் என்று ஒரு செய்தி. ”இனிமே மறுபடியும் அச்சடிச்சு எனக்கு எப்போ காபி கொடுக்கப் போறாளோ தெரியலை,” என்று ஒரு நாள். “வைரமுத்து, கருணாநிதிக்குக் கூட இவ்வளவு வரவேற்பு இருந்ததா கேள்விப்படலையே ஸ்வாமி, எதுக்கும் ஜாக்கிரதையா இருங்கள். அரவிந்தன் புத்தகத்துக்கு நடந்தாப்போலே, பெரியார் திடல்லே கூட்டம் போடுவாங்க உங்களைத் திட்டறதுக்கு. இல்லாட்டா, ராமமூர்த்தி புத்தகத்து பதில் கொடுத்தாப்போல, உங்களுக்கு ஒரு 400 பக்கத்துக்கு பதிலடி கொடுக்க வீரமணி தயார் பண்ணிக் கணும்” என்று இப்படி ஏதோ பேசிக்கொள்வோம். பத்ரி இந்த புத்தகத்தை எழுதச்சொல்லி இவர் எழுதத் தொடங்கிய காலத்திலிருந்து இந்த தொலை பேசி சம்பாஷணை தொடர்ந்தது. புத்தகம் கைக்கு வந்ததும் எனக்கு ஒரு பிரதி அனுப்பி வைத்திருந்தார். அதிலிருந்து நான் அதைப் படித்தேனா என்று கேள்விகளுக்கும், படித்து விட்டேன் என்றதும் எப்படி இருக்கிறது புத்தகம்? என்றும் தொடர்ந்து கேள்விகள், பின்னர் எழுதத் தொடங்கியாயிற்றா?” என்று கேள்விகள் கேட்டு தொலை பேசி மணி அடித்தவாறு இருக்கும்.
ஒவ்வொரு தடவையும் திண்ணையில் அவர் எழுதும் கட்டுரைகள் மாத்திரம் அல்ல, பின்னூட்டங்கள் பற்றியும் கேட்பார். எனக்கு அவர் சளைக்காமல் காவ்யா, சுவனப்ரியன் (இப்படி அனேகர்), இவர்களின் விதண்டா விவாதங்களுக் கெல்லாம் பதில் அளித்துக்கொண்டிருப்பது அவர் தன் நேரத்தை வீணடிப்பதாக எனக்குப் படும். நான் சொல்வேன். ஆனால் அவர் கேட்கமாட்டார். ”எழுதி வைப்போம். இன்னம் படிக்கிறவர்கள் இருக்கிறார்களே, அவர்களுக்கு இது போய்ச் சேராதா,” என்பார். இந்த தீவிர முனைப்பும் சளைக்காத உழைப்பும், விசாலமான அனுபவம், வாசிப்பு, உற்சாகம் மிகுந்த துடிப்பு எல்லாம் அவரிடம் பார்த்து நான் பொறாமைப் பட்டதுண்டு. மேலும் மிகவும் மென்மையான சுபாவம். யாரையும் கடிந்து கொள்ள மாட்டார். சீற்றம் என்கிற சமாசாரம் அவரிடம் இருந்ததில்லை. தார்மீக காரணத்துக்கானாலும் சரிதான்….
ஸ்பெக்ட்ரம்: ஊழலின் நிறப்பிரிகை வண்ணங்கள்… – 2
வண்ண ஜாலங்கள் நிறைந்ததாக, அடுத்து என்ன நிகழுமோ என்று பரபரப்புடன் எதிர்பார்க்கும் திருப்பங்கள் நிறைந்த மர்மக்கதையாக மாறி வரும் ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான நிகழ்வுகளில் முகமூடி கிழிந்தவர்கள் தங்களை தற்காத்துக் கொள்ள, புதிய வாக்குமூலங்களை அளிக்கத் துவங்கி இருக்கிறார்கள். வண்ண வண்ணமாக வெளிப்படும் பல முகங்களின் பின் புலத்தை பிட்டு வைக்கும் விதமாக, ஒவ்வொரு தரப்பையும் ஒரு நிறத்துடன் ஒப்பிட்டு தொடர்கிறது இந்த கட்டுரை.
View More ஸ்பெக்ட்ரம்: ஊழலின் நிறப்பிரிகை வண்ணங்கள்… – 2சீனா – விலகும் திரை
நமது தோழர்களும், காம்ரேடுகளும் சொல்வதுபோல சீனா ஒன்றும் சொர்க்கபூமியல்ல… எல்லா நாடுகளைப் போலவே எல்லாவிதமான பிரச்சினைகளும் உண்டு என்பதையும், அரசாங்கம் என்பது கிட்டத்தட்ட ஒரு அடிமைகளை உருவாக்கும் தொழிற்சாலைபோல செயல்படுவதையும், இதையெல்லாம் எதிர்த்துக் கேட்க முடியாத நிலையில் அரசாங்கம் மக்களை வைத்திருப்பதையும் குறிப்பிடுகிறார்.
View More சீனா – விலகும் திரை