சூரியன் உலகில் உயிர் வாழ ஆதாரமாக இருப்பதையும், அது தோன்றி மறைவதுடன் நமது பகல்-இரவு வாழ்க்கைச் சக்கரம் சுழல்வதையும் கண்ட வேதகால ரிஷிகள், அண்டத்திற்கும் பிண்டத்திற்கும் உள்ள ஒற்றுமையை உணர்ந்தனர்… வானத்தில் உள்ள சூரியன் போல, உலகில் அக்னியையும், நம்முள்ளே உயிரையும் கண்டார்கள். என்றைக்கு ஒருவனது உயிர் பிரிகிறதோ அன்று சிவம் சவமாகி, அக்னி குளிர்ந்து அணைவதைக் கண்டனர். அதுவரை இந்திரன் நம்முள் இருந்து, பஞ்ச இந்திரியங்கள் மூலம் வெளிப்படுகிறான்….
View More ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3Tag: பிரபஞ்ச சிருஷ்டி
ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2
கண்ணதாசனின் பாடலுக்கு வருவோம். அவர் எப்படி ஆரம்பிக்கிறார்? “உலகம் பிறந்தது எனக்காக” என்றுதானே. சாதாரணமாக ‘நான் பிறந்தேன்’, ‘அவர் பிறந்தார்’ என்போம். ஆனால் இங்கோ உலகம் முன்னிறுத்தப்பட்டிருக்கிறது. அதாவது உலகம் வரும் முன்பே ‘நான்’ இருந்திருக்கிறேன். அது உதித்து இருப்பது எனக்காக. இப்படியாக ‘நான்’ இல்லையென்றால் உலகம் இல்லை என்றாகிறது. அது உண்மைதானே?… சிறிதானாலும் தன்னால் ஒளியை உருவாக்கலாம், ஆனால் இருளை உருவாக்க முடியாது – ஒளியை மறைத்தே இருளை உருவாக்க முடியும் என்று தெளிகிறான். அதனால், உலகில் சூரியனால் இயற்கையாக நடக்கும் ஒளி-இருளைக் கொண்டு, சூரியனை அறிவாகவும் அது இல்லாது இருப்பதை அறியாமை என்றும் கொள்கிறான்….
View More ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2புருஷ சூக்தம்
புருஷனே ஆகுதியாக வேள்வி செய்தனர் தேவர்கள் – வசந்தம் நெய்யாக, கோடை விறகாக, சரத்காலம் அவியுணவாக ஒரு வேள்வி… பிராமணன் முகமானான் – கைகள் அரசன் – தொடைகள் வைசியன் – பாதங்களில் சூத்திரன் தோன்றினான்… பரம்பொருளே சிருஷ்டியின் கூறுகளாக வியாபித்திருக்கிறார் என்று போற்றிப் புகழ்கிறது இந்தப் பாடல். புருஷன் ஒவ்வொரு உயிரின் விழிகளாலும் பார்க்கிறான், ஒவ்வொரு உயிரின் பாதங்களாலும் நடக்கிறான். முடிவற்று விரிந்து செல்லும் விண்வெளி புருஷனின் தொப்புள் என்று கூறியது அபாரமான அழகியல்… வர்ணங்களை வைத்து உண்டான ஏற்றத் தாழ்வுகள் எதுவும் இதில் கற்பிக்கப் படவில்லை. வேதங்களில் எங்கு தேடினாலும் பிறப்பு அடிப்படையிலான சமூகப் பாகுபாடுகள் மற்றும் வர்ண ஏற்றத் தாழ்வுகளுக்கான சான்றுகள் கிடைக்காது…
View More புருஷ சூக்தம்ரிக்வேதத்தின் சிருஷ்டி கீதங்கள் – 1
”அமுதம் அவன் நிழல் மரணமும் அவன் நிழல் – எந்த தேவனுக்கு அவி தருகிறோம் நாம்?…இருளை இருள் மறைத்திருந்தது ஆதியில் – பிரித்தறிய முடியாதபடி இவை எங்கும்நீராக இருந்தது – வடிவற்ற வெறுமையே எங்குமிருந்தது – அதிலிருந்து மகத்தான தவத்தால் அந்த ஒன்று பிறந்தது… தேவர்களோ படைப்பிற்குப் பின்வந்தவர்கள் – அப்படியானால் அது எப்படி உருவாயிற்று? யாரறிவார்?”… சிருஷ்டி உண்மையில் எப்படி உண்டாயிற்று, யார் அதனை உருவாக்கிய கடவுள் என்ற ஆதிக் கேள்வியையே இந்தப் பாடல் போற்றுகிறது என்று வேத இலக்கியம் குறித்து எழுதிய நவீன அறிஞர்கள் கருதுகின்றனர். பிற்காலத்தில் வளர்ந்து செழித்த இந்திய தத்துவ ஞானப் பிரிவுகள் அனைத்தும் எழுப்பிய அடிப்படைக் கேள்விகளின் ஆரம்பப் புள்ளி இந்த சூக்தங்கள் தான்…
View More ரிக்வேதத்தின் சிருஷ்டி கீதங்கள் – 1பழந்தமிழர் கண்ட வேதாந்தக் கருமணி – பகுதி 4
மதுரையைத் திருமாலின் திருவுந்தியிலே தோன்றி மலர்ந்த தாமரைப் பூவுடன் ஒப்பிடுகிறார். அந்நகரத்தில் உள்ள தெருக்கள் பிரமனைத் தாங்கும் அத்தாமரை மலரின் இதழ்களைப் போல வரிசையாக உள்ளனவாம். பாண்டியநாட்டு ராஜதானியாகிய அந்நகரத்தின் நடுவே உள்ள அரச அரண்மனையானது அப்பூவின் நடுவில் உள்ள பொன்னிற மகரந்தப் பொகுட்டினை ஒத்ததாம். அந்நகரிலுள்ள மக்கள் மகரந்தப் பொடித் துகள்களைப் போல காணப்பட்டனராம். அம்மன்னனைப் பாடிப் பரிசில்பெற வருகின்ற புலவர்கள் மலரில் காணப்படும் மகரந்தத்தையும் தேனையும் பருகப் பறந்துவரும் வண்டுகளைப் போல காணப்பட்டனராம். [..]
View More பழந்தமிழர் கண்ட வேதாந்தக் கருமணி – பகுதி 4